25 ஆகஸ்ட் 2012

மதுவும்,புலாலும், ........பூசப்பட்ட மத சாயமும் ஒரு விளக்கமும்...

மது அருந்துவது  ஒரு சமுதாய  தீமை என்பது அனைவராலும்  ஏற்று கொள்ளப்பட்ட  ஒரு விஷயம்...

ஆனால் புலால் (அசைவம்) உண்பது  ஒரு சமுதாய  தீமை என்று சொன்னால் சிறு குழந்தை கூட கைகொட்டி சிரிக்கும்....

மது அருந்துபவர்கள்  தன்னிலை மறந்து பொது இடங்களில் கூட அநாகரிகமாக நடந்து கொள்வது அன்றாடம் நாம் காணும் கண்காட்சி...

அசைவம் உண்டதாலே ஒருவர் பொது இடத்தில  தன்னிலை மறந்து அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று எங்கேயாவது கேள்வி பட்டது உண்டா?

மது  அருந்துபவர்கள் அந்த போதையால் கொலை,கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனபது அன்றாடம் செய்திதாள்களில்  பார்த்து பார்த்து புளித்துப்போன ஒரு செய்தி


ஆனால் புலால் உண்பதால்  போதை தலைக்கேறி  யாரேனும் தீய செயல்களில் ஈடுபட்டார்கள் என்று  என்றாவது படித்து இருக்கிறோமா?

மது அருந்துவதால்  அதை குடிப்பவர்களின் உடலுக்கு தீங்கு விளைவித்து மரணம் வரை அழைத்து செல்லும் என்பது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை....


ஆனால் புலால் உண்பதால் அது மரணம் வரை அழைத்து செல்லும் என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை...


இது எல்லாவற்றையும்  விட மதுவினால் அதை குடிப்பவரின்  குடும்பமே சீரழிகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை...

ஆனால் அசைவம்  உண்பதாலே எந்த குடும்பமாவது சீரழிந்து  பார்த்தது உண்டா?

இப்படி மது அருந்துவதற்கும்,புலால் உண்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும் நிலையில் இது இரண்டையும் முடிச்சு போட்டு மது அருந்தாதே என சொல்பவர்கள் புலால்  உண்ணாமல் இருப்பார்களா என அவசியமில்லாத  கேள்வியை எழுப்பியுள்ளார் சக பதிவர் ஒருவர் ...


அவரது கூற்றுப்படி ஒரு உயிரை கொன்று உண்பது  தீமை என்றால் நாம் யாரும் இங்கு உணவே உண்ண  முடியாது....ஏனெனில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு  என அறிவியல் கூறுகிறது....அப்படி என்றால்  தாவரங்களை கொன்று சாப்பிடுவதும் தவறுதானே ?

மது அருந்துவது தவறு என பதிவுலகில் சக  நண்பர்கள்  பதிவிட்டால் அதற்கும் மத சாயம்  பூசி மது குடிப்பது தவறு என்றால் புலால் உண்பதும் தவறு என விதண்டாவாதம் செய்வது வீணான  செயலே...

 அவரின் பதிவில் இவ்வளவு பெரிய பின்னூட்டமிடுவதை விட  ஒரு பதிவே போட்டு விடலாம்  என்பதாலே பதிவிட்டுள்ளேன்....

மற்றபடி  இது  எந்த மதத்தையும் ஆதரித்தோ ,எதிர்த்தோ எழுதப்பட்ட பதிவு அல்ல....மதுவை மட்டுமே  எதிர்த்து எழுதப்பட்ட பதிவு..

 மது அரக்கனை ஒழிப்போம்....மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்....

43 கருத்துகள்:

  1. நீங்கள் அரைகுறை விளக்கத்துடன் கதைக்கிறீர்கள். மது உண்ணக் கூடாது என்று திரு வள்ளுவர் கூறியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டி ஒரு இஸ்லாமிய பதிவர் பதிவிட்டிருந்தார். அதற்க்கு பதிலாகத்தான் இனொரு பதிவர் அதே திருவள்ளுவர் புலாலும் உண்ணக் கூடாது என்று கூறியிருக்கிறார் அதை கடைபிடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியியிருந்தார். மேற்படி இஸ்லாமிய பதிவர் மது ஏன் குடிக்க கூடாது என்பதற்க்கு மருத்துவ காரணங்களை கூறியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. அது மட்டுமல்ல தினவும் 100ML WINE சாப்பிட்டால் இருதய நோய்க்கு நல்லது என்று மருத்துவம் கூறுகின்றது. அதே மருத்துவம் தான் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்று கூறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///தினவும் 100ML WINE சாப்பிட்டால் இருதய நோய்க்கு நல்லது என்று மருத்துவம் கூறுகின்றது///----?!?!?!?!?!?! ஆதாரம்..??????

      நீக்கு
    2. முதற்கண்... நான் எழுதிய பதிவு "குடிபோதையானது மது தனி மனித உரிமைக்கு எதிரானது" என்றுதான்..! எனவே அதனை ஆதரிக்காதீர் என்றேன்..! தலைப்பே இப்படித்தான்..!

      எங்கே நான் மனித உரிமைக்கு எதிரானது என்று சொல்லிவிட்டேனோ... அங்கே "அது மனித உரிமைக்கு எதிரானது இல்லை" என்றுதான் வாதடனும்..! மனித உரிமைக்கு எதிரானது குடிபோதை இல்லை என்று... இதுவரை எந்த ஒரு கொம்பனும் வந்து அப்படி சொல்லவில்லை..!

      நீக்கு
    3. ///மது உண்ணக் கூடாது என்று திரு வள்ளுவர் கூறியிருக்கிறார் என்று மேற்கோள் காட்டி ///----ஹா..ஹா..ஹா.......

      பதிவுலகில் எந்த ஒரு முஸ்லிம் பதிவரும் குடிக்கு வக்காலத்து வாங்கி எழுதவில்லை..!

      உண்மை இப்படி இருக்க... குர்ஆன்-நபி மொழி எல்லாம் எனது பதிவுக்கு தேவைப்படவில்லை.

      குடி ஆதரவாளர்கள் தங்கள் பள்ளியில் அவர்கள் படித்த அறநூலின் கருத்துக்களே போதுமானதாக முடிவு செய்து அதை பதிவில் வைத்தேன்.

      எனது வாழ்வில் நான் கண்ட ஒவ்வொரு சம்பவமும் சொல்லி அதற்கு ஒரு கருத்தை கூற எண்ணினேன்..! ஆனால், அதை நானே எனது கருத்தாக கூறாமல்... நான் சொல்ல நினைத்ததை ஏற்கனவே திருவள்ளுவர் சொல்லிவிட்டதால்... அவருக்கு அவர் கருத்துக்கான காப்புரிமையை பதிவில் தந்து இருந்தேன்..! அவர் கருத்தை எனது கருத்தாக சொல்லிக்கொள்ள வில்லை..!

      ஒருவேளை.... அதே கருத்துக்களை திருக்குறள் மேற்கோள் இல்லாமல், நான் சொந்தமாக எனது கருத்துக்கள் போல சொல்லி இருந்தால் என்னை சும்மா விட்டு இருக்க மாட்டீர்கள்..! ஏகப்பட்ட எதிர்பதிவு போட்டு அசிங்கமாக கமெண்டில் திட்டித்தொலைத்து இருப்பீர்கள்..!

      குர்ஆன் சொன்னதை போட்டு இருந்தால்.. மீண்டும் மதவாதி முத்திரை குத்தி இருப்பீர்கள்..!

      அப்பப்பா... முஸ்லிமின் எழுத்துரிமைக்குத்தான் எவ்வளவு தடைகள்..!

      நீக்கு
    4. ///அதே திருவள்ளுவர் புலாலும் உண்ணக் கூடாது என்று கூறியிருக்கிறார் அதை கடைபிடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியியிருந்தார்.///-----சிந்தை குறைவான கேள்வி..!

      'நான் எனது வாழ்வில் திருக்குறளை கடைப்பிடிக்கிறேன்' என்றால்தான் இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்க முடியும்.

      அந்த பதிவில் மதுபோதை தனி மனித உரிமைக்கு எதிரானது என்பதே எனது வாதம்..!

      'திருக்குறள் இப்படி சொல்லி விட்டதால் நாம் குடிக்க கூடாது' என்ற பொருள் வரும்படியாவது நான் அந்த பதிவில் எங்காவது எழுதி இருக்கிறேனா..??? செமை காமடி..!

      நீக்கு
    5. ///மேற்படி இஸ்லாமிய பதிவர் மது ஏன் குடிக்க கூடாது என்பதற்க்கு மருத்துவ காரணங்களை கூறியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.///-----பதிவை படிக்காமலேயே (அல்லது அரைகுறையாக படித்துவிட்டு) எதையாவது எழுதுவது தவறு..!

      கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு எல்லாம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல்... போல்ட் செய்து தான் போட்டிருந்தேன்..! அப்படியும் இப்படி என்றால்..?!?! என்னத்தை சொல்ல..?

      ////குடிப்பதால்... அவனின் மூளை, கண்கள், வாய், தொண்டை, இரைப்பை , குடல், கல்லீரல், நுரையீரல், கணையம், எலும்பு எல்லாம் கெட்டுப்போவதுடன்... இரத்தமும் கெட்டு, அதனால் இதயமும், கிட்னியும் கெட்டு எல்லா நோயும் விரைவில் வரும் என்று மருத்துவர்கள் கூறுவதை பாவம்... அவன் மனைவி அறிபவராக இல்லை..!

      இதைவிட முக்கியமாக... குடிப்பதால் அவன் முற்றிலும் ஆண்மை இழந்து... 'கணவனாக என்ன... விரைவில்... ஓர் ஆணாகவே அந்த குடிகாரன் இருக்கப்போவதில்லை' என்பதையாவது குடிக்காத அவனின் மனைவி அறிந்திருக்க வேண்டும்..!///
      ?

      அப்படியே மேலே இப்பதிவில் சகோ.அதிரடி போட்டிருக்கும் படத்தை பார்க்கவும்..! அதில் உள்ளவற்றைத்தானே சொல்லி இருக்கிறேன்..???

      Now ball is in your court..! //தினவும் 100ML WINE// மேலுள்ள organs ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும்..!

      இல்லையேல்... அப்பட்டமாக ஆதாரம் இன்றி பொய் சொன்னதாகத்தான் புரிந்து கொள்வேன்..!

      நீக்கு
  2. நீங்கள்தான் அரைகுறையாக படித்து இருக்கறீர்கள் போலும் சகோ ..நான் அந்த இரண்டு பதிவையும் படித்துவிட்டுதான் பதிவிட்டு இருக்கிறேன்...மது அருந்தாதே என திருக்குர்ஆன் கூறுவதை கூறினால் அதற்கு மத சாயம் பூசப்படும் என்பதாலே திருக்குறளை மேற்கோள் காட்டி பதிவிட்டு இருந்தார் நண்பர் ஒருவர்...ஆனால் அதிலும் மதத்தை இழுத்து எதிர் பதிவு போட்டார் மற்றொரு நண்பர்...திருக்குரானோ ,திருக்குறளோ இரண்டுமே மது அருந்தாதே என்றுதான் கூறுகிறது...அதைதான் நாம் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர அதை செய்யாதே என்றால் இதையும் செய்ய கூடாது என்பது எப்படி நியாயமாகும் ?

    பதிலளிநீக்கு
  3. அது சரி 0.01% ஆல்கஹால் என்றால் ஹலால் என்றும் அதை இஸ்லாமியர்கள் அருந்தலாம் என்றும் பிரபல இஸ்லாமிய பரப்புரை பதிவர் பிரச்சாரம் செய்கின்றார். அது பற்றி தங்களின் கருத்து? Halal Pork எப்போதாவது நடை முறைக்கு வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதை தரும் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஹராம்தான்...அதில் அளவுகள் பற்றி சரியாக எனக்கு புரிபடவில்லை...அப்புறம் நான் இங்கு ஹலால் ஹராம் பற்றி பதிவிடவில்லை ....எனவே ஹலால் போர்க் வருமா என்ற உங்கள் அதீத கற்பனைக்குள் நான் போக விரும்பவில்லை...

      நீக்கு
  4. உறங்குபவர்களை எழுப்பி விடலாம் உறங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.உள்நோக்கோடு எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு எதை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீர்தான்

    பதிலளிநீக்கு
  5. "எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்" நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள். பதிவர் சந்திப்பு நடத்தக் கூடாது என்று விசம பிரச்சாரம் செய்தவர்களையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் சந்திப்பு நடத்த கூடாது என யாரும் பிரசாரம் செய்யவில்லை நண்பா...பதிவர் சந்திப்பு "மதுவர் "சந்திப்பாக மாற கூடாது என்றுதான் சொல்கிறார்கள்...

      நீக்கு
    2. அது எப்படி உங்களால் முன் கூட்டியே அது மது விருந்தாக அமையப் போகின்றது தெரியும். அது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட இரு பதிவர்கள் உரையாடிய விடயத்தை எப்படி அவர் ஒரு தனி நபர் தாக்குதல் ஆயுதமாக பாவிக்கலாம். இது ஒரு கீழ்தரமான செயல். இன்று வரை இந்த கீழ்தரமான பதிவர் அந்த பதிவை எடுக்கவில்லை. சில மாற்றங்கள் செய்திருக்கிறார். ஆனால் தற்போது தன்னால் தான் இப்பொது பதிவர் சந்திப்பு ஒழுங்காக நடக்க போகிறது என்று வெற்றி முழக்கம் இடுகின்றார். அவருக்கு அல்லக்கை ஜால்ரா வேறு உள்ளது. இதுதான் உங்களுக்கு மார்க்கம் சொல்லிகொடுத்த ஒழுக்கமா, நாகரிகமா?

      நீக்கு
    3. # அது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட இரு பதிவர்கள் உரையாடிய விடயத்தை எப்படி அவர் ஒரு தனி நபர் தாக்குதல் ஆயுதமாக பாவிக்கலாம்.#

      இப்படி சொல்லிவிட்டு #இன்று வரை இந்த கீழ்தரமான பதிவர் அந்த பதிவை எடுக்கவில்லை#இப்படியும் சொல்வது எப்படி நியாயம்?இங்கு இல்லாத ஒருவரை பற்றி கீழ்த்தரமாக இப்படி விமர்சிக்கலாமா ?இது மட்டும் நாகரிகமா?இதில் தேவை இல்லாமல் மார்க்கத்தை பற்றி பேசுவது நாகரிகமா?நான் இட்ட பதிவை தாண்டி நீங்கள் வேறு விசயங்களுக்கு செல்வது வேண்டும் என்றே வீண் சர்ச்சைகளை உருவாக்குவதுபோல உள்ளது சகோ...

      நீக்கு
    4. ங்கள் பதிலுக்கு பதில் கூறியதால் நான் தொடர வேண்டி ஏற்பட்டது. நான் அந்த பதிவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் மற்றைய பதிவரோ அவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இரண்டிற்க்கும் வித்தியாசம் உள்ளது

      நீக்கு
    5. அது எப்படி உங்களால் முன் கூட்டியே அது மது விருந்தாக அமையப் போகின்றது தெரியும்.

      நீக்கு
    6. http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_22.html

      நீக்கு
  6. @Barari ONLY.
    மது போதையில் விழுந்தவன், "தன்னை போல யாரும் கெட்டு விடக்கூடாது" என்று நினைப்பான். மதப்போதையில் விழுந்தவன் - அடுத்தவனையும் அந்த சகதியில் விழவைப்பான். மது போதையின் ஆயுள் - அவன் குடித்ததிலிருந்து சில மணி நேரங்களுக்கு தான். ஆனால் மத போதையோ - ஒருவனுக்குள் செலுத்தப்பட்டு விட்டால், அந்த போதையில் அவன் ஆயுள் முழுக்க. மது போதை - ஒருவனது குடும்பத்தாரை மட்டுமே அழ வைக்கும். மத போதையோ - உலகையோ அழ வைக்கும் சக்தி படைத்தவை. அழுகுரல் கேட்க வில்லையா?
    மது போதைக்கு ஒருவன் அடிமையாகி இருந்தாலும், "தான் செய்வது தவறு" என்கிற எண்ணம் அவனுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் மத போதைக்கு அடிமையானவன், "தான் செய்வது சரி" என்கிற எண்ணத்திலேயே இருப்பான். இரண்டு போதைகளிலிருந்தும் மீள நினேக்கிறவனே மனிதன். ஒரு போதை இன்னொரு போதையை "மோசம் என்று சொல்வது மோசம்".
    ஒருவன் ஒரு போதை இருந்தாலே - புதை குழி தான். இரண்டு போதையும் இருந்து விட்டால் சவக்குழி தான்.
    உண்மையாக சொல்வதாக இருந்தால் - மனிதர்களின் வாழ்வை உருக்குலைக்கும் சக்தி படைத்த இரட்டையர்கள் தான் மது போதையும், மத போதையும். இரண்டையும் ஒழிக்காத வரை மனிதனுக்கு நிம்மதி இல்லை. உலகத்திலும் அமைதி இருக்க போவதில்லை.

    http://oosssai.blogspot.com/2012/08/vs_25.html

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி உங்களுக்கும். நாளையை நிகழ்வை online ல் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அசத்துங்கள்

      நீக்கு
  8. மது என்பது நமக்கு கெடுதலான ஒன்று என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை...பதிவர் சந்திப்புக்கு பின் பதிவுலகம் செய்ய வேண்டிய பதிவுகள் ....http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html வந்து பாருங்களேன்...

    பதிலளிநீக்கு
  9. சிறந்த பதிவு. நாளை பதிவர் சந்திப்பு நலமுடன் நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமுஅலைக்கும் ,

    அருமையான பதிவு.

    பதிவர் சந்திப்பு மங்களகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஸலாம் சகோ.ஹாஜா...
    மிக அருமையான பதிவு.
    நல்ல விளக்கங்கள்.
    மிக்க நன்றி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      வஸ்ஸலாம் சகோ...நீங்களும் சிறப்பான வாதத்துடன் பதில் கூறி உள்ளீர்கள்...நன்றி...

      நீக்கு
  12. மதுவுக்கு உடம்புக்கு கேடு; இது மறுக்க முடியாத உண்மை; ஆனால், அரசாங்கம் அனுமதித்தால் சாப்பிடலாம் (legal). இது தனி மனிதன் விருப்பம். அவன் வீட்டில் அவன்/அவள் என்ன குடிப்பதை தடை செய்யக் கூடாது. அது தான் விவாதம்.

    ஒரு கேள்வி?
    கீழக்கரையில் நாகூரில் TASMAC உண்டா?
    யார் அங்கு சாப்பிடுகிறார்கள் என்ற கேள்வி அல்ல இது.
    அங்கு இந்தக் கடைகள் உண்டா? இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..அதுபற்றி எனக்கு சரியாக தெரியாது...

      நீக்கு
  13. "Now ball is in your court..! //தினவும் 100ML WINE// மேலுள்ள organs ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும்..! "

    http://www.webmd.com/lung-cancer/news/20081007/red-wine-may-cut-risk-of-lung-cancer
    (The study, published in Cancer Epidemiology Biomarkers and Prevention, used data from The California Men's Health Study)

    http://www.webmd.com/heart-disease/guide/heart-disease-alcohol-your-heart
    (James Beckerman, MD, FACC)

    http://www.rsc.org/chemistryworld/News/2010/November/19111001.asp
    ( Alois Jungbauer from the University of Natural Resources and Life Sciences, Vienna, Austria)

    http://www.winepros.org/wine101/wine-health.htm

    http://www.mayoclinic.com/health/alcohol/SC00024

    http://health.usnews.com/usnews/health/briefs/heart/hb050215b.htm

    http://www.sciencedaily.com/releases/2002/05/020521072618.htm

    http://www.hsph.harvard.edu/nutritionsource/what-should-you-eat/is-wine-fine-or-beer-better/index.html
    (A report from the Health Professionals Follow-up Study, for example, examined the drinking habits of more than 38,000 men over a 12-year period. Moderate drinkers were 30 to 35 percent less likely to have had a heart attack than non-drinkers)

    http://www.sciencedaily.com/releases/2002/05/020521072618.htm
    (Drinking Wine, Particularly White Wine, May Help Keep Lungs Healthy, University At Buffalo Study Finds)

    http://www.todaysdietitian.com/newarchives/080111p32.shtml
    (According to O’Connor, recent studies have shown that alcohol (red wine in particular) may potentially decrease the risk of colon cancer and prostate cancer if consumed in moderation.)

    http://greatist.com/health/red-wine/#

    ரொம்ப diet ஆக இருக்கிறது. மீதி நாளைக்கு பார்ப்போம். நன்றி. (நான் மீண்டும் கூறுகின்றேன் நான் குறிப்பிட்டது 100ml wine உடலுக்கு நல்லது என்று ஆனால் முக்கிய விடயம் ஆராச்சிகளின் படி moderate என்பது 150ml இப்படி பார்த்தால் நம்ம அளவு கம்மி தான்.

    பதிலளிநீக்கு
  14. @முஹம்மத் ஆஷிக் citizen of world
    "Now ball is in your court..! //தினவும் 100ML WINE// மேலுள்ள organs ஐ பாதிக்காது என்று நிரூபிக்க வேண்டும்..! "

    http://www.webmd.com/lung-cancer/news/20081007/red-wine-may-cut-risk-of-lung-cancer
    (The study, published in Cancer Epidemiology Biomarkers and Prevention, used data from The California Men's Health Study)

    http://www.webmd.com/heart-disease/guide/heart-disease-alcohol-your-heart
    (James Beckerman, MD, FACC)

    http://www.rsc.org/chemistryworld/News/2010/November/19111001.asp
    ( Alois Jungbauer from the University of Natural Resources and Life Sciences, Vienna, Austria)

    http://www.winepros.org/wine101/wine-health.htm

    http://www.mayoclinic.com/health/alcohol/SC00024

    http://health.usnews.com/usnews/health/briefs/heart/hb050215b.htm

    http://www.sciencedaily.com/releases/2002/05/020521072618.htm

    http://www.hsph.harvard.edu/nutritionsource/what-should-you-eat/is-wine-fine-or-beer-better/index.html
    (A report from the Health Professionals Follow-up Study, for example, examined the drinking habits of more than 38,000 men over a 12-year period. Moderate drinkers were 30 to 35 percent less likely to have had a heart attack than non-drinkers)

    http://www.sciencedaily.com/releases/2002/05/020521072618.htm
    (Drinking Wine, Particularly White Wine, May Help Keep Lungs Healthy, University At Buffalo Study Finds)

    http://www.todaysdietitian.com/newarchives/080111p32.shtml
    (According to O’Connor, recent studies have shown that alcohol (red wine in particular) may potentially decrease the risk of colon cancer and prostate cancer if consumed in moderation.)

    http://greatist.com/health/red-wine/#

    ரொம்ப diet ஆக இருக்கிறது. மீதி நாளைக்கு பார்ப்போம். நன்றி. (நான் மீண்டும் கூறுகின்றேன் நான் குறிப்பிட்டது 100ml wine உடலுக்கு நல்லது என்று ஆனால் முக்கிய விடயம் ஆராச்சிகளின் படி moderate என்பது 150ml இப்படி பார்த்தால் நம்ம அளவு கம்மி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ.எதிகாளிஸ்ட்... :-)))

      First link...Fails..!

      ////Moderate red wine consumption was associated with a reduced incidence of lung cancer, especially among *smokers*. Smokers who drank at least one glass of red wine a day had 60% lower chance of getting lung cancer than nondrinking smokers.
      Still, researchers said the best way to reduce lung cancer risk is to *stop smoking*. The smokers who drank red wine still faced a greater risk than *nonsmokers*.////----?!?!?!
      Read before giving link..!

      Second link also fails..!

      ///The effect of alcohol on health and heart disease is complex. For some people, even mild alcohol use carries major risks.///
      ///doctors do not recommend drinking alcohol specifically for better heart health///
      ///Drinking alcohol can be harmful for some people. Those who have heart failure, cardiomyopathy (an enlarged heart), high blood pressure, diabetes, arrhythmia (irregular heart rhythm), a history of stroke, obesity, high triglycerides, or are taking medications, should speak to their doctor before drinking alcohol. Also, pregnant women and those with a history of alcoholism should not drink alcohol///

      Third link not matching to our task..!

      ///Some red wines contain such high levels of polyphenols that a single glass has equivalent bioactivity to several daily doses of an anti-diabetes drug, say Austrian scientists.///

      Fourth link... unconfirmed in victims..!

      ///Moderate consumption of red wine on a regular basis *may be* a preventative against coronary disease and some forms of cancer. ///
      ///NOTE: Any claim that one particular wine type, or region, or extract, has higher health or life-prolonging benefits is entirely BOGUS, FALSE, and intended to promote commercial sales and profit, and not to benefit public health.///-----Ha...ha..ha.... A big comedy...!!!

      Fifth link... seals the gate perfectly against you..!

      ///you don't have to drink any alcohol, and if you currently don't drink, don't start drinking for the possible health benefits. In some cases, it's safest to avoid alcohol entirely — the possible benefits don't outweigh the risks.///

      Sixth link...no use..!

      ///What they found: Women who regularly drank wine had a higher HRV than those who drank beer, hard liquor, or no alcohol at all. Because a low HRV has been linked to serious heart illness, the researchers say their finding implies that women who consume moderate amounts of wine may have healthier hearts.///---this is comparison among moderate drinkers and irregular drinkers..! ie., among drunker s..! No use for the non-alcoholic..!

      Seventh link... directly contradicts with first link..!

      ///Drinking Wine, Particularly White Wine, May Help Keep Lungs Healthy, University At Buffalo Study Finds///

      Eighth link..."Is Wine Fine, or Beer Better?"

      ///Some studies have suggested that red wine—particularly when drunk with a meal—offers more cardiovascular benefits than beer or spirits. These range from international comparisons showing a lower prevalence of coronary heart disease in "wine-drinking countries" than in beer- or liquor-drinking countries.///----just vague... not showing any authentic beneficent..!

      Ninth link is the same one as Seventh one..! Repeats..!

      Tenth link....

      ///In general, Brill believes drinking in moderation, especially red wine, can do many a body good///---"believes... still....? why not apply on patients...?

      Eleventh link..!

      ///all wines are not created equal.///........//One thing to keep in mind: one serving of wine is only five ounces. Drinking the whole bottle doesn’t double (or quadruple) the benefits, and drinking too much can lead to cancers and other diseases.//---why such risk..?

      ஆக... சகோ.எதிகாளிஸ்ட்...

      நீங்கள் தந்த சுட்டிகள் குடிப்பவரை 'இப்படி இந்த அளவு குடித்தால் நல்லது' என்றுதான் சொல்கின்றன..! மாறாக, குடிக்கவே குடிக்காத இதயநோயாளி ஒருவரை கூப்பிட்டு, தினம் 150 ml ஒயின் குடி என்று சொல்லவில்லை..! இன்னும் சொல்லப்போனால்... சில சுட்டிகள் குடிக்கவே வேண்டாம் என்கின்றன. அவசரம் வேண்டாம் சகோ. நிதானம்..!

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  16. //எந்தக்கொப்பனுமே திருக்குறள்ல சொல்லப்பட்ட அனைத்தையும் ஃபாலோ பண்ணுவதில்லை!\\

    அதே மாதிரி தான் நாங்களும் கள்ளுண்ணாமை ஃபாலோ பண்ணுவதில்லை..... வந்துட்டானுக கீ பேர்ட் கிழிய கம்மண்ட் போட

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. நண்பர்களே நாகரீகமாக பேசுங்கள்!

    பதிலளிநீக்கு
  19. எந்த ஒரு விவாதம் என்றாலும் நாகரிகமாகவே அது நடக்க வேண்டும்....தேவையில்லாத நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பர்களே....

    பதிலளிநீக்கு
  20. போய் மொதல்ல புள்ளகுட்டிய படிக்க வைங்கப்பா

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. படிக்கும்போது அவங்களுக்கு தெரியும் கெட்டது எது நல்லது எதுன்னு

    பதிலளிநீக்கு
  23. Then you guys should enable comment moderation. Dont you know how to do? All kind of people will come here (as it is open to the world) with fake ids and what not- of course they will comment DECENTLY. I will remove my comments! Take care!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....