03 நவம்பர் 2012

திருமணத்தை மறைத்த நரேந்திர மோடியும், 1600 கோடி ஊழலும்....(கூட்டுப்பொறியல் )நரேந்திர மோடிக்கு  மனைவி  இருப்பதாக  கூறி அடுத்த பரபரப்பை  கிளப்பி உள்ளார் திக் விஜய் சிங்..

மனைவி இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என கேட்குறீர்களா? இல்லைதான்..ஆனால் தான் பிரம்மசாரி என கூறி கொள்ளும் ஒருவர் ,பொது வாழ்வில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் மனைவி இல்லை என்று கூறினால் தவறு இல்லையா?

மோடியுடன் 1968ல்  தனக்கு திருமணம் நடந்ததாக யசோதா என்பவர் கூறி உள்ளதாகவும் அதற்கு மோடி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும்  திக் விஜய் சிங் கூறி இருக்கிறார்....

மேலும் தேர்தல் ஆணையத்திடம்  மோடி அளித்துள்ள  உறுதிமொழி பத்திரத்தில் திருமணம் ஆனவரா? என்ற கேள்விக்கு எதுவும் குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டது ஏன் எனவும் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்....

பதில் இருக்கா அந்த கேடியிடம்?

........................ ............................................ .........................................................................

தீபாவளி நேரத்தில் இலட்ச வாலா  பட்டாசை  கொளுத்தி போட்டுள்ளார் சுப்ரமணிய சுவாமி ....

சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் பெயர் யங் இந்தியா. இந்த தனியார் நிறுவனமானது அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இப்பொது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ1,600 கோடி என்றும் சோனியா- ராகுல் காந்தி உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியே கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுவாமி கொளுத்தி  உள்ள பட்டாசு....

வழக்கம்போல ராகுல் இதை மறுத்து இருக்கிறார்..தனது மீது அவதூறு கூறி உள்ள சு.சுவாமி மீது வழக்கும் தொடர  போகிறாராம்  ராகுல்...

கருணாநிதிக்கே கடிதமா?!ஜெயலலிதாவுக்கே அறிக்கையா?சுப்ரமணிய சுவாமிக்கே வழக்கா?!


.................................................... ..................................... .......................................................................................

தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமை ரத்து  செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்....

வருடா வருடம் இதுபோல அமைச்சர்கள் சொன்னாலும் ஆம்னி பஸ்கொள்ளைகள் தீபாவளி  சமயங்களில்நடந்து கொண்டுதான் இருக்கிறது...

ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் தங்களுக்குஅன்றைய வயிற்று வலி தீர்ந்தால்  போதும் என்கிற மனப்பாங்கில் பண்டிகை காலங்களில் கேட்கிற கட்டணத்தை கொடுத்து விடுவதால்தான் இந்த ஆம்னி பஸ் கொள்ளைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை....

இதை படிக்கும் நண்பர்கள் இது போன்ற தொந்தரவுகளுக்கு ஆளானால் "9444855428 9444015958"என்ற எண்ணுக்கு  புகார் அளியுங்கள்....கட்டண கொள்ளையை  தடுப்போம்....
14 கருத்துகள்:

 1. நல்ல பொரியல்...

  இரு கைபேசி நம்பர்களுக்கு நன்றி...
  tm1

  நண்பர்களிடம் பகிர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. //பதில் இருக்கா அந்த கேடியிடம்?//

  கேடியிடம் இருந்து பதில் வருமா? இவரின் பல பொய்களில் பிரம்மசாரி என்பதும் ஒன்று.

  பதிலளிநீக்கு
 3. கௌரவம் – மானம் காக்க கொலை!

  1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.
  அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

  காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.
  இந்தியா முழுவதும் நடக்கும் இத்தகைய கௌரவக் கொலைகளைப் பற்றிய அதிகார பூர்வமான அரசாங்க புள்ளிவிவரங்கள் இல்லா விட்டாலும்,

  இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு வெளியிட்ட தகவல்களின்படி ஹரியானா, பஞ்சாப், உபி மாநிலங்கள் ஆண்டுக்கு 900 கௌரவக் கொலைகளுக்கும் நாட்டின் பிற பகுதிகள் சுமார் 100 முதல் 300 கொலைகளுக்கும் களமாக விளங்குகின்றன.

  கௌரவக் கொலை என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் அல்லது கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அல்லது ஒரே உட்பிரிவுக்குள் (கோத்ரம்) திருமணம் செய்து கொள்ளும் அல்லது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வழங்கப்படும் மரண தண்டனை என்று வரையறுக்கப்படுகிறது.

  இப்போதெல்லாம் பெண்ணைக் கொல்வதோடு அவளை திருமணம் செய்யத் துணிந்த மருமகனையும் கொன்று போடுவது வழக்கமாக வளர்ந்திருக்கிறது.

  பெரும்பான்மை கொலைகள் கிராமங்களில் நடந்தாலும், மேலே பார்த்த உதாரணங்களைப் போல பாரத தலைநகர் தில்லியிலும், முன்னேறிய மாநிலம் என்று கொண்டாடப்படும் தமிழ்நாட்டிலும் கூட இத்தகைய கொலைகள் அவ்வப்போது நடக்கின்றன.

  வட இந்தியாவில், இத்தகைய கொலைகள் நடக்கின்றன என்று ஊடகங்கள் பரபரப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

  பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொண்டால், பெற்றோர், சகோதரர் அல்லது உறவினர்கள், அவர்களைக் கொன்று விடுகிறார்கள்.

  88.93% சதவீதம் கொலைக்குற்றத்தைச் செய்வது பெண்ணின் உறவினர்கள்தாம். அதாவது கௌரவத்தைப் பார்ப்பது அவர்கள்தாம் போலும்.

  பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போது, இப்பிரச்சினை வருகிறது.

  இதில் சமூகத்தின் எந்த பிரிவினரும் விலகில்லாமல் இருக்கிறர்கள். அதாவது, பொதுவாக எல்லா சமூகத்தினரும், இத்தகைய உறவுகளை எதிர்க்கின்றனர்.

  மேலும், குறிப்பாக, இந்த அராய்ச்சி நிறுவனங்கள், ஒரு உண்மையினை மறைத்துவிடுகின்றது.
  அதாவது, ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் வேறு மதத்தில் மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போதுதான், பிரச்சினை பூதாகாரமாகிறது என்பதனை மறைக்கின்றனர்.

  அரசாங்கம் அத்தகைய விவரங்கள் வெளிவருவதை விரும்பாததினால், மதத்தைக் குறிப்பிடாமல், ஜாதி என்று பதிவு செய்து உண்மையினையும் மறைத்து விடுகின்றனர்.

  இந்நிலையில், தமிழகத்தில் அத்தகைய கொலைகள் அதிக அளவில் இருப்பினும், அவை சாதாரணமான கொலையாகவே பாவிக்கப் பட்டு, மறைக்கப் படுகின்றன.
  உண்மையில், சமூக ரீதியில், அவை ஆராயப் படுவதில்லை, அத்தகைய கொடுமையைத் தட்டிக் கேட்பதில்லை.
  SOURCE:INTERNET.

  உலகிலேயே நம் நாட்டில் கௌரவக்கொலைகள் தொடராக நடப்பதை வசதியாக மறந்துவிட்டு


  இதுபோன்ற கௌரவக்கொலைகள் இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இஸ்லாமிய சமூகத்திலோ அரிதாக நடந்துவிட்டால்

  காழ்ப்புணர்வுகளின் காரணமாக ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மீதும் சேற்றை வாரி இறைப்பதை சில "நல்லெண்ணம்" கொண்ட "அறிவுஜீவி " பதிவர்கள் தாங்களுடைய பிரதான தொழிலாக கொண்டிருப்பதும் அவர்களுக்கு பலர் "சிங்கி" அடிப்பத்தை வாடிக்கையாக கொள்வதும் அனைவரும் அறிந்ததே

  பதிலளிநீக்கு
 4. நண்பரே,
  கூகிளில் தேடினால் தெளிவாகவே பதில் வருகிறது..

  அவருக்கு நடந்தது பால்ய விவாகம். பெண் வயதுக்கு வந்த பிறகே கணவருடன் சேர்த்து வைப்பார்கள். அதற்கு முன்பே அவர் விலகி ஆர்எஸ்எஸ்'ஸில் சேர்ந்து விட்டார்...

  Contrary to popular perception,Narendra Bhai Modi is not a bachelor. He was married during his childhood. The custom of child marriage in India was there during those days. However, the same custom didn’t allow Modi to see his wife as the personal meeting between two was only possible after a special ceremony. That ceremony, Gauna –second marriage, never happened as Narendra Modi got attracted towards RSS and decided to remain ‘bachelor’ for his life. Hence, Narendra Modi is a bachelor, but he is certainly not unmarried. Despite being married he religiously followed celibacy.

  இதை அபிஷேக் சிங்வியின் இடத்தில் தற்போது இருக்கும் திக்விஜயா சொல்வதுதான் வேடிக்கை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நீங்கள் சொல்லித்தான் தெரியும்....ஆனாலும் பால்ய திருமணம் என்றாலும் அதை ஏன் அவர் மறைக்க வேண்டும்?!

   நீக்கு
 5. மோடி (சல்)அலையைப் போன்றவர். மதிப்பதும் மிதிப்பதும் உங்கள் விருப்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.ஆஹா..என்ன ஒரு வன்மம் உங்கள் எழுத்தில்?!இதை பார்த்து நான் கோபப்பட்டு ஏதாவது எழுதினால் அது உங்களின் எழுத்து தீவிரவாதத்திற்கு கிடைத்த வெற்றி...சோ பெட்டர் லக் NEXT TIME

   நீக்கு
 6. அவர் மறுப்பு சொல்லியிருந்தாலோ அல்லது மறைத்திருந்தாலோ கூகிள் தேடலில் முதல் இரண்டு மூன்று இடங்களுக்குள் அவரது பால்ய விவாகம் பற்றிய செய்திகள் வந்திருக்க வாய்ப்பில்லை.

  திக்விஜயா சத்திய சந்தர் இல்லை அவரது கருத்துக்களை அப்படியே ஆமோதிப்பதற்கு..இன்றுள்ள காங்கிரஸ் அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் போன்ற பொய்யர்கள், ஊழலாளர்களையும் நாடு என்றுமே கண்டதில்லை.

  நீங்கள் கேடி என்று சொல்லுமளவிற்கு மோடியின் மீதான வெறுப்பு மட்டுமே இந்த விமர்சனத்தில் தெரிகிறது.. :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜபக்சேவை பற்றி எழுதும்போது எப்படி கொலைகாரன்,கொடுங்கோலன் என் எழுதுகிறோமோ அதுபோலத்தான் மோடியை பற்றி எழுதும்போதும் கொலைகாரன்,கொடுங்கோலன் என எழுத எழுதுவது...நான்தான் தவறு செய்துவிட்டேன்..மோடியை கேடி என்று எழுதாமல் கொலைகாரன் என எழுதி இருக்க வேண்டும்....

   நீக்கு
 7. இரண்டாயிரத்திற்கும் மேல் குஜராத்தி முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாகவும் இருந்து அதனை ஒரு படைத்தலைவவனைப் போல முன்னின்று நடத்திய ஒரு ஜனநாயக கொடுங்கோலனை "கேடி" என்று குறைத்து மதிப்பீட்டுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்..நான்தான் தவறாக எழுதிவிட்டேன்..கொலைகாரன் மோடியை கேடி என்று!

   நீக்கு
 8. மோடி க்கு மனைவி இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன ? அவர் ஒரு நல்ல, திறமையான மனிதர் ! இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியான நபர் மோடி !

  மோடியை உங்களைப் போன்ற சிலர் கேடி என்றாலும் சரி வேறு எப்படி வசை பாடி கிலுகிலுப்பை காட்டினாலும் சரி, 2014 இதற்கு சரியான பதில் சொல்லும் : ) பொருத்திருப்போம்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....