14 செப்டம்பர் 2013

மோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...?!

ஒரு கட்சியில் பிரதமர்  வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட  மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி பிரதமர் என்பவர் அமெரிக்கா ,ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளதை போல நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்க படுபவர் அல்ல...நேரடியாக இவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க...!

பெரும்பான்மையான இடங்களை  பெற்ற கட்சியின் வெற்றி பெற்ற எம் பி க்கள் தங்களில் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம்...அதற்கு முதலில் பி ஜே பி பெரும்பான்மையான இடங்களை பெற்று தனி பெரும் கட்சியாக வெற்றி பெற வேண்டும்..இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையான இடங்களை பெற முடியாது என்பதே உண்மை..

கூட்டணி கட்சிகளின் தயவில்தான் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்... அப்படி பி ஜே பி தலைமையிலான அணி  வெற்றி  பெற்றாலும்  மோடியை மற்ற  கூட்டணி கட்சிகள் ஏற்று கொள்வார்களா என்பது சந்தேகமே...

அப்படி இருக்கையில் நேரடியாக பிரதமர் பதவிக்கே தேர்தல் நடப்பது போல பிரதமர் வேட்பாளரை அறிவித்து இருப்பது இந்திய அரசியல் சட்டத்தையும் .ஜனநாயகத்தையும்  கேலிக்குரியதாக்குகிறது ....

மேலும் பெரும்பான்மை இனத்தவரின்  வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வகுப்புவாதத்தையும் தூண்டுவதுபோல இருக்கிறது பி ஜே பி யின் செயல்பாடு...



இல்லை இதுதான் தேவை  என்றால் மக்களால் நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி விட்டு மோடி புராணம் பாடலாம்...முடியுமா?முடியாது...


காங்கிரஸ் ஆட்சி சரி இல்லை என்பதை யாரும் மறுக்கவில்லை...மாற்றம் வர வேண்டும் என்பதையும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினர் போன்றே சிறுபான்மையினரும் விரும்புகின்றனர் என்பதே உண்மை..

அது பி ஜே பி யாக இருந்தாலும்,அல்லது மூன்றாவது அணியாக இருந்தாலும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க போவதில்லை...

மோடி என்ற ஒருவரை தவிர...

சிறுபான்மையினர் பி ஜே பி யை வெறுக்கவில்லை...சொந்த மாநில மக்களை  காக்காமல் ,அழித்த ரத்தக்கறை படிந்த  மோடி என்ற கிரிமினலைத்தான் எதிர்க்கிறார்கள்..

மோடிதான் பிரச்சினையே  தவிர பி ஜே  பி அல்ல...!