14 செப்டம்பர் 2013

மோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...?!

ஒரு கட்சியில் பிரதமர்  வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட  மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி பிரதமர் என்பவர் அமெரிக்கா ,ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளதை போல நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்க படுபவர் அல்ல...நேரடியாக இவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க...!

பெரும்பான்மையான இடங்களை  பெற்ற கட்சியின் வெற்றி பெற்ற எம் பி க்கள் தங்களில் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம்...அதற்கு முதலில் பி ஜே பி பெரும்பான்மையான இடங்களை பெற்று தனி பெரும் கட்சியாக வெற்றி பெற வேண்டும்..இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மையான இடங்களை பெற முடியாது என்பதே உண்மை..

கூட்டணி கட்சிகளின் தயவில்தான் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்... அப்படி பி ஜே பி தலைமையிலான அணி  வெற்றி  பெற்றாலும்  மோடியை மற்ற  கூட்டணி கட்சிகள் ஏற்று கொள்வார்களா என்பது சந்தேகமே...

அப்படி இருக்கையில் நேரடியாக பிரதமர் பதவிக்கே தேர்தல் நடப்பது போல பிரதமர் வேட்பாளரை அறிவித்து இருப்பது இந்திய அரசியல் சட்டத்தையும் .ஜனநாயகத்தையும்  கேலிக்குரியதாக்குகிறது ....

மேலும் பெரும்பான்மை இனத்தவரின்  வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வகுப்புவாதத்தையும் தூண்டுவதுபோல இருக்கிறது பி ஜே பி யின் செயல்பாடு...



இல்லை இதுதான் தேவை  என்றால் மக்களால் நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி விட்டு மோடி புராணம் பாடலாம்...முடியுமா?முடியாது...


காங்கிரஸ் ஆட்சி சரி இல்லை என்பதை யாரும் மறுக்கவில்லை...மாற்றம் வர வேண்டும் என்பதையும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினர் போன்றே சிறுபான்மையினரும் விரும்புகின்றனர் என்பதே உண்மை..

அது பி ஜே பி யாக இருந்தாலும்,அல்லது மூன்றாவது அணியாக இருந்தாலும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க போவதில்லை...

மோடி என்ற ஒருவரை தவிர...

சிறுபான்மையினர் பி ஜே பி யை வெறுக்கவில்லை...சொந்த மாநில மக்களை  காக்காமல் ,அழித்த ரத்தக்கறை படிந்த  மோடி என்ற கிரிமினலைத்தான் எதிர்க்கிறார்கள்..

மோடிதான் பிரச்சினையே  தவிர பி ஜே  பி அல்ல...!



7 கருத்துகள்:

  1. கிரிமினல் கும்பலின் தலைவனான கேடி மோடி பிரதமராவதா?


    ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தால் தூக்கு.

    அதை விட பன்மடங்கு கொடுமையானதாக முன்நின்று நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று
    குவிக்க‌ வழி நடத்தினால் பிரதமரா?

    13,09.2013 அன்று காலை ஊடகங்களில் வந்த செய்தி; தில்லி பேருந்தில் மாணவியை வன்புணர்வு செய்த நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிப்பு.

    அதே 13.09.2013 அன்று மாலை ஊடகங்களில் வேறு ஒரு செய்தி; பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிப்பு.

    இவ்விரு அறிவிப்புகளும் ஒரே நாளில் நிகழ்ந்தது தற்செயலாக இருந்தாலும் இவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள ஓர் ஒற்றுமையையும் அதற்கு கிடைத்த பரிசில் உள்ள வேற்றுமை குறித்துமே என் கேள்வி.

    ஒரு இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததற்கு தூக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டுமெனில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட குஜராத்தில் வழங்கப்பட்ட நீதி என்ன என்பது விளங்கவில்லை.

    குஜராத்தில் நடந்தவைகள் அரிதினும் அரிதானதாக இல்லாமல் சாதாரணமாக நடக்க கூடிய ஒன்றா என்ன?.

    ஏதோ ஒரு பெண்ணை பார்த்தவுடன் உணர்வுகளின் உந்துதலால் காமம் தலைக்கேறி வன்புணர்வு செய்த அக்காமுகர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கை ஆதரிக்கிறேன்.

    ஆனால் அதை விட பன்மடங்கு கொடுமையானதாக, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசே முன்நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று, நூற்றுக்கணக்கில் இளம் பெண்களை வன்புணர்வு செய்து மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கியதற்கு என்ன தீர்ப்பை இந்திய நீதிமன்றங்கள் தந்தன.

    தாயின் வயிற்றில் உள்ள சிசுவை நெருப்பில் போட்டு கொளுத்தியதை பாபு பஜ்ரங்கியே பெருமையாய் தெஹல்காவின் முன் சொன்னதற்கு இது வரை தூக்கு வழங்கப்படவில்லையே.

    அது போல் குஜராத்தில் நடந்த கலவரங்களில் பங்கு பெற்றதாக நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட மாயா கோட்னானியும் தூக்கில் இடப்படவில்லை.

    இவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்களை வழிநடத்திய மோடியோ இந்திய பிரதம வேட்பாளாரக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி கட்ட வில்லையென்றால் லோனில் வாங்கிய பசுமாட்டை பிடுங்கி கொண்டு செல்லும் வங்கிகளில் கோடிக்கணக்கில் வங்கி பணத்தை ஆட்டையை போட்டால் கண்டு கொள்வதில்லை.

    அது போல் வன்புணர்வே என்றாலும் செய்த தவறை ஒத்து கொண்டு நீதிமன்றத்தில் ஒத்து கொண்டால் தூக்கு தண்டனை வழங்கப்படும், அதுவே அதிகாரத்தில் இருந்து கொண்டு நூற்றுக்கணக்கில் பெண்களை வன்புணர்வு செய்தால் இந்திய பிரதமராகலாம். இனியும் சட்டத்தின் முன் சமம் என்று எவராவது சொன்னால் அவ்வளவு தான்.

    Source:http://www.inneram.com/inneram-specials/readers-mail/1935-will-be-hanged-for-one-rape,-more-means-pm.html

    பதிலளிநீக்கு
  2. காலத்தின் கட்டாயம்...இந்தியர்களுக்கு ஒரு இந்தியன் தலைவனாக வரவேண்டும்.

    இத்தாலிக்காரி வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்தாலிக்கே சென்றுவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இந்தியன் மோடியை தவிர வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...

      நீக்கு
  3. ஜின்னா அவர்களை ஆசியாவின் நிரந்தர பிரதமர் பதவிக்கு நியமித்து இருக்கவேண்டும் .ஆடு மாடுகள் ஆசியாவின் சாலைகளை அசிங்கம் பண்ண வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. இது மோடியை பற்றியது....ஜின்னாவை பற்றியது அல்ல..

    பதிலளிநீக்கு
  5. ourtechnicians deals with home appliances repairs and services like electrical services, plumbing services, two wheeler repairs, ATS system repair services,house renovations, paintings, dish washer repair services, wardrobe erection or alterations, bathroom and kithen remodelling and maintenance services.If you need our service inspect on
    home appliance
    www.facebook.com
    www.instagram.com

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....