தான் சந்தித்த முதல் தேர்தலிலே தோற்க போவது உறுதி என தெரிந்தும் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியவர்
யார் தயவும் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்றவர்!
கடந்த தேர்தலில் இவர் தயவு இருந்தால்தான் வெற்றி நிச்சயப்படும் என எண்ணி இன்றைய ஆளும்கட்சியினரால் கூட்டணி அமைக்க அழைக்கப்பட்டவர்!
கட்சி ஆரம்பித்து 6 வருடங்களில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தவர்
அவர்தான் இன்று மீடியாக்களினால் கிண்டல் செய்யப்படும் விஜயகாந்த்!
நிச்சயமாக ஜெயலிதாவை போல சொந்த திறமை இல்லாமல் அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்து விஜயகாந்த் பெரிய ஆளாகவில்லை...
கருணாநிதியைபோல திறமையாக தந்திரமாக கட்சி முன்னோடிகளை பின்னுக்கு தள்ளி கட்சியை கைப்பற்றவில்லை !
தனி ஒரு மனிதராக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களில் எம் ஜி ஆர் க்கு பிறகு விஜயகாந்துதான் தமிழ்நாட்டில்...
அப்படிப்பட்ட விஜயகாந்தின் அரசியல் வாழ்வில் இப்போது ஒரு சறுக்கல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான்...
14 வருடம் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி சந்திக்காத சறுக்கலா?
1996 ல் தோற்று,இனி அதிமுக என்ற கட்சியே அவ்வளவுதான் என அனைவரும் நினைத்த ஜெயலலிதா சந்திக்காத சறுக்கலா?
இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை விட்டால் இப்போதும் யாரையும் சொல்ல முடியாது வாக்கு வங்கி விசயத்தில்!
7 எம் எல் ஏ க்கள் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார்கள்,காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கலாம்,அல்லது தெரிவிக்காமல் போகலாம்,,என முக்கால்வாசி தோல்வி தெரிந்தும் பின் வாங்காமால் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதைவிட ஓட்டபந்தயத்தில் ஓடி தோற்றாலும் பரவாயில்லை என களத்தில் இறங்கிய விஜயகாந்த் பாராட்டுக்கு உரியவரே!
திமுக போல எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கேட்காமல் ஒரு கட்சியிடம் கேட்டு பார்ப்போம்...இல்லாவிட்டால் தோல்வியை ஏற்போம் என களத்தில் இறங்கிய விஜயகாந்துதான் உண்மையில் வெற்றி பெற்றவர் ....தைரியத்தில்!
விஜயகாந்த் சரிவில் இருந்து மீண்டு வர செய்ய வேண்டியது இதுதான்!
முதலில் சட்டசபைக்கு செல்லுங்கள் !
மனைவியை வீட்டோடு தவிர்த்து விடுங்கள்!
ஆளும் கட்சியினரின் தவறுகளை கண்டித்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துங்கள்...இன்று திமுக இருப்பதற்கு காரணம் கலைஞரின் அந்த போர்க்குணம்தான் !
உங்களுக்கு என சிறு கட்சி தலைவர்களிடம் ஒரு வட்டத்தை உருவாக்குங்கள்...இதற்கும் உதாரணம் கருணாநிதிதான்...
முடிவாக ஒன்று "கருப்பு எம் ஜி ஆர் ஆக நினைப்பதை விட்டுவிடுங்கள்" ஆளும் கட்சியினரை எதிர்த்து போராடிய "அன்றய கருணாநிதியை போல கருப்பு கருணாநிதி ஆக எண்ணுங்கள் "
வெற்றி காத்திருக்கும்!
இதெல்லாம் எழுத விஜயகாந்தின்முன்னாள் ரசிகன் நான் என்பதும் ஒரு காரணம்!
Tweet |
//இவர் தயவு இருந்தால்தான் வெற்றி நிச்சயப்படும் என எண்ணி இன்றைய ஆளும்கட்சியினரால் கூட்டணி அமைக்க அழைக்கப்பட்டவர்! //
பதிலளிநீக்குREAL FACT
நன்றி....
நீக்குசொல்லப்பட்டவைகளை தொடர்ந்தால்....... தொடருவாரா...?
பதிலளிநீக்குநன்றி....
நீக்குநல்ல ஆலோசனைகள்.., விஜயாகாந்த் செய்வாரா?
பதிலளிநீக்கு
நீக்குசெஞ்சா அவருக்கு நல்லது....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு