வருடத்துக்கு 1 லட்சம் ISI க்கு பீஸ்....மாதம் தோறும் OUTSIDE LABE டெஸ்ட்,மாதம்தோறும் monthly டெஸ்ட்,6 month டெஸ்ட்,வருடத்துக்கு ஒரு முறை பூச்சி கொல்லி மருந்து டெஸ்ட் என வருடத்துக்கு டெஸ்ட் செய்ய மட்டும் ஆகும் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்...OUTSIDE LABE ல் சோதனை செய்யப்பட்டு அந்த தண்ணீர் ISI விதிகளின் படி இல்லை என்றால் உடனே STOP MARKETING அதாவது தண்ணீரை விற்க தடை செய்துவிடுவார்கள்...
INSIDE LABE ல் தினமும் CHEMISTRY ,MICROBIOLOGY ஆகியோரால் சோதனை செய்யப்பட்டு ,ISI விதிகளின்படி தண்ணீர் இருந்தால்தான் அது விற்பனைக்கு வெளியே வரும்...இதுதான் உண்மையாக பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் எனப்படுவது ...அதாவது இன்று ஏதோ மக்களை அழிக்க வந்த வில்லன்போல சித்தரிக்கப்படும் கேன் வாட்டர் ,பாட்டில் வாட்டர்...
தயாரிப்பு செலவு,லேபர் சம்பளம்,transport செலவு,labe டெஸ்ட் செலவு,போன்ற செலவுகளை எல்லாம் தவிர்த்து ஒரு கேன் நேரடியாக விற்பனைக்கு அனுப்ப படும்போது அதன் அடக்க விலை 20 ரூபாய் 20 லிட்டருக்கு...எங்களால் MRP செய்யப்பட்டு அனுப்ப படுவது 30 ரூபாயிக்கு...மேற்கொண்டு காசு கறப்பது அந்த டீலரின் ஆசையே தவிர தண்ணீர் தயாரிக்கும் கம்பெனிகள் அதற்கு பொறுப்பல்ல...அதிக விலை கொடுப்பதை மக்கள்தான் தவிர்க்க வேண்டும்..MRP விலைக்கே வாங்க வேண்டும்...
இதைத்தான் கொள்ளை ,கொள்ளை என கூப்பாடு போடுகின்றன மீடியாக்கள்...
யாரும் அடுத்தவன் இடத்தில இருந்து நீரை உறிஞ்சி கேன்களை நிரப்பவில்லை...அவரவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நீரை எடுக்கின்றனர்...அதற்கு முதலில் நிலத்தடி நீரை எடுத்து அதையும் இதை குடிக்க பயன்படுத்த முடியுமா என மாதம்தோறும் சோதனைக்கு அனுப்பிய பின்னரே நிலத்தடி நீரை பயன்படுத்தமுடியும்...
நிலத்தடி நீர் எல்லாருக்கும் சொந்தம் என்றால் நிலம் மட்டும் எப்படி உனக்கு,எனக்கு என பங்கு போட்டு சொந்தமாக்கி கொள்ள முடியும் ?அப்படி என்றால் வயலும்,நிலமும்,கரும்பும் ,இன்ன பிற தோட்டங்களும் பூமியிலிருந்து கிடைப்பவைதான்...அது எல்லாருக்கும் சொந்தமாகி விடுமா?நீர் இயற்கைக்கு சொந்தம் என்றால் நிலமும் இயற்கைக்கு சொந்தம்தான்...அப்ப யாருக்கும் நிலம் சொந்தம் என பட்டா போட்டு கொள்ள உரிமை இல்லை...ஒப்பு கொள்வோமா நாம்?
சும்மா சும்மா தண்ணீரை விற்கின்றனர்,கொள்ளை அடிக்கின்றனர் என குறை சொல்ல வேண்டாம்...அதுவும் ஒரு தொழில்...எல்லா தொழிலும் லாபத்துக்காகவே செய்யபடுகின்றன...சேவைக்காக அல்ல...ஏன் மளிகை கடையில் போயி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி,மளிகை சாமான்களை கொடுங்கள் என இந்த மீடியாக்களும்,குறை சொல்பவர்களும் சொல்ல வேண்டியதுதானே?
எல்லா தொழிலிலும் இருக்கும் பிரச்சினைகளை போலவே இந்த தொழிலிலும் உண்டு..மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ள கேன் தண்ணீரை எந்த ISI அதிகாரியும் எப்ப வேண்டும் என்றாலும் சோதனைக்கு எடுத்து செல்லலாம்..அந்த கேன் ISI விதிகளின்படி சுத்தமாக இல்லை என்றால் உடனே ISI அந்த கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்து விடும்...கேன் வாட்டரை தயாரித்து மிகுந்த சோதனைக்கு இடையில் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்...யாரும் யாரையும் வாங்கித்தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த வில்லையே?வேண்டும் என்பவர்கள் வாங்குகிறார்கள்...
ஆக எல்லா தொழிலையும் போலவே இதுவும் ஒரு தொழில்தான்...மீடியாக்களால் இது ஒரு ஏதோ கொள்ளை தொழில் போல சித்தரிக்கப்படுகிறது...அது தவறு...
சில தவறான ,முறையாக பராமரிக்கப்படாத,தண்ணீரை ஒழுங்காக சோதனை செய்யாத ,ஏன் ISI முத்திரை கூட இல்லாத எத்தனயோ வாட்டர் கேன் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன..அவற்றை களை எடுக்க சொல்லி நாங்களும் ISI ,அரசாங்கத்திடம் கேட்டு கொண்டுதான் இருக்கின்றோம்...அவர்களை கண்டியுங்கள்,தடை செய்யுங்கள்...
எல்லாரையும் ஒன்றாக குறை சொல்வதைத்தான் நான் இங்கு சுட்டி காட்ட விரும்பி இதை எழுதி உள்ளேன்...சில நாட்களாக பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் இந்த தொழிலை குறை சொல்லி எழுதி வருவதை பார்த்து அதற்கு பதில் சொல்லி நான் இதை எழுதி உள்ளேன்...ஏன் மக்களுக்கு பயன் தானே என அந்த பத்திரிக்கைகள் இலவசமாக வெளிவரட்டுமே!டிவி க்கள் இலவசமாக எந்த கட்டணமும் வாங்காமல் எல்லாருக்கும் தெரியட்டுமே!அதெல்லாம் முடியாதுல ...அப்ப இந்த தொழிலையும் கொள்ளை அடிக்கிறார்கள் என குறை சொல்ல வேண்டாம்...
இதை பற்றி நான் எழுத காரணம் நாங்களும் AQUAMINE என்ற பெயரில் எங்கள் ஊரான அரசர்குளத்தில் பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்பதால்தான்!
Tweet |
நல்லபடியாக தொழில் நடக்கட்டும்... தொடர்ந்து எழுதவும்...
பதிலளிநீக்குநன்றி ....
நீக்குநீரும் காற்றும் விற்கத் தகுந்தவை அல்ல என்பதை நான் உறுதியாக நம்புவோன். மக்களுக்கான பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடையது, எல்லாம் தொழில் என நோக்கலாம், நல்ல நீரை காசுக்கு விற்கலாம். ஆனால் சில அத்தியாவசிங்கள் விற்பனைக்கு உகந்தவையல்ல அவையாவன நீர், காற்று, ஆரம்பக் கல்வி, அவசர மருத்துவம் போன்றவை.
பதிலளிநீக்குநோய்கள் மிகுந்த இக்காலத்தில் .நல்ல நீரை விற்பனை செய்வது காலத்தின் கட்டாயம்...வாங்குவதும் வாங்காததும் அவரவரின் விருப்பம்..அரசாங்கமே நல்ல நீரை இலவசமாக வழங்கினால் நானும் வரவேற்பேன்...நன்றி ....
நீக்குஅரசாங்கமே நல்ல நீரை இலவசமாக வழங்கினால் நானும் வரவேற்பேன்...நன்றி ....
நீக்குஉங்கள் கருத்து நிஜம்தான். சில இடைத்தரகர்கள் தொல்லைதான் இதெல்லாம்
பதிலளிநீக்குநன்றி ....
நீக்குபகிர்வுக்கு நன்றி அண்ணே
பதிலளிநீக்குஉங்களை குறை சொல்லமுடியாது. திரு.நிரஞ்சன் கூறியதையே நானும் அமோதிக்கிறேன்.நீரும் காற்றும் விற்பனைக்கு அன்று. நீர் நிலமிருப்பவனுக்கு சொந்தம் என்பதை என்னால் ஏற்றுகொள்ள இயலாது. உங்கள் அருகில் என்னிளம் இருந்து அங்கு நான் ஆழ்துளை இட்டு அனைத்து நீரையும் உறிஞ்சினால் நீங்கு எங்கு செல்வீர்கள். காற்றும் அதேபோலத்தான். எண்ணிலத்தில் குப்பை இருந்து அதை கொழுத்தினால் அது உங்கள் வீட்டுக்கும் புகையை கொண்டு சேர்க்கும்.
பதிலளிநீக்குஆனால் தூய குடிநீர் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் எப்போது தன பொறுப்பை தட்டிகழிக்கிறதோ அப்போது தனியார் அதை வியாபாரம் ஆக்குவது தவிர்க்க இயலாது.
நானும் கேன் வாட்டர் தான் பயன் படுத்துகிறேன் feema என்ற கம்பெனி அடக்க விலை 30 தான் இந்த தண்ணிரை அருந்துவதால் பாதிப்பு என ஒரு சில பேர் கூறுகின்றனர் இல்லை என ஒரு சில பேர் கூறுகின்றனர்
பதிலளிநீக்குகெடுதியான ஒன்றுக்கு ஏன் இந்திய அரசின் தர நிர்ணயம்?(isi முத்திரை )
நீக்குவெளி நாட்டு கம்பெனிகாரனெல்லாம் நம் நாட்டின் நீரை உறிஞ்சி நமக்கே விற்று அவன் லாபத்தை கொண்டுபோகிறான்(லீ15க்கும்20க்கும்விற்று)அவர்களைப்பற்றி இந்த மீடியாக்கள் எதுவுமே பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்களின் விளம்பரப்பணம் இவர்களது வாயை அடைத்விடும் உங்களைப்போல் சிறுதொழில் செய்கின்றவர்களால் எந்தலாபமும் இல்லையே அதனால்தான் இந்த கூவு கூவுகிறார்கள்
பதிலளிநீக்கு