31 டிசம்பர் 2012

நீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....!

நேற்றைய  நீயா நானா நிகழ்ச்சியை பார்த்த போது அதிர்ச்சியும்,ஆச்சர்யமும்  சேர்ந்தே எழுந்தது...கூடவே கோபிநாத் மீது கோபமா இல்லை எரிச்சலா என தெரியவில்லை ..அதுவும் எழுந்தது...


கிச்சனில்  மனைவிக்கு  உதவியாக சமையலில  ஈடுபடுவீர்களா  இல்லையா  என்பதுதான் நேற்றைய  டாபிக்...

வழக்கம்போல மனைவிக்கு உதவியாக சமையலில் ஈடுபடுவோம் என ஒரு தரப்பும் ஈடுபடமாட்டோம் என ஒரு தரப்பும் பேசினார்கள்...சமையலில் ஈடுபடுவோம் என்பவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள்.....அதே வேளையில்  வேலை பளு காரணமாக சமைப்பது எங்கள் வேலை அல்ல என கூறுபவர்களை குற்றவாளிகள் போல சித்தரித்து  இந்தநிகழ்ச்சி அமைந்து அல்லது அமைத்ததுதான் எனக்கு எரிச்சலை ஊட்டியது...

அதே நேரத்தில் வேலை பளுவை தவிர்த்து சமையல் கட்டில் நுழைவதே எனக்கு கவுரவ குறைச்சல்  என்றும் அது ஒருவித ஈகோ பிரச்சினை  என்றும் வாதிட்டவர்களை பார்க்கும்போது இதிலயுமா கவுரவம் பார்ப்பார்கள் என்ற கடுப்புதான் வந்தது ..அதிலும்  ஒருவர்  என் மனைவி  வீட்டில் இல்லாமல் இருந்தால் என் அம்மாவுக்கு முடியாமல் இருந்தாலும் நான் சமையலறைக்குள் சென்று சுடு தண்ணீர் கூட வைக்க மாட்டேன் ,எனக்கு காபி கூட  போட்டு கொள்ள மாட்டேன் ,ஹோட்டலில்தான் வாங்கி கொள்வேன்  என கூறிய போது எனக்கு தூக்கி வாரி போட்டது...அவருக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாமல் இல்லை ஆனால் வைக்க மாட்டாராம்..அது அவர் வேலை இல்லையாம் ...ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம்தானே இது?நிச்சயமாக இந்த எண்ணம் கண்டிக்கத்தக்கது....இதுவரை ஓகே...

ஆனால் நம்ம கோபிநாத் அவரை விட்டுவிட்டார்...கொஞ்சம் ஹார்சாக பேசுபவரை  எப்போதும் இப்படிதான் விட்டுவிடுவாரா என எனக்கு தெரியவில்லை....அதே அணியை சேர்ந்த இன்னொருவர் "எங்கள் பாட்டி,அம்மா காலத்தில் செஞ்ச வேலையை விட இப்போதுள்ள  பெண்கள் செய்யும் வேலை குறைவுதான் என சொல்லி முடிப்பதற்குள் மேற்கொண்டு அவரை பேச விடாமல் "நீங்கள் பெண்களை  சோம்பேறி என பேசுகிறீர்கள் ...இப்போதுள்ள உள்ள பெண்கள் மாதிரி அப்போது உங்கள் பாட்டியோ ,அம்மாவோ படித்தார்களா ?இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன் என அவரை மூஞ்சியில் அடிப்பது போல பேசி அமர்த்திவிட்டார்..

இப்போது எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால் ஒருவரை முழுவதுமாக பேச விட்டால்தானே அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியும்?அவர் தவறாக பேசினாலும் பேசவிட்டுவிட்டு பிறகு கோபிநாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கலாமே?

அந்த நபர் "எங்கள்  பாட்டி காலத்தில்  அம்மியில்தான் எல்லாம் அரைத்தார்கள், இப்பொது மிக்சி,கிரைண்டர் வந்துவிட்டது,என அன்றைய கால பெண்களுக்கும் இன்றைய கால பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ,நவீன வசதிகளை வைத்துதான் அவ்வாறு பேச வந்தார் ..ஆனால் அவரை முழுவதுமாக பேச விடாமல் அதட்டி,மிரட்டி  உட்கார வைத்துவிட்டார்...

அதேபோல இன்னொருவர் என் மனைவி  சமையல் செய்வதால் நான் 3000 ரூபாய் சம்பளம் கொடுத்து விடவும் தயார் என சொன்னார் .அவர் சொன்னது வேலை பார்ப்பதால் என் மனைவிக்கு கிடைக்கும் உரிமை அந்த பணம் என்ற அர்த்தத்தில்...எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அது தவறுதான்..அந்த நபரும் அதை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார்..ஆனால் அவரை பிடித்து"உங்களுக்கு எதுக்கு கல்யாணம்,?இரண்டு பெண் குழைந்தைகள்?என அவரது பெர்சனல் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்டு தனது அதிமேதாவி தனத்தை காட்டி கொண்டு விட்டார் கோபிநாத்...

மனைவிக்கு சமயலறையில் உதவி செய்வது அவரவரின் விருப்பம் சம்பந்தப்பட்டது....உதவினாலும் தப்பில்லை,உதவாவிட்டாலும் அதனால் ஒன்றும் குறையில்லை ....

ஆனால் நீங்கள் இதையே  ஒரு விவாத நிகழ்ச்சியாக வைக்கும்போது இருதரப்பையும் பேச விடுவதுதானே சரியாக இருக்கும்?ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கோபிநாத் சமையலில் ஈடுபடும் ஆண்கள் பக்கமே சாய்ந்து நாங்கள் சமைக்கமாட்டோம் என்பவர்களை ஏதோ குற்றவாளிகள் போல சித்தரித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு,எதிர் தரப்பினர் பேசும்போது இந்த தரப்பினர்களுடன் சேர்ந்து ஆணவ சிரிப்பு ,நக்கல் சிரிப்பு சிரித்து கொண்டே இருந்தார்...


மனைவிக்கு சமையலில் உதவி  செய்பவர்கள்தான்   உயர்ந்தவர்கள்,நல்லவர்கள் என்பதுபோல சித்தரித்து நீங்கள் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் ஏன் இன்னொரு தரப்பு?ஒரு தரப்பை வைத்தே அவர்களை பாராட்டி நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாமே?

சமையலறையில்  உதவி செய்யாதவன் சிறந்த  கணவனாக இருக்க மாட்டான் என்ற தனது கருத்தை  இந்த நிகழ்ச்சியின் மூலம் பொது கருத்தாக மாற்ற நினைத்து  இருக்கிறார் கோபிநாத்.. இந்த தலைப்பே தேவை அற்ற ஒன்றாக எனக்கு படுகிறது...

அன்பையும்,நேசத்தையும்  சமையலறையை   வைத்து மட்டுமே  முடிவு செய்ய முடியுமா கோபிநாத்?

நீயா நானா நிகழ்ச்சியில் தான் மட்டுமே சரியாக பேசுவதாக நினைத்துகொண்டு தனக்கு எதிரான கருத்தை  பேசுபவர்களை பல பேர் முன்னாள் மட்டம் தட்டி தன்னை அதிமேதாவியாக காட்டுவதை எப்போது நிறுத்தி கொள்வார் கோபிநாத்?



29 டிசம்பர் 2012

இறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல்கள்....வேறு என்ன செய்ய முடியும் ?

அந்த கயவர்களை தண்டிப்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன்  என கூறிய அந்த பெண் இறுதியில் வீர மரணம் அடைந்துவிட்டார்..

டெல்லியில் 6 மிருகங்களால் பாலியல் கலவரத்திற்கு ஆளான அந்த பெண்ணின் உடல்நிலை  மோசமாக இருந்ததை  ஒட்டி அவர் சிங்கப்பூர்  கொண்டு கொண்டு செல்லப்பட்டார்...

கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, இன்று அதிகாலையில் உயிரிழந்தார் ..அவரது மரணம் பற்றி சிங்கப்பூர் மருத்துவமனை 'கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின ..இறதியில் இன்றுஅதிகாலை அவர்  உயிர் இழந்தார்  என அறிவித்து உள்ளது..


அந்த வீர மங்கைக்கு நம்மால்  இரங்கல் தெரிவிப்பதை விட  வேறு என்ன செய்ய முடியும்?

எப்படியும் தான் உயிர் பிழைத்து  விடுவோம் ,அந்த கயவர்களுக்கு  தண்டனை வாங்கி கொடுப்போம்  என எண்ணிய அவருக்கு நம் சட்டங்களால்  அது முடியாது அசாதாரணமாக  வழக்கு நடந்தாலுமே அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை தர 6   மாதம் ஆகி விடும் என தெரியாமலே  உயிரை இழந்த  
அந்த பெண்ணிற்கு  இரங்கல் தெரிவித்து  ச்சே பாவம் என உச் கொட்டி அனுதாபம் தெரிவிப்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?

அதிலும் அந்த கயவர்களுக்கு மரண  தண்டனை வேண்டாம்  என  கூறிக்கொண்டு இருக்கும்  நம் சமூகத்தில் அந்த பெண்ணை இழந்த ,இழப்பின் வலியை அனுபவித்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்திற்கும் நம்மால் இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

உடனடி தண்டனைகள்  தர முடியாத கையாலாகாத  சட்டங்கள்,வருட கணக்காய் நீளும் வழக்குகள் நடக்கும் நம் தேசத்தில்தன்னை சீரழித்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் இறந்து போன  அந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவிப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

  ஒரு வேளை அந்தமிருகங்களுக்கு மரண தண்டனையே கிடைத்தாலும்  அதையும்  எதிர்த்து  நேரடியாக  பாதிக்கப்படாமல்  பாதிக்கப்பட்டவர்களின்  உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மரண தண்டனைகளை வேண்டும்,வேண்டாம் என  விவாதமாக  மாற்றும் சமூகத்தில் இருந்து கொண்டு  இரங்கலை தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆகவே அந்த வீர மங்கைக்கு   என்  ஆழ்ந்த இரங்கல்  மற்றும் அனுதாபங்கள் ...

26 டிசம்பர் 2012

பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்துக்கள் என்ன?!....



இப்போது நாடெங்கிலும் வலியுறுத்த படுவதும் விவாதிக்கப்படுவதும்  பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்  என்பதுதான்...முதலில் இந்த சம்பவங்களை கற்பழிப்புகள் என கூறுவதை கூட என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை...ஒரு பெண்ணினால் அந்த அயோக்கியனுகளை எதிர்த்து போராட முடியாமல் அப்பெண் தோல்வி அடைகிறாள்..அது ஒரு வன்முறை ..பாலியல் வன்முறை ..கூட்டாக  5,6 பேர் சேர்ந்து ஒரு பெண்ணின் மீது நிகழ்த்திய பாலியல் கலவரம்...

 டெல்லி வன்முறை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  கொடுக்க வேண்டும் என நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வந்தாலும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா என விதண்டாவாதம் பேசுபர்கள் ஒரு பக்கம்...

மரண தண்டனைகளை  சரி என ஒப்புகொண்டால் எங்கே "இஸ்லாமிய சட்டங்களை நாம் ஏற்று கொள்வதுபோல ஆகிவிடுமே "என வறட்டு பிடிவாதம் பேசுப்வர்கள் ஒரு பக்கம்  இருக்கத்தான் செய்கிறார்கள்

இதில் முதாலவது வாதத்திற்கு "மருந்து கொடுத்தால்தானே  நோய் குணமாகிறதா இல்லையா என தெரியுமே தவிர  இந்த மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாகுமா என கேட்டு கொண்டே இருந்தால் நோய்தான் முற்றும்"என்பது என் பதில்...ஆக  முதலில் செய்த குற்றத்துக்கு  தண்டனை கொடுக்காமல் தண்டனை கொடுத்தால் மட்டும் குற்றங்கள் குறையுமா என கேட்பது வந்த நோய்க்கு மருந்து எடுக்காமல் அந்த நோயை முற்ற விடுவதற்கு சமமான முட்டாள்தனமான செயலாகும்...

அடுத்து பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனையை  சரி என ஒப்பு கொண்டால் "கற்பழிப்புகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் மரண தண்டனையை ஒப்புகொண்டதுபோல ஆகி விடுமே "என  என்னும் வறட்டு பிடிவாதகாரர்களுக்கு "நீங்கள் செல்லும் பாதையில் முள் கிடக்கிறது  என உங்களுக்கு பிடிக்காதவர்கள் சொன்னாலும் அதை கேட்பீர்கள்தானே "அதுபோல  இதையும் நினைத்துகொள்ளுங்கள் என்பது என் பதில்...

கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் அந்த குற்றங்கள் இப்போது நடப்பது இல்லையா என கேட்பவர்களுக்கு "ஆம் ...நம் நாட்டில் விட மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவுதான்...சிங்கப்பூர்,மலேசியா வில் எல்லாம் இது போன்ற  குற்றங்கள் நடப்பது மிக மிக குறைவு..அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றங்கள் மிகவும் குறைவு"

உடனே மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில் கூட பாலியல் குற்றங்கள் குறைவுதானே தவிர அறவே குற்றங்கள் நடக்காமல் இல்லையே என அடுத்த கேள்வி வரும்...

மரண தண்டனைகளால்  குற்றங்களை  அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் இதுபோன்ற குற்றங்களை  குறைக்கவாவது  முடியும்..ஆனால் இதுவும் இல்லாவிட்டால் குற்றங்கள் பெருகும்தானே தவிர குறையாது...

எல்லா நோய்களுக்கும் நாம் மருந்து எடுத்துகொண்டாலும் கேன்சர் மாதிரியான நோய்கள் அந்த மருந்துகளையும் மீறி பரவுவதில்லையா?

இப்போது சொல்லுங்கள் "ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ,சீராக வளர்த்து அழகு பார்த்தது எல்லாம் கொடூர காமுகர்களால் அந்த பெண் சீரழிக்க படுவதற்குத்தானா?

சீரழிக்கபட்டவர்களுக்கு மருந்து  "அந்த விஷ கிருமிகளை அழிப்பதுதான் "

இதுபற்றிய சக பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்...நீங்கள் முஸ்லிம் என்பதால் மரண தண்டனையை  ஆதரித்து எழுதுகிறீர்கள் என மதச்சாயம் பூசாமல் நீங்கள் உங்களின்  உணர்வுகளை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...


25 டிசம்பர் 2012

ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம் !



விஜயகாந்தும் ஜெயலலிதாவும் சட்டசபையில் மோதி கொண்டது தான் இந்த வருடத்தின் உச்சகட்ட பரபரப்பு சம்பவம் என்று கூறுவதைவிட உச்ச கட்ட பரபரப்பான காமெடி சம்பவம் என்றே கூறலாம்....

என்னால்தான்  நீ ஜெயிச்ச என இருவரும்  தங்களது  பெருமையை கூறி சண்டை போட்டார்களே  தவிர மக்கள் ஒட்டு போட்டதால்தான் இவர்கள் இருவருமே ஜெயித்தார்கள் என்பதை மறந்துவிட்டது உச்சகட்ட கொடுமை ....சட்டசபை என்பதை மறந்துவிட்டு தனது படத்தில் வில்லன்களிடம் வசனம் பேசுவதுபோல நாக்கை துருத்தி கேப்டன் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கே ரீவைண்ட்





இதன்  தொடர்ச்சியாக  விஜயகாந்த் சட்ட சபையிலிருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்...அதிலிருந்து சட்டசபைக்கு செல்லாமல் இருந்த அவர் (கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு எஸ் ஆகிவிடுவது ) சில நாட்களுக்கு முன்பு நடந்த சட்ட சபை வைர விழாவில்தான்  கலந்துகொண்டார்..

இந்த சம்பவத்தின் தாக்கம்  ஜெயலலிதாவை எவ்வளவு தூரம் பாதித்து கொதிப்படைய வைத்து இருக்கிறது என்பதற்கு சாட்சி சமிபத்தில் விஜயகாந்தின் நெருங்கிய தோழர்,மற்றும் அருண்பாண்டியன் போன்ற 4 MLA க்களை விஜயகாந்திற்கு எதிராகவே பேசும்படி விலைக்கு வாங்கியதுதான்...

 எது எப்படியோ இந்த வருடத்தில் நம்மை மறந்து சிரிக்க வைத்த சம்பவங்களில் கேப்டனுக்கும்  முக்கிய பங்கு உண்டு !!...


24 டிசம்பர் 2012

டெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அடேங்கப்பா என்ன ஒரு சகிப்புத்தன்மை!


உங்களிடம் வந்து டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை பற்றி யாரேனும்  கருத்து கேட்டால் 

"சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்.

என சொல்வீர்களா?


லூசு தனமா பேச நான் என்ன கிறுக்கனா!என கேட்பீர்கள் அல்லவா?

ஆனால் இந்த மாத்ரி  லூசு தனமாக உளறி  இருக்கிறார் கமல்...

கமல் எப்போதுமே தன்னையும் குழப்பி பிறரையும் குழப்பும் விதமாகவே பேசுபவர்...

அவ்வாறு குழப்பமாக பேசுவதை  தன்னுடைய  மிக சிறந்த  அறிவாளித்தனமாக எண்ணி கொண்டு இருப்பவர்...

அதற்காக இந்த சம்பவத்திற்குமா  இப்படி வேக்காடு  தனமாக பேசுவது?

நீங்கள் அவமான பட அங்கே  நடந்தது சிறு பிள்ளை விளையாட்டு அல்ல...கற்பழிப்பு..

அதற்கு மரண தண்டனை வேண்டாம் என்பது கமலின்  உச்ச கட்ட பெருந்தன்மையான கருத்தாக இருக்கலாம் அதற்காக குற்றவாளிகளை சகோதரன் என்பதா?அவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதி அற்றவர்கள்..அவ்வளவு குருரமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார்கள்......நாளை அவர் மகள்களுக்கு  இவ்வாறு நடந்தால் கூட இப்படித்தான்  பேசுவாரா கமல்?

பாதிக்கப்பட்ட பெண்ணை சகோதரியாக  நினைக்கும் கமல் அந்த கொடூர செயலை செய்த அயோக்கியர்களை,மனித தன்மை அற்றவர்களை சகோதரன் என சொல்லி நடந்த சம்பவத்தையே குற்றம்  இல்லை என்பதுபோல பேசி இருக்கிறார்..

நீங்கள் எல்லாம் உங்கள் திருவாயை திறக்க வேண்டாம் கமல் அவர்களே !இந்த மாதிரி வசனங்களை பேசி மக்களை குழப்புவதை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள்..நாடே கொந்தளித்த ஒரு விசயத்தை  இவ்வளவு லேசாக நீங்கள் எடுத்துகொள்வது கடுப்பா இருக்கு கமல்...!


23 டிசம்பர் 2012

சிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?


கடந்த இரண்டு  நாட்களில் மட்டும் தமிழகத்தில் சிறுமிகள்  2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்...

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள தாதன்குளத்தை  சேர்ந்த பள்ளி மாணவி புனிதா என்ற சிறுமி ஒரு காம வெறி கொண்ட நாயினால் சிதைக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள்...குற்றவாளியை கைது செய்துவிட்டார்கள்..பள்ளி சீருடையோடு அந்த சிறுமி கொலையுண்டு  கிடப்பதை  பார்க்கும்போது மனசு வலிக்கிறது ...அந்த கொடூரனை உடனே நடு ரோட்டில் வைத்து தூக்கில் போடவேண்டும் என மனது அடித்து கொள்கிறது ...

அதே போல  நாகையில் வீட்டில் தனியாக  இருந்த 4 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை இரண்டு நாய்கள் சீரழித்து உள்ளனர்...அந்த நாய்களையும் கைது செய்துவிட்டனர்...
ஆனால் நம் தமிழகம் இந்த சம்பவங்களை  ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கிறதே ?இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?இறந்து போன அந்த சிறுமியின் ஊர்காரர்களும்,உறவினர்களும் மட்டுமே குற்றவாளியை தண்டிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ..மற்றவர்கள் எல்லாம் செய்தியை படித்து பரிதாப பட்டதோடு சரி...அட போங்கய்யா ...இதே மாதிரி நாளை நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்னய்யா உத்தரவாதம்?

ஒரு பெண் சீரழிக்க  பட்டதற்காக டெல்லி குலுங்கியதை போல ஏன் தமிழகம் குலுங்கவில்லை ?

டெல்லி சம்பவத்திற்காக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடந்து வருவதை போல ஏன் தமிழகத்தில் ஏன் இதுவரை மாணவர்கள் போராட்டம் நடக்கவில்லை..?

டெல்லி சம்பவத்தை  கண்டித்து நாடாளுமன்றத்தில்  கட்சி பாகுபாடு இல்லாமல் எம் பி க்கள் சீறியதை போல ஏன் தமிழகத்தில் இந்த சிறுமிகளுக்கு நடந்த அவலத்தை கண்டித்து சட்ட மன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை?

தொலைகாட்சிகள்,பத்திரிக்கைகள் கூட இந்த சம்வத்தை கண்டிக்காமல் வெறும் செய்தியாகவே ஏன் காட்டி வருகின்றன?

டெல்லி சம்பவத்தில் பாதிக்கபட்ட அந்த பெண்ணாச்சும் உயிரோடு இருக்கிறார்..ஆனால் இங்கு ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறாள் ....கற்பழிப்புகளில் கூட தலைநகரம்,சாதாரண கிராமம் என ஏன் இந்த பாகுபாடு?இந்த சம்வம் ஏன் நாடு முழுக்க எடுத்து செல்லப்பட வில்லை...?

நம் மக்கள் இந்த  சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து எப்போது போராட போகிறார்கள்?

அந்த காம கொடூர நாய்களை நடு ரோட்டில் வைத்து தூக்கில் போட சொல்லி இந்நேரம் தமிழகம் ஸ்தம்பித்து இருக்க வேண்டாமா ?

கேள்விகள் மட்டுமே என்னுள் எழுகின்றன ....வேற என்ன சொல்ல?!.....

 அரசாங்கத்திற்கு ஓரே ஒரு கோரிக்கை: ஒரு தடவ இந்த குற்றவாளிகளை மக்கள் முன் தூக்கில் போடுங்கள்..பிறகு பார்ப்போம் இது மாதிரி அவலங்கள் நடக்கிறதா இல்லையா என!.....

அரசியல்வாதிகளே  நீங்கள் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு கூட கொடுக்க வேண்டாம்..முதலில் பெண்களுக்கும்,சிறுமிகளுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்!

22 டிசம்பர் 2012

காணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)


தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....

மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......

தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனரின் மகனாகவே இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு

நம்ம மனோஜ்தான்......

வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....

தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......

படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...

பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....

சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது தனது தந்தையின் நடித்து வருகிறார்..பிறகு வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்...!


மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர் 




தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...


மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....



சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற 

படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....படம் பிளாப் நம்பர் 1 ஆனது ....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....


அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...


இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....

இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....

 நோட்  பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு 

21 டிசம்பர் 2012

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !......


இதோ வந்தேவிட்டது  "மாயன் காலண்டரின்" மர்ம தேதியான 21.12.2012

மீடியாக்களினாலே  மறுக்கப்பட்டு,விவாதிக்கப்பட்டு ஆனால் அதே மீடியாவினாலே இன்று உலகம் அழிந்தாலும் அழிந்து விடும் என்ற வதந்தியை பீதியாக்கிய தினம் இதுதான்...

ஏன் இன்னும் உலகம் அழியவில்லை..?!


 ஏன்னா மாயன் காலண்டர் ஒரு  சாதாரண காலண்டர்தானே தவிர நடக்க போவதை குறிக்கும் அதிசய காலண்டர் அல்ல...வேணும் என்றால் டுபாக்கூர் என்று பேர் வைத்து கொள்ளலாம் !....அல்லது வெத்து  வேட்டு!


 ஏன்னா மாயன் காலண்டரை உருவாக்கியவர்கள் இந்த தேதியுடன் அழிந்து போயிருக்கலாம் ...அல்லது உலகத்தின் மேல் உள்ள கடுப்பில் நாளைய தேதியை குறிப்பிடாமல் தூக்கி  போட்டு இருக்கலாம் ....!


ஏன்னா மாயன்  இனத்தவர்களுக்கு  இன்றைய  தேதிக்கு மேல் குறிப்பிட போர் அடித்து இருக்கலாம் !

 ஏன்னா மாயன் காலண்டரைவிட  அதை வைத்து பீதியை கிளப்பியவர்கள் ஒரு பெரிய டுபாக்கூர் அல்லது வேலை வெட்டி இல்லாதவர்கள்

ஏன்னா அந்த பீதியை மக்களிடத்தில் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய்  சேர்த்த மீடியாக்கள் டுபாக்கூர்களின் டுபாக்கூர் அல்லது ஓட்டை விழுந்த பலூனை விற்று காசாக்கிய கெட்டிக்காரர்கள் ....

இதை எல்லாம் விட உண்மையான காரணம்


"அது இறைவனுக்குத்தான் தெரியும்"...உலகம் அழியும் நாள் என்று எந்த ஒரு நாளையும்  மாயன் காலண்டர் அல்ல ,நாசா விஞ்ஞானிகள்  அல்ல வேறு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு கூற முடியாது "நம்மை படைத்த இறைவனை தவிர"


அவ்வளவுதான் மக்களே...


ஒன்னும் இல்லாத இந்த விசயத்தை  ஒரு பதிவாக போட்டு ஹிட்ஸ் அடிக்க  நமக்கு உதவிய மாயன் காலண்டருக்கு நன்றி .....


20 டிசம்பர் 2012

விட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார்களோ!

கொஞ்சம் விட்டால்  நடிகர் பிரபுவும்,மாதவனும் தெருவில் வந்து அடித்துகொள்வார்கள் போல...!பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை டிவி விளம்பரங்களில் இருவரும் பேசுவதை பார்த்தால்  அப்படித்தான் தோணுது எனக்கு...

முதலில் என்னடான்னா புரட்சி,புரட்சி ன்னு தொண்டை கிழிய கத்திகிட்டு கிடந்தாரு பிரபு...நான்கூட முதலில் "பிரபு புரட்சி தலைவியை எதிர்த்து ஏதோ புரட்சி பண்ண  போறாரோன்னு !"அப்புறம்தான் அது நகை கடை விளம்பரம்னு தெரிஞ்சது...நீங்க இலவசமா மக்களுக்கு நகை கொடுத்தா அது உலகில் வேறு எங்குமே இல்லாத புரட்சின்னு சொல்லிக்கிட்டு  திரியலாம்...அதோட விடுவாருன்னு  பார்த்தா போலீஸ் உடையில் வந்து சிங்கம்னு கர்ஜித்து குழைந்தைகளை எல்லாம் பயம் வேறு காட்டுகிறார்....



 உடனே மாதவன் போலீஸ் வேடத்தில்  வந்து அது பொய்,இது பொய், நாங்கதான் நிஜம்னு உதார் விட்டுகிட்டு போனாரு..




விடுவாரா பிரபு?எங்க  ப்ரைஸ் டாக்கை பார்த்து அவங்க காப்பி அடிக்கிறாங்க ..நாங்கதான் உண்மையான விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம்னு 10,15 பேரை சேர்த்து வச்சுக்கிட்டு கர்ஜிக்கிறார் ...அந்த கூத்தையும் பாருங்கள்




ஏன்யா நீங்க என்னமோ நகையை  மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறது மாதிரி உங்கள் பெருமைகளை பாடிக்கிட்டு  இருக்கிங்க?
 நேரா பேரை சொல்லிக்கிட்டு திட்டாதது மட்டும்தான் பாக்கி..

காசு கொடுத்து வாங்க போறது மக்கள்...ஏற்கனவே தங்கம் விலை நிலாவை போல பிடிக்கமுடியாத உயரத்தில் இருக்கேன்னு புலம்பும் மக்களை மேலும் மேலும் உங்களது விளம்பரங்கள் அதிகமாக குழப்புகிறது...என்னோட உறவினர் எந்த கடையில் நகை வாங்குவது,இதில் எது உண்மை,இந்த prize டாக் அப்படின்னா என்ன?என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்....எல்லாமே பிராடுதான் அப்பிடின்னு சிம்பிளா நான் முடிச்சுகிட்டேன்...

பின்னே என்னங்க இவர்கள்  மக்களை இந்த விளம்பரங்களால் தெளிவாக குழப்புகிறார்கள்..

இந்த போட்டி எழவு  விளம்பரங்களை எல்லாம் விட்டு விட்டு எங்களிடம் இவ்வளவு டிசைன்கள், இவ்வளவு தரத்தில் நகைகள் உத்தரவாதத்துடன்  தருகிறோம்னு கொஞ்சம் டீசண்டா விளம்பரம்  செஞ்சாத்தான்  என்ன?குடியா முழுகி போக போகிறது?

இவர்கள் காசுக்கு நடிக்கிறவர்கள்,அவர்கள் சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் என்று இதை விட்டு தள்ள முடியாது...நடிகர்கள் சொன்னால் மக்கள் கேட்கிறார்கள் எனும்போது இவர்கள் மக்களை குழப்ப கூடாது..

நீங்கள் நடிகர்கள்...உங்களை வைத்து எடுக்கப்படும்  விளம்பரங்கள் எளிதில் மக்களை சென்றடைகிறது ...நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி போட்டி போட்டு மக்களை குழப்புவது உங்களுக்கு அழகா ?

இப்படியா  குழாயடி சண்டை போடுவது...?மாறுங்கள் ..விளம்பரங்களை மாற்றுங்கள்...


19 டிசம்பர் 2012

அந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா?



ஒரு பெண்  இரவு 12 மணி அளவில் வெளியே சென்றாலும் அவள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல்  நடமாடுகிறாலோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம் என யாரோ சொன்னதாக எனக்கு நினைவு!

ஆனால் இந்தியாவின் தலைநகரில் ஓடும்  பேருந்தில் ஒரு பெண்ணை 6 காம கொடூரன்கள் சிதைத்துள்ளனர்...இப்போது அந்த பெண் சீரியசான நிலையில்  மருத்துவ மனையில்!இவ்வளவுக்கும் அப்பெண் ஒரு ஆண் தன்  உறவினருடன் இருக்கும்போதே அந்த நபரை அடித்து கீழே வீசிவிட்டு இந்த கொடுரத்தை அரங்கேற்றி உள்ளனர் அந்த மிருகங்கள்...

டெல்லிக்கு இது ஒன்றும் புதிதல்ல..நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி திகழ்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிபரம். பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பலாத்கார குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை.ஒரு நாட்டின் தலைநகரத்துக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?


இந்த சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள்,ஆர்பாட்டங்கள் நடை  பெற்று வருகின்றன...நாடாளுமன்றத்தில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து எம்பிக்களும் வலியுறுத்தி பேசி இருக்கின்றனர்...தினம்தோறும் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..இப்போதுதான் நாடாளுமன்றத்தில்   கடுமையான  தண்டனை பற்றி பேசி இருகிறார்கள்...

கடுமையான தண்டனைதான் கொடுக்க வேண்டும் அந்த கொடூர நாய்களுக்கு...

என்ன தண்டனை கொடுக்கலாம்..

ஒரு 15 வருட சிறை தண்டனை கொடுக்கலாமா?

இல்லை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கலாமா ?

அட போங்கய்யா !

ஒரு குற்றத்துக்கு தண்டனை கொடுத்தால் நாளை அந்த குற்றத்தை வேறு யாரும் செய்ய அஞ்ச வேண்டும் ..அதுதான் தண்டனை...

அந்த பெண்ணை சீரழித்த நாய்களும்  தண்டிக்கப்பட வேண்டும்..நாளை வேறு யாரும் இது மாதிரி பலாத்காரம் செய்வதை நினைத்து கூட பார்க்க கூடாது...

அப்படின்னா அந்த மிருகங்களுக்கு மரண தண்டனை கொடுங்கள் ... தூக்கில் போடுங்கள்...உடனே போடுங்கள் ..

அதுதான் மருந்து ...அந்த பெண்ணிற்கும் ...மற்ற பெண்களுக்கும்...


18 டிசம்பர் 2012

"மிசா எனும் நெருக்கடி நிலை "ஏன் ?எதற்கு?எப்படி??



இந்தியாவில் நெருக்கடி நிலை எனும் மிசா இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அமுலில் இருந்தது என நமக்கு தெரியும்..ஆனால் நெருக்கடி நிலை எதனால், நடைமுறை படுத்தப்பட்டது என இதுவரை தெரியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த  பிளாஷ்பேக்கை பார்ப்போம்..

1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 1975 ஜுன் 12ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது.

போலீசாரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் "இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை."என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ...


 எனவே இந்திரா காந்தி  "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.

இந்நிலையில் தனக்கு  எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், தன்னை  வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் இந்திரா காந்திக்கு கிடைத்தது...


"நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள்.

சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி"என 
அப்போது மேற்கு வங்காள முதல் மந்திரியும்,சட்ட நிபுணருமான  சித்தார்த்த சங்கர் ரே இந்திரா காந்தியிடம் கூறினார்...(அல்லது அப்படி கூறுமாறு வலியுறுத்தபட்டு இருப்பார்!)


நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்திய இந்திரா காந்தியும்,அவரது மகன் சஞ்சய் காந்தியும் மிசாவை அமுல்படுத்துவது  என முடிவெடுத்தனர்... 

1975 ஜுலை 25ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது.
 "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள்.
எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார் சஞ்சய் காந்தி ..(என்னா ஒரு வில்லத்தனம்?!)

அதை ஏற்ற இந்திரா காந்தி இந்தியா முழுவதிலும் தனக்கு எதிராக உள்ள கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார் ....

பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை.(இப்ப மாதிரி அப்ப facebook ,twitter ,நம்மை போன்ற பிளாக்கர்கள் இருந்து இருந்தால் ?!என்ன இதையும் தடை செய்திருப்பார்கள்..!)
அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. (நானே ராஜா நானே மந்திரி என்பதன் சுருக்கம்தான் மிசா!)

இதுதான் மிசா எனும் நெருக்கடி நிலை அமுலில் இருந்த வரலாறு..(தகவல்களுக்கு நன்றி:காலச்சுவடுகள் )


17 டிசம்பர் 2012

கருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்டுப்பொறியல்)



அட பாவி மக்களா !மக்களின் வரிப்பணத்தை இப்படி எல்லாமா ஆனந்தமாக செலவு செய்வது?

சோற்றுக்கு தினம் தினம் கஷ்டப்படும் மக்கள் வாழும் ஒரு மாநிலம்,இந்தியாவிலே வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் அதிகமுள்ள மாநிலம் என பெயர்பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் 1.40 கோடியை அலேக்காக தூக்கி ஒரு சினிமா நடிகைக்கு கொடுத்துள்ளனர் அம்மாநிலத்தை ஆளுபவர்கள்!(பி ஜே பி)

 ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம்  தேதி சத்தீஸ்கர் மாநிலம் உருவான நாள் அம்மாநில அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது..இதில் ஆடத்தான் கரீனா கபூரை 1.40 கோடி அரசு கஜானாவிலிருந்து  எடுத்து கொடுத்து கூட்டி  வந்து கும்மாளம் போட்டுள்ளனர்...

இந்தியா நல்ல முறையில் முன்னேறி கொண்டு இருக்கிறது!வேற என்னத்த சொல்ல..

.............................. .................................. ..........................................................

அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் திருவாரூர் முன்னேற்ற கழகமாக  (உபயம் :ஆனந்த விகடன்)மாறி விட்டது என்பது அனைவரும் அறிந்த சேதிதான்...

ஆனால் அதற்காக கருணாநிதியின் கொள்ளு பேரனின் படத்தையுமா போட்டு போஸ்டர் வைப்பார்கள் ?!

கரூரில் கட்சி விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் ஸ்டாலின்,அவர் மகன் உதய நிதி,அவரின் மகன் இன்ப நிதி ஆகியோரின் படங்களோடு கருணாநிதியின் படத்தையும் ஓரத்தில் போட்டு திமுகவில்  நாலாவது தலைமுறை தலைவரை உருவாக்க ஆரம்பித்துள்ளனர் உடன் பிறப்புகள்...இதை எல்லாம் கண்டிக்க வேண்டாமா கட்சி தலைமை?

இதை எல்லாம் பார்த்துவிட்டு குடும்ப அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன வென்று  சொல்வதாம் ?கருணாநிதிக்கே வெளிச்சம்!

................................... ................................. ................................................................
                                                        பொறியல் 

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது :குலாம் நபி ஆசாத் #

அவங்க கட்சியே தடுத்து கொள்ளும்னு சொல்ல வாராரு!

.......................... .............................. ......................................................................

ஐந்து பேர் குடும்பத்துக்கு மாதம் 600 போதும்:டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் 


ஒருவேளை ஆடு மாடுகளுக்கு தீவனம் வாங்குவதை சொல்கிறாரோ!?

.................................... ......................................... ...............................................

மின்வெட்டு பிரச்சினையில் வெள்ளை அறிக்கை வேண்டும் :கருணாநிதி 


அப்படியே வெளிச்சத்தில் வைத்து படிப்பதற்கு ஒரு டார்ச்லைட்டும் கேளுங்க தலைவா!


............................... ............................................ ........................................................

அன்று கூட்டத்தை ஆதரித்தேன் ,இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன் :நாஞ்சில் சம்பத் 

புது கார்,பதவி எல்லாம் கொடுத்து "தோட்டம்"தானே உங்களை ஆதரிக்கிறது !(அம்மாவிடம் போட்டு கொடுப்பவர்கள் கவனத்திற்கு)

............................. ........................................ ....................................................................

ஜெயலலிதாவை பிரதமராகவிட்டால் இந்தியாவே இருண்டு போய்விடும் :  ஸ்டாலின் 

 அட ஏன் தல "அமைச்சர்கள்தான் "அம்மா"பிரதமர் என பூச்சாண்டி காட்டுகிறார்கள் "என்றால் நீங்களுமா ?!

................................. ..................................... .................................................
எங்கள்  திட்டத்தை திருடிவிட்டார் ராகுல்காந்தி :சந்திரபாபு நாயுடுவின் மகன் #

புரியுது ...ஆந்திராவில் இருந்தாலும் அரசியலில் உங்கள் வழிகாட்டி எங்களின் "தலைவர்கள்" என்று!


....................................... ...................................... ..............................................................


16 டிசம்பர் 2012

இந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா?!....


இந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையாக போச்சுப்பா !அப்பிடின்னு ஒரு எண்ணம் ,கடுகடுப்பு படத்தின் இறுதி காட்சிகளில் நம் மனதுகளில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி கொண்டு இருக்கும்..!

இவர்  படத்தில எப்போதுமே காதலர்களை சேர்த்து வைக்கவே மாட்டாரா என்ற ஆதங்கம் படம் பார்த்து கொண்டு இருக்கும்போது நமக்கும் வருகிறது..அப்பதானே படமும் சீக்கிரம் முடியும்!

சில நேரம் இது நம்ம life  ல நடந்தது மாதிரி இருக்கே அப்பிடின்னும் ஒரு எண்ணம் வரும்...

அட இது நம்ம நண்பன் கதை போல இருக்கே அப்படின்னும் ஒரு நினைப்பு வரும்...

இதுதான் நீதானே என் பொன்வசந்தம்....

ஒரு அழகான காதல் கதை...இந்த காதலுக்கு யாருமே எதிரி இல்லை..அந்த காதலர்களே எதிரி...சொல்லப்போனால் காதலனை அளவுக்கு மீறி நேசிக்கும் அவனின் காதலியே எதிரி !ஜீவாவும் சமந்தாவும் பள்ளி பருவத்திலிருந்தே (இதுதான் எனக்கு நெருடல்..இன்னும் எத்தனை  படத்தில் பள்ளி சீருடையோடு மாணவர்கள் காதலிப்பதாக காட்ட போகிறார்கள்?மாணவ பருவ காதல் எல்லாருக்கும் வருவதுதான் என்றாலும் அதை படத்தில் காட்சிகளாக காட்ட  வேண்டாம் என்பது என் கண்டிப்பான  கருத்து !)காதலிக்கிறார்கள்...பிரிகிறார்கள்...

மீண்டும் கல்லூரி பருவத்தில் காதல்..மீண்டும் பிரிவு...திரும்பவும் சந்திப்பு ....மீண்டும் பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பதே நீதானே என் பொன்வசந்தம்...

படத்தில் நீளம் கொஞ்சம் மைனஸ்...பல காட்சிகள் கவுதம் மேனனின் முந்தய படங்களையும்,(குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா) இன்னும் சில படங்களையும் நினைவு படுத்துவது குறையே....

இளையராஜாவின் இசை ரொம்ப பிளஸ்..படத்தில் நிறைய பாடல்கள் இருந்தாலும் யாரும் தம் அடிக்க வெளியே போக வில்லை என்பதே அதற்கு சாட்சி

பல வசனங்கள் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தாலும்(அதிமேதாவி தனமாக  வசனம் எழுதிகிறேன் என்று நினைத்து எழுதி இருப்பார் போல) ரசிக்கும்படியே இருக்கின்றன...ஜீவாவுக்கும்சமந்தாவுக்கும் கெமிஸ்ட்ரி,ஹிஸ்டரி,பயலாஜி  ,என எல்லாமே perfect fit ....ஜீவாவை விட சமந்தாதான் ஸ்கோர் செய்கிறார்..

சமிபத்திய சந்தானத்தின் படங்களை ஒப்பிடும்போது இதில் அவரின் கிச்சுகிச்சு கொஞ்சம் கம்மியே ..ஆனாலும் ஒரு காதல் படத்திற்கு காமெடி ஒன்றும் முக்கியமில்லை என்பதால் அது ஒரு குறையில்லை...

 நீங்கள் ஏற்கனவே காதலித்து இருந்தாலும் ,இப்போது காதலித்து கொண்டு இருந்தாலும் உங்களுக்கு இந்த படம்  பிடிக்கும்...

சில காட்சிகளின் இழுவையை  குறைத்து,கொஞ்சம் படத்தின் நீளத்தை எடிட் பண்ணி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..

சில முத்தக்காட்சிகளை மட்டும் நீக்கி இருந்தால்,தவிர்த்து இருந்தால் நிச்சயம் குடும்பத்துடனே இந்த படத்தை பார்க்கலாம்...

நீதானே என் பொன்வசந்தம்= காதலர்களின் வசந்த காலம்


14 டிசம்பர் 2012

ராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்.....!



குஷ்புவுக்கு  ஏதாவது சர்ச்சையில் சிக்கி லைம்லைட்டில்  இருந்து கொண்டே இருக்கணும் போல...


முன்பு கற்பை பற்றி கருத்து  சொல்றேன் பேர்வழி (திருட்டை பற்றி திருடன் கருத்து  சொல்ற மாதிரி!)என  வாயிக்கு வந்ததை சொல்லி வழக்குக்கு மேல் வழக்காக வாங்கி கட்டி கொண்டார்...அதே போல ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் 


அவரை போயி கட்சில சேர்த்து பெருமை தேடிகொண்டது அண்ணா ஆரம்பித்த  திமுக...அங்கும் அவர் யார்  கோஷ்டி,கனிமொழிக்கு போட்டி என்றெல்லாம் சர்ச்சைகள் ரெக்கை கட்டி முளைக்க ஆரம்பித்தன...


இப்ப என்னடான்னா ராமர் படம் போட்ட சேலையை கட்டி ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டு அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து  இருக்கிறார்...


ஆடை அணிவது என்பது அவரவரின் சொந்த விருப்பம்தான் என்றாலும் ஒரு நிகழ்ச்சிக்கு வரும் ஒருவர் ஒரு மதத்தினரால்  வணங்கப்படும் கடவுள்களின் படம் போட்ட ஆடையைத்தான்  அணிந்து வர வேண்டுமா?100 பேர் சும்மா இருந்தாலும் நாலு பேர் கடுப்பாகத்தானே செய்வார்கள்?ஏன் அந்த சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டும்?இது குசும்புல செஞ்சதுதானே!


எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களது கடவுள் படம் போட்ட ஆடையை ஒருவர் அணித்து வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்வார்கள்...குஸ்புவுக்கும் ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருக்கிறது...


ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என நக்கலாக பேசி  இருக்கிறார் குஷ்பு .....இந்த பேச்சும்  தேவை அற்ற ஒன்றுதான்...ஒரு சர்ச்சையில் சிக்கினால் பேசும்விததில் பேசி அதை  சரி செய்யாமல் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல பேசி இருக்கிறார்..இந்த   பேச்சை கேட்டு இன்னும் நாலு பேர் கடுப்பாவார்கள் ....


இன்று போராட்டம் நடத்துவார்கள்,நாளை வழக்கு போடுவார்கள் ,தனது பெயர் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கும் என்ற சீப்பான பப்ளிசிட்டி தேடும் விதத்தை நன்றாகவே கற்று தேர்ந்துவிட்டார் குஷ்பு ....


அரசியலின் அடிச்சுவடியே அதுதானே!




12 டிசம்பர் 2012

ரஜினி என்ன .................................. ?



நான் தெரியாமல் தான் கேட்கிறேன்...ரஜினி என்ன இந்தியாவை காக்க வந்த விடிவெள்ளியா?


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசப்பிதாவா?


இந்தியாவை வல்லரசாக மாற்றி கொண்டு இருக்கும் ஒரு மாமனிதரா?


தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கி கொண்டு இருக்கும் உத்தமரா?


தமிழகத்தில் நிலவி வரும் பவர் கட்டை "நெவர் கட்"ஆக மாற்ற வந்தவரா?


தமிழகத்தில் நிலவி வரும் சாதி பிரச்சினைகளை வேரோடு அழிக்க வந்தவரா?

அவர் பிறந்த நாளுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?அலம்பல்கள்?அக்கப்போர் எல்லாம்?

எந்த டிவி யை திறந்தாலும் ரஜினி சிரித்துகொண்டோ,டூயட் பாடிகொண்டோ .பஞ்ச் டயலாக்  பேசிக்கொண்டோ இருக்கிறார்...

விகடன்,குமுதம் என எல்லா பத்திரிக்கைகளிலும் 5,6 பக்கத்துக்கு ரஜினி புகழ்!

ரஜினியே இதை விரும்பி இருக்க மாட்டார்...

ஒரு நடிகரை ,ஒரு மனிதரை இந்த அளவுக்கு துதி பாடி இந்த மீடியாக்களும் .அவரது ரசிகர்களும் என்ன பயனை பெற போகிறார்கள்...

மீடியாக்கலாவது விளம்பரங்களின் மூலம் ரஜினியால் ஆதாயம் அடைவார்கள்..அவர்கள் துதி பாடுவதன் நோக்கமும் அதுதான்...

ஆனால் அவரது ரசிகர்களுக்கு என்ன பயன்?

என்று மாற போகிறார்கள் ஒரு நடிகரின் பிறந்த  நாளை ஏதோ அன்றுதான் தங்களின்  சிறந்த நாளாக நினைத்து கொண்டாடும் ரசிகர்கள்!?

  நண்பர்களே காலையிலே நான் இணைத்த இந்த பதிவை இதுவரை தமிழ்மணம் வெளியிடவில்லை...அப்படி என்ன இந்த பதிவில் எழுதிவிட்டேன்...?

குஷ்புவின் இடுப்பும்,குடி முழுகி போன திமுகவும்  என்ற தலைப்பில் உள்ள பதிவை எல்லாம் வெளியிடும் தமிழ்மணம்  இந்த பதிவிலும் ,தலைப்பிலும்  என்ன குறை கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை!






10 டிசம்பர் 2012

21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்!.....அதிரடி உண்மை...!



இன்னும் 11 நாட்களே உள்ளன...


அதுவும் இன்று ஒரு நாள் ஓடி கொண்டு இருக்கிறது...


நிச்சயம் "அது"நடக்கத்தான் போகிறது...


அழியத்தான் போகிறது.....


அது என்னன்னா....



"21.12.2012 ல்  உலகம் அழிய போகிறது என்ற  வதந்தி தான்!"



மறுநாள் தெரிந்துவிடும் அழிந்தது மாயன் காலண்டரும் .அதை வைத்து பரப்பப்பட்ட வதந்தியும்தான் என்று!

அந்த வதந்தியை பாதி நம்பியவர்கள் கூட இந்நேரம் முழு நல்லவனாகி இருப்பார்கள்...அதை அப்படியே அவர்கள் தொடர்ந்தால்  அது இந்த வதந்திக்கு கிடைத்த வெற்றிதான்....!

ஆகாத பேச்சை விட்டுவிட்டு ஆகுற வேலையை பார்க்க ஆரம்பிப்போம்...!



நண்பர்களே..இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறேன்...பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வமும் ,அக்கறையும் நிறைய இருக்கு...

முடிந்தால் அங்கும் ஒரு விசிட் அடித்து பாருங்கள்....

வலைச்சரத்தில் அதிரடி ஆரம்பம் ...........



09 டிசம்பர் 2012

காவிரி பிரச்சினை.... ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்...உடனடி தீர்வு கிடைக்குமா?!....



காவிரி நீர் பிரச்சினைக்காக ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்....உடனடியாக கர்நாடகா தண்ணீர்  திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொடங்கினார் !


காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 25 ந்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. "ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும்" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. 

(1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி). சுப்ரீம் கோர்ட்டும் இந்த இடைக்கால தீர்ப்பை உறுதிபடுத்தியது. ஆனாலும், கர்நாடகம் போதுமான அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சியினர், 

"பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி செய்யவேண்டும்" என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இந்த பிரச்சினையில் பிரதமர் நரசிம்மராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்துவதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா 18.7.1993 அன்று `திடீர்' உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 






காலை 9.15 மணிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார். பின்னர் அவர் சமாதியின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார். 

முதல் அமைச்சர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்ற செய்தி, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி தொண்டர்கள் உள்பட யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உண்ணாவிரதத்தை தொடங்கியது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அதன் பிறகுதான் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரம் அவசரமாக அங்கு சென்றனர். 

அமைச்சர்களும், அதிகாரிகளும் வரும் வரைக்கும் ஜெயலலிதா சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். பகல் 11 மணி அளவில் அங்கு பந்தல் போடப்பட்டது. பின்னர் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட தனி மேடையில் ஜெயலலிதா அமர்ந்தார். அனைத்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள். 

உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அங்கு இருந்தபடியே அரசு "பைல்"களை பார்த்தார். அவ்வப்போது தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், உள்துறை செயலாளர் மலைச்சாமி, சுகாதாரத்துறை செயலாளர் இன்பசாகரன் மற்றும் அதிகாரிகளை முதல் அமைச்சர் அழைத்துப் பேசினார். தமிழக கவர்னர் சென்னா ரெட்டி புதுச்சேரி சென்று இருந்தார். 

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதை அறிந்ததும், அவர் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணத்தை கவர்னரிடம் ஜெயலலிதா விளக்கினார். இருப்பினும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். 

அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில், "காவிரி நடுவர்மன்றத்தீர்ப்பை அமல்படுத்தும்படி அரசியல் சட்டத்தின் 256வது விதியின் கீழ், கர் நாடக அரசுக்கு பிரதமர் நரசிம்மராவ் உத்தரவிடவேண்டும். அவ்வாறு பிரதமர் உத்தரவிடும் வரை நான் எனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டேன்" என்று கூறினார். 


 21 ந்தேதி 4-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக மத்திய நீர்வள துறை மந்திரி வி.சி.சுக்லாவை பிரதமர் நரசிம்மராவ் அனுப்பி வைத்தார். 

வி.சி.சுக்லா 20-ந்தேதி இரவு பெங்களூர் சென்று கர்நாடக முதல் மந்திரி வீரப்பமொய்லியுடன் பேச்சு நடத்தினார். பிறகு மறுநாள் காலை சென்னை வந்தார். 
விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு சென்றார். ஜெயலலிதாவுடன் வி.சி.சுக்லா பேச்சு நடத்தினார். காவிரி நீர் தொடர்பாக 2 கமிட்டிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார். இதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். 

மாலை 5.30 மணி அளவில் மத்திய மந்திரி வி.சி.சுக்லா பழச்சாறு எடுத்து முதல் அமைச்சரிடம் கொடுக்க அதை ஜெயலலிதா வாங்கி பருகி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்...


பிளாஷ்பேக் ஓவர்...



 மக்களே...படித்தவுடன் கடுப்பா இருக்கா?அட பாவிகளா இது நடந்து 20 வருடங்களை தாண்டியும் இன்னும் அதே பிரச்சினை தொடர்ந்து வருகிறதே!என்றுதான் இதற்கு தீர்வு என கேட்க தோன்றுகிறதா?

அதானே !யாரிடம் கேட்பது?!!...இந்தியாவில்தானே இந்த இரண்டு மாநிலங்களும் இருக்கின்றன என்ற சந்தேகம்  வேற எழுகின்றதே?அதையும் யாரிடம் கேட்பது?

அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டிலும்,கர்நாடாகாவிலும் எத்தனையோ முறை ஆள்பவர்கள் மாறிவிட்டார்கள்...ஆனால் தண்ணீர்தான் வந்த பாடில்லை...


தண்ணீரை வைத்து இரு மாநில விவசாயிகளிடமும்  கண்ணீரை வரவைத்து  அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த  பிரச்சினை ஓயாது ... 

இதற்கு எப்பத்தான் விடிவு ?


07 டிசம்பர் 2012

கருணாநிதி ஆந்திராகாரருங்கோ!!ஆதாரங்களோடு அன்புமணி!.......





நான் கேட்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க (சொன்னால் ஒரு குச்சிமிட்டாய் தருவாருங்கோ!)ஒரு தமிழன் கேரளாவிலோ ,ஆந்திராவிலோ ,கர்நாடகாவிலோ போய்  முதல்வர் ஆக  முடியுமா ?ஆனா இங்க பாருங்க ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லவேண்டியது இல்லை..(சொன்னால் உள்ளே போய்விடுவோம்னு தெரியும் சாருக்கு!)விஜயகாந்த் தமிழர் கிடையாது....தமிழின தலைவர்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கிட்டு இருக்கும் (அவர்  மூச்சு விடும்போது இவர்தான் எண்ணி பார்த்தாரு போல!)கருணாநிதியே தமிழர் அல்ல!(கொஞ்சம் விட்டா தமிழ்நாட்ல நாங்கதான் தமிழர்கள்ன்னு சொல்லிவிடுவார்!)கருணாநிதியோட  பூர்வீகம் ஆந்திராதான்!(ஆனா நம்ம டாக்டரு அய்யாவின்  வகையிரா   தமிழ் மொழி தோன்றும்போதே  தோன்றியது என்றால் பார்த்துகொள்ளுங்கள்!)

கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திராதான் என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரம் வெளிவரும் (இப்ப சென்சார் போர்டுல அனுமதி வாங்க இருக்கு போல!)....அதனால தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள  வாய்ப்பு கொடுங்கள் என மக்களிடம் கேட்க போகிறோம்(அது நியாயம்தான்...ஆனா அந்த தமிழனே நான்தான் என நீங்களே சொல்லிகொண்டால்  எப்படி?)

எந்த நம்பிக்கையிலே ஆட்சியை பிடிப்போம் என ஆனந்த விகடன் பேட்டியில் அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில்தான் இது...மேலும் சில கேள்விகளையும் அவரோட பதிலையும் என்னோட கவுண்டரோடு படியுங்கள்...

கேள்வி: ராமதாஸும் ,அன்புமணியும் பெரும் குடிகாரர்கள் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி .என் .ராமமூர்த்தி பேசி இருக்கிறாரே?

அன்புமணி:  அவர் யாருன்னே எனக்கு தெரியாதுங்க (தெரியாட்டி என்ன ?கேட்ட கேள்விக்கு பதில் என்ன சாரே?!)

கேள்வி:திராவிட கட்சிகளை தவிர்த்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள்?

இவங்க கூட்டணியே எங்களுக்கு தேவை இல்லை...தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க...அவங்க எங்களுக்கு ஒட்டு போட போறாங்க (2011ல மட்டும் என்ன ஆந்திர மக்களா இங்கு வந்து ஒட்டு போட்டாங்க?!)

கேள்வி:வன்னிய சமூகத்துக்கு பெண்களை வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் கையை வெட்டுங்கள் என பேசி பிரச்சினையை ஆரம்பித்ததே காடுவெட்டி குருதானே ?

குரு சொன்னா எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா?(அட இந்த காட்டுமிராண்டி தனமான பேச்சை எல்லாரும் வேற கேட்கணுமா?பா.ம.க.வுக்கு ஒட்டு போடுங்கன்னு குரு சொல்லி எல்லாரும் எங்களுக்கு ஒட்டு போட்டாங்களா (அப்பாடா இப்பவாச்சும் யாருமே எங்களுக்கு ஒட்டு போடலன்னு ஒத்து கிட்டாரே !)நானோ, அய்யாவோ ,குருவோ காதலுக்கு எதிரானவங்க இல்ல...உண்மையான காதல்னா உயிரை கொடுத்தாவது (யார் உயிரை?!காதலர்களின் உயிரையா !)சேர்த்து வைக்க தயாரா இருக்கிறோம்...

பேட்டி பினிஷ் ..

ஓகே...நான் தெரியாமதான் கேட்கிறேன்..இதுவரை தமிழர்களை  தமிழன் ஆளவே இல்லை என நீங்களும்,உங்கள் அப்பாவும் சொல்கிறீர்களே காமராஜர்,அண்ணா இவர்களெல்லாம் என்ன  ஐரோப்பியாவிலிருந்தா வந்தார்கள்?


05 டிசம்பர் 2012

பயோ(பயங்கர)டேட்டா : ராமதாஸ்


பெயர் :  ராமதாஸ்



அடைமொழி : மரம்வெட்டி மருத்துவர் ....



கட்சியின் பெயர்: பாசமான மகனுக்கான கட்சி (சுருக்கமாக பா ம க !)



தொழில்: ஜாதி வியாபாரி





பொழுதுபோக்கு:  ஜாதி கலவரங்களை  தூண்டி விடுவது




பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்




பிடித்த விளையாட்டு : அந்தர் பல்ட்டி




என்றுமே பிடித்தது: ஜாதி சண்டை,கலவரம்




 எப்போதும் பிடிக்காதது : காதல்,கலப்பு திருமணம்




சாதனை: ஜா"தீ " யை வைத்து கட்சியை வளர்த்தது



வேதனை : கொஞ்சூண்டு இருந்த நல்ல பேரும் கரைந்து போனது....




நீண்ட கால எரிச்சல்:  கருணாநிதி,ஜெயலலிதா



சமிபத்திய எரிச்சல்: விஜயகாந்த்



காடுவெட்டி குரு : ஜா"தீ" யை பற்ற வைக்கும் தளபதி




அன்புமணி : ஒ சி  கோட்டாவில் அமைச்சர் ஆவதற்காகவே இருப்பவர் ...




 திருமாவளவன்: தமிழ்குடிதாங்கி பட்டம் தரும்போது இனித்தவர் ,இப்போது கசப்பவர் !



வாய் கூசாமல் சொல்வது:  திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை ! ...




வாய் தவறி சொல்வது :  பாமக  ஆட்சியை பிடிக்கும்!




மாறி கொண்டே இருப்பது: கூட்டணி




மாறாமல் இருப்பது:  சாதி வெறி ....!





04 டிசம்பர் 2012

தி மு க வுடன் கூட்டணி ...........விஜயகாந்த்...அடுத்த கைது கலாநிதிமாறன்?!(கூட்டுப்பொறியல் )


அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள்...

அது மீண்டும் ஒருமுறை நிருபனமாகப்போகிறது .... எந்த  வாயால் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என பேசினாரோ அதே வாயால் கருணாநிதிதான் நல்லவர்,வல்லவர்,தமிழின தலைவர்  என புலம்ப இல்லை புகழ  போகிறார் விஜயகாந்த்...கவிழ்ந்து கொண்டு இருக்கும் கப்பலை காப்பாற்ற வேறு  வழி தெரியவில்லை  கேப்டனுக்கு!

திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதை  சூசகமாக தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்....

திமுக கூட்டணிக்கு  செல்வீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "இருக்கலாம்,அப்போது பார்த்து கொள்ளலாம் என "கூறி இருக்கிறார்...

முதலில் யாரோடும் கூட்டணி இல்லை என்றார், பின்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார்...இப்ப கருணாநிதியுடன் வைக்க போகிறார்....விஜயகாந்த் நிதானமில்லாமல் பேசுகிறார்,தெளிவில்லாமல் இருக்கிறார் என யாரும் இனி குறைகூற முடியாது...அரசியலில் எப்படி இருந்தால் காலத்தை ஓட்டலாம் என நிதானமாக ,தெளிவாகத்தானே முடிவெடுத்து இருக்கிறார்  கேப்டன்!

 ஏற்கனவே 4 MLA க்கள் புட்டுகிட்டு எதிர்முகாமுக்கு போன நிலையில்  மக்களுடனும்,தெய்வத்துடனும் கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்தால் எதிர்காலத்தில் தானும் தன மனைவியும் மட்டுமே கட்சியில் இருப்போம் என லேட்டாக புரிந்து கொண்டு திமுக  பக்கம் சாய கணக்கு போட்டு இருப்பார் விஜயகாந்த் என நினைக்கின்றேன்...

நாடாளுமன்ற  தேர்தலில் திமுகவுடன் இணைந்து விஜயகாந்த் தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது என்பதைத்தான்  அவர் பேச்சு காட்டுகிறது...

திமுக ,அதிமுக வை தவிர்த்து வேறு கட்சியிடம் மாற்று அரசியலை எதிர்பார்த்த ,எதிர்பார்க்கும் பொதுமக்கள்தான்    பாவம்!

......................... ............................... ................................................................

தமிழகத்தில் அடுத்த "ஸ்டார்"கைது அநேகமாக கலாநிதிமாறனாக இருக்கலாம்!

கலாநிதிமாறன் மீது 10 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்...காவலன் படத்தின் ஒரு ஏரியா உரிமையை வாங்கிய சன் டிவி இதுவரை அதற்கான பணத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார்..

ஸ்பெக்ட்ரம் விவகாரம்,AIR CELL  விவகாரம் போன்றவற்றில் கைதாகாமல் தப்பித்த கேடி பிரதர்ஸ் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் ?

டெல்லியில் வெந்த இவர்களின் பருப்பு "அம்மாவிடம்"வேகுமா என்பதை பார்ப்போம்!

................................... ........................................ ........................................


மெரீனா பீச்சில் உள்ள மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் நினைவிடத்தின்  முகப்பில் அரசின் சார்பில் இரட்டை இலை  சின்னம் அமைக்கபோவதாக செய்தி கசிந்து வருகிறது..

அரசு பராமரித்து வரும் தலைவர்களின் நினைவிடங்களில் கட்சி சின்னங்களை அமைப்பது நிச்சயம் தவறானது...அந்த நினைவிடம் அதிமுக என்ற கட்சியினால் உருவாக்கப்பட்டது அல்ல...அரசால்  உருவாக்கப்பட்டது...அதிமுக வேண்டுமானால் அவர்களது நிதியில் அவர்களது இடத்தில எம் ஜி ஆருக்கு நினைவிடம் வைத்து அதில் இரட்டை இலை சின்னத்தை தாராளமாக அமைத்து கொள்ளட்டும்...

  தமிழக அரசு ஒரு கட்சியின் நிறுவனம் அல்ல...!
.......................... ............................... ....................................................................


03 டிசம்பர் 2012

ஜா"தீ"...ஒரே கூட்டணியில் திமுக,அதிமுக ...!அதிர்ச்சி ..ஆனால் உண்மை ...!

திமுகவும் அதிமுகவும் கூட்டணி....என்ன நம்ப கஷ்டமாக இருக்கா?நம்பித்தான் ஆக வேண்டும்....ஒரு விசயத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை!

தமிழ்நாட்டில் ஜாதி பிரச்சினைகள் தீர்க்கபடாமல்,அல்லது ஜாதி பிரச்சினைகள் நிகழ்வதற்கு யார் காரணம்?எல்லாரும் நினைப்பதுபோல பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற ஜாதிக்கட்சிகள் மட்டும் காரணமல்ல..
இந்த கட்சிகளுக்கு முன்னாலே பலம் தின்று கோட்டை போட்ட இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன...


ஜாதிக்கட்சிகளை விடுங்கள்..அவர்கள் அப்பட்டமாக தங்கள் ஜாதிக்காக ,உரிமைக்காக பாடுபடுகிறோம் என கூறிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்...

ஆனால் திராவிட கட்சிகள் என கூறி கொள்ளும் திமுகவும்,அதிமுகவும்தான் தமிழ்நாட்டில் மறைமுகமாக ஜாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் மறைமுக ஜாதிக்கட்சிகள் ..
 
எல்லா தேர்தல்களிலும் இந்த கட்சிகள் வேட்பாளர் தேர்வை எப்படி நடத்துகின்றன?வேட்பாளர் நல்லவரா,கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்படாதவரா என்பதை எல்லாம் பார்க்காமல் அவர் எந்த ஜாதி என்பதைத்தான் முதல் கேள்வியாக வைக்கிறார்கள்...குறிப்பிட்ட அந்த தொகுதியில் எந்த ஜாதி பெரும்பான்மையாக வசிக்கிறார்கள் என்பதை வைத்துதான் இந்த கட்சிகள் அதே ஜாதியில் வேட்பாளரை தேர்வு செய்கின்றன...இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைமுக கூட்டணி வைத்து இருப்பவர்கள்!

 தன்னை ஜாதி,மத ,கடவுள் நம்பிக்கைகளுக்கு  அப்பாற்பட்டவராக,பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவராக காட்டி கொள்ளும் கருணாநிதியை 234 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்த சொல்லுங்கள் பார்ப்போம்...முடியாது ...ஜெயலலிதாவும் இதே ரகம்தான்...நான் எதற்கு கருணாநிதியை சொல்கிறேன் என்றால் அவர்தான் வார்த்தைக்கு வார்த்தை பெரியாரின் சீர்திருத்த கருத்துக்களை அமுல்படுத்திய ,செயல்படுத்திய ஆட்சி,கட்சி திமுக தான் என தம்பட்டம் அடித்து கொள்பவர்...பெரியார் எந்த காலத்தில் ஜாதியை ஆதரித்தார்?

அட சட்டமன்ற ,நாடாளுமன்ற தேர்தல்களை விடுங்கள்...சாதாரண உள்ளாட்சி தேர்தல்களிலே ,நகர்மன்ற தேர்தல்களிலே இந்த இரு கட்சிகளும் ஜாதியை அடிப்படையாக வைத்துதான் வேட்பாளர்களை  நிறுத்துகின்றன...அப்புறம் எங்கே உருப்படுகிறது?

ஜாதிக்கட்சிகளை விட இந்த இரண்டு பெரிய கட்சிகள்தான் முதல்  குற்றவாளிகள்...இந்த இரண்டு கட்சிகளின் பெயர்களில்தான் ஜாதி இல்லை...மற்றபடி ஜாதியின் அடிப்படையில் கிளை செயலாளரில் ஆரம்பித்து மாவட்ட செயலாளர் வரை பதவியில் அமர்த்துகின்றன..

அதை முதலில் இரண்டு கட்சிகளும் நிறுத்தட்டும்...தமிழ்நாட்டில் ஜாதி வெறி,ஜாதி பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கும்...!

கட்சி பொறுப்புகளிலிருந்து வேட்பாளர் தேர்வு வரை திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் என்று ஜாதி ரீதியிலான கண்ணோட்டத்தை கைவிடுகிறதோ அன்றுதான் தமிழகம் விடியும்!

அது எப்போ?....