தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....
மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......
தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனரின் மகனாகவே இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு
நம்ம மனோஜ்தான்......
வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....
தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......
படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...
பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....
சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது தனது தந்தையின் நடித்து வருகிறார்..பிறகு வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்...!
மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர் த
தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...
மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....
சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற
படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....படம் பிளாப் நம்பர் 1 ஆனது ....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....
அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...
இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....
இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....
நோட் பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு
நோட் பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு
Tweet |
இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு ? ada..
பதிலளிநீக்குதிரை உலகில் காணமல் போனவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள் ....உதாரணத்துக்கு ..பாக்கியராஜ் மகன் ...வித வித மான நடிப்பை தந்தாலும் ரசிகர்கள் ஏற்றுகொள்ள வில்லை ..........
பதிலளிநீக்குஇடுகைத்தலைப்பு:
பதிலளிநீக்குகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)
உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!