அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள்...
அது மீண்டும் ஒருமுறை நிருபனமாகப்போகிறது .... எந்த வாயால் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என பேசினாரோ அதே வாயால் கருணாநிதிதான் நல்லவர்,வல்லவர்,தமிழின தலைவர் என புலம்ப இல்லை புகழ போகிறார் விஜயகாந்த்...கவிழ்ந்து கொண்டு இருக்கும் கப்பலை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை கேப்டனுக்கு!
திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்....
திமுக கூட்டணிக்கு செல்வீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "இருக்கலாம்,அப்போது பார்த்து கொள்ளலாம் என "கூறி இருக்கிறார்...
முதலில் யாரோடும் கூட்டணி இல்லை என்றார், பின்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார்...இப்ப கருணாநிதியுடன் வைக்க போகிறார்....விஜயகாந்த் நிதானமில்லாமல் பேசுகிறார்,தெளிவில்லாமல் இருக்கிறார் என யாரும் இனி குறைகூற முடியாது...அரசியலில் எப்படி இருந்தால் காலத்தை ஓட்டலாம் என நிதானமாக ,தெளிவாகத்தானே முடிவெடுத்து இருக்கிறார் கேப்டன்!
ஏற்கனவே 4 MLA க்கள் புட்டுகிட்டு எதிர்முகாமுக்கு போன நிலையில் மக்களுடனும்,தெய்வத்துடனும் கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்தால் எதிர்காலத்தில் தானும் தன மனைவியும் மட்டுமே கட்சியில் இருப்போம் என லேட்டாக புரிந்து கொண்டு திமுக பக்கம் சாய கணக்கு போட்டு இருப்பார் விஜயகாந்த் என நினைக்கின்றேன்...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து விஜயகாந்த் தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது என்பதைத்தான் அவர் பேச்சு காட்டுகிறது...
திமுக ,அதிமுக வை தவிர்த்து வேறு கட்சியிடம் மாற்று அரசியலை எதிர்பார்த்த ,எதிர்பார்க்கும் பொதுமக்கள்தான் பாவம்!
......................... ............................... ................................................................
தமிழகத்தில் அடுத்த "ஸ்டார்"கைது அநேகமாக கலாநிதிமாறனாக இருக்கலாம்!
கலாநிதிமாறன் மீது 10 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்...காவலன் படத்தின் ஒரு ஏரியா உரிமையை வாங்கிய சன் டிவி இதுவரை அதற்கான பணத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார்..
ஸ்பெக்ட்ரம் விவகாரம்,AIR CELL விவகாரம் போன்றவற்றில் கைதாகாமல் தப்பித்த கேடி பிரதர்ஸ் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் ?
டெல்லியில் வெந்த இவர்களின் பருப்பு "அம்மாவிடம்"வேகுமா என்பதை பார்ப்போம்!
................................... ........................................ ........................................
மெரீனா பீச்சில் உள்ள மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் நினைவிடத்தின் முகப்பில் அரசின் சார்பில் இரட்டை இலை சின்னம் அமைக்கபோவதாக செய்தி கசிந்து வருகிறது..
அரசு பராமரித்து வரும் தலைவர்களின் நினைவிடங்களில் கட்சி சின்னங்களை அமைப்பது நிச்சயம் தவறானது...அந்த நினைவிடம் அதிமுக என்ற கட்சியினால் உருவாக்கப்பட்டது அல்ல...அரசால் உருவாக்கப்பட்டது...அதிமுக வேண்டுமானால் அவர்களது நிதியில் அவர்களது இடத்தில எம் ஜி ஆருக்கு நினைவிடம் வைத்து அதில் இரட்டை இலை சின்னத்தை தாராளமாக அமைத்து கொள்ளட்டும்...
தமிழக அரசு ஒரு கட்சியின் நிறுவனம் அல்ல...!
.......................... ............................... ....................................................................
Tweet |
மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!
பதிலளிநீக்குஅரசியலே சாதரணமப்பா
பதிலளிநீக்கு