19 ஜனவரி 2011

நீரா ராடியா மத்திய அமைச்சர்......கொத்து பரோட்டா....


கொஞ்சம் கொஞ்சம் செய்திகளை கொத்தி போடுகிறேன்....

பொங்கல் சிறப்பு நிகழ்சிகளை பார்த்தேன்.....

கலைஞர் டிவி யில் ஒரு பட்டிமன்றம் போட்டாங்க......மூன்று தலைப்புகளில்....
மூன்றுமே கருணாநிதியை பற்றியது......ஒரு ஒன்பது பேருன்னு நெனைக்குறேன்......சும்மா மாத்தி மாத்தி கலைஞரை புகழோ புகழ் என்று புகழ்த்து தள்ளிவிட்டார்கள்....அதை கலைஞரும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் உட்கார்ந்து பார்த்து ரசித்து சிரித்து கொண்டு இருக்கிறார்.....பாவம் வயசான காலத்தில் அன்பழகனை நடுவராக போட்டு அவரது ஆயுள் காலத்தயும் கொஞ்சம் குறைத்து விட்டார்கள்.....

அதே நேரத்தில் போட்டியாக சன் டிவி யும் பட்டிமன்றம் போட்டு தங்களுக்குள் உள்ள போட்டி மன்றத்தை வெளிகாட்டியது....

விஜய்யை கடுப்பேற்ற வேண்டும் என்ற நினைப்பில் சுறா படத்தை போட்டு மக்களை கடுப்பேற்றியது சன் டிவி.....இரண்டு டிவி யும் மாற்றி மாற்றி புது படங்களை ஒளிபரப்பி தாங்கள்தான் தமிழ் சினிமாவில் மறைமுக ஆதிக்க சக்தி என்பதை நிருபித்தன.....

இதற்க்கு கொஞ்சமும் சளைக்காமல் விஜய் டிவி யும் சென்ற மாதம் வெளிவந்த அய்யனார் படத்தையும் அதற்கு முன்பு வந்த சிக்குபுக்கு படத்தையும் போட்டு திணறடித்தது.....

பேசாம இனி எல்லா படங்களையும் டிவியிலே ரிலீஸ் பண்றது நல்லது..அப்பத்தான் திருட்டு வி சி டி களை ஒழிக்கலாம்....


உலக கோப்பை கிரிக்கெட் :

உலக கோப்பையில் பங்கு பெரும் இந்திய அணியில் பீஸ் போன பியுஸ் சாவ்லா இடம் பெற்று கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார்....ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு நாள் போட்டியில் விளையாடாத இவர் அணியில் இடம் பிடித்த ஒன்றே போதும் கிரிக்கெட்டில் அரசியல் விளையாடுவதை நிருபிப்பதற்கு....

இன்று மத்திய மந்திரி சபையில் மாற்றமாம்.....பேசாமல் நீரா ராடியாவை தகவல்
தொழில் நுட்பத்துறைக்கு மந்திரி ஆக்கினால் அரசுக்கு இனி ரகசியமாக டெலிபோன் ஒட்டு கேட்க தேவை இருக்காது....

அல்லது பேசாமல் பிராதமர் பதவியை கொடுத்து விட்டால் எல்லா துறைகளையும் ஒப்பந்த முறையில் அவரே பார்த்துகொள்வார்....
அரசுக்கும் செலவுகள் குறையும்.....செய்வாரா சோனியா!!!

15 கருத்துகள்:

  1. இன்று மத்திய மந்திரி சபையில் மாற்றமாம்.....பேசாமல் நீரா ராடியாவை தகவல்
    தொழில் நுட்பத்துறைக்கு மந்திரி ஆக்கினால் அரசுக்கு இனி ரகசியமாக டெலிபோன் ஒட்டு கேட்க தேவை இருக்காது....

    அல்லது பேசாமல் பிராதமர் பதவியை கொடுத்து விட்டால் எல்லா துறைகளையும் ஒப்பந்த முறையில் அவரே பார்த்துகொள்வார்....
    அரசுக்கும் செலவுகள் குறையும்.....செய்வாரா சோனியா!!!

    அரசுக்கு இலவச ஆலோசனையா??

    பதிலளிநீக்கு
  2. இன்று மத்திய மந்திரி சபையில் மாற்றமாம்.....பேசாமல் நீரா ராடியாவை தகவல்
    தொழில் நுட்பத்துறைக்கு மந்திரி ஆக்கினால் அரசுக்கு இனி ரகசியமாக டெலிபோன் ஒட்டு கேட்க தேவை இருக்காது....

    அல்லது பேசாமல் பிராதமர் பதவியை கொடுத்து விட்டால் எல்லா துறைகளையும் ஒப்பந்த முறையில் அவரே பார்த்துகொள்வார்....
    அரசுக்கும் செலவுகள் குறையும்.....செய்வாரா சோனியா!




    அருமை

    பதிலளிநீக்கு
  3. ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு நாள் போட்டியில் விளையாடாத இவர் அணியில் இடம் பிடித்த ஒன்றே போதும் கிரிக்கெட்டில் அரசியல் விளையாடுவதை நிருபிப்பதற்கு....



    உண்மை

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீசாந் இடம் பெறாமல் போனது பலருக்கு அதிர்ச்சி தான். சன் டி.வி. பட்டிமன்றம் பயனுள்ளதாக இருந்ததாக சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கொத்து பரோட்டா அருமையாக இருக்கு போட்டோவிலும் எழுத்திலும்..

    பதிலளிநீக்கு
  6. FARHAN சொன்னது…

    இன்று மத்திய மந்திரி சபையில் மாற்றமாம்.....பேசாமல் நீரா ராடியாவை தகவல்
    தொழில் நுட்பத்துறைக்கு மந்திரி ஆக்கினால் அரசுக்கு இனி ரகசியமாக டெலிபோன் ஒட்டு கேட்க தேவை இருக்காது....//நல்ல ஐடியாவா இருக்கே!!!

    பதிலளிநீக்கு
  7. கொத்து புரோட்டா கெத்தா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. கொத்துன்னா இது கொத்து....பேஷ்....பேஷ்...ரொம்ப நன்னாருக்கு

    பதிலளிநீக்கு
  9. சும்மா இருந்த என்னை இப்படி கொத்து பரோட்டாவை காட்டி, உசுப்பி விட்டுட்டிங்க, இன்னக்கி மதினா ரெஸ்டாரென்ட் போய் விட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  10. #அன்புடன் மலிக்கா சொன்னது…

    கொத்து பரோட்டா அருமையாக இருக்கு போட்டோவிலும் எழுத்திலும்..#

    நன்றி....நன்றி....

    பதிலளிநீக்கு
  11. பலவித செய்திகளை பல கோனத்தோடு விலாசுகிரிகள் ஐத்ரூஸ் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. ஸாரி பெயர் மாறிவிட்டது.....ஹாஜா.

    பதிலளிநீக்கு
  13. //பேசாம இனி எல்லா படங்களையும் டிவியிலே ரிலீஸ் பண்றது நல்லது..அப்பத்தான் திருட்டு வி சி டி களை ஒழிக்கலாம்....
    //
    குட் ஐடியா? :)

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....