05 மே 2011

என்னை குறி வைத்து வீழ்த்த முடியாது....கனிமொழி


என்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம்( ஆமாம் ஆமாம் ...ஊழல் கரை படியாத உன்னத பெண் அல்லவா நீங்கள்!) என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.


என்னை சிபிஐ கைது செய்தால் அதையும் எதிர்கொள்ள நான் தயார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

(கைது செய்தால் உங்கள் எதிரில் நின்றுதானே கைது செய்ய முடியும் ?)


ஏற்கனவே ராசா கைதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்தது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து திமுகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி ஆகியோரது தலைமையில் பல்வேறு வகையான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கனிமொழியும் தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகனுடன் டெல்லி வந்துள்ளார்.


இந்த நிலையில், தன்னை யாரும் அவ்வளவு சுலமாபக வீழ்த்தி விட முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சிபிஐ என்னைக் கைது செய்தால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன், அதை எதிர்த்துப் போராடுவேன். அதற்காக முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை.

இந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் பலமுறை விளக்கி வருகிறேன். ஊகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.

என்னைக் கைது செய்ய சிபிஐ விரும்பினால், பார்க்கலாம்(மக்களே விரும்புகிறார்களே!!). சட்டப்பூர்வமாக எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எதையும் சட்ட ரீதியாகவே நான் சந்திப்பேன். ( ஆமாம் கேஸ் இருந்தா சட்ட ரீதியாத்தான் சந்திக்க வேண்டும்...இதில் என்ன சந்தேகம்?)

என் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, நானும் சீரியஸாகவே இதை எதிர்கொண்டுள்ளேன்.(மக்களும் சீரியசாதான் பார்த்து கொண்டு இருக்கின்றினர்) இந்த குற்றச்சாட்டிலிருந்து நான் நிச்சயம் வெளி வருவேன்.

நான் இந்த வழக்கில் குறி வைத்து வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருக்கிறேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இத்தனை பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அத்தனை பேர் இருந்தும் கூட என் மீது மட்டும் அதிக வெளிச்சம் பாய்வதும் ஏன் என்று புரியவில்லை.( கோடி கோடியா கொள்ளை அடிச்சா அப்படிதான்!)

ஆனால் என்னை மட்டும் குறி வைத்து வீழ்த்தி விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நிச்சயம் தவறாகவே முடியும்.( ஆமாம் குறி வைத்து வீழ்த்த நீங்கள் என்ன குருவியா?)

எனது குடும்பத்தினர் முழுமையாக எனக்கு ஆதரவாக உள்ளனர்.(அப்ப அழகிரி யார் குடும்பம் ?) எனது தந்தை டெல்லிக்கு வருவதாக கூறி்னார்.( எதற்காக ஜெயிலுக்கு வழி அனுப்பவா? )நான்தான் மறுத்து விட்டேன் என்றார் கனிமொழி.(

6 கருத்துகள்:

  1. // அதற்காக முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை///

    அப்போ செமையா என்னமோ சிக்கியிருக்குன்னு புரியுது ஆண்டி.....

    பதிலளிநீக்கு
  2. //அத்தனை பேர் இருந்தும் கூட என் மீது மட்டும் அதிக வெளிச்சம் பாய்வதும் ஏன் என்று புரியவில்லை//

    உப்பை தின்னவன்[ள்] தண்ணி குடிக்கணுமே மேடம்...?

    பதிலளிநீக்கு
  3. //எனது தந்தை டெல்லிக்கு வருவதாக கூறி்னார்.( எதற்காக ஜெயிலுக்கு வழி அனுப்பவா? )நான்தான் மறுத்து விட்டேன் ///

    தமிழன் கொத்து கொத்தா சாவும் போது டெல்லிக்கு வராத அய்யன், உங்களை வழியனுப்ப கண்டிப்பா வருவார்...

    பதிலளிநீக்கு
  4. //எனது குடும்பத்தினர் முழுமையாக எனக்கு ஆதரவாக உள்ளனர்.(அப்ப அழகிரி யார் குடும்பம் ?)//
    :-)

    பதிலளிநீக்கு
  5. //என் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, நானும் சீரியஸாகவே இதை எதிர்கொண்டுள்ளேன்.(மக்களும் சீரியசாதான் பார்த்து கொண்டு இருக்கின்றினர்)//
    ஆன்டி இத ஜோக்கா வேற எடுப்பாங்களாமா?

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....