06 ஜூன் 2011

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...


திமுகவின் தோல்விக்கு பிறகு திருவாரூரில் மீண்டும் வழக்கம்போல ஒரு பிரமாண்ட ! பொதுக்கூட்டத்தை நடத்தினார் கருணாநிதி....

தனது வெற்றிக்காக நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் மகள் கனிமொழிக்காக கூப்பாடு போட்டுள்ளார்....

ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். (நம்ம தமிழ்நாட்டிலும் அப்படிதானே இருக்கு)அப்படிப்பட்ட இடத்தில், அந்த திஹார் சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி. ( உங்க மகளுக்காக சிறையை பூங்காவனமாக மாற்றவா முடியும் ?) இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்....( நேரடியாக மத்திய அரசை இப்போதுதான் குற்றம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்)

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ( எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணினா அப்படித்தான்) இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.( ஹி...ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க..உங்க குடும்பமே போதுமே...)

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ( ஆஹா அடுத்த வாரிசா?)அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. (அப்ப உறுதியா அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொல்லுங்கள் )செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். (அதனால்தான் திமுக தோற்றது என இவருக்கு யார் புரியவைப்பது?)


கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். (அப்ப நீங்களும் சிறை செல்ல தயாரா?) கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.(உங்கள் மகள் என்பதே ஒரு ஆதாரம்தானே !என்ன கொடுமை சார்...)

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.( யார் தவிர்ப்பார்? ஒரே குழப்பமா இருக்கே )

இறுதியில் ஜெயலலிதா சந்தோசப்படும் விசயமும் நடந்தது....கனிமொழியை பற்றி பேசும்போது அழுதுவிட்டாராம் கருணாநிதி....இப்ப அழுது என்ன புண்ணியம்?

11 கருத்துகள்:

  1. மத்திய அரசில் திமுக இனி எந்த முடிவை எடுக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  2. //இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.( யார் தவிர்ப்பார்? ஒரே குழப்பமா இருக்கே )//
    இது அவர் மகன்களுக்கான செய்தி!

    பதிலளிநீக்கு
  3. என்னை பொறுத்தவரையில் கனிமொழி சிறையில் இருப்பது பாவம் !!
    ( கொஞ்ச நாளா அரசியல்ல சேரனும்ன்னு ஆசையா இருக்கு மாப்ளே )

    பதிலளிநீக்கு
  4. அஹா இதபார்த்த ஏதோ பிளான் போல தெரியுதே

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    லேப்டாப் மனோவின் New Keyboard
    http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

    பதிலளிநீக்கு
  5. வினை விதைத்தவன் வினை அறுப்பான்

    பதிலளிநீக்கு
  6. நறுக்குன்னு மூணு ஒட்டு.. என்ன தெரியல தமிழ் 10ல என்னால யாருக்குமே ஓட்டு போட முடியல..

    பதிலளிநீக்கு
  7. ஹிஹி சிபி பழமொழி சொல்லுறாரு..
    ம்ம்ம் அரசியல் வேண்டாம் அளவுக்கு போயிட்டுது பாஸ்

    பதிலளிநீக்கு
  8. அப்பு ஆப்பு கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சி இருக்கு ஹிஹி!

    பதிலளிநீக்கு
  9. சகோ, கலைஞரின் லேட்டஸ் உரைக்கு காமெடி பஞ்ச் எழுதி காலய்த்திருக்கிறீங்க, அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:31 AM, ஜூன் 07, 2011

    பணம் மட்டும் வேணுமாம் ஆனால் சிறையில் போடக்கூடாதாம்!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....