04 ஜனவரி 2012

பதிவுலக பயங்கரவாதி பவுடர்....




சில நாட்களாக பதிவுலகில் தேவை இல்லாத பிரிவினைவாதங்கள் மதத்தின் பெயரால் எழுதப்பட்டு அல்லது நடத்தப்பட்டு வருகிறது....


அதற்க்கு பதில் கூறினால் முஸ்லிம் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி விடுகிறார்கள் என்ற குற்றசாட்டு வேறு....எந்த ஒரு மதத்தை பற்றியும் தவறாக கூறினால் சம்பந்தப்பட்ட மதத்தினர் தங்கள் கருத்துக்களை பதில்களை கூறத்தான் செய்வார்கள்...



நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்..பவுடர் மணிக்கு இஸ்லாம் மீது வெறுப்பா அல்லது இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மீது வெறுப்பா?இஸ்லாம் பெயரில் பரப்பப்படும் அல்லது நடத்தப்படும் தீவிரவாத செயல்களை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஏற்று கொள்ளமாட்டார்கள்..


இஸ்லாம் கூறும் நல்ல விஷயங்கள் பவுடருக்கு தெரியுமா? மது,விபசாரம் ,வட்டி, போன்றவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது தெரியுமா பவுடருக்கு?இன்று உலகில் மது ,மாது இவற்றால் நடக்கும் குற்றமே அதிகம்....முஸ்லிம் நபர்கள் யாரும் இதை செய்யவில்லையா என பவுடர் கேட்பார்....இதை செய்தால் அவன் உண்மையான முஸ்லிம் அல்ல...

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்து அவர்களுக்கு சம உரிமை கொடுத்து உள்ளது இஸ்லாம்....அது தெரியுமா பவுடருக்கு?

இஸ்லாமை பற்றி ஏதாவது எழுதினால் முஸ்லிம் பதிவர்கள் எல்லாரும் ஒன்று கூடி செயல் படுகிறார்கள், என்று சொல்கிறார் பவுடர்.....நான் கேட்கிறேன் சினிமா நடிகரான அஜித்தை பற்றியோ விஜயை பற்றியோ யாராவது விமர்சித்து எழுதினால் அவர்களின் பதிவுலக ரசிகர்கள் அந்த பதிவுகளை பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்....அப்படி இருக்கையில் உலகில் கோடிகணக்கான நபர்கள் பின்பற்றும் ஒரு மதத்தை பற்றி விமர்சித்து எழுதியவர்களுக்கு முஸ்லிம் பதிவர்கள் ஒன்று கூடி பதில் சொல்வது எந்த விதத்தில் தப்பாகும்?



முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை பற்றியும் சர்ச்சை எழுப்பி அவர்களின் அங்கங்களை ரசிக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பவுடர் ....இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? பெண்களின் முகங்கள் தவிர மற்ற அங்கங்கள் மறையும்படி உடை உடுத்த வேண்டும் என்பதுதான் சட்டம் ...முகத்தையும் மறைக்க வேண்டும் என்பது சட்டமல்ல....மற்ற அங்கங்கள் மறைக்க படாமல் இருந்தால் சில ஆண்களின் காம பார்வையில் இருந்து விலக முடியுமா? பெண்களை கவர்ச்சி பொம்மையாக தானே இவ்வுலகம் பார்க்கிறது?


ஆண்களை போலவே பெண்களும் உடை அணிந்தால்தான் பெண்களுக்கு உரிமைகள் சரியாக கிடைக்கின்றது என்று அர்த்தமா?



அடுத்து ஒரு ஆண் நான்கு திருமணம் செய்வதை பற்றி ஒரு சர்ச்சை...அதை பற்றி மிகவும் கேவலமாக எழுதி இருக்கிறார்...அவர் அப்படிதான் செய்வார் போல் இருக்கிறது.......நான்கு திருமணம் செய்துள்ள எத்தனை முஸ்லிம் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்குறீர்கள் ?நான்கு திருமணம் என்பது கட்டாய சட்டமல்ல....... அப்படியே ஒன்றுக்கு இரண்டு திருமணம் ஒரு ஆண் செய்தாலும் அவன் சமுகத்துக்கு,சட்டத்துக்கு உட்பட்டு அவன் சகல உரிமைகளையும் அப்பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்டம்...முதல் மனைவிக்கு தெரியாமல் சின்ன வீடு வைத்து கொள்வதைவிட இது தவறா?


முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்து கொள்வதை பற்றி ஒரு கமெண்ட் எழுதி இருக்கிறார் மிகவும் கொச்சையாக .....அவர் அப்படிதான் செய்வார் என்று நான் நினைக்கின்றேன்.......


இறுதியாக ஒன்று....சில நபர்கள் செய்யும் தீவிரவாத செயல்களிலோ, ஒழுக்கம் இல்லாத செயல்களிலோ இஸ்லாம் மதத்தை இணைத்து பேசவேண்டாம்..
மதம் என்பது வேறு...சில நபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் என்பது வேறு ....


தேவை இல்லாமல் ஒரு மதத்தை பற்றி எழுதி,அதை சர்ச்சை ஆக்கி பதிவுலகில் மதவெறியை தூண்டி விட்டு குளிர் காய்வதில் அப்படி என்னதான் சுகமோ பவுடருக்கு?

18 கருத்துகள்:

  1. //இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மீது வெறுப்பா?//

    இப்படியாகதான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நம்புகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. வாங்க நண்பா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வரும்போதே கோபமா வந்திருக்கீங்க போலிருக்கே? நீங்கள் யாரை பற்றி சொல்கிறீங்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்க சொல்வதும் சரிதான். இங்கே மதத்தின் பெயரால் சூடான சண்டைகளை கிளப்பி விட்டு அதன் மூலம் குளிர் காய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவை இல்லை. காலப்போக்கில் காணாமல் போயி விடுவார்கள். நீங்கள் திரும்பவும் எழுத தொடங்கியது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நண்பா ஹாஜா அவர்களுக்கு:-

    "பதிவுலக பயங்கரவாதி" என்ற இப்படி ஒரு பிரம்மாண்ட அடைமொழி கொடுக்கும் அளவுக்கெல்லாம் இந்த பவுடர் அவ்ளோ ஒர்த் இல்லே நண்பா.

    வேண்டுமானால், நீங்க அந்த லூசை இப்படி சொல்லலாம்:

    "பதிவுலக பைத்தியம்" என்று.

    பதிலளிநீக்கு
  4. இறுதியாக ஒன்று....சில நபர்கள் செய்யும் தீவிரவாத செயல்களிலோ, ஒழுக்கம் இல்லாத செயல்களிலோ இஸ்லாம் மதத்தை இணைத்து பேசவேண்டாம்..
    மதம் என்பது வேறு...சில நபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் என்பது வேறு ....////

    இது நச்....

    பதிலளிநீக்கு
  5. மச்சான்.... முதலில்... மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க....

    பதிலளிநீக்கு
  6. உங்கள் உணர்வுகளை அற்புதமா வெளிப்படுத்து இருக்கீங்க... இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது, இனி இது பற்றி பேசுவதில்லை என்று இரு தரப்பும் அமைதி காக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. எனது முந்தய பின்னூட்டத்தில், வெளிப்படுத்தி என்பதற்கு பதிலாக "வெளிப்படுத்து" என்று தவறுதலாக உள்ளது. தயவு செய்து "வெளிப்படுத்தி" என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்க சொல்வதும் சரிதான். இங்கே மதத்தின் பெயரால் சூடான சண்டைகளை கிளப்பி விட்டு அதன் மூலம் குளிர் காய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  9. ஹாஜா நானா, ஸலாம்!

    முடிந்து போன ஒரு பிரச்சனையை மறுபடியும் தோண்டி எடுத்துள்ளீர்கள்! நன்றி!

    உங்களுக்குத் தொடர்ந்து சண்டை போடுவதுதான் இஷ்டம் என்றால், எனக்கும் ஓகே!

    மற்றது, உங்களுக்கு எதிராக, “ ஒரே நாளில் இருபது கிலோ எடை குறைந்த கூஜா” என்று ஒரு உள்குத்து பதிவு ரெடி பன்ணிட்டேன்! ஆனால் பிரசுரிக்க மனமில்லை! மீண்டும் மீண்டும் சண்டையிட நான் விரும்பவில்லை!

    நீங்கள் சம்மதித்தால் அந்த உள்குத்து நாளை வெளியாகும்! அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும்! தவறியும் இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ தாக்க மாட்டேன்!

    அண்ணே, நீங்க ஓகே சொன்னால் பிரசுரிப்பேன்! இல்லேன்னா, ட்ரஃப்டில் இருக்கும்!

    பதிலைச் சொல்லுங்க நண்பா!

    பதிலளிநீக்கு
  10. சகோ ஆமினாவின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி! உங்கள் நம்பிக்கை வீண்போகாது சகோ!

    பதிலளிநீக்கு
  11. நான் தேடிய வரையில் வலைதளங்களின் வாயிலாக மத்த மதங்கள் தாக்கப் படுவதை விட இஸ்லாம் தான் இங்கு அதிகமாக தாக்கப்படுகின்றது.... அவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால் கூட பொருத் போய்விடுலாம், வீணான கற்பனைகளையும்,பொய்யான ஆதாரங்களையும் வைத்து முஸ்லிம்களை வேண்டும் என்றே வம்புக்கு இழுகின்றனர்.... இந்நிலை மாறவேண்டும் என்றால் தூய மார்கமான இஸ்லாத்தை முஸ்லிம்கள் எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு
  12. #Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது… #ஹாஜா நானா, ஸலாம்!

    முடிந்து போன ஒரு பிரச்சனையை மறுபடியும் தோண்டி எடுத்துள்ளீர்கள்! நன்றி!

    உங்களுக்குத் தொடர்ந்து சண்டை போடுவதுதான் இஷ்டம் என்றால், எனக்கும் ஓகே!

    மற்றது, உங்களுக்கு எதிராக, “ ஒரே நாளில் இருபது கிலோ எடை குறைந்த கூஜா” என்று ஒரு உள்குத்து பதிவு ரெடி பன்ணிட்டேன்! ஆனால் பிரசுரிக்க மனமில்லை! மீண்டும் மீண்டும் சண்டையிட நான் விரும்பவில்லை!

    நீங்கள் சம்மதித்தால் அந்த உள்குத்து நாளை வெளியாகும்! அது உங்களை மட்டுமே குறிவைத்ததாய் இருக்கும்! தவறியும் இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ தாக்க மாட்டேன்!

    அண்ணே, நீங்க ஓகே சொன்னால் பிரசுரிப்பேன்! இல்லேன்னா, ட்ரஃப்டில் இருக்கும்!

    பதிலைச் சொல்லுங்க நண்பா! #

    நன்றி நண்பா....நான் பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டன....இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது எனக்கு தெரியாது....உங்கள் பதிவை இன்று படித்தேன்....இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதி இருந்ததால் அதற்கு பதில் கூறனும் என எண்ணினேன்.......எழுதினேன்.....மற்றபடி உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை என்று எதுவும் இல்லை.... இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது எனக்கு சந்தோசமே....இஸ்லாத்தை இனி நீங்கள் தாக்க மாட்டேன் என்று கூறியதும் சந்தோசமே....முடிந்த பிரச்சினை முடிந்ததாகவே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  13. நன்றி நண்பர் பாலா அவர்களே....

    பதிலளிநீக்கு
  14. சிராஜ் சொன்னது…
    மச்சான்.... முதலில்... மீண்டும் எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்க....#

    நன்றி மச்சான்....

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நன்றி ஹாஜா! உங்கள் அன்புக்கும் புரிந்துணர்வுக்கும்!!

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா9:17 PM, ஜனவரி 04, 2012

    முடிந்த பிரச்சனை என்று கூறப்பட்டுவிட்டதால் இதுபற்றி நானும் எந்த கருத்தும் சொல்லவில்லை ஆனால் மதவெறியர்கள் ஏதும் பிரச்சனை எழுப்பினால் மீண்டும் மதவெறியர்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடரும்....

    உண்மையில் இஸ்லாம் ஒரு புனிதமான மதம் அதில் உள்ள சிலர் மதவெறியர்களாக இருப்பதுதான் பிரச்சனைகளுக்கு முதற்காரணம்...

    அனைவரின் புரிந்துணர்வுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  17. அய்யா பேனா வீரா....அதுதான் பிரச்சினை முடிஞ்சி போச்சுன்னு ஹாஜாவும், மணியும் கூட்டா சொல்லிட்டாங்களே...அப்புறம் உமக்கு என்ன பிரச்சினை? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காம போயி தூங்கு ராசா....

    பதிலளிநீக்கு
  18. இந்த பிரச்சினையை புரிந்துனர்வுடன் முடிவுக்கு கொண்டுவந்த ஹாஜா, மணி க்கு நன்றி

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....