10 ஜனவரி 2012

ஜெ சசியை நீக்கியதன் உண்மை காரணம்...






ஜெயலலிதா சசிகலா கூட்டத்தை விரட்டியதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா?



இவ்வளவு நாட்களாக தூங்கி தூங்கி விழித்த ஜெயலலிதா இப்போது ஒரேயடியாக முழித்து கொண்டதுதான்....! அப்பாடா ஒருவழியாக தலைப்புக்கு அர்த்தம் கொடுத்தாச்சு....


பின்னே என்னங்க...


ஒரு மாநிலத்தின் அமைச்சர்களை இந்த மன்னார்குடி கும்பல்தான் முடிவு செய்யுமாம்...மேலும் எந்த இடத்துக்கு யார் போலீஸ் அதிகாரிகள் ,யார் யாருக்கு மணல் குவாரிகள் உரிமை,கல்குவாரிகள் ,கான்ட்ராக்ட்கள் என்பதையும் இவர்கள்தான் முடிவு செய்வார்களாம்.... அப்படின்னா ஜெ தூங்கி கொண்டு இருந்தார் என்றுதானே அர்த்தம்..



கலைஞர் குடும்பமே இவர்களிடம் தோற்று போவார்கள் குடும்ப அரசியலில்....




சசிகலா, அவரது தம்பி, சசிகலாவின் அக்கா மகன்கள், சசியின் அண்ணி, அண்ணியின் சம்பந்தி, சசியின் சித்தப்பா மருமகன், சசியின் கணவர் நடராஜன், அவரது தம்பிகள் ..!யப்பா ! என்னங்கடா இது?





இவ்வாறு ஒரு அரசாங்கத்தை இந்த மன்னார்குடி கும்பல் ஆட்டி படைத்தது கொண்டு இருந்தார்கள் என்றால் அது முதல்வரின் தயவு இல்லாமலா?அல்லது முதல்வருக்கு தெரியாமலா?





முதல்வருக்கு தெரியாமல்தான் இது எல்லாம் நடந்தது என்றால் ஜெ அப்போதெல்லாம் தனது பழைய பட டி வி டி போட்டு பார்த்து கொண்டு இருந்தாரா?




சர்வ வல்லமை கொண்ட ஒரு சக்தியாக சசிகலா குடும்பம் மாறியதற்கு ஜெயலலிதாவின் கண்டு கொள்ளாத குணமே காரணம்....



இப்போதும் மக்களின் நலனுக்காகவோ, கட்சி தொண்டர்களின் நலனுக்காகவோ அவர்களை ஜெயலலிதா ஒதுக்கவில்லை ...இவர்களால் தனக்கு ஏதோ ஆபத்து வரபோகிறது ,தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்று உண்மை நிலையை ஜெ சற்று தாமதமாக உணர்ந்ததால் வந்த வினையே இந்த எதிர்வினை....




இப்போது எம் ஜி ஆரின் உண்மை தொண்டர்கள், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ,ஜெ யின் விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றனர் இந்த நடவடிக்கையை...



ஆனால் சசியின் நீக்கம் நிரந்தரமானதா இல்லையா என்பதில்தான் அதிமுக தொண்டர்களின் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது....



அது ஜெவுக்கே வெளிச்சம்....!!









8 கருத்துகள்:

  1. ம்..,....பொதுகுழுவில் பேசியது.....??? பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  2. மக்களின் நலனுக்காகவோ, கட்சி தொண்டர்களின் நலனுக்காகவோ அவர்களை ஜெயலலிதா ஒதுக்கவில்லை ...இவர்களால் தனக்கு ஏதோ ஆபத்து வரபோகிறது ,தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்று உண்மை நிலையை ஜெ சற்று தாமதமாக உணர்ந்ததால் வந்த வினையே இந்த எதிர்வினை....////
    உண்மையை இப்படியா பட்டென்று போட்டு உடைப்பது?

    பதிலளிநீக்கு
  3. கடைசி வரிகள் உண்மை. ஏற்கனவே ஒருமுறை நீக்கி பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்தான் சசி

    பதிலளிநீக்கு
  4. Hi haja after long time happy to see u again ..and we couldn't open whn u send post via newsletter boz of u didnt attached link. plz attached link and send newsletter thn only we can read ur post otherwise we miss ur post. if u have any doubt attaching link to newsletter send mail to me farr_ex@yahoo.com i will help

    பதிலளிநீக்கு
  5. #ரஹீம் கஸாலி சொன்னது…
    மக்களின் நலனுக்காகவோ, கட்சி தொண்டர்களின் நலனுக்காகவோ அவர்களை ஜெயலலிதா ஒதுக்கவில்லை ...இவர்களால் தனக்கு ஏதோ ஆபத்து வரபோகிறது ,தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்று உண்மை நிலையை ஜெ சற்று தாமதமாக உணர்ந்ததால் வந்த வினையே இந்த எதிர்வினை....////
    உண்மையை இப்படியா பட்டென்று போட்டு உடைப்பது? #

    உடைத்தால்தானே உண்மை தலைவரே ..நன்றி...

    பதிலளிநீக்கு
  6. #பாலா சொன்னது…
    கடைசி வரிகள் உண்மை. ஏற்கனவே ஒருமுறை நீக்கி பிறகு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்தான் சசி
    #

    அதேமாதிரிதான் நடக்கும்...வருகைக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....