25 ஜனவரி 2012

எரிக்கப்பட்ட கலாமின் கொடும்பாவியும்,துரத்தப்பட்ட சல்மான் ருஸ்டியும் (நொறுக்கு தீனி)....


இந்தியாவிலே முதல் முறையாக ! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவ பொம்மையை எரித்து சாதனை ! ! புரிந்துள்ளனர் கோவை சட்ட கல்லூரி மாணவர்கள்....கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் பயப்பட தேவை இல்லை என கூறியதால் கலாமுக்கு இந்த எதிர்ப்பு....ஜனாதிபதியாக இருக்கும்போதே எதற்கும் வாயை திறக்காதவர் இப்போது வாயை திறந்ததினால் வந்த வினை இது....

அது இருக்கட்டும் கொடும்பாவியை எரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

அடுத்து ஒரு சந்தேகம் உருவ பொம்மையை ஏன் கொடும்பாவி என்கிறார்கள்?

சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் வீடியோ உரை நேற்று ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் திரையிடப்படவில்லை....இது அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு கிடைத்த வெற்றி...இவ்விழாவுக்கு முதலில் ராஜஸ்தான் அரசால் அழைக்கப்பட்ட ருஷ்டி பின்பு மக்களின் எதிர்ப்பால் அதே அரசால் வரவேண்டாம் என துரத்தப்பட்டார்.....ஒரு மதத்தை பற்றி தவறாக எழுதினால் நடக்கும் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்...இவர் எழுதிய சாத்தானின் கவிதைகள் எனும் நூலுக்காக ஈரான் அரசால் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது....



நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் நடைபாதையில் மக்கள் தூங்குவது கவலை அளிக்கிறதாம் உச்ச நீதி மன்றத்துக்கு....சபாஷ்....இப்போதாவது கண் தெரிந்து உள்ளதே நீதிபதிகளுக்கு...
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையே உன்ன உணவு ,உடுத்த உடை, உறங்க ஒரு வீடு! இதுவே இல்லை என்றால் நம் நாடு சுதந்திரம் அடைந்து என்ன பயன்?

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை மத்திய அரசு நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என கருணாநிதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை !! விடுத்துள்ளார்....வேற ஒன்றும் இல்லை ...சோனியாவும்,பிரதமரும் கருணாநிதி என்று ஒருவர் இருக்கிறார் என அறிந்துகொள்ளவே இந்த அறிக்கை...கலைஞர் இன்னும் அரசியலில் இருக்கிறார்,தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறார் என நாமும் உணர்ந்து கொள்வோமாக...


நம்ம ஊருக்கு கவர்னராக வந்த ராசியோ என்னவோ ஆளுநர் ரோசய்யா மீது நில மோசடி புகார் எழுந்துள்ளது.....இங்கு அல்ல ..ஆந்திராவில்தான்....அம்மா ஆட்சியில் கவர்னராகவே இருந்தாலும் ஆப்புதான்....அம்மாவுக்கும்,ஆந்திராவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க கூடாது...பன்ச் டயலாக் நல்லா இருந்தா கேட்டுக்கணும்....

9 கருத்துகள்:

  1. அப்துல் கலாம் அவர்கள் அணுவை ஆக்கபூர்வமானதற்க்கு மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கொள்ளை உடையவர்.

    ஆதலால் அவர் அணுமின்நிலைய பிரச்சனையில் மின்உற்பத்திக்கு ஆதரவாக பேசுகிறார்.

    பதிலளிநீக்கு
  2. கலைஞரின் அறிக்கை..
    கெர்டுக்கட்டும் அப்போதுதான் அவர் இருப்பது தெரியும்

    செய்திகளின் தொகுப்பு... பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. .ஜனாதிபதியாக இருக்கும்போதே எதற்கும் வாயை திறக்காதவர் இப்போது வாயை திறந்ததினால் வந்த வினை இது....//

    கரெக்டா சொன்னீங்க பாஸ்

    //ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையே உன்ன உணவு ,உடுத்த உடை, உறங்க ஒரு வீடு! இதுவே இல்லை என்றால் நம் நாடு சுதந்திரம் அடைந்து என்ன பயன்?//

    இது மேட்டரு!

    //.ஆந்திராவில்தான்....அம்மா ஆட்சியில் கவர்னராகவே இருந்தாலும் ஆப்புதான்....//

    சூப்பர் பஞ்ச் சகோ

    பதிலளிநீக்கு
  4. கவிதை வீதி... // சௌந்தர்
    அப்துல் கலாம் அவர்கள் அணுவை ஆக்கபூர்வமானதற்க்கு மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கொள்ளை உடையவர்.

    ஆதலால் அவர் அணுமின்நிலைய பிரச்சனையில் மின்உற்பத்திக்கு ஆதரவாக பேசுகிறார்.
    ##

    பொது மக்களின் உயிர் சம்பந்தபட்ட பிரச்சனைகளில் அவர் இன்னும் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்,அல்லது விலகியிருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ ராஜகிரி ஹாஜா..

    பதிலளிநீக்கு
  6. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி..! 'கலாமின் உருவ பொம்மை எரிப்பு என்பது ஏற்கபடாத ஒன்று..!!' இதனால் பிரச்னை தீருமென்றால் ஆயிரம் உருவ பொம்மைகளை எரித்துக்கொள்ளுங்கள் என்று அவரே சொல்லிவிடுவார்..!!

    பதிலளிநீக்கு
  7. தங்கம் பழனி
    தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி..! 'கலாமின் உருவ பொம்மை எரிப்பு என்பது ஏற்கபடாத ஒன்று..!!' இதனால் பிரச்னை தீருமென்றால் ஆயிரம் உருவ பொம்மைகளை எரித்துக்கொள்ளுங்கள் என்று அவரே சொல்லிவிடுவார்..!!##

    ஹா ஹா....உண்மைதான்..நன்றி...

    பதிலளிநீக்கு
  8. nalla thakaval thokuppu!
    karunaanithi pattiya seythi-
    yosikka vaikkirathu!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....