19 பிப்ரவரி 2012

கைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும் ...(நொறுக்கு தீனி)


நில மோசடி புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன் அவரது பெசன்ட் நகர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.என்னால்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர முடிந்தது என கூறி வந்த நடராஜனுக்கும் செக் வைத்து நடராஜ வதத்தை ஜோராக ஆரம்பித்துள்ளார் ஜெ ...

இவர் மீது தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தை சேர்ந்த ராம லிங்கம் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் சதுர அடி முந்திரி தோப்பை நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு
கட்டிக்கொண்டனர். நிலத்தையும் தரும்படி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது போதாதா ஆளை அமுக்க....

தஞ்சை எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசார், நடரா ஜனை தேடிவந்தனர். சென்னையில் இருந்த நடராஜனை கோழியை அமுக்குவதுபோல தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் ஜெயிலுக்கு.....இனி அடுத்து அடுத்து வழக்குகள் பாய்ந்து குண்டாஸ் லெவலுக்கு போக வாய்ப்புகள் அதிகம்....

சத்தியமாக இராவணன்,திவாகரன்,நடராஜன் ஆகியோர் கம்பி எண்ணுவார்கள் என அவர்களால் பாதிக்கப்பட்ட எவரும் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்....அதை செயல்படுத்தி காட்டிவிட்டார் ஜெ ..இந்த கைதுகளின் பின்னணியில் முழுக்க முழுக்க ஜெ யின் சுயநலம் என்ற போர்வை இருந்தாலும் மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதே உண்மை...

................................ ............................................. .......................................

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா நேற்று ஆஜரானார். நீதிபதி கேட்ட 40 கேள்விகளுக்கு அழுதபடியே அவர் பதில் அளித்தார்


பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது அழுதேவிட்டார் சசி.....

வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அலுத்து இருக்கிறார்...

ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராவணன்,திவாகரன்,இப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரை கைது செய்து அவர்களை துருப்பு சீட்டுகளாக பயன்படுத்தி சசிகலாவை பலிகடா ஆக்கியுள்ளார் ஜெ .....

ஆக மொத்தம் கூட்டி கழித்து பார்த்தால் ஜெயலலிதா போட்ட கணக்கு ஆச்சு பிசகாமல் அப்படியே நடந்து வருகிறது....இனி இவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படலாம்....அதன் பிறகு தனது உடன்பிறவா சகோதரியுடன் மீண்டும் சேரலாம்.....

இதுதான் ஆடு புலி ஆட்டம் என்பதோ..!

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பரபரப்பான செய்திகளுக்கிடையே மக்கள் மின்தடை பிரச்சினையும் கொஞ்சம் மறந்துவிடுவார்கள்....போராட்டங்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்....இதுதான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....!

3 கருத்துகள்:

  1. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டுனில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....