சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து சுட்டு வீழ்த்தி சரிந்த தங்களது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளனர்....
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரும் வங்கிக் கொள்ளைகள் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.
இந்த கொள்ளைச் சம்பவங்களை பெரும் சவாலாக கருதிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பிறவங்கிகளில் பதிவான கண்காணிப்பு காமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்ததில் கொள்ளையர்கள் இருவர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டதை உணர்ந்த போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர்.
மேலும் கொள்ளையர்கள் குறித்த விவரத்தையும் வெளியிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்று கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இதற்கு உடனடி பதில் கிடைத்தது.
சென்னை வேளச்சேரி பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி, ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன.
இதையடுத்து பெரும் போலீஸ் படை அந்த வீட்டுக்கு விரைந்தது. உள்ளே பதுங்கியிருந்த கொள்ளையர்களை நாலாபுறமும் முற்றுகையிட்ட போலீஸார் கொள்ளையர்களை சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் வரவில்லை. மாறாக, போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த சண்டையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி மற்றும் ரவி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் மற்றும் சரிகர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் சரிகர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன்.மற்ற நால்வரும் உ.பி. அல்லது பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
என்கவுண்ட்டர் நடந்த வீட்டிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு துப்பாக்கிகளும் கிடைத்தன. இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவன். படித்து முடித்து விட்டு ஊருக்குச் செல்லாமல் இங்கிருந்தபடி கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளான். (நன்றி பத்திரிக்கை செய்தி )
அப்பாடா...ஒருவழியாக தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என நிருபித்துள்ளது....!!(கொஞ்சம் ஓவர் புகழ்ச்சியோ!)
நேற்றுதான் காவல்துறையை பற்றி நானும்,சக பதிவர்களும் தாளித்து எடுத்தோம்....இன்று பாராட்டுகிறோம்....சபாஷ் போலீஸ்....
இது மாதிரி தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும்...இனி கொள்ளை அடிக்க கொஞ்சமாச்சும் யோசிப்பார்கள்....
இது மாதிரி என்கவுண்டர் மனித உரிமையை பாதிக்கும் செயல் என சிலர் சர்ச்சையை இனி கிளப்புவார்கள்.....ஆனால் இதுதான் சரி..அடுத்தவர்களின் பணத்தை மிரட்டி பிரித்த அவர்கள் மனிதர்கள் அல்ல...அப்புறம் எங்கே இருந்தது வரும் மனித உரிமை....பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவர்கள் கொல்லப்பட்டது சரியான முடிவே....
Tweet |
தமிழக காவல்துறைக்கு மனசாட்சியின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅது சரி!
பதிலளிநீக்குஇது முடிவு அல்லை தொடக்கம்....
பதிலளிநீக்குஅனைவரின் மனசாட்சியும் பாராட்டுகின்றது....நன்றி
பதிலளிநீக்குஇது மாதிரி என்கவுண்டர் மனித உரிமையை பாதிக்கும் செயல் என சிலர் சர்ச்சையை இனி கிளப்புவார்கள்.....ஆனால் இதுதான் சரி..அடுத்தவர்களின் பணத்தை மிரட்டி பிரித்த அவர்கள் மனிதர்கள் அல்ல...அப்புறம் எங்கே இருந்தது வரும் மனித உரிமை....பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவர்கள் கொல்லப்பட்டது சரியான முடிவே.... //
பதிலளிநீக்குஅடுத்தவன் பணத்தைத் திருடியவனுக்கு சட்டத்தில் மரணதண்டனை கிடையாது. இல்லை மரணதண்டனைதான் என்றால் பிக்பாக்கெட்டையெல்லாம் தூக்கில் போடலாமே?
வங்கிக்கொள்ளையர்கள் இரு வங்கிக்கொள்ளைகளின் போது எவரையும் சுட்டுத்தள்ளவில்லை; மிரட்டத்தான் செய்தார்கள். மேலும் எவரையும் அவர்கள் தாக்கவில்லை. ஆக அவர்கள் கொலைகாரகள் அல்ல.
அவர்கள் கொள்ளைக்காரர்கள் மட்டுமே.
எல்லாக்குற்றவாளிகளையும் சுட்டுத்தள்ளிவிட்டால் நமக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் என்ன வேறுபாடேது? மனித உரிமை பசங்களை விட்டுத்தள்ளுங்க. நீங்கள் என்ன சொல்றீங்க.
பெண்ணை மிரட்டி செய்யினை பறித்துக்கொண்டோடுகிறான்; வீட்டில் கன்னமிட்டுத் திருடிவிட்டு ஓடிவிடுகிறான்; கள்ள நோட்டைக் கொடுத்த் ஏமாற்றுகிறான்; செய்யினைப்பாலிசு போடுகிறேன் என்று வாங்கி தங்கச்செயினைபறித்த்துக்கொண்டோடுகிறான். இவர்கள் அனைவரையும் எவரையும் தாக்கவில்லை. மிரட்டல் மட்டுமே. அனைவரும் குற்றவாளிகள்.
இவர்களுக்குக் கொடுக்கவேண்டியது தூக்குத்தண்டனையா?
எல்லாக்குற்றங்களுக்கும் ஒரே தண்டனை; அது மரணதண்டனையென்றால், சட்டப்புத்தகத்தில் ஒரே ஒரு வரிதான் இருக்கும். நீதிமன்றங்கள் தேவையில்லை; வழக்குரைஞர்கள் தேவையில்லை; போலீசும் தேவையில்லை.
ஒரே ஒரு வரிதானே ! பின் என்ன வாழுகிறது ?
correcta sonninga...naan kashmiril operatoion attend panniyirukken..ivangalai cordon panninale pothum..thevai illamal 5 murder. appadithan seyyanumna karuna kudumbam..mannarkudi mafia..kd brothers..rasa..avvalavu peraiyum sudunga..appuram policeku sabash sollalam
நீக்குநான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளுங்கள்...சாதாரண செயின் திருடனும் இவர்களும் ஒன்றல்ல...குற்றத்தின் தன்மையை பொறுத்துதான் தண்டனை...இந்த கொள்ளையர்கள் தமிழ்நாட்டு மக்களை பீதியில் உறைய வைத்தார்களா இல்லையா?அந்த வங்கியில் போட்ட பணத்தை இழந்த ஒரு சாமானியனும் இதற்கு வருத்தப்பட மாட்டான்...இன்று துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்தவர்கள் நாளை அதே பாணியில் கொள்ளை அடிக்க முயலும்போது யாரையாவது சுட்டு கொள்ளவும் முயலுவார்கள்...அப்போது என்ன சொல்வீர்கள்?
பதிலளிநீக்கு//நான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளுங்கள்...சாதாரண செயின் திருடனும் இவர்களும் ஒன்றல்ல...குற்றத்தின் தன்மையை பொறுத்துதான் தண்டனை...இந்த கொள்ளையர்கள் தமிழ்நாட்டு மக்களை பீதியில் உறைய வைத்தார்களா இல்லையா?அந்த வங்கியில் போட்ட பணத்தை இழந்த ஒரு சாமானியனும் இதற்கு வருத்தப்பட மாட்டான்...இன்று துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்தவர்கள் நாளை அதே பாணியில் கொள்ளை அடிக்க முயலும்போது யாரையாவது சுட்டு கொள்ளவும் முயலுவார்கள்...அப்போது என்ன சொல்வீர்கள்?//
பதிலளிநீக்குகுற்றத்தின் தன்மையப்பொறுத்துத்தான் தண்டனை என்பதை நானும்தான் சொல்கிறேன். 15 லட்சமோ 20 லட்சமோ கொள்ளையடித்தால் மரணதண்டனையா ? என்பதே என் கேள்வி. அந்தக்குற்றத்தின் தன்மைக்கு மரணதண்டனையா என்றல்லவா கேட்கிறேன். ஆமாம் என்று பதில் சொல்வீர்களாயின் நீங்கள் அறிவார்ந்த சட்ட நிபுணர்கள், நீதிபதிகள் இவர்களையெல்லாம் முட்டாள்களாக்குகிறீர்கள். எவருமே 15 லட்சம் கொள்ளையடித்தவனை தூக்கில் போடு எனச்சொல்லவில்லை.
வங்கியில் பணத்தைப்போட்டு இழந்த சாமனியன் இதற்கு வருத்த்ப்படமாட்டானென்றால், செயினைப்பறிகொடுத்த பெண அவளின் குடும்பமும் வருத்தப்படாது செயின் திருடனைச் சுட்டுக்கொன்றால் ! இல்லையா?
நாளை இவன் கொல்வான் என்றால் ஏன் நாளை செயின் திருடனும் பிக்பாட்டும் கொல்வான் என்று சொல்லலாமே? நாளை இவர்கள் கொல்வார்கள் என்றால் எவரையும் சுட்டுத்தள்ளலாம் இப்போதே. என்ன சொல்கிறீர்கள்?
உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தீர்ப்பு வழங்குவது மக்கட்குணம். அறிவுப்பூர்வமாக சின்தித்து வழங்கப்படுவதே சமூகம் வகுத்த சட்ட நீதி.
நினைவிருக்கட்டும். 5 மாதங்களுக்கு முன் தில்லி உச்ச நீதிமன்றம் என்கவுண்டர் கொலைகளுக்காக அக்கொலைகளச் செய்த காவலருக்கு தூக்குத்தண்டனை கொடுக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பொய்யா இல்லையா என்று உங்களுக்குத் தெரின்த வக்கீலிடம் கேட்டுப்பார்க்கவும்.
ஏன் அன்த நீதிமன்றம் அன்த தீர்ப்பை வழங்கியது என்று யோசித்துப்பாருங்கள்.
இன்னொன்றை யோசித்துப்பாருங்கள்: வங்கிக்கொள்ளையர்களை சுட்டுக்கொன்றது சரியென்று நீங்கள் மட்டும்தான் சொல்கிறீர்கள்; நீதிமன்றம் சொல்லாது; அரசு சொல்லாது. போலீசும் சொல்லாது. ஏன், போலீசே அவர்களை நாங்கள் சுட்டது தற்காப்புக்குத்தான் என்று சொல்லியது. அதன்படி உங்கள் வாதம் தவிடுபொடியாகிறது.
தற்காப்புக்கு இல்லையென்றால், சுட்டுக்கொன்ற அனைத்துப்போலீசாரும் தூக்குக்கயிற்றைத்தான் எதிர்நோக்கவேண்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி.
pothunga..ivnga intha pathivu moolam puplicity thduranga.ethume yosithu eluthanum.police seitha mathiri ivarum udanadiya oru pathivu iduvatharku kaaranam enna?
நீக்குஅவர்கள் திருடர்கள்தான் என்பதை எதை வைத்து முடிவு எடுத்தார்கள் ? அப்படி திருடர்கலாவே இருந்தாலும் அதில் ஒருவனையாவது உயிரோடு பிடித்து இருந்தால் அவனிடமிருந்து பல தகவல்களை அறிந்து இருக்கலாம்.மேலும் பல திருட்டுகளை தடுக்க ஏதுவாக இருந்து இருக்கும்.அவர்களை உயிருடன் பிடித்து தான் கொன்று இருப்பார்கள் .மக்களுக்கு அரசு மேல் இருக்கும் கோபத்தை தனிக்கவும் அரசிடம் பரிசு பாராட்டு பெற நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்.
பதிலளிநீக்குநேற்றுதானே குற்றவாளி ஒருவனின் புகைப்படத்தை வெளியிட்டார்கள்....அதன் பிறகுதானே இச்சம்பவம் நடந்தது....நான் சொல்வது இந்த என்கவுண்டர் சரியே என்பது மட்டுமே..இதனால் ஒன்றும் ஆளும்கட்சியின் மேல் உள்ள அதிருப்தி குறையாது....கொள்ளையர்களை கண்டு பிடிக்காவிட்டாலும் திட்டுகிறோம்....சுட்டு பிடித்தாலும் திட்டுகிறோம்...அப்ப என்னதான் செய்ய சொல்றிங்க..?
பதிலளிநீக்குஎல்லாருடைய கருத்தும் ஒத்துபோகாது... என்பதை நானும் அறிவேன்....ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தணடனையை பார்த்து தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படவேண்டும்...அதான் தண்டனை...நீங்கள் சொல்வதுபோல எந்த செயின் திருடனும் துப்பாக்கி வைத்து மிரட்டி செயின் பறிப்பதில்லை...நான் மட்டும் இதை சரி என சொல்லவில்லை...நீங்கள் ஒரு நூறு பேரிடம் கேளுங்கள்...நிச்சயம் எழுபது பேர் சரிதான் என்று கூறுவார்கள்...உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது உங்கள் கருது..என்னை பொறுத்த வரை இது சரிதான்...மேட்டர் ஓவர்...
பதிலளிநீக்குpuringikkonga sir..ithu thevai illa murder.5 uyir sir.5 kudumbam..sir kongam manasatchiyodu eluthunga sir..pathivarhal endral nalla karuthu sinthanai udaiyavarhal endru ninaithen..aanal neenga odaichittinga. muttalthanamana pathivu.
நீக்குசார்..மக்கள் முதலில் நினைத்தது கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதுதான்....என்னைப்போலதான் நீங்களும் பிடிக்க வேண்டும் என எண்ணி இருப்பீர்கள்....ஆனால் நடந்தது வேறு....அதனால் அதையும் எனக்கு சரி என பட்டது...எழுதினேன்...அதை மறுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது...ஆனால் நான் எழுதுவதை குறை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை....போலீஸ் சொல்வதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாமா?அவர்கள் தற்காப்புக்கு சுட்டோம் என சொல்கிறார்கள்...ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம் அல்லவா?அப்புறம் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் இந்த விவாதத்துக்கு தேவை இல்லாத ஒன்று...
நீக்குஇது முட்டாள்தனமான பதிவாகவே இருந்துவிட்டு போகட்டும்...பார்பவர்களின் எண்ணங்களை பொருத்தது அது...நல்லவர்களுக்கு நல்லதாக தெரியும்....உங்களை போன்றவர்களுக்கு ?இப்படிதான் தெரியும் போல...
SORRY SIR.. NICE POST..SOODANA PATHIVU.KEEP IT UP. POLICE SEYTHATHU SARITHAN SIR.OK YA SIR.IPPO NAAMA ELLORUM NALLA ENNAM KONDAVARHAL APPADITHANE..!?!?.NAAN KETTA ENNAM PIDICHAVANAHAVE IRUNTHUKIREN SAAMI.NEENGA INNUM NALLA NALLA PATHIVUHAL EZUTHA VAAZTHUKKAL..!
நீக்குகாவல்துறைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎன்கவுன்டர்கள் மரணங்கள் சட்டப்படி சரியல்ல! இருந்தபோதிலும் பெரும்பாலான என்கவுன்டர்களுக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது! ஒருவேளை தர்மப்படி சரியென்று மக்கள் நினைக்கின்றனரோ!
பதிலளிநீக்குசட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றது!
அண்ணே.... நானும் வேளச்சேரி, நேரு நகர், A . L . முதலி 1 வது தெரு தான்....... நான் ஒரு பதிவு தயாரித்து கொண்டு இருக்கிறன்....... அதையும் பார்க்கவும்........ உண்மையுள் அங்கு ஒரு மணி நேர திருக்கு மேல் எல்லாம் துப்பாக்கி சண்டை நடகேவ இல்லை...... எங்களுக்கு ஒரு சட்டமும் கேட்கேவ இல்லை...... காலையுள் எழுந்த உடன், தொலைகாட்சி முலமகேவா இந்த செய்தி எங்களுக்கு தெரிய வந்தது....... www.wheretheworldisgoing.blogspot.in
பதிலளிநீக்குமச்சான்,
பதிலளிநீக்குஎந்த விசாரணையும் இல்லாமல் 5 உயிர்களை கொள்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் சம்பந்தப் படாதவர்கள் ஒருவர் இருவர் இருக்கலாம் அல்லவா???
இஸ்லாம் திருட்டிற்க்கு கையை வெட்டச் சொல்கிறது. அதை காட்டு மிராண்டிகளின் சட்டம் என்று சொல்கிறார்கள். இங்கு என்னடா என்றால் , திருட்டிற்க்கு 5 உயிர்களை எடுத்திருக்கிறார்கள்,
அதை அனைவரும் ஆதரிக்கிறார்கள். இப்ப எனக்கு ஒரு சந்தேகம், உண்மையிலே யாரு காட்டு மிராண்டிகள் என்று.
NALLA KETTINGA SIR
நீக்குபோலீஸ் சொல்வதுபோல சரணடைய வேண்டியதுதானே...?அவர்கள் ஏன் துப்பாகியால் சுட்டார்கள்...?அவர்கள் சுடவில்லை என யாராலும் உறுதியாக சொல்ல முடியாது...இஸ்லாம் சட்டத்தை விமர்சிப்பவர்கள் கண்டிப்பாக இதை ஆதரித்தால் அவர்கள் இஸ்லாமை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பேசுகிறார்கள் என்று அர்த்தம்...இஸ்லாம் கூறும் சட்டத்தை சரி என்பதுபோல இதுவும் சரிதான் என்கிறேன் நான்...
நீக்கு