22 ஜூன் 2012

பயோ டேட்டா : விஜய் (வருங்கால CM )


பெயர்: விஜய்

அடைமொழி: இளையதளபதி விஜய்..( எந்த போருக்கு தளபதியாக போனார்,இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு "இளைய " தளபதியாகவே இருப்பார் என்றெல்லாம் கேட்ககூடாது...)

டாக்டர் பட்டம்: பிளஸ் டூ பாஸ் பண்ணியதற்காக கிடைத்தது....

தொழில்: ரௌடிகளை கொத்துபரோட்டா போடுவது ....சினிமாவில்தான்....

மேனரிசம்: பொது நிகழ்சிகள்,கலைவிழாக்களில் பல கோடிகளை பறிகொடுத்ததுமாதிரி இருப்பது....

பொழுதுபோக்கு: ஆக்சிலேட்டரை வாயால் பிடித்துகொண்டு கார் ஓட்டுவது, ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவது....( சினிமாவில்தான்....)


சாதனை :: தொடர்ந்து எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களில் நம்பர் ஒன் காமெடியனாக இருப்பது....


உச்ச கட்ட சாதனை : டெல்லிக்கு போய் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பேசி காமெடி கில்லி ஆடியது



கருணாநிதி: முன்பு ஆகாதவர் ..கூடிய சீக்கிரம் ஆக கூடியவர்


ஜெயலலிதா: அணிலாக பயன்படுத்தியவர் !


ராகுல்காந்தி: இளைஞர் காங்கிரஸில் சேரும் வயதை தாண்டிவிட்டார் என்று சொல்லி உண்மையான வயதை வெளிகாட்டியவர் ...


அப்பா: கூட இருந்து குழி பறித்து கொண்டு இருப்பவர்..( அரசியல் குழி தாங்க)


ஆசை: கட்சி ஆரம்பிக்க நினைப்பது


பேராசை: அப்படியே முதல்வர் ஆக நினைப்பது....


ரசிகர்கள்: தன்னை நிஜ ஹீரோவாக நினைக்கும் அப்பாவிகள்....


ரசிகர்மன்றங்கள்: அரசியலில் நுழைவதற்கு நுழைவு சீட்டு ..


மக்கள் இயக்கம் : ரசிகர்களால் தனக்காக நடத்தப்படுவது


லட்சியம்: வேற என்ன ...??? ....நாட்டை ஆள்வதுதான்....


தமிழக மக்கள்: நடிகர்களை நாடாள வைக்கும் புண்ணியவான்கள்...!


(கொசுறு: CM என்றால் சிரிப்பு மனிதர் !, சிகப்பு மனிதர் !!,சிறந்த மனிதர் !!!என்று அவரவர் இஷ்டத்துக்கு நினைத்து கொள்ளலாமுங்கோ..!)

7 கருத்துகள்:

  1. CM கொடுத்தீங்க பாருங்க விளக்கம்

    பதிலளிநீக்கு
  2. சி.எம் விளக்கம் சூப்பருங்க்னா

    பதிலளிநீக்கு
  3. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Com

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....