10 அக்டோபர் 2012

எப்படி உருவானது அதிமுக......?!(2)


கணக்கு கேட்டால் தான் கருணாநிதிக்கு பிடிக்காதே.....MGR கணக்கு  கேட்டார் ..கருணாநிதி கணக்கு தீர்த்தார்..... உடனே அப்போதைய திமுக  பொது செயலாளர்  நாவலர் நெடுஞ்செழியனை விட்டு "எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டும், அதுவரை தி.மு.க. பொருளாளர் பொறுப்பிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாகத் தெரிவித்தும்," கடிதம்  எழுத வைத்தார்(அப்போதிலிருந்தே கருணாநிதிக்கு கடிதத்தின் மீது அப்படி ஒரு காதல்)........(இதன் முந்தய பதிவை படிக்க http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_5783.html)

எம்.ஜி.ஆர். மீது தி.மு.க. மேலிடம் நடவடிக்கை எடுத்தது, தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். தமிழ்நாடெங்கும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு 12.10.1972 அன்று கூடி, இந்தப் பிரச்சினை பற்றி ஆராய்ந்தது.

பொது கூட்டத்தில் சொத்து கணக்கு கேட்டதை  எம்.ஜி.ஆர். தவறு என்று உணர்ந்து வருத்தம் தெரிவித்தால் மேல் நடவடிக்கையை விட்டு விடலாம் என்றும், எம்.ஜி.ஆருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நலம் என்றும் செயற்குழு முடிவெடுத்தது ....

நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து, செயற்குழு தீர்மானத்தை தெரிவித்தனர். "நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது. நடந்தது நடந்ததுதான். மறுபரிசீலனைக்கு இடம் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி கண்டனர். 

"சொத்துக்கணக்கு பற்றி பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். தவறு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தவறை திருத்திக் கொள்ள வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.


இதனை தொடர்ந்து தி.மு.கழக பொதுக்குழு கூட்டம் 14-10-1972 அன்று சென்னையில் நடந்தது. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும், குற்றச்சாட்டுகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி அவருக்கு பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் நோட்டீசு அனுப்பியது பற்றியும் பொதுக்குழு பரிசீலனை செய்தது.(பொது குழு என்றாலே அது கருணாநிதியின் விருப்பப்படி  செயல்படுவதுதானே ).....

 இறுதியில் தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். அடியோடு நீக்கப்பட்டார். இனி சமரசத்துக்கு இடம் இல்லை என்று தி.மு.கழக பொதுக்குழு அறிவித்தது. (அதாகப்பட்டது கருணாநிதியின் ONE MAN  SHOW ஆசை நிறைவேற்றப்பட்டது...ஆனால் அன்று பிடித்த சனிதான் இன்று வரை அவரை பாடாக  படுத்துகிறது...நம்மையும் சேர்த்துதான்!)

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. 

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதய மாயிற்று. பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். (எஸ்.டி .சோமசுந்தரம்  பின்னாளில்  ஜெயலலிதாவின் வேனில் தொங்கியபடி போனதை எல்லாம் எந்த கொடுமையில் சேர்ப்பது?)

சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்தார். தி.மு.க. கொடி போலவே கறுப்பு, சிவப்பு நிறமுள்ள கொடியில், அண்ணாவின் படம் பொறிக்கப்படும் என்றார், எம்.ஜி.ஆர்.


இதாங்க  அதிமுக உருவான கதை....அந்த நேரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் "இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அ.தி.மு.க. கரைந்து போய்விடும். அதற்கு இப்போது இருக்கும் சக்தி, ஒரு மாயத்தோற்றம்தான். ஒரு தனி மனிதரின் கவர்ச்சியே, அ.தி.மு.க.வின் அரசியல் பலம்."என பொதுக்கூட்டம்  ஒன்றில் பேசி உள்ளார்....

ஆனால் அதிமுக தனது  ஆயுள் உள்ள வரைக்கும்  தனக்கு ஆப்பு வைக்கும் என நிச்சயம் இப்போது கருணாநிதி உணர்ந்து இருப்பார்....




4 கருத்துகள்:

  1. கணக்கு கேட்டவன் கதி என்ன ஆயிற்று பார்த்தீர்களா? என்பது அந்தக் காலத்தில் பிரபலமாக ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  2. //அ.தி.மு க. ஆயுள் உள்ளவரை தனக்கு ஆப்பு வைக்கும்.....//

    கருணாநிதி மட்டுமல்ல; இது அனைவரும் உணர்ந்த உண்மைதான்!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....