நம்முடைய வலைதளங்களுக்கு வரும் வாசகர்களில் பெரும்பான்மையான வாசகர்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்துதான் வருகிறார்கள்...
தமிழ்மணம் திரட்டியில் நுழைந்தவுடனே நாம் உடனே பார்ப்பது சூடான இடுகைகளையும்,வாசகர் பரிந்துரையில் இடம்பெறும் இடுகைகளையும்தான் .....இதில் உள்ள இடுகைகள்தான் முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன...
அதிகமான வாசகர்கள் படிக்கும் இடுகைகள் சூடான இடுகைகளில் இடம்பெறுகிறது என நினைக்கின்றேன்.... வாசகர் பரிந்துரையில் 7 ஓட்டுகளை பெரும் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன....
ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய ஒரு ஓட்டை தவிர மீதி ஆறு ஓட்டுகள் அதாவது 6 பேர் பரிந்துரைக்கும் பதிவு எப்படி வாசகர் பரிந்துரையில் இடம்பெறலாம் என்பது எனக்குள் எழுந்த கேள்வி....
உதாரணத்துக்கு இப்ப எனக்கு தெரிந்த 10 நண்பர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்...நான் எழுதும் அல்லது என் நண்பர்கள் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் கேரன்டியாக எங்களின் 10 ஓட்டுகள் விழுந்துவிடும்....அது எவ்வளவு பெரிய மொக்கையான பதிவுகளாக இருந்தாலும் கூட...
அதாவது என் நண்பர்கள் எனக்கு 6 ஒட்டு போடுவதாலேயே என்னுடைய மொக்கையான பதிவு (உதாரணத்துக்கு மட்டும்தான் ஹி ஹி....)ஒன்று வாசகர் பரிந்துரையில் இடம் பெற்று தமிழ்மணத்துக்கு வரும் வாசகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறது...
ஆனால் நண்பர்கள் இல்லாமல் பதிவு எழுதும்,அல்லது புதிதாக பதிவு எழுதும் பதிவர்கள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது என் கருத்து ...இதனால் பல நல்ல பதிவுகள் வாசகர் பரிந்துரைக்கு வராமலே போய்விடுகின்றன.......அதாவது தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் இடம்பெற ஒரு பதிவு நல்ல கருத்துக்களை கொண்டதாக இருக்கோ இல்லையோ வெறும் 7 ஓட்டுகளே போதும் என்ற சிஸ்டம் முரணாக இருப்பதாக நினைக்கின்றேன்....
பல நூறு பதிவர்கள் தங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும்போது வெறும் 6 நபர்கள் மட்டும் ஒட்டு போட்டு அதை வாசகர் பரிந்துரைக்கு கொண்டு வருவது சரியல்ல...வாய்ப்புகள் என்பது எல்லாருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்... 6 நபர்கள் ஒட்டு போட்டு ஒரு பதிவை வாசகர்களின் பார்வைக்கு கொண்டு வருவது நிச்சயம் பல நல்ல பதிவுகளை பாதிக்கும்....
எனக்கு தெரிந்து வாசகர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட வாசகர்கள் அந்த பதிவை (அதாவது ஒரு 100 அல்லது 150 நபர்கள்) படிக்கும் பட்சத்தில் அதை வாசகர் பரிந்துரைக்கு எடுத்து கொள்ளலாம்...வெறும் ஓட்டால் மட்டும் தீர்மானிக்க கூடாது என்பது என் எண்ணம்....
இதை தமிழ்மணம் பரிசீலிக்குமா?
இதை படிக்கும் நண்பர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்...
Tweet |
100% அனவரும் ஏற்கத்தக்க கருத்து இது.
பதிலளிநீக்குதமிழ்மணம் அவசியம் பரிசீலிக்க வேண்டும்.
நன்றி நண்பரே.
வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி நண்பரே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்கிற கருத்தும் கூட
பதிலளிநீக்குஒரு வகையில் எண்ணிக்கையின்
அடிப்படையிலேயே தானே இருக்கிறது
அதேபோல் தரம் என்பதை நிர்ணயிக்க
சரியான வரையறை இல்லாதபோது
இந்தமுறை சரியெனத்தான் படுகிறது
நான் சில குறிப்பிட்ட பதிவுகளை அவர்களது
பழைய பதிவுகளைப் படித்தபோது
பிடித்திருந்தால் தொடர்ந்து படிக்கிறேன்
படிக்கிற பதிவுக்கெல்லாம் தொட்ர்ந்து
வாக்களித்தும் விடுகிறேன்
(அவர்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் )
சைட் பாரில் வருகிற பதிவுகளை விடுபடாமல்
பதிவர்கள் பார்க்கவும் படிக்கவும்
வாய்ப்பிருப்பதால் இது சரியெனத்தான் படுகிறது
வேண்டுமானால் 7 என்பதை 10 மேல்
இருக்கும்படியாக மாற்றலாம் என்பது எனது அபிப்பிராயம்
நன்றி சார்....வெறும் 6 பேருக்கு 100 பேர் தேவலை அல்லவா.அதனால்தான் அப்படி சொன்னேன்...10 ஓட்டும் ஒரு வகையில் சரிதான்...ஆனால் 6 ஓட்டே வாங்க முடியாத,நண்பர்கள் இல்லாத புதிய பதிவர்கள் எப்படி 10 ஓட்டுகள் வாங்குவார்கள்?
நீக்கு200% அனவரும் ஏற்கத்தக்க கருத்து இது.
பதிலளிநீக்குதமிழ்மணம் அவசியம் பரிசீலிக்க வேண்டும்.
நன்றி ;haja......nallaatthaan sollierukkey
வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி நண்பரே
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குத.ம. 5.
பதிலளிநீக்குஉங்கள் கருத்து மிகவும் சரியானதே. தமிழ்மணம் வழி செய்யுமா?
நன்றி...வழி செய்தால் நல்லது....
நீக்குதமிழ்மணம் ஏழு! வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவு!
பதிலளிநீக்கு:) :) :)
ஹா ஹா ஹா...செம டைமிங்
நீக்குThalaivare...puratchi puyale.....adipaduravan naan solren...neenga sonnathu mikavum sari.intha pathivukku 10000000000000000000000000000000 vote.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி நண்பா...
நீக்குதீதும் நன்றும் பிறர் தர வாரா.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஉங்கள் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டியதே. அதே நேரம் தரம் குறித்து பேசும் போது அதனை வரையறை செய்வது கஷ்டமே. கவனத்தை ஈர்க்கும் தலைப்பை வைத்தால் நூறு ஹிட்ஸ் எளிமையாக வாங்கிவிடலாம். ஆனால் அவையும் தரத்தில் சேராது. சோ இதனை முடிவெடுக்க சற்று கஷ்டமான விஷயமாகவே கருதுகின்றேன்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வஸ்ஸலாம் சகோ...
நீக்குஆம் நீங்கள் சொல்வது மாதிரி தலைப்பை வைத்து ஹிட் அடிக்கலாம்....ஆனால் அது ,மாதிரி ஹிட் அடித்த பதிவுகளில் பெரும்பாலும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இருக்காது...
வாசகர் பரிந்துரை ,மகுடம் என இத்தனை நாளா இதனைப்பற்றி கவலைப்படாமல் இப்போ கவலைப்படுவது ஹா...ஹா...ஹி..ஹீ.. ஊ ஊ ஊவ் :-))
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குAashiq Ahamed @....//கவனத்தை ஈர்க்கும் தலைப்பை வைத்தால் நூறு ஹிட்ஸ் எளிமையாக வாங்கிவிடலாம். //
சகோ.ஆசிக் அஹ்மத் கூறியது மிகவும் சரி.... சுண்டி இழுக்க கூடிய தலைப்பு ,ஏமாற்றம் தராத நல்ல ஒரு பதிவு இருந்தால் நூறு ஹிட்ஸ் எளிமையாக வாங்கிவிடலாம்.நண்பர்கள் தேவை இல்லை.... ஆனால் பல பேரு தலைப்பை வித்தியாசமா யோசிக்கிறாங்க.. பதிவு சாதாரணமா இருக்கிறதால திரைப்படங்கள் மாதிரி புஸ்ஸுன்னு போயிருது...
வஸ்ஸலாம் சகோ...
நீக்குஆம் ,,நீங்கள் சொல்வதும் சரிதான்...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே... பதிவுலகில் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் எந்த பதிவு போட்டாலும் அடுத்த சில மணி நேரங்களில் ஏழு ஓட்டுகள் பெற்று தமிழ்மண முதல் பக்கத்தில் வந்துவிடுகின்றனர்.. என் பதிவுகளெல்லாம் மூன்று ஓட்டுகள் வாங்குவதே குதிரைக்கொம்பாக இருக்கிறது.தமிழ்மண முகப்பில் வரவேண்டுமானால் சூடான இடுகையில் இடம் பிடித்தால்தான் உண்டு.அதுவும் சூடான இடுகையில் இடம்பிடிக்க வேண்டுமானால் வித்தியாசமான தலைப்பு வைத்தால்தான் உண்டு.பதிவு எழுதுவதை விட தலைப்பு தேர்ந்தெடுக்கத்தான் அதிக நேரம் பிடிக்கிறது.(என் பதிவுலக வரலாற்றிலே இன்றுதான் என் பதிவு ஏழு ஓட்டுகள் வாங்கி இருக்கிறது...ஓட்டு போட்ட புண்ணியவான்களுக்கு நன்றி...)
பதிலளிநீக்குவெறும் ஏழு ஓட்டுகளில் ஒரு பதிவின் தரத்தை நிர்ணயிக்க முடியாதுதான்.அதற்காக அதன் எண்ணிக்கையை கூட்டவும் முடியாது.பிறகு என் போன்ற பதிவர்களெல்லாம் எங்கு போவது.. வாசகர் பரிந்துரையில் வருவதற்கு வேண்டுமானால் ஏழு ஓட்டு+ 100 ஹிட்ஸ்.. என்று நிர்ணயம் செய்யலாம்.
இதேபோல் மற்றொரு நெருடலும் உள்ளது..... ஒரே பதிவு வாசகர் பரிந்துரை,மகுடம் சூடிய பதிவு,சூடான இடுகை என மூன்றிலும் இடம்பெறுகிறது.ஏதாவது ஒன்றில் மட்டும் தெரியும்படிசெய்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமே...
ஒரே பதிவு மூன்று பிரிவுகளிலும் வருவதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றுதான்...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குநியாயமான கருத்துத் தான் சகோ. தமிழ்மண வாசகர் பரிந்துரையில் எனது பதிவுகள் பெரும்பாலும் வருவதே இல்லை ஏனெனில் எனக்கு ஆறு வோட்டுப் போடக் கூட ஆள் இல்லை என்பது தான் .. !!! :(
பதிலளிநீக்குபல சமயம் அதுக் குறித்து கவலைப்படுவதில்லை .. போய்'ட்டு போகுது !!!
படிக்க :
மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?
http://www.kodangi.com/2012/09/innocence-of-Muslims-documentary.html
ஆறு "ஓட்டு" போட கூட ஆள் இல்லாதவங்க கூட ஏன் நீங்க "கூட்டு"வைக்கிறீங்க... !!!(ஐ கவிதை )
நீக்குஅப்பறம் ஒரே ஒரு விளக்கம் மட்டும் சொல்லுங்க.
நீங்கள் முஸ்லிம் பெற்றோருக்கு பிறக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினீர்கள் ...மகிழ்ச்சி..உங்கள் பதிலுக்கு பின்பு தான் உங்கள் மேல் எனக்கு மதிப்பு வந்தது ,இஸ்லாத்தை நீங்கள் எதிர்த்த போதிலும் இது வேறு விதமான மதிப்பு..எனக்கு தெரிந்த வரை இஸ்லாத்தை பற்றி அறிவு இல்லாமல் சிலர் வசை பாடுவது போல் நீங்கள்(சார்வாகன் தருமி, கோவி கண்ணன்) வசை பாடாமல் புள்ளி விவரங்களையும், தகவல்களையும் கொண்டு எதிர்கிறீர்கள். பாராட்டுகள் ...அப்பறம் ஒரே ஒரு விளக்கம் மட்டும் சொல்லுங்க...பெயர் என்பது ஒரு அடையாளமாகவும் இருக்கும் போது நீங்கள் எதிர்கின்ற ஒரு சமயத்தின் பெயரை ஏன் புனை பெயராக வைக்க வேண்டும்.குழப்பம் ஏற்படுத்தவா ?... சேம் சைடு கோல் போடுறாங்க பாருங்கன்னு சொல்லவா...?
(ஏன்னா இக்பால்னு எனக்கு தெரிஞ்சி இஸ்லாம்ல தான் பேரு வைக்கிறாங்க ...)
விளக்கம் தாருங்கள்...சகோ.
உன் லாஜிக் எல்லாத்திற்கும் பொருந்தும். வழக்கமா ஓட்டுக்கள் எல்லாம் கோஷ்டி போட்டுக்கொண்டு போடப்படுபவையே..... நீ சொல்வதுபோல்...100 பேர் படித்தால்தான் பரிந்துறையில் வரும் என்றால் அப்போதும் புதியவர்களுக்கு பிரச்சினைதான். ஏனென்றால், புதுப்பதிவர்களின் அனைத்து பதிவுகளையுமே எல்லோரும் படிப்பதில்லை. சில அருமையான பதிவுகள் வெறும் 50 ஹிட்சில் முடங்கிபோவதும் உண்டு.
பதிலளிநீக்குஆமாம் அதுவும் சரிதான்....அப்படின்னா எல்லா பதிவுகளுமே வாசகர் பரிந்துரையில் சில மணி நேரங்கள் இருப்பதுபோல மாற்றம் செய்யலாம்...
நீக்குசரியா சொன்னிங்க அண்ணா.. பல நல்ல பதிவுகள் மிக குறுகிய (நிமிட) நேரத்துள்ளயே முடங்கி போவதும் நடந்து கொண்டு தான் வருகிறது (என்னோட பதிவுகள் ஒண்ணுமே முன்னனியில நின்றதே இல்லை.. ஆனால் அவை தரமான பதிவுகள் வரிசையிலும் இருபதில்லை.. அது வேற கதை ஹி ஹி)..
பதிலளிநீக்குஎலெக்சன் நடபதற்க்கு முன்னால் ஓட்டு போடுதல் பற்றி கூறபடுவது போல இங்கும் யாராவது கான்வாஸ் பண்ணினால் நலம்..
T.M
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ
நீக்குசரியாத்தான் இருக்கு
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குஇதைப்பற்றி ரமணி சார் சென்னையில் சந்தித்த போது சில விளக்கங்களை கூறினார்... அப்போது தான் சிலவற்றை அறிந்து கொண்டேன்... உங்கள் கருத்தும் சரியானதே... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குநாம் முதலில் பிறரது பதிவுகளை அதிகமாகப் படிக்கவேண்டும். பாராட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை. கருத்தை சொல்லலாம். ஆரம்பத்தில் கருத்துக்கள் இடும்போது இவர் பதிவு எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.உண்மையில் பிடித்திருந்தால் பாராட்டலாம். புதியவர்கள் ஆர்வக் கோளாறில் தினந்தோறும் ஒரு பதிவு தினந்தோறும் ஒரு பதிவு எழுதுதல் கூடாது.
பதிலளிநீக்குசில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் பதிவுக்கு பார்வையாளர் வருகை மிகவும் குறைவாக இருக்கும்.
மேலும் ஏழு ஒட்டு என்பதும் சரியானதுதான் என்று தோன்றுகிறது.அதற்கு மேல் இருந்தால் கஷ்டமே!
குறைந்த பட்சம் 6 மாதங்களாவது எழுதினால்தான் பிறர நம்மை கவனிக்க வைக்க முடியும் என்பது என் கருத்து.