ரஜினியின் புது பட அறிவிப்பு வந்தால் போதும் ..இந்த பத்திரிக்கைகள் பண்ணும் அலப்பறை இருக்கிறதே....அப்பப்பா....அதிலும் இந்த குமுதம் இருக்கிறதே .....மற்ற பத்திரிக்கைகளைவிட பத்து மடங்கு ஓவராக பண்ணும்....
கோச்சடயான் பட அறிவிப்பு வந்த சமயங்களில் கோச்சடயான் என்ற பெயரில் தொடர்கதை வெளியிட்டது....கோச்சடயான் பஞ்ச் வசனங்கள் என்று தலைப்பிட்டு வாசகர்களை வசனங்கள் எழுதி அனுப்ப சொன்னது என ரஜினியை வைத்து,அவர் படத்தை அட்டைபடத்தில் போட்டு கல்லா கட்டும் வேலையை மிக அற்புதமாகவே செய்தது.....
அதாவது பத்திரிக்கை விற்க வேண்டுமென்றால் ரஜினியை பற்றி ஏதாவது ஒரு செய்தியை போட்டு அட்டையில் அவரது படத்தையும் போட வேண்டும் என்பது குமுதத்தின் எழுதப்படாத விதி....
ரஜினி மட்டுமல்ல வாரம்தோறும் ஏதாவது ஒரு நடிகனின் பேட்டியும்,கவர்ச்சி படத்தோடு நடிகைகளின் பேட்டிகளும் இல்லாமல் குமுதம் மட்டுமல்ல வேற எந்த பத்திரிக்கைகளுமே வருவதில்லை...நடிகர்களின் பேட்டிகள்தான் வாசகர்களின் ரசனைக்கு தீனி என பத்திரிக்கைகள் நினைப்பதற்கு யார் காரணம்?வாசகர்களும் ஒரு வகையில் காரணம்தான்....சரி மேட்டருக்கு வருவோம்?
குமுதத்துக்கு என்னதான் ரஜினி வேண்டும் என்றாலும் முதல்வரை பகைத்து கொள்ள முடியுமா?சும்மாவே யார் ஆட்சியில் இருந்தாலும் ஜால்ரா அடிக்கும் குமுதம் ஜெயலலிதாவுக்கு பத்து படி மேலே போயி ஜால்ரா அடிக்கும்...அடித்து கொண்டு இருக்கிறது....
மற்ற பத்திரிக்கைகள் சுட்டி காட்டும் இந்த அரசின் தவறுகளில் சிறு தவறை கூட இதுவரை குமுதம் சுட்டி காட்ட வில்லை என்பதே இதற்கு உதாரணம்....
அந்த வகையில் சமிபத்தில் ஜெயலிதாவை மேடையில் வைத்து கருணாநிதியை ரெண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசிய ரஜினியை எந்த மேடையில் எதை பேச வேண்டும் என இங்கிதம் தெரியாதவர்,எப்போதும் எந்த விழாவிலும் தன்னை முன்னிலை படுத்தி கொள்பவர்,அன்றைய நிலையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்பவர் என கடுமையாக விமர்சனம் பண்ணி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது....
ரஜினியை பற்றி குமுதம் எழுதிய இந்த விமர்சனங்கள் அனைத்தும் ஏற்று கொள்ளகூடிய உண்மைதான்....ஆனால் இத்தனை வருடங்கள் ரஜினியின் இந்த செயல்பாடுகள் குமுதம் பார்வைக்கு தெரியவில்லையா?ஏன் இதை எல்லாம் ரஜினி முன்பே செய்த போது விமர்சிக்கவில்லை?ஜெயலலிதாவே இந்த விசயத்தை பெரிது படுத்தாமல் விட்ட நிலையில் குமுதத்துக்கு ஏன் இந்த சிண்டு முடிகிற வேலை?பத்திரிக்கை விற்க ரஜினி வேண்டும்..வருமானத்திற்கு அரசின் விளம்பரங்களும்,கருணை பார்வையும் வேண்டும் என்ற மொள்ளமாரித்தனமே இதற்கு காரணம்.....
தவிர இப்ப கருணாநிதியை திட்டுபவர்கள்தான் ஜெயலலிதாவுக்கு பிடித்தமானவர்கள்..முதல்வருக்கு பிடித்தால் குமுதத்துக்கு பிடிக்கும் ...ஆனால் ரஜினி கருணாநிதியை புகழ்ந்துவிட்டார் ....எனவே அந்த மேடையில் ரஜினியின் பேச்சு ஜெ க்கு பிடிக்காது..அப்ப குமுதத்துக்கும் கண்டிப்பா பிடிக்காது... ஆக பத்திரிக்கை விற்பனை சூடாக இருக்க ரஜினி பெயரை பயன்படுத்தி ஒரு செய்தியும் போட்டாச்சு,,ஜெயலலிதா மனசையும் குளிர வச்சாச்சு .....ஆனால் இதே போன்று ரஜினியை மற்ற விசயங்களிலும் தொடர்ந்து குமுதம் விமர்சிக்குமா என்றால் அதுதான் இல்லை...
நீங்க வேணும்னா பாருங்க...இன்னும் கொஞ்ச நாட்களில் கோச்சடயானை பற்றியும் ,ரஜினி அதிகாலையில் எழுவார்,வாக்கிங் போவார்,பல்லு விளக்குவார் பனியன் போடுவார் என அவரை பற்றியும் வாரம் தவறாமல் செய்தி வெளியிடுகிறதா இல்லையா என!தேவைக்கேற்ப ,சூழ்நிலைக்கு தக்க, பச்சோந்தி தனமாக எழுதுவது எப்படி பத்திரிக்கை தர்மமாகும்?
இப்ப வேண்டும் என்றால் தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழ் என குமுதம் போட்டு கொள்ளலாம்....ஆனால் சினிமா நடிகன்,நடிகைகளை நம்பித்தான் பொழப்பை ஓட்ட வேண்டும் என்ற தங்களின் பத்திரிக்கை விதிகளை மாற்றி கொள்ளாதவரை இந்த குமுதமும் மற்ற பத்திரிக்கைகளும் என்றுமே தரம் கெட்ட ஒன்றுதான்!
Tweet |
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா...?
பதிலளிநீக்கு(விற்பனை குறைந்து விட்டதோ...?)
விற்பனை குறைய கூடாது என்பதற்குத்தானே இதெல்லாம்....
நீக்குபத்திரிகை விற்பனையை அதிகரிப்பதற்கான சூட்சுமங்களை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது குமுதம்.
பதிலளிநீக்குஅதைப் பலரும் அறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
குமுதத்தின் வேலையே இதுதானே!
பதிலளிநீக்குஅதேதான்.........
நீக்குகாலம் மாறிவிட்டது ஆனால் குமுதம் மாறவில்லை.
பதிலளிநீக்குகுமுதத்தின் பச்சோந்திதனத்தை காட்டிகொடுத்தற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குகுமுதத்தை யாராவது காசு கொடுத்து வாங்கி படிக்கிறார்களா என்ன?
பதிலளிநீக்கு