12 ஜனவரி 2013

சாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் )



நம்ம விஜயகாந்தும்  வானிலை அறிக்கை புகழ் ரமணனும்  ஒன்றுதான்  என நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..காரணம் இவர்கள்  இருவரும் நடக்காததயே கூறுவார்கள்....அதற்கு எடுத்துகாட்டாக  வரும் நாடாளுமன்ற  தேர்தலில் வழக்கம்போல  தனித்து போட்டி என அறிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.....திமுக விஜயகாந்திற்கு  தூண்டில் போடுவதும் அதில் விஜயகாந்த் சிக்கபோவதும் உறுதி செய்யப்பட்ட  ஒன்றுதான்.....


விஜயகாந்தின் இந்த வாய்ஜாலம் எல்லாம் கருணாநிதி கொடுக்க போகும் சீட்டின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டும்தான்.....

.................................. ............................................. ........................................................................

எனக்கு தெரிந்து தமிழக  அரசியல் வரலாற்றிலே  ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து  அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே  சேரும்....

சாதி வெறியர்  ராமதாஸ் சாதி கலவரத்தை  தூண்டுவதுபோல  பேசி வருவதால் அவர் மதுரை மாவட்டத்துக்குள்ளே  நுழைய  தடை விதித்தார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ..அதை எதிர்த்து ராமதாஸ் சார்பில்  தாக்கல் செய்யப்பட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உடைந்து போன ராமதாசின் மூக்கில் மேலும் ஒரு குத்து விட்டு இருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்....சபாஷ்...இதைவிட ஒரு கேவலம் எனன் வேண்டும் ஒரு மனிதனுக்கு...!இப்ப பாருங்க நம்ம யாரு வேணும்னாலும் மதுரைக்குள்ள போகலாம்....ராமதாசுக்கு  பிடிக்காத தலித் மக்களும் போகலாம் ..ஆனால் ராமதாஸ் மதுரைக்கு போக முடியாது....!

ராமதாசை தூக்கி ஒரு ஆறு மாதம் உள்ளே வைத்தால் நிச்சயம் தமிழகத்தில் சாதி வெறியும்,கலவரமும் ,வட மாவட்டங்களில் பதட்ட நிலையும் நிச்சயம் குறையும் என்பது என் அபிப்ராயம்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே!
............................... ....................................... ..........................................................................


ரயில் கட்டண உயர்வு  மக்களை பாதிக்குமா இல்லையான்னு நம்ம கருணாநிதி தாத்தாகிட்ட கேட்டா தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவுதான்னு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு....

பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா ரயில் கட்டண உயர்வை பற்றி  பேசுவது சரியா என இவர்களுக்கு இடையே உள்ள மண்ணாங்கட்டி  அரசியல் பகையை பற்றி மட்டுமே பேசும் தாத்தாவுக்கும், மத்திய அரசின் மேல் உள்ள வெறுப்பால் தான் உயர்த்திய பேருந்து கட்டணம்,பால் விலை போன்றவற்றை மழுங்கடித்துவிட்டு ரயில் கட்டண உயர்வை  குறை கூரும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஓரே ஒற்றுமை "மக்கள் எப்படி கஷ்டப்பட்டால்  எங்களுக்கு என்ன"?என்பதே ஆகும்...வேற என்ன சொல்வது?..1

..................................... ..................................... ......................................................

ஆயிரம்  அவதூறு வழக்குகள் கண்ட  அற்புத தலைவர் என்ற பட்டத்தை விரைவில் விஜயகாந்த் எட்டிபிடிப்பார் என்ற தோன்றுகிறது அவர் மீது ஜெயலலிதா போடும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் !

நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு விஜயகாந்த் மீது வெற்றிகரமாக 5 வது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது....

பார்ப்போம் இன்னும்  எத்தனை வழக்குகள் தான் தன்னை விமர்சிப்பவர்கள் மீது ஜெயலலிதா போடுகிறார் என்று!

................................ ........................................ ..........................................................


                                                                   பொறியல்
                                                               ...............................

        தா. பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு!#



       அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என பேட்டி கொடுக்க ஒரு அடிமை ரெடி! 


     ...............................  ..................................................  ....................................................



ஆட்சி மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் : செயல்வீரர் கூட்டத்தில் கலங்கிய "நேரு' #


ஆட்சியில் இருக்கும்போது ஆட்டம் போட்டவர்கள்  ஆட்சி மாறும்போது  "ஆட்டம்" காண்பது இயல்புதானே!


............................... .................................. .........................................................................

.......................................... .................................................... ....................................................................................................................


காவிரி பிரச்சினை குறித்து பிரதமர்–சோனியா ஆலோசனை  # செய்தி


எதுவுமே பேசாத  தலையாட்டி பொம்மையுடன்  எப்படி ஆலோசனை செய்ய முடியும்?#டவுட்டு...


................................................ .................................................. ..................................................


என் மகன் துரைதயாநிதி அரசியலில் ஈடுபடுவார்:மு.க. அழகிரி அறிவிப்பு#



உங்கள் மகன் அரசியலில் ஈடுபடாவிட்டால்தான் அது ஆச்சர்யம்!
..................................  ................................. ......................................................................



கறுப்புப் பணத்தை ஒழிக்க இப்போதுள்ள வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி#



எப்படியானாலும் நீங்கள் கறுப்பு பணத்தை "ஒளித்துதான்"வைக்க போகீறீர்கள்!அப்புறம் ஏன் வீண் பேச்சு?


.....................  .................................... ................................. .....................................................


சேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, விஜய் உள்பட தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்#



நீங்கள்தானே மேடைக்கு மேடை கலைச்சேவை செய்கிறோம்ன்னு கூவுரிங்க....அப்புறம் ஏன் சேவை வரியை கட்டுவதில் மட்டும் எதிர்ப்பு..?!

......................................... ................................... .................................................................


கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை: காங்கிரஸ் கட்சி பரிந்துரை #



ஸ்பெஷல் தோசையை கேட்டால் இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் சாதா தோசையையே தருவார்கள்?!


...................................... .......................................... .........................................................


எங்கள் சவாலை ஏற்று அதிமுக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது#ராமதாஸ் 



பெரிய பசங்க கிரிக்கெட் விளையாடும்போது சின்ன பசங்களுக்கு பந்து எடுத்து போடுவதில் ஒரு ஆனந்தம் வருமே அது இதுதான்...!


.................................. .......................................... ...........................................................


அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். #ஜெயலலிதா 


ஆமாம்..உங்களை பார்த்தவுடன் விதவிதமா குனிந்து ,சாய்ந்து ,பயந்து வணக்கம் சொல்வதில்!

............................................. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் #ரஜினிகாந்த் 



இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது !(மைண்ட் வாய்சில் அதே ரஜினி!!)

............................. .................................... ...........................................................



ஒரு பஞ்ச்: மனிதர்களிடையே சில மிருகங்கள் இருக்கின்றார்கள் என சொல்வதை இனி மிருகங்களுக்கு இடையேதான் மனிதர்களே இருக்கின்றார்கள் என சொல்லலாம் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்களை பார்த்தால் !....



11 கருத்துகள்:

  1. அது ஏன்னா ராமாதாஸ் பந்து போட்டா எல்லாப் பயலும் சிக்ஸர் அடிக்கிறான்? நம்ம கலக்டருக்கும் தைரியம் வந்துடுச்சு...

    பதிலளிநீக்கு
  2. தெளிவான அரசியல் பார்வை,முடிவில் நறுக்கென்று ஒரு பஞ்ச் கூட்டி கழித்து பார்த்தால் அடுத்த முதல்வர் நீங்க தான் ஜி ........கட்சியின் பெயர் அல்லது தலைமை பொறுப்பை ஏற்க போகும் கட்சி எது என்பது எல்லாம் செயற்குழு முடிவு செய்யும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நமக்குள்ள என்ன பிரச்சினை?வர்ற தேர்தல்ல புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் நீங்கதான் போங்க!

      நீக்கு
  3. // //எனக்கு தெரிந்து தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே சேரும்....// //

    இரண்டுமாதத் தடையெல்லாம் ஒரு பிரச்சினையா...? அடிப்படை உரிமைகளை மிதிக்கும் மதுரை ஆட்சியரை போற்றும் உங்களைப் போன்றவர்களை நினைத்துதான் வெட்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக் கோவில்களிலும் கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு காலம்காலமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை வேடிக்கைப்பார்க்கும் கூட்டம் இதைப் பார்த்து சிரிப்பது வெட்கக்கேடு.

    பதிலளிநீக்கு
  4. என்னடா இன்னமும் ராமதாசின் தீவிர விசுவாசியை காணாமேன்னு பார்த்தேன் ...ராமதாசுக்குத்தான் வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லையேன்னு பார்த்தால் எனக்கும் அதெல்லாம் இல்லை என நீங்களே ஒப்புகொள்கிறீர்கள்...

    இரண்டுமாதத் தடையெல்லாம் ஒரு பிரச்சினையா...?#



    ஹி ஹி ஆமாம் .....ஒரு ஊருக்குள் நீ வந்தால் அந்த ஊருக்கே கெடுதல் என்று சொல்வது எவ்வளவு பெரிய பெருமை ராமதாசுக்கு...!இதெல்லாம் ஒரு பிரச்சினையா...ஹி ஹி....

    பதிலளிநீக்கு
  5. // //ராமதாசுக்குத்தான் வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லையே// //

    இனமானம் தான் பெரிதென்று பொதுவாழ்வுக்கு வந்த பின்பு தன்மானம் இருக்கக் கூடாது என்பது தந்தை பெரியார் சொல்லித்தந்த பாடம்.

    எங்களது மக்களின் "வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை" எல்லாம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காக எந்த அவமானத்தையும் எதிர்கொள்ள எப்போதும் அணியமாக இருக்கிறோம்.

    வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.

    இதெல்லாம் நடக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். வடக்கு – மேற்கு தமிழகத்தின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துப் பாருங்கள். பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை பயணியிடம் கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.

    பதிலளிநீக்கு
  6. பெரியார் செய்யாததா? பெரியாருக்கு ஆதரவு கொடுக்கவேண்டிய சூத்திரன்கள் ஆதரவு கொடுக்கவில்லை (பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூததிர்ணகள்; சொன்னது பெரியார்; நானில்லை!). எடுத்த இந்த வேலையே முடியவில்லை. நிற்க.

    அடுத்த சட்டம் என்ன? கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு தடை உள்ளா மாதிரி தாழ்த்தப்பட்டோர் மற்ற ஜாதி இந்துக்கள் வசிக்கும் காலனிகளுக்குள் செல்லக்கூடாது...இது தான் அடுத்து வரும்...இந்தியா விளங்கிடும். இந்தியா ஒளிர்கிறது!


    [[தமிழ்நாட்டின் பெரும்பாலான இந்துக் கோவில்களிலும் கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாதோர் நுழைவதற்கு காலம்காலமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை வேடிக்கைப்பார்க்கும் கூட்டம் இதைப் பார்த்து சிரிப்பது வெட்கக்கேடு.]]
    பதிலளி

    பதிலளிநீக்கு
  7. இவர்கள் குற்றாவளிகள்; தண்டிக்க வேண்டியது அரசு; கேளுங்கள் அரசை; அரசு நடவடிக்க எடுக்க வில்லையென்றால் கோர்ட்டுக்கு போங்கள்.

    இவர்கள் மாதிரியே எல்லா ஜாதியிலும் பொறுக்கிகள் இருக்கிறாகள்; இது பொய்யென்றால், அப்ப இந்தியாவில் ஜெயிலில் இருப்பவர்கள் தாள்த்தப்பட்ட்வர் மட்டும் தான் இருக்கணும். மற்ற ஜாதிக்காரன் இருக்கக் கூடாது.


    [[பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.]]

    பதிலளிநீக்கு
  8. REPLY TO அருள்
    அருள் சொன்னது “வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.”

    பதில்: வரதட்சணை கொடுமை எதிர்ப்பு சடடம் கூட தவறாகத்தான் பயன்படுத்தப் படுவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் தவறாகப் பயன்படுத்தப் படாத சட்டம் எது? தவறாக இருந்தால் பொய்வழக்கு போட்டதாக தண்டிக்க வேண்டியதுதானே?
    அருள் சொன்னது ”இதெல்லாம் நடக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். வடக்கு – மேற்கு தமிழகத்தின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துப் பாருங்கள். பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை பயணியிடம் கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.”
    பதில்: பேருந்தில் வீரம் செறிந்த உங்கள் ஆட்கள் ஒருவர் கூட பயணம் செய்யவே மாட்டார்களா? தட்டி கேட்க மாட்டார்களா? தர்மபுரி சம்பவம் ராமதாஸ் அரசியலில் ஒரு மாபெரும் சறுக்கு. சப்பை கட்டு கட்டாதீர்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமதாசுக்கே தான் சருக்கிவிட்டோம் என்பது தெரியும்....ஆனால் இன்னமும் அவரை நம்பும் ஆட்கள் இருக்கும்வரை அவர் திருந்தபோவதில்லை.

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....