05 ஜனவரி 2013

அழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா?!ஒரு பரபர அலசல் !.....


கருணாநிதி தேதி குறித்துவிட்டார்...விழா நாயகன் ஸ்டாலின் என்று ......

திமுகவினர்  எதிர்பார்த்து காத்திருந்த கேள்விக்கான  பதில்தான் இது....நீண்ட  நாட்களாக புகைந்துகொண்டு இருந்த நெருப்புக்கு நீர் ஊற்ற    விரும்பி இருக்கிறார் கருணாநிதி...

அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என அனைவரும் அறிந்ததே...

 எதிர்பார்த்ததுபோல   அழகிரியும்  " கட்சி ஒன்றும் சங்கர  மடமல்ல ,முடி சூட்டி கொள்வதற்கு " என கருணாநிதியே  சொல்லி இருக்கிறார் என  உள்குத்து குத்தி  இருக்கிறார்...அதேதான் என் கேள்வியும்  "கட்சி ஒன்றும் சங்கரமடமல்ல
என்று அழகிரி சொல்வது அவருக்கும்தானே பொருந்தும்?

அழகிரியின்  இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை நிச்சயம் கருணாநிதி உணர்ந்து இருப்பார்...ஆனால் அவருக்கு     வயதில் வேண்டுமானால் ஸ்டாலினை  விட அழகிரி மூத்தவராக இருக்கலாம் .....ஆனால் கட்சியில் சீனியர் ஸ்டாலின்தான்...

தனது 20 வது வயதில் திமுக பொதுகுழு உறுப்பினராக  சேர்க்கப்பட்டார் ஸ்டாலின்...பின் 1975 ல்  மிசா  சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ...தெரிந்தோ  தெரியாமலோ  நடந்த இந்த சம்பவம்தான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய  ,செல்வாக்கை  கட்சியினரிடம்  கொடுத்தது...

பின் 1980 ல் இளைஞர் அணியை உருவாக்கி அமைப்பாளர் ஆனார்...1984 ல் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு  தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதில் தோல்வி அடைந்தார்...

ஸ்டாலின் அரசியல் பாதையில் மிகப்பெரிய திருப்பம் 1996 ம் ஆண்டு நடந்தது...சென்னை மாநகரின் மேயராக  மக்களின்  நேரடி ஓட்டுகளை பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார்..அதற்கு முன்பு  வரை  மேயரை   கவுன்சிலர்கள்தான்  ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து வந்தனர் ....

பின் 2001 லும் இரண்டாவது தடவையாக  மேயர் ஆனார்...ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த  ஒருவருக்கு ஒரு அரசு பதவிதான்  என்ற சட்ட திருத்தத்தால் அந்த பதவியை துறந்தது தனி கதை ..

2003 ல் திமுகவின் துணை பொது செயலாளராக உயர்ந்த ஸ்டாலின் பின் 2008 ல் திமுகவின் பொருளாளர் ஆனார்...2009 ல் துணை முதல்வர் ஆகி  கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் என கட்சியினரை  பேசும்படி வைத்தார்...

இவ்வாறு சாதாரண  உறுப்பினராக சேர்ந்து வட்ட,மாவட்ட பிரதிநிதி ,பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக  வளர்ந்து  இப்போது கருணாநிதி வாயாலே தனக்கு பின் ஸ்டாலின் என பேசும்படி வைத்துள்ளார் ஸ்டாலின்...

ஆனால் அழகிரி நேரடியாக தேர்தல் அரசியலில் குதித்ததே 2009 ம் ஆண்டுதான்...இதிலயே அவர் ஸ்டாலினை விட 25 வருடம் பின் நோக்கி சென்று விடுகிறார்

இவரிடம் உள்ள கட்சி பதவி தென் மண்டல அமைப்பு செயலாளர் ....அதுவும் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது நடந்த இடைதேர்தல் வெற்றிக்காக  கிடைத்தது.....

அழகிரி  நேரடியாக அரசியலில் இறங்கி  பணியாற்றியதே 2003 க்கு பிறகுதான்....சொல்லப்போனால் திமுக ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரை நடந்த இடைதேர்தல்களில் தான் அழகிரி தீவிர அரசியலிலே  கவனம் செலுத்த ஆரம்பித்தார் என சொல்லலாம்.... 2009 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து இப்போது மத்திய  மந்திரியாக இருக்கிறார்....

ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சியில் இருந்து அடைந்த மந்திரி பதவியை அழகிரி குறுகிய காலத்திலயே அடைந்து விட்டார்...அந்த எண்ணம்தான் அவரை கட்சி தலைவர் வரைக்கும் யோசிக்க வைத்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

ஆனால் கட்சியில் சீனியாரிட்டி,கட்சி பணிகள்,கட்சிக்காக  சிறை சென்றது என  அனைத்திலும்  ஸ்டாலினின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்  அழகிரியை  விட  பல படிகள்  உயர்ந்தே இருக்கிறது...

இருப்பினும் ஸ்டாலினை விட  அழகிரிக்கு இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் தொண்டர்களை அரவணைப்பது....!ஸ்டாலின் பொதுவாக தொண்டர்களை நெருங்கவிடுவதில்லை என ஒரு குற்றச்சாட்டு  அவரது கட்சியினராலே சொல்லப்படுவது உண்டு...

இந்த ஒரு குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டால் எல்லா வகையிலும்  தலைவர் பதவிக்கு பொருத்தமானவரே .....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....