19 ஜனவரி 2013

மஞ்சள் பத்திரிக்கை குமுதமும்,உண்மையை சொன்ன தலைவர்களும்...(கூட்டுப்பொறியல் )


இறந்து போனவர்  எழுந்தா வந்து பேச போகிறார் என நினைத்துகொண்டு ஜெயலலிதாவும்,கருணாநிதியும் மாறி மாறி எம் ஜி ஆரை  வைத்து வார்த்தை விளையாட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்...

முதல்வர் பதவி  கருணாநிதிக்கு  எம் ஜி ஆர் போட்ட பிச்சை என்ற  ரீதியில் மலிவான ,மட்டமான பேச்சை ஜெயலலிதா பேசியதை தொடர்ந்து ,எம் ஜி ஆர் செயல்பட முடியாமல் இருக்கிறார்,எனவே என்னை முதல்வர்  ஆக்குங்கள்  என ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்று கருணாநிதியும்  போட்டு தாக்கி இருக்கிறார்...

இரண்டு பேரின் பேச்சிலும் உள்ள உண்மையை  நாடறியும்....எம் ஜி ஆர்  தயவில்லாமல்  கருணாநிதி முதல்வர்  ஆகி இருக்க முடியாது ..அதே எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை  பெற்றபோது என்னிடம் ஆட்சியை கொடுத்தால் எனது நண்பர் திரும்ப வந்தவுடன் ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பேன் என்று கருணாநிதி   கூறிய வரலாறையும் நாடறியும்....


எம் ஜி ஆர்  செயல்படாமல்  இருக்கிறார்  ,எனவே என்னைமுதல்வர் ஆக்குங்கள் என ஜெயலலிதா எழுதியதாக  கருணாநிதி கூறும் கடித விவகாரமும் நாடறிந்ததுதான்,...

தவளை தனது வாயால் கெடும் என்பதை போல  இருவரும் மாறி மாறி மக்கள் மறந்து போன உண்மைகளை நினைவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...

இன்னும் இதைவிடகேவலமான  உண்மைகளை  இவர்களிடமிருந்து  எதிர்பார்க்கலாம்...


.................................... .......................................... ................................... ......................................

பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க கூடாது என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது  ...

 நிச்சயம் வரவேற்கத்தக்க பாராட்டுக்குரிய விஷயம்.....

அந்த சிலை அவமதிப்பு,இந்த சிலைக்குசெருப்புமாலை போட்டதால் பிரச்சினை ,என சிலைகளை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் கலவரங்களுக்கும் இதனால் ஒரு முற்று புள்ளி கிடைக்கும்....

மாநில அரசுகள் அமுல்படுத்தினால்  மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லதே !

..................................... ........................................ .................................................................................

மணிரத்னம் என் தங்கையை கசக்கி பிழிந்து விட்டார் ...என்னடா வில்லங்கமான விசயமாக இருக்குமோ என நினைக்காதீர்கள்...இப்படி ஒரு தலைப்பை அட்டை படத்தில் போட்டு தனது அசிங்க முகத்தை மறுபடியும் வெளிக்காட்டியுள்ளது குமுதம் பத்திரிக்கை...

ஏன்யா வேற தலைப்பே உங்களுக்கு கிடைக்கலையா?பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் தலைப்பில் வைத்து விளம்பரம் செய்யலாமா?

முதலில் இந்த பத்திரிக்கைகளுக்கு  சென்சார் கொண்டு வர வேண்டும்...பக்கத்திற்கு பக்கம் கவர்ச்சி படங்கள்,மட்டமான தலைப்புகள் வைத்து சமூகத்தை சீரழிக்கும் பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வந்தால் பாதி குற்றங்கள் குறையும்!

இப்படி தலைப்பை வைத்து வியாபாரம் செய்வது குமுதத்திற்கு  ஒன்றும் புதிதல்ல...உள்ளே விசயமே இல்லாமல்  இப்படி தலைப்புகளை வைத்து 
அந்த பத்திரிக்கை  எவ்வளவு பாடாதியாக எழுதினாலும் விற்பனை சூடாகவே இருக்கும்...

நம் மக்களும்  இதைத்தானே  விரும்பி படிக்கிறார்கள்?அப்புறம் எதை குறை கூறுவது?

இப்படி தலைப்பு வைத்து  பிழைப்பு நடத்துவதும் 1000 ரூபாய் செருப்பை அணிந்து கொண்டு நிர்வாணமாய் தெருவில் நடந்து போவதும் ஒன்றுதான் என ஏற்கனவே நான் குமுதத்தை குட்டியதையே  மீண்டும் பதிவு செய்கிறேன்...

1 கருத்து:

  1. குமுதம் போன்ற பெயர்களை ஆதாரமாகக்கொண்டு இது போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் பல வீடுகளின் வரவேற்பறைகளை சுதந்திரமாக வந்தடைந்து விடுகின்றன!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....