20 ஜனவரி 2013

பதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா?!

பொதுவாக நம் பதிவர்களிடையே  ஒரு ஒற்றுமை இருக்கிறது.....ஒரு பிரபல பதிவர் ஒரு படத்தை நல்லவிதமாக எழுதிவிட்டால் அதை தொடர்ந்து அப்படத்தை பற்றி விமர்சனம் எழுதும் பதிவர்களில் முக்கால்வாசி  பேர்  அப்படத்தை நல்லவிதமாக எழுதுகிறார்கள்....

அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக  பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற  விதத்திலே எழுதி விடுகின்றனர்....சில பேரை தவிர்த்து....

சமிபத்திய உதாரணம்...நீதானே என் பொன்வசந்தம்  படம்... சுமாரான இந்த படத்தை பலரும் படு மோசம் என்ற விதத்திலே விமர்சனம் எழுதிவிட்டனர்...

இப்பொது சமர்....

பீட்சா படத்தை விட படு விறுவிறுப்பான ,த்ரில்லான இந்த படத்தை பற்றி இதுவரை வந்த விமர்சனங்கள் எதிர்மறையாகவே  உள்ளன...

 இந்த படத்தில் உள்ள...சில ஓட்டைகளை தவிர்த்து பார்த்தால்  படம் த்ரில் நிறைந்த விறுவிறுப்பான படமே....


விமர்சனத்தை படிக்காமல் ,கதை தெரியாமல்  இந்த படத்தை பார்த்தால் யாராலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிப்பது கஷ்டம்...அந்த அளவுக்கு திரைக்கதையில் அசத்தி  இருக்கிறார்கள்...

 தனது காதலியை தேடி பேங்காங் வரும் விஷால்  அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை....அடுத்தடுத்த காட்சிகளை யாரும் யூகிக்க முடியாமல் திரைக்கதை  அமைத்து படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்று இருகிறார்கள்...

படத்தில் விசாலுக்கு இரட்டை வேடமோ,பழசை எல்லாம் மறந்து இருப்பாரோ என படம் பார்க்கும்போது எழும் எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன உண்மை தெரியும்போது....

ஆனால் இந்த படத்தை பற்றி பதிவுலகில் வந்த விமர்சனங்கள்  படம் சரியில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி இருக்கின்றது...அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை..ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதையே விமர்சனம் எழுதும் சக பதிவர்களும் அதே எண்ணத்தை  பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது பதிவுலகின் சினிமா விமர்சனங்கள்...

அவரே நல்லா  இல்லைன்னு எழுதி விட்டார்..எனவே நாமும் நல்லா இல்லைன்னு எழுதினால்தான் சரி என்ற மனோபாவம் நம் தனித்தன்மையை கேள்வி குறி ஆக்குகின்றன என்பதே உண்மை...எனவே நம் மனதுக்கு பிடித்ததை நல்ல  படம் என்றும் ,பிடிக்காததை சரி இல்லை என்றும் எழுதும் விமர்சனம்தான் சரியாக இருக்கும்....

அந்த வகையில் மாறுபட்ட கதையமைப்பில் ,முந்தய எந்த படத்தின் சாயலும் இல்லாமல் வந்து இருக்கும் சமர் த்ரில் பிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் நல்ல படம் ...

சமர் =  ஜோர் 



11 கருத்துகள்:

  1. //இப்பொது சமர்/

    ஹி ஹி மீ டூ பாஸ், படம் நல்லா தான் இருந்திச்சு, ஆனால் படம் போன போக்கில் கட்டாயம் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாதுன்னும் தோனிச்சு

    //பதிவுலகில் வந்த விமர்சனங்கள்//

    பதிவுலகை பொறுத்த வரை விமர்சனம் என்பதை விட அவர்களின் விருப்பம், தனிப்பட்ட பார்வை என்றே சொல்ல முடியும் ஒட்டு மொத்தமா எல்லார் மன நிலையிலும் இருந்து வகையறுத்து விமர்சிப்பவர்கள் வெகு சிலரே..

    பாஸ் நம்மாளுங்க பாக்யராஜ் படம் போல இல்லைங்கிரதுக்காக ஜாலியா 3 மணி நேரம் சிரிக்கிறதையே லட்டுல மிஸ் பண்றவைங்க..

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. என்னோட ரிவியு (ஹி ஹி ஸ்மால் விளம்பரம்)

    http://ideas.harry2g.com/2013/01/samar-review.html

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது உண்மை தான்

    பதிலளிநீக்கு
  4. //பதிவுலகை பொறுத்த வரை விமர்சனம் என்பதை விட அவர்களின் விருப்பம், தனிப்பட்ட பார்வை என்றே சொல்ல முடியும் ஒட்டு மொத்தமா எல்லார் மன நிலையிலும் இருந்து வகையறுத்து விமர்சிப்பவர்கள் வெகு சிலரே.//

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறார் நண்பர் ஹாரி. என்னுடைய கருத்தும் அதே! சமர் படத்தின் விமர்சனத்தை எழுதாமல் அதன் முழுக்கதையையும் எழுதியிருந்தார் ஒரு டுபாக்கூர் பிரபல பதிவர்!

    பதிலளிநீக்கு
  5. மோகன் குமார் இப்படத்தை பாராட்டி எழுதியிருந்தார், ஏனோ மற்றவர்கள் சரியில்லை என எழுதி விட்டனர்.

    \\அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற விதத்திலே எழுதி விடுகின்றனர்.\\ இதனால் தான் எல்லா வாக்குப் பதிவும் முடியும் வரை ஒட்டு எண்ணிக்கையை ஆரம்பிப்பதில்லை!!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:04 PM, ஜனவரி 20, 2013

    இதில் இன்னொரு கோஷ்டியும் உண்டு. அவர்களை போதிமர பதிவர்கள் என்று சொல்லலாம். பலர் போற்றும் படத்தை தூற்றி, தூற்றுவதை போற்றி வீம்புக்கென்றே எழுதும் ஆட்கள் அவர்கள். அப்போதுதான் 'அட வித்யாசமான ஆங்கிளில் யோசிக்கிறாரே இவர். சினிமாவை கரைத்து குடித்து இருப்பாரோ?' என்று நாம் என்ன வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் அது.

    அதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே நீங்கள் சொல்வது போல படம் ஜோர்தான், வில்லன்கள் என்ட்ரி ஆகும் வரை. அதற்கப்புறம் செம கடுப்பாகி விட்டது. இந்த படம் GAME என்கிற ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று சொல்கிறார்களே உண்மையா?

    பதிலளிநீக்கு
  8. SALAM,

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....