"முஸ்லிம் சகோதரர்கள் நீக்க சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன் "என்று நேற்று அறிவித்த கமல் அதை பிரச்சினை எழுந்த அன்றே செய்து இருந்தால் இவ்வளவு பூதாகரமாக விஸ்வரூப பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருக்காது...
நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள் "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான் எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல....
இன்றே கமல் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு திரையிட சம்மதித்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது...
இவ்வளவு தூரம் போராடிய பிறகு,படத்துக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்த பிறகுதானே கமல் இறங்கி வந்து இருக்கிறார்...இதுவும் கமலின் நாடகமே என்று குற்றம் கண்டு பிடிப்பதைவிட "தப்பு செய்தவர் தவறை உணர்ந்து திருத்தி விட்டாரே "என்ற ரீதியில் அணுகுவதுதான் சரியானதாக இருக்கும்.....
அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்...
விஸ்வரூப பிரச்சினை இப்போது வேறு வகையில் விஸ்வரூபமெடுத்து சென்று கொண்டு இருக்கிறது...
இப்பது நடப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஈகோவினால் மட்டுமே இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் இழுத்து கொண்டு வரப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது எனது பார்வையில்...
ஒரு வேளை படத்திற்கு தடை விதித்தவுடன் கமல் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தால் அப்போதே இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கலாம்...அதை தவிர்த்து கமல் நீதி மன்றத்தை நாடியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ஏதாவது ஒரு விதத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு மாறாக மேலும் மேலும் இந்த படத்திற்காக கருத்து மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேறு மாதிரியான பிரசினைகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுகிறது....
எனவே கமல் சொன்ன மாதிரி அந்த காட்சிகளை நீக்கிவிட்டால் விஸ்வரூபம் வெளியாக எந்த தடையும் முஸ்லிம் அமைப்புகள் கேட்க வேண்டாம் என்பது என்னைபோன்ற மத நல்லிணக்கத்தை விரும்புவர்களின் எண்ணம்....
நல்லதே நடக்கட்டும்...நன்மையாக இருக்கட்டும்.....
நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள் "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான் எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல....
இன்றே கமல் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு திரையிட சம்மதித்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது...
இவ்வளவு தூரம் போராடிய பிறகு,படத்துக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்த பிறகுதானே கமல் இறங்கி வந்து இருக்கிறார்...இதுவும் கமலின் நாடகமே என்று குற்றம் கண்டு பிடிப்பதைவிட "தப்பு செய்தவர் தவறை உணர்ந்து திருத்தி விட்டாரே "என்ற ரீதியில் அணுகுவதுதான் சரியானதாக இருக்கும்.....
அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்...
விஸ்வரூப பிரச்சினை இப்போது வேறு வகையில் விஸ்வரூபமெடுத்து சென்று கொண்டு இருக்கிறது...
இப்பது நடப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஈகோவினால் மட்டுமே இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் இழுத்து கொண்டு வரப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது எனது பார்வையில்...
ஒரு வேளை படத்திற்கு தடை விதித்தவுடன் கமல் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தால் அப்போதே இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கலாம்...அதை தவிர்த்து கமல் நீதி மன்றத்தை நாடியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ஏதாவது ஒரு விதத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு மாறாக மேலும் மேலும் இந்த படத்திற்காக கருத்து மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேறு மாதிரியான பிரசினைகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுகிறது....
எனவே கமல் சொன்ன மாதிரி அந்த காட்சிகளை நீக்கிவிட்டால் விஸ்வரூபம் வெளியாக எந்த தடையும் முஸ்லிம் அமைப்புகள் கேட்க வேண்டாம் என்பது என்னைபோன்ற மத நல்லிணக்கத்தை விரும்புவர்களின் எண்ணம்....
நல்லதே நடக்கட்டும்...நன்மையாக இருக்கட்டும்.....
Tweet |
நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஆம்....நன்றி
நீக்கும்ம் உண்மைதான் அண்ணா ..ஆனால் இந்த பிரச்சனை நீங்கள் சொல்வது வேற மாதிரிதான் போய் கொண்டு இருக்கிறது..இதோ அதை பற்றி நான் விரிவாக என்னுடைய ப்ளோகில் எழுதி இருக்கிறேன் ...
பதிலளிநீக்குபடம் பார்த்து கதை சொல் >>>>>
http://rinakhan1990.blogspot.com/2013/01/blog-post_30.html
சலாம் சகோ.ஹாஜா மைதீன்
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள பதிவு..! இங்கு கமலுக்கு நடந்து வரும் பிரச்சனைகளுக்கு திமுக தலைவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்..அதில் தமிழக அரசுதான் காரணம் என்று ..நடந்ததை கொஞ்சம் என்ன என்று பார்ப்போம்...!!!யார் காரணம் என்றும் பார்ப்போம்..!!!
ப.சி புத்தக வெளியீட்டு விழாவில் கமல் பேசியது :
உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.
அடுத்து திமுக தலைவர் பேசுவதை கவனியுங்கள் :
'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வரவேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்ளீர்கள்! என்றார்.
நீதி :
இங்கு ஒரு விசயத்தை கமல் இலைமறைவு காய்மறைவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்..ஆனால் அதை வேட்டி கட்டிய தமிழன்தான் வரவேண்டும் சேலை வரக்கூடாது என்று கூறியதாக இழுத்துவிட்டு கூத்து பார்த்துள்ளார் நமது தாத்தா !!! இப்போது அதற்க்கு காரணம் வேறு கூறுகிறார்.
இவர் மட்டும் அன்று திருவாய் மலரவில்லை என்றால் பிரச்சனையை அரசு இந்த தடை அளவுக்கு கொண்டு வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்..இங்கு கமலுக்கு வினை நிச்சயம் தாத்தாதான்..!!!
யாருமே அரசியல் வாதிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது...!!!
"இங்கு ஒரு விசயத்தை கமல் இலைமறைவு காய்மறைவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்..ஆனால் அதை வேட்டி கட்டிய தமிழன்தான் வரவேண்டும் சேலை வரக்கூடாது என்று கூறியதாக இழுத்துவிட்டு கூத்து பார்த்துள்ளார் நமது தாத்தா !!! இப்போது அதற்க்கு காரணம் வேறு கூறுகிறார்.
நீக்குஇவர் மட்டும் அன்று திருவாய் மலரவில்லை என்றால் பிரச்சனையை அரசு இந்த தடை அளவுக்கு கொண்டு வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்..இங்கு கமலுக்கு வினை நிச்சயம் தாத்தாதான்..!!!"
தாத்தா ஒரு நரி. வயதான காலத்திலும் அது போட்ட திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
"நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள் "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான் எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல...."
பதிலளிநீக்குநீங்கள் அப்படி சொல்கிறீர்கள் ஆனால் PJ பேச்சு அப்படி இருக்கவில்லை.
"கமலஹாசன் -சுருதி பற்றிய அவரது பேச்சு தமிழ்ச்சமூகத்திற்கே அவமதிப்பு. இந்த மனிதனை இஸ்லாமின் பிரதிநிதியாக எண்ணுபவர்கள் இஸ்லாமை அவமதிக்கிறார்கள்"
நிச்சயமாக அவர் அப்படி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது....அதை ஏற்கனவே நானும்,மற்ற இஸ்லாமிய பதிவர்களும் கண்டித்து இருக்கிறார்கள்...
நீக்கு""முஸ்லிம் சகோதரர்கள் நீக்க சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன் "என்று நேற்று அறிவித்த கமல் அதை பிரச்சினை எழுந்த அன்றே செய்து இருந்தால் இவ்வளவு பூதாகரமாக விஸ்வரூப பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருக்காது..."
பதிலளிநீக்குஆரம்பத்தில் யாரும் அப்படி சொல்லவில்லை. படத்தை முற்றாக தடை செய்ய சொன்னார்கள்.
ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் தமிழ் தரப்பில் இருந்து எடுக்கவே முஸ்லிம் தரப்பும் சில காட்சிகள் நீக்கினால் போதுமானது என்று கூறியது. (இனிமேல் தமிழ் தரப்பு முஸ்லிம் தரப்பு என்று பேசுவதே சரி என்று தோன்றுகிறது)
இன்றும் மத வெறியர் வாஞ்சூர் படத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றே பதிவு போடுகிறார். அதற்க்கு நாகூர் பக்க பாட்டு வேறு.
இதற்க்கு உங்கள் பதில் என்ன ஹாஜா??
படத்தை முற்றிலுமாக தடை செய்ய தேவை இல்லை....அய்யா வாஞ்சூர் அப்படி சொன்னால் அது அவரின் எண்ணம்...அது தவறு என்பது என் கருத்து அதற்கு என் ஆதரவு இல்லை...
நீக்கு"அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்..."
பதிலளிநீக்குநீங்கள் மட்டும் தான் அப்படி சொல்கின்றீர்கள். முகநூளிலும் இணையத்திலும் முஸ்லிம் தரப்பினர் படத்தை முற்றாக தடை செய்ய வலியுறுத்துகின்றனர்.
வாஞ்சூர், நாகூர் மீரான் பதிவை பார்த்தால் தெரியும்.
(நீங்கள், சிராஜ், அரச குளத்தான் ஆகியோர் மட்டுமே இந்த மாதிரியான கருத்தை தெரிவிக்கின்றீர்கள்)
ஸலாம் சகோ.ஹாஜா,
பதிலளிநீக்குநல்ல இடுகை. தெளிவான கருத்துக்கள்.
ஆக, இந்த பிரச்சினைக்கு மூல காரணமே கமல்தான். இன்று அவர் இதை முடித்து வைக்க அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்..!
பைசா செலவு இல்லாமல்... அவரே எப்போதோ இதை சுமுகமாக தீர்த்து இருந்திருக்கலாம், நல்லெண்ணம் மட்டும் இருந்திருந்தால்..!
இப்போது வந்த கருத்து சுதந்திரம், கலை ஆர்வம், சமய நல்லிணக்கம், இஸ்லாமிய சகோதர பாசம் மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் மறந்து போய் ஈகோ தொலைந்து போய், இன்று வந்த இந்த சரியான எடிட்டிங் ஞானோதயம் அப்போதே கமலுக்கு வந்திருந்தால், எப்போதோ படம் ரிலீஸ் ஆகி இருந்திருக்கும்.
நல்ல மரம் இல்லை என்றாலும்... ஒருவகையில் கமலுக்கு போதிமரம் ஜெ. எனவே, கமலின் மனமாற்றத்தை வரவேற்கும் நாம், அதற்கு காரணமான முதல்வர் ஜெ வுக்கும் நன்றி சொல்வோம்..! சிலர் சிலரின் குட்டு பட்டால்தான் திருந்துவார்கள். அன்பாக சொன்னால் புரியாது. மண்டையில் ஏறாது.
அப்புறம், இனி ஒருமுறை ச்சீப் பப்ளிசிட்டி எதிர்பார்த்து எதிர்பார்த்து அதற்காகவே ஏதாவது ஒரு குழப்பத்தை ரிலீசுக்கு முன்னர் பரப்பி விட்டு தனது கடைச்சரக்கை விற்கும் நாலாந்தர வியாபாரியாக இல்லாமல், இனியாவது ஒரு பொறுப்புள்ள திரைப்பட கலைஞனாக ஆக முயற்சியாவது செய்யட்டும் கமல்.
#பைசா செலவு இல்லாமல்... அவரே எப்போதோ இதை சுமுகமாக தீர்த்து இருந்திருக்கலாம், நல்லெண்ணம் மட்டும் இருந்திருந்தால்..!#
நீக்குஆம்.சரியாக சொன்னீர்கள் சகோ..நன்றி
நண்பா...
நீக்குமுதலிலேயே எதற்கு எடிட் செய்ய வேண்டும்..இப்போதும் கமல் ஒத்துக்கொண்டிருப்பது, சமாதானத்திற்காக..படம் வெளிவர வேண்டும் என்பதற்காக..
என்ன என்ன காட்சிகள் நீக்கப் பட வேண்டும் என்பதனை, முதலில் பார்த்த முஸ்லீம் சகோதரர்கள், காட்சியினை கமல் போட்டுக் காட்டிய அன்றே, அப்போதே சொல்லியிருந்தால், தன்னிச்சையாய் செய்தார்கள் எனலாம். மரியாதை நிமித்தமாய் நின்று கூட பேசாமல், முகத்தைக் தூக்கிக் கொண்டு சென்று, பின்னர் யாருடனோ? ஆலோசித்து, 1 மணிநேர காட்சிகளைக் 'கட்' செய்யக் கேட்டால், எப்படிங்க நியாயம்?
ஊரறிந்த விசயமாய்ப் போனபோது, கெளரவம்/ஈகோ எல்லாம் பார்க்காமல், சுமுகமாய் முடிய வழிவிடுவோம்...
பதிலளிநீக்கு===============================
சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம்.
அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’.
இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள்.
நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள்.
அசல் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி 150 சதவிகிதமாக இருக்கும்.
ஞானி. http://www.gnani.net
====================================
வே. மதிமாறன்: விஸ்வரூபத்தை அரசு தடை செய்யாமல் இருந்து,
இஸ்லாமியர்களின் எதிர்ப்பு மட்டும் தீவிரமாக இருந்திருந்தால், பிரச்சினை இந்நேரம் மதக் கலவரமாக வடிவம் பெற்றிருக்கும்.
விஸ்வரூபம் தடை விவகாரத்தில் அரசின் பங்களிப்பு முக்கியமாக இருந்த போதும் ஊடகங்கள் இஸ்லாமியர்களையே குறிவைத்து தாக்கின என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஊடகங்களின் ஆதரவு தனக்கு நெகிழ்ச்சியளிப்பதாகவும் அவைகளுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் கமல்.
‘விஸ்வரூபத்திற்கு பாதுகாப்பு’ என, இந்து சார்பு கொண்ட அரசும், காவல் துறையும் இறங்கி இருந்தால், இந்நேரம் துப்பாக்கிச்சூடு.. என்று கோதாவில் இறங்கி.. விளையாடியிருக்கும்.
மாறாக, அரசின் தற்காலிக தடையே அதை தடுத்தது.
பல பார்ப்பன அறிவாளிகளும், இந்து அமைப்புகளும் ஜெயலிலிதா அரசின் நடவடிக்கை என்பதினாலேயே அமைதிக்காக்கிறா்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
வே. மதிமாறன் ஜனவரி 31ஆம் தேதி எழுதியது
http://mathimaran.wordpress.com/2013/01/31/611/
***************************
படத்தின் தடை நீங்குவது இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவில் தான். - ஜெ. இஸ்லாமிய கூட்டமைப்புகள் எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும்? அவர்கள் சிறிய குழுவா?
கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை
இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை
விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது.
ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
CLICK >>>>>>> அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல் தான் காரணம் - முதல்வர் ஜெயலலிதா புகார். .
.