15 நவம்பர் 2010

அவமானப்பட்ட ராஜாவும், திமுகவும்


கடைசியாக ராஜா ராஜினாமா செய்தார்.......இல்லை செய்ய வைக்க பட்டார்......இத முன்னாடியே செஞ்சு தொலைச்சு இருக்கலாமே? ராஜினாமா பண்ணிவிட்டு நாடாளுமன்றம் சுமுகமாக நடக்கவே ராஜினாமா செய்தோம் என கூறுவது கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லுவதைப்போல இருக்கிறது......


இவ்ளோ காயங்கள் தேவையா? இரண்டு நாளுக்கு முன்பு கூட ராஜா ராஜினாமா பண்ண தேவை இல்லை என கருணாநிதி அறிக்கை விட்டார்......இப்போது என்ன ஆச்சு? ராஜாவுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும், திமுகவுக்கும் சேர்ந்தே மூக்கு உடைந்து போனது.......


இந்த விசயத்தில் திமுக காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கோ இல்லை கட்டாயத்துக்கோ அடிபணிந்து போனது என்பதுதான் உண்மை......இது ஜெயலலிதாவுக்கு ஒரு வகையில் வெற்றியும் கூட.....மூன்று நாட்களுக்கு முன்பு ராஜாவை பதவியை விட்டு தூக்கினால் அதிமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

அளிக்க தயார் என பேட்டி குடுத்தார்.....இப்போது அவர் நான் சொல்லியதால்தான் ராஜா கட்டாயப்படுத்தி ராஜினமா செய்ய வைக்க பட்டார் என அடுத்த அறிக்கை விட்டாலும் விடுவார்........


இதெல்லாம் தேவையா? அடித்த காசு வரை லாபம் என ராஜினாமா பண்ணி தொலைச்சு இருக்கலாமோ என இப்பொது ராஜா எண்ணுவார்....பாவம் உடைந்த மூக்கு இனி என்ன ஒட்டவா போகிறது......


இது திமுக ,காங்கிரஸ் கட்சி கூட்டணியின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்கும் சம்பவம் என்பது மட்டும் உண்மை.....

6 கருத்துகள்:

  1. என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. எங்கள யார் செருப்பால அடிச்சாலும் தாங்கிக்குவோம். எங்களுக்கு பதவிகள் எல்லாம் துண்டு மாதிரி. நாளைக்கே இத வச்சி எம் பொண்ண உக்கார வைக்க மாட்டேனா

    பதிலளிநீக்கு
  2. இது தற்க்காளிகம்மானது தான் நண்பரே. காங்கிரஸ் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்ச்சியில் இருக்கும் அதுவரை தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க வை நம்பிதான் காங்கிரஸ். அ.தி.மு.க வை நம்பி தி.மு.க வை கழட்டிவிட்டால் எப்ப வேணும்னாலும் ஆட்சி கவிழும். ஜெயலலிதாவை பற்றி வாஜ்பாய்க்கு தெரியும் மனுஷன் பல இடங்களில் இதை நினைத்து அழுததுண்டு.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:23 PM, நவம்பர் 15, 2010

    எச்சயளுக்க இது ஒன்றும் புதிதல்ல. மீண்டும் நாங்கள் நகமமமம் சதையும் என்று அறிக்்கை வவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு
  5. அனு, சென்னை3:14 PM, நவம்பர் 23, 2010

    ராஜா பலியாடா அல்லது தியாகியா?

    பதிலளிநீக்கு
  6. ராஜா பலியாக்கப்பட்டார் பணம் ஒருபக்கம் சேர்ந்து விட்டது

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....