குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அதன் தலைவராகவும், மேம்பாட்டு இயக்குனராகவும் ஆகியுள்ளார்.
இதுவரை நேரடியாக தன்னை இந்நிறுவனத்தில் முன்னிறுத்தாத கலாநிதி தற்போது இதன் தலைவர் ஆகி இந்நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளார்......
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்புள்ள அறிக்கையில் இந்த விவரத்தை தெரியப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி மாறன், உடனடியாக அதன் நிர்வாக அமைப்பிற்கு புதிதாக ஐந்து இயக்குனர்களை நியமித்துள்ளார்.
எஸ. ஸ்ரீதரன், ஜே.இரவீந்திரன், நிக்கலாஸ் மார்ட்டின் பால், எம்.கே.ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குனர்களாகவும், தனது மனைவி காவேரியை முடிவெடுக்கும் அதிகாரமற்ற இயக்குனராகவும் நியமித்துள்ளார்.
பணம் உள்ள இடத்தில்தான் பணம் சேரும்......இனி இந்த ஜெட்டின் வியாபார சேவை ஜெட்டின் வேகத்தை காட்டிலும் வேகமாக செல்லும் ......
Tweet |
நீங்கள் சொல்வது சரிதான்...பணம் உள்ள இடத்தில்தான் பணம் சேரும்....
பதிலளிநீக்குகைப்பற்றியுள்ளார் என்பது சரிதானா நண்பரே? வாங்கியுள்ளார் என்று தானே வரவேண்டும்.
பதிலளிநீக்குyes ur correct bro....
பதிலளிநீக்குபோகிற போக்க பார்த்தால், சன் குழுமம் இல்லாமல் மூச்சு கூட விட முடியாது போல இருக்கே?
பதிலளிநீக்குநன்றி நண்பரே...