02 மார்ச் 2012

ஆண்களுக்கும் வரும் மார்பகபுற்றுநோய்.....அதிர்ச்சி தகவல்


மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக காணப்படும் ஒன்றாகும்.மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் எ‌ன்றாலே அது பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் வரு‌ம் எ‌ன்று ஆ‌ண்க‌ள் ‌நினை‌க்க வே‌ண்டா‌ம். அவ‌ர்க‌ளிடமு‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோயை உருவா‌க்குவத‌ற்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.


மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோயை உருவா‌க்கு‌ம் ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் இரு‌ந்துதா‌ன், அவ‌ர்க‌ளி‌ன் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ப் பரவு‌கிறது


ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள BRCA-1 அ‌ல்லது BRCA-2 ஆ‌கிய ஜ‌ீ‌ன்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோ‌ய்‌க்கு‌க் காரணமாக உ‌ள்ளன. இ‌ந்த ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் த‌ந்தை‌யிட‌மிரு‌ந்து கட‌த்த‌ப்படு‌கிறது.


இதன் அறிகுறிகள்

மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.

மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல், மார்பகத் தோலில் ஏற்படும் மாதரம் என பெண்களுக்கு தென்படும் அறிகுறிகளே ஆண்களின் மார்பக புற்று நோய்க்கும் தென்படும்

தோ‌ல், சுர‌ப்‌பிக‌ள், எழு‌ம்புக‌ள் ஆ‌‌கிவ‌ற்‌றி‌ல் உருவாகு‌ம் பு‌ற்றுநோ‌ய்க‌ள் ம‌ட்டுமே ஆ‌ண்களை அ‌திக‌ம் தா‌க்குவதா‌ல், அவ‌ர்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் ப‌ற்‌றி‌க் கவலை‌‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

மேலும் பெரு‌ம்பாலான ஆ‌ண்க‌ள் த‌ங்க‌ளிட‌‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்று‌க்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளனவா எ‌ன்பதை சோதனை மூல‌ம் தெ‌ரி‌‌ந்துகொ‌ள்ள மு‌ன்வருவ‌தி‌ல்லை எ‌ன்று கூறு‌ம் மருத்துவர்கள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பெ‌ண்க‌ளி‌ன் சகோதர‌ர்க‌ள், கணவ‌ர், த‌ந்தை ஆ‌கியோரை சோதனை செ‌ய்து கொள்ளவேண்டும் எனவும் கூறுகின்றனர்....

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வருடத்துக்கு 2,030 ஆ‌ண்களு‌க்கு‌ மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் கண்டறியபற்றுள்ளதுஆனா‌ல் இது ஒ‌ட்டுமொ‌த்த பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் 1 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் குறைவு எ‌ன்பதா‌ல் யாரு‌ம் கவலை‌ப்படுவது இ‌ல்லை. ........ஐரோப்பிய நாடுகளிலும் ஆண்டுதோறும் இந்நோயினால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.....

நன்றி:பத்திரிக்கை செய்தி


ஆகவே முடிந்தவரை விழிப்புடன் இருப்போம்....

3 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....