31 மார்ச் 2012

மக்களுக்கே தெரியாமல் மக்களுக்கு நன்மை செய்யும் தமிழக அரசின் பொன்னான திட்டங்கள்..!


மக்களுக்கு மறைமுகமாக பயன்தரும் தமிழக அரசின் திட்டங்கள்....அதாவது நேரடியாக மக்களுக்கு நன்மை செய்தது போரடித்து போய் இப்போது மறைமுகமாக மக்களுக்கு நன்மை செய்வதை பாலிசியாக வைத்துள்ளார் ஜெ..அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வமா?

மின்கட்டணத்தை உயர்த்தினாலும் கரண்டே கொடுக்காமல் மக்களை மின்கட்டணம் கட்டுவதில் இருந்தது அரசு காப்பாற்றி வருகிறது....மக்களுக்கு பணத்தை மிச்ச படுத்தி கொடுப்பதில்தான் நம் அரசுக்கு எவ்வளவு அக்கறை..!

பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் வழிவகுத்து அவர்களின் உடல்நலத்திற்கு நன்மை செய்துள்ளது....மக்களின் உடல்நலன் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள்...!

பால்விலையை உயர்த்தியதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு தாய்ப்பால் கிடைக்க வழி வகுத்துள்ளது....ஆமா....இப்ப எங்கே தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்...!அதனால்தான் பால் விலையை உயற்றி பச்ச குழந்தைகளுக்கும் நன்மை செய்துள்ளது நம் அரசு...


இலவசமாக அரிசி முதல் மிக்சி,கிரைண்டர் ,மின்விசிறி வரை கொடுத்து மக்களை வேலைக்கு செல்லாமலே ராஜா மாதிரி வைத்துள்ளது.....


இதைவிட ஒரு நாட்டின் குடிமக்களுக்கு வேற என்ன வேண்டும்?


இப்போது சொல்லுங்கள் தமிழகத்தில் நடப்பது நல்லாட்சிதானே ....

5 கருத்துகள்:

  1. அவசியம் கேட்க வேண்டியது.


    இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
    .
    .

    பதிலளிநீக்கு
  2. உங்க அழகுக்கும் அறிவுக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லைங்க.

    NASA ல தேடிக்கிட்டு இருக்காங்களாம் :)

    உண்மையிலேயே மக்களுக்கு நண்மை செய்யனும்னு தமிழக அரசு நினைக்கிதோனு ரோசிக்க தோணுது :(

    பதிலளிநீக்கு
  3. என்னை புகழ்ந்ததற்கு நன்றி சகோ!!!ஹி ஹி...மெய்யாலுமா சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய்யாலுமே தான், அதுக்கு தான் ஒரு :) (ஸ்மைலி) போட்ருக்கேன். ஹி ஹி :)

      நீக்கு
    2. நான் கேட்ட மெய்யாலுமே என்பது அரசு மக்களுக்கு நல்லது செய்கிறதா என்பதை பற்றி சகோ...

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....