என்ன ஒரு அதிசயம்..!கருணாநிதி உண்ணாவிரதம் என்று வாய் திறந்தாலே மௌன குருவான பிரதமரும் ஏதாவது வாயை திறந்து பேசி விடுகிறார்...
இப்படித்தான் இலங்கை போரின்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுபோல மேடைக்கு உனாவிரதம் இருக்க வந்தார் ...உடனே போர் நிறுத்த அறிவிப்பு வந்தது....ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே வந்து போனது...!
இப்போதும் உண்ணாவிரதம் என அறிக்கைவிட்டார்....
உடனே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை படித்து பார்த்து ! இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் சொல்லிவிட்டார்....
இல்லை என்றால் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பாராம்....மத்திய மந்திரிசபையில் இருந்தது விலகி இருப்பாராம்....!! எல்லாம் ஈழ தமிழர்களின் நலனுக்காக ....!அட சொன்னால் நம்புங்கப்பா.........!
ஏற்கனவே காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உள்ள "கேப்பை" உண்ணாவிரதம் என்று சொல்லி புது விளக்கம் கொடுத்த கருணாநிதியால் இன்று உண்ணாவிரதமே இருக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டமா இல்லை மக்களின் அதிர்ஷ்டமா?
இதுதான் ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுவதோ!
............................. ................................... .......................................
சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்து ஓட்டளித்த மக்களின் மை காயும் முன்னே கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும் என அறிவித்து விட்டார் ஜெ
அணுமின் நிலையம் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு இனி வேலை இல்லை...அதை திறப்பதா வேண்டாமா என்ற கேள்விக்குதான் பதில் சொல்லியுள்ளார் ஜெ...
இதுதான் நல்லது என்றால் அதை இடைதேர்தலுக்கு முன்னே செய்ய வேண்டியதுதானே...?
இப்படிதான் பஸ் கட்டணம் , பால் விலை உயர்வு போன்றவற்றை உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அறிவித்தார் ...இப்போது கூடங்குளம்...
அதாவது தேர்தல்கள் வந்தால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது பயம்....தேர்தல்கள் முடிந்தால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது பயம்....!
நாளை தேர்தல் ரிசல்ட் வேறு....அதில் ஜெயித்துவிட்டால் அடுத்து என்ன செய்ய போகிறாரோ ஜெ....!
Tweet |
நல்லாதான் கேட்டு உள்ளீர்கள்.
பதிலளிநீக்குநாளை அடுத்து ஜெனிவா முடிவு. பார்ப்போம்.
நன்றி
நீக்குஅதாவது தேர்தல்கள் வந்தால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது பயம்....தேர்தல்கள் முடிந்தால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது பயம்....!
பதிலளிநீக்குயாராவது பயந்து கொண்டேதான் இருக்க வேண்டுமோ!நன்று
பதிலளிநீக்கு