05 மார்ச் 2012

நோயாளிகளிடம் இரக்கம் காட்டும் செவிலியர்களும்,செவிலியர்களிடம் இரக்கம் காட்டாத மருத்துவமனைகளும் ......


செவிலியர்கள் பணி என்பது ஏறக்குறைய மருத்துவர்களுக்கு இணையான ஆனால் அதற்கு கீழே அடுத்த நிலையில் உள்ள உன்னதமான பணி....

யார் ,எவர் என்று தெரியாத நோயாளிகளிடம் அன்பு காட்டி,மிகவும் நோயுற்று படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளை டிரெஸ்ஸிங் செய்வதிலிருந்து அவர்களின் பணி மகத்தானது....ஒரு சில நர்சுகள் அதில் விதிவிலக்காக இருக்கலாம்...ஆனால் பெரும்பாலோர் சேவை மனப்பான்மையிலே செயல்படுகின்றனர்....

முன்பின் தெரியாதவர்களை தங்கள் தாய்,தந்தையாக, சகோதர சகோதரிகளாக ,பாட்டியாக எண்ணி சேவை பண்ணும் மனப்பான்மையில் செவிலியர்கள் மருத்துவர்களை பின்னுக்கு தள்ளி விடுகின்றனர் .....


தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை என்பதன் மூலம் அடிக்கப்படும் கொள்ளைகளினால் நானும் பாதிக்கப்பட்டவன்.....ஆனால் அங்கு உள்ள செவிலியர்களின் பணியால் அவர்கள் மேல் எனக்கு மதிப்பு கூடியது....அவர்களின் பணிக்காக நாம் ஏதாவது அன்பளிப்பு கொடுத்தால்கூட மறுத்துவிடுவார்கள்..


ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம்?கண்டிப்பாக மிக சொற்பமே....

அரசு மருத்துவமனைகளில் எப்படி என்று எனக்கு சரியாக தெரியவில்லை.....ஆனால் நோயாளிகளிடம் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களுக்கு அதில் கிள்ளி கூட கொடுப்பதில்லை....

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களை ஒரு கொத்தடிமையை போலவே நடத்தி வருகின்றன....குறைவான சம்பளம், சரியான சாப்பாடு கொடுப்பது இல்லை....விடுமுறை இல்லை...எதாவது கேட்டால் அவர்களை பணி நீக்கம் செய்வதாக மிரட்டுவது என அடக்கி வைத்துள்ளனர் ...இடையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு மருத்துவமனைகளில் வேலை கிடைப்பது சிரமம்....மேலும் அவர்களுக்கு
experience certificate கொடுக்கமாட்டார்கள்...


தனியார் மருத்துவமனைகளிலே சென்னையில் உள்ள அப்பல்லோ மிகவும் புகழ் பெற்றது....சிகிச்சையில் மட்டுமல்ல....த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனைதா‌ன் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு ‌மிகவு‌ம் குறைவாக ச‌ம்பளமே வழ‌ங்கு‌கிறது. தே‌ர்வு வை‌த்‌து ஆ‌ள் சே‌ர்‌க்கு‌ம் ‌நி‌ர்வாக‌ம் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு அடி‌ப்படை ஊ‌தியமாக மாத‌ம் ரூ.3,500 ‌நி‌ர்ண‌‌‌யி‌க்‌கிறது. அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை எ‌ன்ற பெயரு‌க்காகவே இ‌ந்த குறை‌ந்த ஊ‌திய‌‌த்து‌க்கு செ‌வி‌லிய‌ர்க‌ள் வேலை செ‌ய்‌கி‌ன்றன‌ர்.


நேற்று அவர்கள் வெளி மாநிலங்களில் செ‌வி‌லிய‌ர்ககளுக்கு வழங்கப்படுவதுபோல், மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை வழங்கவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி உள்ளனர்....அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என தெரியவில்லை....

த‌மிழக அரசாவது த‌னியா‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌‌ல் ப‌ணியா‌ற்று‌ம் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு ஒரு ந‌ல்ல அடி‌ப்படை ஊ‌திய‌த்தை ‌நி‌ர்ண‌யி‌க்க வே‌ண்‌டு‌ம்.....
செய்வார்களா?

20 கருத்துகள்:

  1. //தாய்,தந்தையாக, சகோதர சகோதரிகளாக ,பாட்டியாக எண்ணி//

    யோவ்....தாத்தாவை ஏன்யா சேர்கல..

    பதிலளிநீக்கு
  2. விடிவு காலம் பிறக்கும். வேண்டுவோம்..

    பதிலளிநீக்கு
  3. உன் நம்பர் மிஸ் ஆகிவிட்டது. எனக்கு போன் போடவும்

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக செய்ய வேண்டும். வியாபார சூழலில் இந்த மாதிரியான பிரச்சனைகளை அரசாங்கத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  5. 2004-2006 apollovil staff nurse ku pay maximum 3500-4000 rangil kidaiththu. 3 shift duty.nt duty mattum 12hrs duty.2006 ku appuram INTERNATIONAL RECOGANITION vendi 7000(aprx) varai koottapattathu.APOLLO vil padithal 2yrs bond duty seyya vendum.illai endral naam panam seluthithan namathu certtificate i pera mudiyum.ithu oru agreement.ivarhalaiyum vida kuraivaha sampalam vaangum anaithu sisterskum nalla pay kidaikka vendum...oru sariyana pay i govt nrnayikka vendum. -KETTAVAN

    பதிலளிநீக்கு
  6. நான் சவூதியில் மருந்தியல் துறையில் இருப்பதால்
    இங்குள்ள தாதிகளின் சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும்
    உணவு,இருப்பிடம் நல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்
    மேற்கத்திய நாடுகளிலும் அவர்களின் மதிப்பறிந்து நல்ல வசதி செய்து கொடுக்கிறார்கள் இந்தியாவில் இந்த நிலை விரைவில் மாற்றம் வர வேண்டும் இவர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. ஸலாம் சகோ.ஹாஜா...
    மிகவும் அவசியமான அருமையான பதிவு. மிக மிக நன்றி. கை கொடுங்க சகோ..!

    ///அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை எ‌ன்ற பெயரு‌க்காகவே இ‌ந்த குறை‌ந்த ஊ‌திய‌‌த்து‌க்கு செ‌வி‌லிய‌ர்க‌ள் வேலை செ‌ய்‌கி‌ன்றன‌ர்.///---அதாவது தனக்கு பெத்த பெரு இருக்கு என்ற ஒரே காரணத்துக்காகவே... குறைந்த சம்பளம் தருகிறார்கள்..! அடப்பாவிகளா..!

    உங்கள் கான்சப்ட் படி நல்ல பெரு அப்பல்லோவுக்கு இருந்தா கம்மி சம்பளம்..! இப்போ.... சந்தி சாரியை விகாரமாக உங்க பெரு சிரிப்பா சிரிச்சிருச்சே...? ஆகவே, இப்போ பெரு கெட்டு போச்சு இல்லே..? இனி தாதிகளின் சம்பளத்தை ஏத்துங்க...! கெட்ட பெயர் வந்தா சம்பளத்த ஏத்தி தானே ஆகணும்..?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ...அருகிலிருந்தால் கை கொடுத்து இருக்கலாம்...நன்றி சகோ...

      நீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக அருமையான பதிவு பிரதர். இவர்களைப்பற்றி பலரும் சிந்தித்திருக்க கூட மாட்டார்கள். இவர்களுக்கு என்று ஏதேனும் வாரியம் போன்றவை இருக்கின்றதா? சுவடே தெரியவில்லையே...

    வஸ்ஸலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ.....வாரியம் இல்லை என்றே நினைக்கின்றேன்...நன்றி

      நீக்கு
  9. கண்டிப்பாக அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. international nursing council,state nursing council,trained nurses association,ippadi niraya irukku but enna seyranganuthan theriyalai...

    பதிலளிநீக்கு
  11. //சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், ஸ்ட்ரைக் முடிந்துவிட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்திருந்தது.

    ஆனால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட 198 நர்ஸ்களை நீக்கியுள்ளது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ம் தேதி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (எம்.எம்.எம்), அப்பல்லோ, போர்ட்டீஸ் (மலர்) மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகள் வேலை நிறுத்த பேராட்டத்தை தொடங்கினர்.

    இதனையடுத்து எம்.எம்.எம், போர்ட்டீஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் நர்சுகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஊதிய உயர்வு வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நர்சுகளை அழைத்து பேசாமல் பேராட்டத்தில் கலந்து கொண்ட 198 செவிலியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் விடுதிகளில் மின்சாரத்தை துண்டித்தும், உணவு அளிக்க மறுத்தும் விடுதிகளை பூட்டியும் பழி தீர்த்துள்ளது.

    எனவே அப்பல்லோ மருத்துவமனை நர்சுகளுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நர்சுகளின் கோரிக்கை வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும். அதற்கு நாங்களும் துணை நிற்போம்.

    பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

    பதிலளிநீக்கு
  12. நன்றி...ஆனால் அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....