08 மார்ச் 2012

ஜெயலலிதாவுக்காக விஷம் குடித்து சாக தயார் ...நடராஜன்...(நொறுக்கு தீனி)

சிறை செல்வதற்கு முன்னாள் வீரவசனம் பேசி வந்த நடராஜன் இப்போது என்ன சொல்லியாவது ஜெயலலிதாவை சமாதான படுத்தி வெளிவர துடிக்கிறார்...

நேற்று நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசியவற்றை பாருங்கள்...

நான் சிறையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு நன்மையும் வந்துவிடாது. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது மற்றொரு வழக்கு தொடுத்துள்ளனர்.

பெங்களூரு வழக்கில், "எங்கள் குடும்பமே, நாங்கள் தான் பொறுப்பு' என, ஒப்புக்கொண்டு விட்டோம். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகம் வேண்டாம்; பயப்பட வேண்டாம். முதல்வருக்கு சந்தேகமிருந்தால், சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்.அந்த விஷத்தை குடித்துவிட்டு, நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம். பெங்களூரு நீதிமன்ற வழக்கில், என் மனைவி சசிகலா, ஹனுமான் போல, நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார்...என உருகி பேசி இருக்கிறார்....

இப்ப உருகி என்ன பண்ணுவது சாரே....காலம் கடந்து விட்டது....ஸ்டாலினுக்கு எதிராக எதுவும் வழக்கு பாயட்டும் என்ற நல்லெண்ணத்தில் ! மறைமுகமாக அண்ணாநகர் ரமேசை பற்றி வேறு குறிப்பு கொடுத்து பழைய குப்பையை கிளறி விட்டு போயிருக்கிறார் ....!ஜெ அதை கேட்ச் பிடித்தாலும் பிடிப்பார்..!

............................................. ............................................ .......................................

பிளஸ் டூ பொது தேர்வுகள் இன்று துவங்கிவிட்டன...ஏதோ பலூன் வாங்குவதைப்போல பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வாங்கப்படும் என ஜெயலலிதா சொல்லிவிட்டார்...ஆனால் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி இல்லை....பிறகு எப்படி மாணவர்கள் தேவு எழுதுவது?

ஒருவேளை தேர்வு எழுத்து பேனாவும்,பேப்பரும் மட்டும் போதும் என நினைத்துவிட்டார்கள் போலும்.......ஹ்ம்ம்....


படிக்கும் நேரங்களிலும் மின்சாரம் இல்லை.தேர்வு எழுதும்போதும் மின்சாரம் இல்லை....மாணவர்களுக்கு வெளிச்சத்தை தரும் கல்வியை இருட்டில் தள்ளிவிட்டனர் ஆட்சியாளர்கள்....இந்த மின்தடையினால் ஒரு மாணவன் பாதிக்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனாலும் அந்த குற்றம் தமிழக அரசையே சேரும்...


................................ ............................................... .............................................


அடுத்தடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன், லஞ்ச வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்..


கப்பல்கள், விமானங்களில் நடைபெறும் கடத்தல்களைத் தடுத்து நிறுத்தி பல நூறு கோடி பெருமானமுள்ள பொருட்களை ராஜன் தலைமையிலான படையினர் பிடித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜனே சிக்கி இருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி....

இவர் உண்மையில் லஞ்சம் வாங்கினாரா இல்லை அவருக்கு வேண்டாத அதிகாரிகளினால் பழி வாங்கப்பட்டாரா என்பதில் ஐயங்கள் எழுகிறது...

பார்ப்போம்....

3 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....