கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத் சட்டசபையும் நாறி கொண்டு இருக்கிறது....
இப்போது பிட்டு படம் எல்லாம் தியேட்டர்களில் ஓடுகிறதோ இல்லையோ சட்டசபைகளில் நன்றாகவே ஓடுகிறது....
கர்நாடாகாவில் சட்டசபையில் பிட்டு படத்தை பார்த்து மாட்டிகொண்ட பாஜக
எம் எல் ஏக்களை தொடர்ந்து இப்போது குஜராத்திலும் சபை நடவடிக்கைகளின் போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆபாச படம் பார்த்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத் சட்டசபை நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்த போது, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சங்கர் சவுத்ரி மற்றும் ஜெதாபர்வத் ஆகியோர் தங்களின் டேப்லெட் கம்ப்யூட்டரில், பெண்களின் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என, குஜராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. அத்துடன் அந்த பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஜானக் தவே, சட்டசபை சபாநாயகரிடமும் புகார் செய்தார்.
இதை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சி படமும் பிடித்துள்ளது.
என்ன கன்றாவியா இது..? பிட்டு படம் பார்க்கிறதா இருந்தா இவனுக ஏன் சட்ட சபைக்கு வாரானுக..?வேற எங்கயாவது போய் தொலையவேண்டியது தானே ...?
ஒருவேளை சட்டசபைகளில் பலான படங்கள் பார்ப்பதை பா ஜ க ML"A" க்கள் ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறார்களோ என்ன எழவோ!
காதலர் தினத்தன்று அராஜகங்கள் நடத்தும் சிலகாவி அமைப்புகள் முதலில் பாஜகவிடம் தங்கள் ரத்த கொதிப்பை காட்டட்டும்...பிறகு நாட்டு மக்களை திருத்த வரலாம்.....!
பாஜக ஆளும் மாநிலங்களில் பேசாமல் சட்டசபைகளின் பெயரை பிட்டு சபை என மாற்றி வைத்தல் பொருத்தமாக இருக்கும்...!
................................. ......................................... ........................................
முடிவாக அதிமுக ஜெயித்துவிட்டது .....எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் டெபாசிட்டை இழந்தது ஆரோக்யமான எதிர்க்கட்சிகளாக மக்கள் அவர்களை எண்ணவில்லை என்பதையே காட்டுகிறது....டெபாசிட்டை இழந்த கட்சிகள் இனியாவது இடைதேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என புளித்து போன பல்லவியை பாடுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிகளாக செயல்பட்டால் மட்டுமே அடுத்து தலை தூக்க முடியும்...
அசுர பலத்தில் இருக்கும் ஆளும்கட்சியை எதிர்த்து வாக்களித்தால் எதுவும் நல்லது நடக்க போவதில்லை என மக்கள் நினைத்து இருக்கலாம்....!மொத்தத்தில் மக்கள் எதிர்கட்சிகளை விரும்பவும் இல்லை....ஜெயலலிதாவை வெறுக்கவும் இல்லை....
ஆனால் இந்த வெற்றிக்காக ஜெயலலிதா பெருமைபடுவதில் ஒன்றும் இல்லை....அதற்கு மாறாக மக்கள் இன்னும் தம்மீது நம்பிக்கை வைத்து இருக்குறார்கள்,மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குறார்கள் என்பதை உணர்ந்து தனது தவறுகளை திருத்திக்கொண்டால் அவருக்கு நல்லது ....!மக்களுக்கும் நல்லது..!!
Tweet |
//பாஜக ஆளும் மாநிலங்களில் பேசாமல் சட்டசபைகளின் பெயரை பிட்டு சபை என மாற்றி வைத்தல் பொருத்தமாக இருக்கும்...!
பதிலளிநீக்கு//
//ஆனால் இந்த வெற்றிக்காக ஜெயலலிதா பெருமைபடுவதில் ஒன்றும் இல்லை....அதற்கு மாறாக மக்கள் இன்னும் தம்மீது நம்பிக்கை வைத்து இருக்குறார்கள்,மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குறார்கள் என்பதை உணர்ந்து தனது தவறுகளை திருத்திக்கொண்டால் அவருக்கு நல்லது ....!மக்களுக்கும் நல்லது..!!//
செம