26 மார்ச் 2012

கபீர் சார்....


பள்ளி வயது பருவத்தை நினைத்து பார்த்தாலே எல்லாருக்குமே அது இனிக்கும்....

அதற்கு இன்னதுதான் காரணம் என தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை....

ஒருவேளை வாழ்க்கையை ரிவர்சில் பார்ப்பதினாலா?அல்லது நிகழ் கால கசப்புகளை மறக்கடிப்பதினாலா? தெரியாது....

ஒவ்வொருவரின் பள்ளி பருவத்திலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர்கள் ,ஆசிரியைகள் இருப்பார்கள்....பிடிக்காதவர்களும் இருப்பார்கள்...

அந்த வகையில் எனக்கு பிடித்த ஆசிரியர் கபீர் சார்....

நான் படித்தது எங்கள் ஊரான அரசர்குளத்தில் அமைந்துள்ள அல் ஹிதாயா அரபி நடுநிலை பள்ளியில் ....

அப்போது எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தவர்தான் கபீர் சார்...தலைமை ஆசிரியர் என்றால் வயதானவர்தான் என்று நினைத்த எங்களின் நினைப்பை பொய்யாக்கியவர் ..அப்போது அவருக்கு இருபத்தி ஐந்து வயதுதான் இருக்கும்...

பாடம் நடத்தும்போது ரொம்ப கண்டிப்பாக இருப்பார்....மற்ற நேரங்களில் ரொம்ப சகஜமாக ஒரு சகோதரனைப்போல பழகினார்...

எங்கள் வகுப்பில் நன்றாக படிப்பவன் என்பதால் கபீர் சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்....அவர்தான் எனக்கு செஸ் விளையாட கற்று கொடுத்தார்..பாட புத்தகங்கள் தவிர பொது அறிவு புத்தகங்கள், நீதி போதனை கதைகள், பீர்பால் தெனாலிராமன் கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் அவர்தான் எனக்கு அறிமுக படுத்தினார்....அந்த பழக்கம்தான் நாளடைவில் விகடன்,குமுதம் போன்ற புத்தகங்களையும் நான் படிப்தற்கு காரணமாக இருந்தது...

பாடங்கள் நடத்தும்போது சுவாரஸ்யமாக கதைகள் சொல்வர்..அதில் அறிவியல் ரீதியான கருத்துக்கள் ரொம்ப இருக்கும்....படிப்பு ஏறாத மாணவர்களும் அவர் வந்ததில் இருந்தது நன்றாக படிக்க ஆரம்பித்தனர்...

அதனால் அவரை எல்லா மாணவர்களுக்கும் பிடித்தது....நான் எட்டாவது முடித்துவிட்டு வேறு பள்ளிக்கு சென்ற பிறகு கபீர் சாரும் சில மாதங்களில் அவரின் ஊருக்கு சென்று விட்டார்....

பிறகு சில வருடங்கள் கழித்து நான் கல்லூரி படிக்கும்போது அவரை சந்தித்தேன் ...அதன் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை....அவரை மீண்டும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என ரொம்ப ஆவலாக இருக்கு...அவரின் ஊர் கடையநல்லூர் ....ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை...

ஒருவேளை பதிவுலகில் அவர் இருந்தாலும் இருக்கலாம் ,அல்லது அவருக்கு தெரிந்தவர்கள் யாராவது இதை படிக்கலாம் ,அதன் மூலம் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம் என ஒரு ஆசையில் அவரை பற்றி எழுதி உள்ளேன்....

இப்போது பள்ளிக்கு செல்லும் எனது சொந்தக்கார சிறுவர்களிடம் கேட்டேன்....உங்கள் வகுப்பில் நீதி போதனை வகுப்பு உள்ளதா?எந்த ஆசிரியராவது பீர்பால்,தெனாலிராமன் கதைகள் சொல்கிறார்களா?செஸ் முதலிய விளையாட்டுகளை கற்று கொடுக்கிறார்களா? என்று...

ஆனால் அதற்கு ..அட போங்கண்ணே ..எங்களுக்கு ஹோம் வொர்க் செய்யவே நேரம் இல்லை...ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்தாலே பயமா இருக்கு...இதிலே எங்கே அதிலாம் சொல்ல போகிறார்கள் என்பதே பதிலாக வந்தது....

இப்போது புரிகிறது மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஏன் கெமிஸ்ட்ரி ! வொர்க் அவுட் ஆகவில்லை என்று..!!

19 கருத்துகள்:

  1. //பள்ளி வயது பருவத்தை நினைத்து பார்த்தாலே எல்லாருக்குமே அது இனிக்கும்...//

    எப்போ இப்ப இனிக்குது??

    அப்ப இனித்ததா?.

    பதிலளிநீக்கு
  2. //இப்போது புரிகிறது மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஏன் கெமிஸ்ட்ரி ! வொர்க் அவுட் ஆகவில்லை என்று..!!//

    இப்பவாது புரிஞ்சுதே...

    சரி, எனக்கு எதுவும் தகவல் கிடைத்தால் சொல்றேன்

    பதிலளிநீக்கு
  3. உன் குரு மரியாதை என்னை புல்லரிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி..நன்றிண்ணே...நீங்களும் ஒரு வகையில் குருதான்...

      நீக்கு
  4. மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஏன் கெமிஸ்ட்ரி !வொர்க் அவுட் ஆகவில்லை என்று..!/////
    ஆனால், ஆசிரியைக்கும் மாணவருக்கும் நல்லாவே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுது

    பதிலளிநீக்கு
  5. பள்ளிப்பருவம் எனக்கும் இனிமையானதுதான். கடைசி வரிகள் நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் பதிவுலக குரு கசாலி நானா தான். அவன் இல்லாட்டி நான் இன்று பதிவுலகில் நிச்சயம் இருந்து இருக்க மாட்டேன். ரொம்ப நாலா பதிவு ஏதும் தேற மாட்டேங்குது... பேசாம எனது குரு நாதர்னு கஜாலி பற்றி பதிவு போட்ருவமா??? நீங்க என்ன சொல்றீங்க மச்சான்????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதை வழிமொழிகின்றேன்...சீக்கிரம் பதிவு போடுங்க மச்சான்...

      நீக்கு
  7. எனக்கும் கபீர் சார தெரியும். நான் அவரிடம் படித்தது இல்லை என்றாலும், நானும் அவரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். நீங்கள் பேசினால் நானும் கேட்டதாகக் கூறுங்கள் ஹாஜா மச்சான்.

    பதிலளிநீக்கு
  8. /* எங்கள் வகுப்பில் நன்றாக படிப்பவன் என்பதால் கபீர் சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.... */

    இந்த பொய்ய மட்டும் இந்த பதிவுல இருந்து தூக்கிருங்க மச்சான்.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. விழுந்ததே மூன்று ஒட்டு ..அதுல ஒண்ணு உங்களோடதான்....அப்புறம் உங்களுக்கு பதிவு எழுத நேரம் வந்துவிட்டது...சீக்கிரமே ஒரு சூடான பதிவை எதிர்பார்க்கின்றேன்....

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....