காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால்.ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?
எதற்கு ஐந்து வருடம் படித்து நட்களி வீணாக்குவது எனவும்,ஏன் இதற்கெல்லாம் போய் டாக்டரிடம் காண்பிப்பது எனவும் சிந்தித்தே நம்மில் பல பேர் தலைவலி முதல் கால் வலி வரை சர்வ சாதாரணமாக இந்த பாராசிட்டமால் மாத்திரிகளை ஏதோ ஜெம்ஸ் மிட்டாய் சாப்பிடுவதுபோல சாப்பிடுகிறோம்...
முதலில் இந்த மாதிரி செல்ஃப் மெடிசின் எடுப்பதே தவறு....அதுவும் பாராசிட்டமால் எடுப்பது அதைவிட தவறு.....பாராசிட்டமால் அதிகமாக எடுத்தால் அது லிவரை பாதிக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே....
ஆனால் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே மக்களே எதற்கெடுத்தாலும் பாட்டி வைத்தியம் செய்வதாக ,அதிமேதாவியாக நினைத்துகொண்டு செல்ஃப் மெடிசின் எடுப்பதையும், பாரசிட்டமால் அளவுக்கு மீறி எடுப்பதையும் குறைத்து கொள்வீர்களாக....அப்பிடின்னு மருத்துவர்கள் சொல்றாங்க.. ஓகே யா...
Tweet |
செல்ஃப் மெடிஸின் எடுத்துக்கொள்வதைப்போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.
பதிலளிநீக்குமுட்டாள்தனமான ஆபத்து....நன்றி
பதிலளிநீக்குஅவசியமான பதிவு.அனைவரும் உணரவேண்டும்.
பதிலளிநீக்குநன்றி அய்யா
பதிலளிநீக்குஸலாம் சகோ.ஹாஜா...
பதிலளிநீக்குவிழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி சகோ.
இங்கே வளைகுடாவில்,
பணடால் (Panadol)...
அப்படித்தான்...பாக்கெட் பாக்கெட்டாக//ஏதோ ஜெம்ஸ் மிட்டாய் சாப்பிடுவதுபோல சாப்பிடுகி//றார்கள்...! இந்த மாத்திரை பாக்கெட் மட்டும் மருந்து கடைகளில் மட்டுமல்லாது எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது..!
வஸ்ஸலாம் சகோ...
நீக்குநன்றி....எல்லா நாடுகளிலும் இப்படித்தான்நடக்குது போல...