06 மார்ச் 2012

கொஞ்சம் ராமதாசின் பேச்சை கேளுங்கள்....நோய்விட்டு போகும்...

தமிழக மக்களுக்கு அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதில் ராமதாசின் பங்கு அளவிட முடியாதது....அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:


வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது.(அப்ப சைடுல இருக்கலாமோ )இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும்(நீங்கதான் மரங்களையே வெட்டுவிங்களே.)

2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்(. ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும்(அப்ப இனிமே ஒட்டு போடாம இருக்கபோறிங்களா ?). நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம்.(முதல்ல உங்க கட்சி கொடியை தேடிபிடிங்க )அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை.(ஓஹோ ..நீங்கல்லாம் இப்ப ஓய்வில்லாமல் இருக்கிறதா நெனச்சுக்கிட்டு இருக்குறீர்களோ )

15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும்(15 வயசுக்கெல்லாம் ஓட்டுரிமை இல்லைன்னு யாராவது அவர்ட்ட சொல்லுங்கப்பா ). பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்(மொதல்ல கட்சியில உள்ளவங்கள உங்க சின்னத்திற்கு ஒட்டு போட சொல்லுங்க...).எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது(உங்களையும் சேர்த்துதானே ). எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.

நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்(அபார கற்பனை சக்தி சார் உங்களுக்கு ).1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல்(நீங்களே ஒத்துகிறிங்க,அவங்க எல்லாம் தெரியாம வந்துட்டாங்க என்று )

இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது(ஏற்கனவே உங்க பின்னாடி இருந்தவங்க எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்க ..முதல்ல அவங்கள பிடிங்க சார் ).எல்லோரும் ஓடி வாருங்கள்;(ஏன் உங்க தோட்டத்தில ஓட்டபந்தயம் நடத்த போறிங்களா?)

2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம்.அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம்(எல்லாரும் ஜோரா ஒருதடவ கைதட்டுங்க...அட என்ன சார் உங்க பேச்சுக்கு கை தட்ட கூட ஆள காணோம்....நீங்க என்னடான்னா சந்தானத்துக்கு போட்டியா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிங்க....) புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். (புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு இலவச விளம்பரம் செய்றாரு...வேற ஒன்னும் இல்ல)மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்?நீங்களே பதில் சொல்லுங்கள்.(உங்க மேல உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதா ?) இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.

இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை (பத்து நாளுக்கெல்லாம் முதல்வர் பதவி கிடைக்காதுங்க...இது என்ன முதல்வன் படத்துல வர முதலமைச்சர் வேடமா?)

இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை(அப்ப இது எல்லாம் பதவிகளே இல்லையா?). இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை.(சும்மா ஜோக்குக்கு தான் சொல்றேன்னு அவரே சொல்ல வராரு ) 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.(ஒட்டு போடுற எந்த மனிதனுக்கும் கொம்பு இல்லைங்கோ....!) இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும். ( ஓகே படம் பார்த்தாச்சா கிளம்புங்க....)....என தனது நீண்ட பேச்சை நிறைவு செய்து மக்களின் சிரிப்புகளுக்கு ஒரு இடைகால முற்றுபுள்ளி வைத்தார் ராமதாஸ் ...

45 கருத்துகள்:

  1. இவரோட பேட்டியை மக்கள் டிவியில் தவறாமல் ஒளிபரப்புகிறார்கள். பொழுது போகவில்லை என்றால் தாராளமாக பார்க்கலாம். சிரிப்புக்கு கேரண்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் டிவியில் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்....என்ன ஒரு பரந்த உள்ளம்....

      நீக்கு
    2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
  2. என்னத்தை சொல்றது போங்க.....சிப்பு சிப்பா வருது..

    காமடியர்கெல்லாம் தலைவர்.

    பேசுவது புரிந்து தான் பேசுறாரா? மக்களை குழப்புறாரா?

    சரி சரி இதைவும் ஒரு பதிவா தேத்திபுட்டயலே..

    பதிலளிநீக்கு
  3. அதிரடி ஹாஜா அதிரடி என்ற பெயரில் தேவையற்ற விமர்சனங்களை எழுதுவது மிகவும் கண்டிக்கதக்கது.. மருத்துவர் அய்யா வை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...அய்யா அவர்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? இதுவரை தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தில் ஒருவர் கூட முதல்வராக வரமுடியவில்லை. அல்லது ஒரு தாழ்த்தப்பட்டவரோ அல்லது சிறுபான்மையினரோ அல்லது ஒடுக்கபட்டவரோ யாரவது முதல்வர் ஆஹி இருக்கிறார்களா?....உங்களுக்கு என்ன தெரியும் காஜா ...வன்னிய இனத்தை பற்றி...படை நடத்தி பாராண்ட பேரினம் இந்த வன்னிய இனம்...இன்று ஒட்டு போடுகிற ஜாதியாகவும் கொடிபிடிக்கிற ஜாதியாகவும் தள்ளப்பட்டதற்கு இந்த திராவிட கட்சிகளும், வந்தேறி தெலுங்கர்களும் மலையாளர்களும் தான் காரணம்...இன்று வன்னியர் என்றால் மருத்துவர் அய்யா அவர்களை தான் முதலில் கேட்கிறார்கள்...அவருடைய ஜாதியா என்று? அந்தளவிற்கு எனகளது சமுதாயத்திற்கு அங்கீகாரத்தையும் உரிமையையும் பெற்று கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள்...அவர் என்று சமுதாயபணியில் தன்னை ஈடுபடுதிக்கொண்டாரோ அன்று முத்த இன்று வரை தமிழ் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிகொண்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு போராளியை நீங்கள் விமர்சனம் செய்வது மிகவும் கண்டிக்க தக்கது. இதுபோன்ற விமர்சனங்களை எழுவதற்கு பதில் அவர் எதற்க்காக இவ்வாறு கூறுகிறார் என்று சிந்தித்து பாருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள

      இவர் "ஹாஜா" என்கிற இசுலாமிய பெயரை வைத்துள்ளார். இசுலாமியருக்கான கட்சிகள், அமைப்புகளின் கூட்டங்களின் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பாதிக்கப்பட்ட இனமாக வாழும் இசுலாமியர்கள் அவர்களது உரிமைகளுக்காக ஒன்று கூடுவதை நாம் வரவேற்கிறோம். அவர்களை நாம் ஆதரிக்கிறோம்.

      ஆனால், ஹாஜா போன்ற சிலருக்கு வஞ்சிக்கப்பட்டு வாழும் மக்களின் வலி தெரியாது. வஞ்சிக்கப்பட்டவர்கள் உரிமை பெற போராடுவது அவர்களுக்கு நகைச்சுவையாகத் தெரிவதற்கு காரணம் அவர்களது அறியாமைதான்.

      எப்படி இருந்தாலும் நாம் தினமலத்தை ஒழிக்க போராடுகிறோம். அவரும் அதனை வலியுறுத்துகிறார். அந்தவகையில் அவர் நம் நண்பர்தான்.

      நீக்கு
    2. அன்புள்ள JP

      இவர் "ஹாஜா" என்கிற இசுலாமிய பெயரை வைத்துள்ளார். இசுலாமியருக்கான கட்சிகள், அமைப்புகளின் கூட்டங்களின் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பாதிக்கப்பட்ட இனமாக வாழும் இசுலாமியர்கள் அவர்களது உரிமைகளுக்காக ஒன்று கூடுவதை நாம் வரவேற்கிறோம். அவர்களை நாம் ஆதரிக்கிறோம்.

      ஆனால், ஹாஜா போன்ற சிலருக்கு வஞ்சிக்கப்பட்டு வாழும் மக்களின் வலி தெரியாது. வஞ்சிக்கப்பட்டவர்கள் உரிமை பெற போராடுவது அவர்களுக்கு நகைச்சுவையாகத் தெரிவதற்கு காரணம் அவர்களது அறியாமைதான்.

      எப்படி இருந்தாலும் நாம் தினமலத்தை ஒழிக்க போராடுகிறோம். அவரும் அதனை வலியுறுத்துகிறார். அந்தவகையில் அவர் நம் நண்பர்தான்.

      நீக்கு
    3. நான் இந்த பதிவில் வன்னிய இனத்தை பற்றி என்ன சொல்லிவிட்டேன்...நீங்களாகவே கற்பனை பண்ணி கொதித்தால் நன் பொறுப்பல்ல...தேர்தலுக்கு தேர்தல் கோபாலபுரத்திலும் ,ஜெயலலிதாவிடமும் மாறி மாறி நிற்கும் ராமதாசை எனக்கு நல்லா தெரியும்

      நீக்கு
    4. மருத்துவர் அவர்கள் மீது வைக்கப்படும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு ‘அவர் அடிக்கடி கூட்டணி மாறுவார்’ என்பது. அந்த அடிப்படையில் அவரை கேலி செய்வதும் ஒரு வழக்கமாக உள்ளது. (தேர்தலுக்கு தேர்தல் கோபாலபுரத்திலும், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி நிற்கும் ராமதாசை எனக்கு நல்லா தெரியும்)

      மருத்துவர் இராமதாசு அடிக்கடி கூட்டணி மாறினார் என்பது பொதுபுத்தியில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாயை. உண்மையில் எல்லா கட்சிகளுமே ‘அடிக்கடி’ கூட்டணி மாறுகின்றன. இதுபற்றி விரிவாக இங்கே காணலாம்:

      விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? – அணிமாறும் பா.ம.க’வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

      http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

      கடந்த தேர்தலில் கூட ஒன்றாக இருந்த அதிமுக கூட்டணி இப்போது இடைத்தேர்தலில் இரு அணியாக நிற்கின்றன.

      ‘காமெடியான’ கட்சிகள் என்று பேச வேண்டும் எனில் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளுமே ‘காமெடிக் கட்சிகள்தான்’. இதில் மருத்துவர் மட்டுமே ‘சிலருக்கு’ தனியாக, காமெடியாக, கோமாளியாகத் தெரிவதற்கு அந்த 'சிலரின் வன்னியர் வெருப்புணர்வுதான்’ காரணம்

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட கூறுகெட்ட கிறுக்கா...உன்னமாதிரி கீழ்த்தரமான வார்த்தைகளை சொல்லி என்னை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை...

      நீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களே....இப்போ புரிகிறது...ராமதாஸ் ஏன் இப்படி ஆனார் என்று...இந்த ராஜா மாதிரி ஓரறிவு கூட இல்லாத விசஜந்துகளை அடிபொடிகளாக பெற்று இருப்தால்தான்....

      நீக்கு
  19. டேய் முட்டாள் மூதேவி. ராஜா ...நீ கமெண்ட் எழுதியே இந்த பதிவ ஹிட் ஆக்கிட்டடா....

    பதிலளிநீக்கு
  20. NKS.ஹாஜா மைதீன்Mar 6, 2012 12:17 AM
    மக்களே....இப்போ புரிகிறது...ராமதாஸ் ஏன் இப்படி ஆனார் என்று...இந்த ராஜா மாதிரி ஓரறிவு கூட இல்லாத விசஜந்துகளை அடிபொடிகளாக பெற்று இருப்தால்தான்....//////////////// சாத்துடா டேய்

    பதிலளிநீக்கு
  21. வஞ்சிக்கப்பட்ட சாதியான வன்னியர் சாதியில் பிறந்த மருத்துவர் இராமதாசு அவர்கள், அவரது சாதியைச் சேர்ந்த மக்களை தமக்கு வாக்களிக்குமாறு பேசிய பேச்சு உங்களுக்கு நகைச்சுவையாக இருப்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை.

    மருத்துவர் இராமதாசு எல்லா மக்களுக்குமான சிக்கல்களுக்காக போராடி வருகிறார். இசுலாமியர்கள் தடா சட்டத்தில் கைதுசெய்யப்படுவதை எதிர்த்து வள்ளுவர் கோட்டம் அருகே போராடியதற்காக, காவல்துறைத் தடியடியில் சிக்கி, வேலூர் சிறையில் தூக்கி வீசப்பட்ட சம்பவங்கள் உங்களுக்குத் தெரியுமா?

    இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் 1992 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் போராடிய ஒரே அரசியல் தலைவர் அவர்தான் என்பதும் அதற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டதும் உங்களுக்குத் தெரியுமா?

    மருத்துவர் இராமதாசு அவர்கள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போதும் நடுவண் அரசின் மூலமாக பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காகவும், சாதிவாரிக் கணக்கெடுப்பிற்காகவும் கடினமான போராட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

    மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் எய்ம்சில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடியதை நாடு அறியும். நடுவண் மருத்துவக் கல்வியில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு எனும் வரலாற்று சாதனையைச் செய்தவர் அவர்தான்.

    திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் கூட திமுக ஆட்சியின் பல தவறான முயற்சிகளை மருத்துவர் இராமதாசு அவர்கள் கடுமையாக எதிர்த்தார். அப்போதும் மதுவிலக்கிற்காகப் போராடியதன் விளைவாகவே 'டாஸ்மாக்' நேரம் குறைக்கப்பட்டது.

    இதுபோல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். அவையெல்லாம் உங்களுக்கு காமெடியாகத் தெரிகிறதா?

    என்றெல்லாம் சிலர் கூறுவதற்கு காரணம் ஒருவிதமான "மஞ்சள் காமாலைக் கண்" பார்வைதான் காரணம். (இங்கே, "மஞ்சள் காமாலைக் கண்" எனப்படுவது வன்னியர்களுக்கு எதிரான சாதி வெறி. - குறிப்பாக ஆதிக்க சாதி வெறி).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஜாதி எங்கு இருந்து வருகிறது...?நான் ஜாதியை பற்றி எங்கு குறிப்பிட்டேன்...?நீங்கள் சொல்வதினால் கேட்கிறேன்..ராமதாஸ் கட்சி நடத்துவது வன்னியர்களுக்கு மட்டுமா?இல்லை தமிழக மக்கள் அனைவருக்குமா?

      நீக்கு
    2. ராமதாஸ் கட்சி நடத்துவது வன்னியர்களுக்கு மட்டுமா?இல்லை தமிழக மக்கள் அனைவருக்குமா?

      இதென்ன புதுக்கதையா இருக்கு....முதல்ல வன்னியர்களுக்கு ஒழுங்கா கட்சிய நடத்த சொல்லுப்பா....அப்புறம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நடத்தலாம்.

      நீக்கு
    3. மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர்

      நீக்கு
  22. என்னது இத்தனை கமெண்டு அழிக்கப்பட்டிருக்கிறது?
    சம்திங் ராங்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாண்ணே....ராஜான்னு ஒரு விசஜந்து விசத்தை வார்த்தைகளாக கக்கிட்டு போச்சு....அதான் நீக்கிட்டேன்....

      நீக்கு
  23. ராமதாஸ் எனக்கு பிடிக்குமா பிடிக்காதானு தெரியலை அவருடைய அதிரடியான சில விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது எது என்றால் அவர் வருகைக்காக ஒருமுறை ஒரு தொண்டர் வெடி வெடித்தது தவறென்றும் காற்றை மாசுபடுத்திய‌மைக்காக கடிந்துகொண்டதும் ,ரஜினிகாந்தால் இளைஞர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று வெளிப்படையாக எதிர்த்தது,தன் தொலைகாட்சி சேனலில் ஆபாசங்களை புகுத்தாமல் நடத்திவருவது(இப்பொழுதும் எப்படின்னு தெரியல தெரிந்தவர்கள் விளக்கவும்) உண்மையில் பாராட்டத்தக்க விஷயம் இதெல்லாம் இவருடைய ப்ளஸ்.சகோ ஹாஜா குறிப்பிட்ட ராமதாஸுடைய இந்த பேச்சு உண்மையில் சிரிப்பை வரவழைக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஆரம்ப கால ராமதாசின் நடவடிக்கைகள் பிடிக்கும்..ஆனால் காலபோக்கில் அவர் மாறிவிட்டார்....கூட்டணி விட்டு கூட்டணி மாறி மாறி தனது சுயரூபத்தை இழந்துவிட்டார்...

      நீக்கு
  24. மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர்

    பதிலளிநீக்கு
  25. இவருதான் நம் நாட்டு ஆஸ்தான கோமாளியோ? சூப்பர் சகோ. இவரு சொல்றது எல்லாமே செம காமெடி. அடைப்புக்குறிக்குள் நீங்க கொடுத்த கமெண்ட் எல்லாம் சும்மா நச்...நச்...!

    பதிலளிநீக்கு
  26. மருத்துவர் இராமதாசு அடிக்கடி கூட்டணி மாறினார் என்பது பொதுபுத்தியில் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாயை. உண்மையில் எல்லா கட்சிகளுமே 'அடிக்கடி' கூட்டணி மாறுகின்றன. இதுபற்றி விரிவாக இங்கே காணலாம்:

    விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

    கடந்த தேர்தலில் கூட ஒன்றாக இருந்த அதிமுக கூட்டணி இப்போது இடைத்தேர்தலில் இரு அணியாக நிற்கின்றன.

    'காமெடியான' கட்சிகள் என்று பேச வேண்டும் எனில் தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளுமே 'காமெடிக் கட்சிகள்தான்'. இதில் மருத்துவர் மட்டுமே 'சிலருக்கு' தனியாக, காமெடியாக, கோமாளியாகத் தெரிவதற்கு அந்த சிலரின் 'வன்னியர் வெருப்புணர்வுதான்' காரணம்

    பதிலளிநீக்கு
  27. விமர்சகர்களே...மருத்துவர் அய்யா அவர்கள் கட்சி நடத்துவதன் நோக்கம் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் என்பதே...அதற்காகவே கட்சியின் கோடியில் நீல நிறமும் சிவப்பு நிறமும் இடம் பெற்றுள்ளது...அவருடைய கொள்கைகள் மிகவும் முன்னோக்கிய சிந்தனையுடையதாக இருக்கும். கூட்டணி மாறுகிறார் கூட்டணி மாறுகிறார் என்கிறீகள்..?? தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரலாற்றை சுதந்திரத்திற்கு பின் எடுத்துப்பாருங்கள்...எந்தெந்த கட்சியெல்லாம் கூட்டணி வைததேன்று தெரியும்...சொல்லபோனால் காங்கிரெஸ் சை அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிடர் இயக்கம்...காலத்தின் கோலமாக காங்கிரஸ் சும் திராவிடகட்சிகளுமே கூட்டணி வைத்துள்ளார்கள்...1998 இல் கோவை யில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முஸ்லிகள் வீட்டை விட்டே வெளியில் வரமுடியால் இருந்த கால கட்டத்தில் மருத்துவர் அய்யா தான் சிறுபான்மையின மக்களுக்காக போராடி கோவையில் முஸ்லிம் மக்கள் சுததிரமாக வாழ வலி செய்தார்...இன்றும் பா.ம.க வில் உள்ள அனைத்து மட்டத்தில் உள்ள பொருளாளர் பதவி ஒரு முஸ்லிம் தான் என்பது உங்களுக்கு தெர்யுமா?... இதெல்லாம் எதற்க்காக உங்களிடத்தில் சொல்கிறேன் என்றால் நீங்க ஒரு முஸ்லிம் என்பதால் உங்கள் சமுதாயத்திற்கு எந்த அளவில் அய்யா அவர்கள் போராடி உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே...இதைபோன்று அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிகொண்டுள்ளார். இதுவே ஒரு தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கேட்டால் அவர்களுக்காக அய்யா என்ன செய்துள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியும்...ஏன் கூட்டணி மாறினார் என்றால் அது தான் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை.....நன்றாக சிந்தித்து பாருங்கள்... பா.ம.க என்பது வன்னியர் சங்கத்திலிருந்து தோண்டியதால் தான் மற்ற சமுதாயத்தினரால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்பது உங்களுக்கு புரியும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப காலத்தில் ராமதாசின் போராட்டங்கள்,தனியாக நின்று ஆரம்பகாலத்தில் (நான்கு இடங்கள்) என நினைக்கின்றேன் வென்றது என எல்லாம் பாராட்டத்தக்கதே...ஆனால் எனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வந்தால் என்னை சவுக்கால் அடிக்கலாம் என கூறிய ராமதாஸ் எங்கே...?அன்புமணிக்காக கூட்டணி மாறி அவரை அமைச்சர் ஆக்கி பார்த்த ராமதாஸ் எங்கே? தமிழ்நாட்டில் கூட்டணி விடு கூட்டணி மாறுவது எல்லா கட்சிகளிடமும் உள்ளது..ஆனால் அதில் முநிலை வகிப்பது பாமகதான்...இப்போது அக்கட்சியிலிருந்து வெளிவந்த வேல்முருகன் புட்டு புட்டு வைக்கிறாரே ?இப்ப ராமதாஸ் சொல்கிற மாதிரி வரும் தேர்தல்களில் அவர் தனித்து போட்டியிட்டால் அவரை ஏற்றுகொள்ளலாம்...செய்வாரா?உங்களுக்கே தெரியும் செய்யமாட்டார் என்று....அவரின் ஆதரவாளர்கள் என்ற முறையில் அவரை குறை சொன்னால் உங்களுக்கு கோபம் வருவது இயல்பே..ஆனால் அவரிடமும் குறைகள் உள்ளது என ஏன் ஏற்றுகொள்ளமுடியவில்லை உங்களால்..?

      நீக்கு
    2. வரும் தேர்தலில் பா.ம.க தனித்துதான் போட்டியிடும் (அதாவது திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல்) என்று என்னால் பந்தயம் கட்ட முடியும். அதுதான் நடக்கப்போகிறது.

      ஆனால், அதற்காகவெல்லாம் 'வன்னியர்கள் அல்லாதவர்கள்' பா.ம.க'வை பெருமளவில் ஆதரிப்பார்கள் என்று நம்புவது மூடத்தனம் என்றே கருதுகிறேன்.

      ஏனெனில், தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழ்ச் சாதிகளுக்கு எதிரான சிறுபான்மை 'திராவிட' ஆதிக்க சாதிகளின் வியூகம் மிகத்தெளிவாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் பிரச்சாரத்தை செய்யும் ஊடக வலிமையும், பண வலிமையும் அவர்களுக்கு உண்டு.

      எனவே, "நாங்கள் பொதுவானவர்கள், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள், நல்ல அரசியலை விரும்புகிறவர்கள்" என்று வெளியில் பேசுகிறவர்கள் - உள்ளே ஆதிக்க திராவிடக் கூட்டத்தினராகவோ (தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் என்று படிக்கவும்), அல்லது அவர்களது மூலைச்சலவைக்கு பலியானவர்களாகவோ இருப்பதுதான் இயல்பு.

      எனவே, மருத்துவரின் முற்போக்கு கருத்துகள் 'காமெடி ஆவதும்' இயல்பானதே.

      நீக்கு
    3. ஓகே....இந்த பதிவும் இங்கேதான் இருக்கும்...நீங்களும் நானும் அடுத்த தேர்தலில் இதே பதிவுலகில் இருந்தால் அப்போது இந்த பதிவை தூசி தட்டாமலே பார்போம்...ராமதாஸ் என்ன செய்கிறார் என்று !அப்புறம் ஊடக வலிமை ராமதாசுக்கும் இருக்கிறது...

      நீக்கு
  28. புதிய அரசியல் புதிய நம்பிக்கை” என்ற தலைப்பில் பாமக ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்.

    http://www.thepmk.in

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....