07 மார்ச் 2012

நேரு குடும்பத்திலிருந்து மிஸ் ஆக போகும் ஒரு பிரதமர்?


அடுத்த பிரதமர் ஆஹா ஓஹோ என காங்கிரஸ் கட்சியினரால் புகழப்பட்ட ராகுல் காந்தி மீண்டும் மண்ணை கவ்வி இருக்கிறார் உத்திர பிரதேசத்தில்....

மாங்கு மாங்குன்னு தாடியை கூட சேவ் பண்ண நேரம் இல்லாமல் உத்திரபிரதேசத்தில் ரவுண்ட் அடித்தார் ராகுல்...ஏழைகளின் வீட்டில் படுத்து உறங்கினார்...அவர்களுடன் உணவருந்தினார் ....பட் ...பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என கூறி அவரை வழி அனுப்பி வைத்து விட்டனர் உ பி மக்கள்....

ஏதோ ஒண்ணு ராகுலை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது....உடன் வரும் லேப் டாப் ஆசாமிகளா....இல்லை அவரின் அணுகுமுறைகளா,அவரின் பேச்சுக்களா ?தெரியவில்லை...ஆனால் ராகுல் அதை தெரிந்து கொண்டு மாற்றா விட்டால் நேரு குடும்பத்திலிருந்து ஒரு பிரதமர் மிஸ் ஆவது நிச்சயம்....

உபியில் மக்களின் உணர்வுகளை மதிக்காத ,தனக்கு தானே சிலைகளை திறந்து கொண்ட மாயாவதியை மக்கள் புறக்கணித்து விட்டனர்...இதை தமிழ்நாட்டுக்கும் உதாரணமாக ஆட்சியாளர்கள் நினைத்தால் நல்லது....


ஒருவேளை மக்களை வசிகரிக்கும் சக்தி ராகுலைவிட பிரியன்காவுக்குதான் அதிகமா என தெரியவில்லை....ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி கண்டிப்பாக களம் இறங்குவர் என எதிர்பார்க்கலாம்....காங்கிரஸ் கட்சிக்கு வேற வழி?


இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் மண்ணை கவ்வி இருக்கிறது......கோவாவை இழந்து இருக்கிறது...உபியில் நான்காம் இடம்...பஞ்சாபில் பாதி, உத்ரகாண்டில் இழுபறி..மணிப்பூரில் மட்டும் வெற்றி ....அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அலையிலே பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டது காங்கிரஸ்...

மாநிலத்துக்கு ஒரு அரசியல் பண்ணும் கம்யுனிஸ்ட் கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களிலும் ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியவில்லை...இனி மூன்றாவது அணி, ஏழாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை....


இனியாவது மத்தியில் ஊழல் குறைந்த ! நிர்வாகத்தை தந்தால் மட்டுமே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும்....இல்லாவிட்டால் சிங்கமே இல்லாத காட்டில் நரிகள் கோலோச்சும் நிலைதான் ஏற்படும்....

7 கருத்துகள்:

  1. மாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க..கடைசீல ஒரு டவுட்டு...அது என்ன சிங்கம் இல்லாத நாட்டுல...அப்போ ஹஹா!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. அட... நீவேற காமெடி பண்ணிக்கு..ராகுலாவது பிரமதமராவது

    பதிலளிநீக்கு
  3. ஹல்...லோ எச். ஜூஸ் மீ... யாரு சிங்கம்??? யாரு நரின்னு??? சொல்ல....வே இல்ல?

    பதிலளிநீக்கு
  4. ஸலாம் சகோ.ஹாஜா,
    ///தனக்கு தானே சிலைகளை திறந்து கொண்ட///
    ஹி...ஹி... அவரின் சின்னத்துக்கும் ஆங்காங்கே சிலை வைச்சிட்டாரே....
    அருமையான அலசல். நன்றி.

    இனி, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் மாயாவதியை உ.பி முதல்வராக்குவார் முலாயம் என்ற நம்பிக்கை மாயாவதிக்கு இருக்கோ இல்லையோ.... எனக்கு உண்டு...!

    ஏனெனில், போட்டியிட்ட நரிகளில் எந்த நரியின் ஊழல் நாற்றம்
    மக்களுக்கு மறந்து விட்டதோ அந்த நரியே வெற்றி பெற்று இருக்கிறது...! தட்ஸ் ஆல்..! சிங்கம் எல்லாம் செத்து போயி ரொம்ப நாள் அச்சே சகோ..!

    (சிங்கம் - எனது அருஞ்சொற்பொருள் :
    ஊழலற்ற, எளிமையான, மக்கள் நலனில் மட்டுமே அக்கறை பூண்ட ஒரு நல்ல உள்ளம் கொண்ட கண்டிப்பான நேர்மையாளர்)

    சகோ ஒரு சவால்..!
    கோலோச்சும் ஒரு 'சிங்கத்தை'யாவது காண்பியுங்களேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸ்ஸலாம் சகோ...நான் சொன்னது வேற அர்த்தத்தில் சகோ....சிங்கம் என்றால் நல்லவர்கள் என்று அர்த்தமில்லை...இருக்கும் அயோக்கியர்களில் கொஞ்சம் நல்லவர்கள், கொஞ்சம் மதசார்பற்றவர்கள்....

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....