ரோசாப்பு சின்ன ரோசாப்பு , ஆனந்தம் ஆனந்தம் பாடும்
இதெல்லாம் எந்த படத்துல உள்ள பாட்டுன்னு தெரியுதா?
கண்டிப்பா எல்லாருக்கும் தெரியும்......
சில வருடங்களுக்கு முன் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய இந்த பாடல்களை யாராலும் மறக்க முடியாது.....
இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்தான் நம்ம எஸ் ஏ ராஜ்குமார்.....
சின்னபூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் மெலடி பாடல்களின் மன்னராக திகழ்ந்தார்...( ஒரு சில படங்களில் மட்டும்தான்)
ஒரு படத்துக்கு ஒரே ஒரு டியுன் தான் போடுவார்....அந்த டியுனை வைத்தே அந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்து விடுவார்.....எவ்ளோ பெரிய சாதனை இது...!
அப்படிப்பட்ட இவரை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை......
ஆனாலும் இவரது லாலா லாலா லலலலா ( ராகத்தோடு பாடவும்) ஹம்மிங் இப்போதும் பிரபலம்தான்......
அடுத்து நம்ம தேவா.....
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்.....
வருடத்துக்கு இருபது, முப்பது படத்துக்கு எல்லாம் இசை அமைத்தவர்.....
பாட்சா படத்துக்கு இசை அமைத்து பெரும் புகழ்பெற்றவர்.....
அடுத்த படத்தில் உள்ள பாடல்களை, பாப் இசை ஆல்பங்களை எந்த வித சங்கடமும் இல்லாமல் திருடி தனது சொந்த டியூன் போல இசை அமைத்தவர்....
கானா பாடல்கள் என்றால் தேவாதான் என்று சொல்ல வைத்தவர்....( அதையும் வேறு யாரிடம் இருந்துதான் சுட்டிருப்பார்.....)
அப்படி இருந்த தேவாதான் இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.....
Tweet |
ஒரு படத்துக்கு ஒரே ஒரு டியுன் தான் போடுவார்....அந்த டியுனை வைத்தே அந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்து விடுவார்.....எவ்ளோ பெரிய சாதனை இது...!///
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை.
S.A.ராஜ்குமார் என்ற பெயரில் இருந்தாலும் அவர் ஒரு முஸ்லிம்.
தேவாவிற்கு அந்த பெயரை சூட்டி சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? நம்ம பசுநேசன் தான். தனது மனசுக்கேத்த மகராசா படம் மூலம் இதை செய்தார். ஆனால் அதற்க்கு முன்பே மாட்டுக்கார மன்னாரு என்ற படத்திற்கு இசையமைத்த அனுபவமும் தேவாவிற்கு உண்டு.
ஒரு பதிவு படிக்கலாம்னு வந்தா இரண்டு இருக்கு...பின்னூட்டத்துல ஒரு பதிவு இருக்கு..நன்றி ஹாஜா..நன்றி ரஹீம்,,,
பதிலளிநீக்குகாணமல்// கால காணும் போட்டுருங்க
பதிலளிநீக்குகாப்பி அடித்து டியூன் போட்டால் காணாமல்தான் போவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் ஆனால் தேவாவின் கானா பாடல்களை மறக்க முடியாது...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே......
பதிலளிநீக்கு