25 டிசம்பர் 2010

சில ஏன் கேள்விகள்? உங்களுக்கு பதில் தெரியுமா?


மியூசிக் சேனல் எல்லாவற்றிலும் பாடலை விரும்பி கேட்கும் நேயர்களும் சரி, நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் சரி, யாரோ எழுதி யாரோ இசை அமைத்து யாரோ பாடிய பாடலை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு அர்பணிக்க சொல்கிறார்களே அது ஏன்?



தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக வரும் எல்லாரும் நான் இந்த நிகழ்ச்சியை விடாமல் தொடர்ந்து பார்ப்பேன் என்று அண்டபுளுகு புளுகுகிறார்களே...அது ஏன்?



புதுசாக படம் இயக்கம் இயக்குனர்குளும் சரி, பிரபலமான இயக்குனர்களும் சரி தங்களது படத்தை பற்றி சொல்லும்போது இது ஒரு வித்தியாசாமான படம், புதுமையான கதை என்று கதை விடுகிறார்களே அது ஏன்?



எல்லா தொலைகாட்சிகளும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என விளம்பரம் பண்ணும்போது ,பகுத்தறிவாதி !!!!கலைஞரின் தொலைக்காட்சி மட்டும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என பீலா விடுவது ஏன்?



பெரும்பாலும் சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்று விடும் என்று கூறுகிறார்களே அது ஏன்?



எவ்வளவு பாராட்டு விழா நடத்தினாலும் சலிக்காமல் கலந்து கொண்டுவிட்டு, தனக்கு இதெல்லாம் பிடிக்காது எனவும் ,தொடர்ந்து வலியுறுத்தி யதால்தான் தான் கலந்து கொண்டேன் எனவும் கருணாநிதி பிகு பண்ணுவது ஏன்?

தினகரன்பேப்பரில் மட்டும் டெய்லி எங்காவது ரிப்பன் வெட்டிக்கொண்டு தயாநிதிமாறன் போஸ் கொடுக்கிறாரே ...அது ஏன்?



இதற்கெல்லாம் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.....


8 கருத்துகள்:

  1. அது ஏன் ஏன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்
    நன்பரே!!!!!!!!!

    எல்லாம் ஒரு விளம்பரம் தான்

    பதிலளிநீக்கு
  2. இதெற்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் இருக்கே. அது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதானே!
    அதுதான்

    // பம்மாத்து // :))

    பதிலளிநீக்கு
  3. நீங்க ஒரு அப்பாவி

    பதிலளிநீக்கு
  4. நல்லது நான் அப்பாவியாகவே இருந்துட்டு போறேன்....

    பதிலளிநீக்கு
  5. எல்லாவற்றுக்கும் என் பதில், செந்தில் ஸ்டைலில் சொன்னால்

    "ஒரு விளம்பரம்...."

    பதிலளிநீக்கு
  6. சச்சின் சதம் குறித்த கேள்வி தவிர்த்து மற்ற அனைத்தும் அருமை... தீபாவளி என்று சொன்னால் மூடநம்பிக்கையாம்... தீப ஒளின்னு சொன்னா பகுத்தறிவும்...

    பதிலளிநீக்கு
  7. நன்றி philosophy பிரபாகரன்......
    சரியாக விளையாடாமல் தோற்றுவிட்டு சச்சினை குறை கூறுவார்கள்.....அதனால் அதை சேர்த்தேன்.....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....