கரன்சி நோட்டில் கிறுக்கும் கிறுக்கர்கள் நம் நாட்டில் தான் உண்டு.....
கரன்சி நோட்டில் காதலை எழுதுவது, நட்பை பற்றி எழுதுவது, கெட்ட வாரத்தைகளை எழுதுவது என அநாகரிகமாக பணத்தை இங்குதான் பயன் படுத்துகின்றனர்.....அட கரன்சி நோட்டில் எழுதும் காட்டுவாசிகலே உங்களுக்கு வேறு பேப்பரா கிடைக்கவில்லை கிறுக்குவதற்கு?
நூறு ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் தயவு செய்து அடுத்த பக்கம் திருப்பி பார்க்காதீர்கள் என எழுதி இருந்தது.....நானும் விட்டு தொலைந்து இருக்கலாம்.....ஆனால் திருப்பி பார்த்தேன்....அச்சில் எழுத முடியாத கெட்ட வார்த்தைகள் அதில் இருந்தது.....ஏண்டா அதை பார்த்தோம் என ஆகிப்போனது.....
நான் மலேசியாவில் நாணயம் மாற்றும் கடையில் வேலை பார்க்கும்போது நம் நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த மலேசிய நாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய நாட்டு கரன்சிகளை மாற்றுவதற்காக கொண்டு வருவார்கள்.....எல்லா கரன்சிகளிலும் ஏதாவது கிறுக்கி இருக்கும்.....அவர்கள் கேட்பார்கள் இப்படி கிறுக்கி இருக்கிறதே இது எப்படி உங்கள் நாட்டில் செல்லுகிறது....என்று....
நான் ஹி ஹி என்று இளித்துக்கொண்டே சமாளிப்பேன்.....எங்கள் நாட்டில் எல்லாமே செல்லும் உண்மையும், நேர்மையும் தவிர என்று மனதிற்குள் எண்ணி கொள்வேன்.....
கரன்சியில் எழுதும் காட்டுவாசிகள் என்று திருந்துவார்கள்?
Tweet |
எங்க எங்க எழுத கூடாதோ அங்கே வலிய போய் எழுதுவது தானே நம்ம பண்பாடு ...
பதிலளிநீக்குஉங்கள் கூற்று சரிதான். காதல் கவிதை முதல் செல் எண்கள் வரை அதில் பார்க்கலாம்.
பதிலளிநீக்கு//எங்கள் நாட்டில் எல்லாமே செல்லும் உண்மையும், நேர்மையும் தவிர//
பதிலளிநீக்கு:)))))
//எங்கள் நாட்டில் எல்லாமே செல்லும் உண்மையும், நேர்மையும் தவிர//
பதிலளிநீக்குமானக்கேடான உண்மை
கரன்சி நோட்டும்,பொதுக்கழிப்பிடமும் நம் நாட்டில் இலக்கியம் வளரும் இடங்களில் முக்கியமானவை.
பதிலளிநீக்குநம்ம நாட்டில் பணத்தை ஒரு மல்டி பர்பசாகவே உபயோக படுத்துகிறார்கள். கவிதை எழுத, போன் நம்பர் எழுத, ஒரு படத்தில் காதல் கடிதமே எழுத பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் வெளிநாட்டை பொறுத்தவரை நிலைமையே வேறு, அந்த இடத்தில் பின் கூட அடிக்க கூடாது அப்படி அடித்தால் அந்த பணம் செல்லவே செல்லாது, வங்கிக்கு போனால் கூட....
பதிலளிநீக்குஅதே போல நம்ம நாட்டிலும் அரசாங்கம் அறிவித்தால் நல்லது.
கரன்சி நோட்டும்,பொதுக்கழிப்பிடமும் நம் நாட்டில் இலக்கியம் வளரும் இடங்களில் முக்கியமானவை.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை....
//...எங்கள் நாட்டில் எல்லாமே செல்லும் உண்மையும், நேர்மையும் தவிர என்று மனதிற்குள் எண்ணி கொள்வேன்.....//
பதிலளிநீக்கும்ம்.... நல்லா சொன்னீங்க!!!
//கரன்சியில் எழுதும் காட்டுவாசிகள் என்று திருந்துவார்கள்?//
பதிலளிநீக்குகேள்விக்குறியாகவே...........
பகிர்வுக்கு நன்றி நண்பரே
இதில் காதலர்கள் செய்யும் அட்டகாசம் தான் ரொம்ப டூ மச்... அவங்களோட பெயர் இந்தியா பூரா பயனிக்கனுமாம்... எல்லாம் சினிமா கற்றுத்தந்த வேலை...
பதிலளிநீக்குகண்டிக்க வேண்டிய விஷயம் தான், நம் நாட்டு மக்களின்
பதிலளிநீக்குபக்குவமற்ற மனநிலையைக் காட்டுகிறது.
நன்றி நண்பர்களே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும்.....
பதிலளிநீக்குஉங்கள் கருத்ததுக்கு நன்றி
பதிலளிநீக்கு