03 டிசம்பர் 2010

ரஜினி.....தமிழ் சினிமாவின் சகாப்தம்....

ரஜினி என்னும் காந்த பெயர் தமிழ்நாட்டில் எல்லாரையும் வசீகரித்து கொண்டு இருக்கிறது.......எந்திரன் படத்தின் வெற்றி அவருக்கு மேலும் ஒரு மகுடத்தை சூட்டியுள்ளது....அவரின் பிறந்த நாளுக்கு சில நாட்கள் இருக்கும் வேலையில் அவரின் வாழ்கையை கொஞ்சம் திரும்பி பாப்போம்......
.
ரஜினிகாந்த், டிசம்பர் 12 ,1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினியின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த அவர் நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை நிரூபித்தார்..
ரஜினி நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினி நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகியும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜி படமும் மெகா ஹிட் ஆனது......


இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே நடித்து புகழ் பெற்றார் ரஜினி.... . தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், , வங்காள மொழி,மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
அவரின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.....

ரஜினி சில சமயங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தாலும் அவர் சினிமாவில் அடைந்த வெற்றி பாராட்ட தக்கதே.....அந்த வகையில் தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் ரஜினிதான்...........



3 கருத்துகள்:

  1. ஆங்கிலபடத்துலையும் நடிச்சதா சொன்னாங்களே? :)

    நல்ல தொகுப்பு சகோ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ரஜினியின் பிறந்தநாளுக்கு முன்பாகவே வந்திருக்கும் நல்ல பதிவு . அடுத்த காணாமல் போனவர்கள் பதிவு எப்போது?

    பதிலளிநீக்கு
  3. ஆம் ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.....உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....