16 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)


நல்லி எலும்பை கடித்து துப்புவதில் இவருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்........


ரம்பாவையே தோற்கடிக்கும் அளவிற்கு தொடை தட்டி நடித்து புகழ் பெற்றவர்.......


சண்டைகாட்சியில் வில்லன்களை எலும்புகளை கடிப்பதுபோலவே அடித்து நொறுக்குவார்......


மீசையை கூட ஆட்டுகிடா மீசைபோல வைத்து நடிப்பார் நம்ம ஆளு......


ராஜ்கிரண் என்று சொன்னால் கருவில் இருக்கும் ஆடு கூட அலறும்.....


என் ராசாவின் மனசிலே என்ற வெள்ளிவிழா படத்தின் மூலம் அறிமுகம்....

ஆனால் அதற்க்கு முன்பே சில படங்களை தயாரித்தும்,கவுரவ வேடத்தில் நடித்தும் உள்ளார்......வடிவேலுவை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.....


அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து உச்சத்திற்கு சென்றார்.....இவரது கால்சீட்டுக்கு வரிசையில் நின்றனர் பல தயாரிப்பாளர்கள்......தக்காளி தொலைச்சு புடுவேன் என்பது இவரது புகழ் பெற்ற வசனம்....இந்த வசனம் இன்று வரை டிவியில் மிமிக்ரி பண்ணுபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.....


குடும்பபாங்கான இவரது படம் மக்களை வெகுவாக கவர்ந்தது......அப்படியே நடித்து இருக்கலாம்..... ஆசை யாரை விட்டது.....

அதுவரை தொடை தெரியும்வரை வேட்டியை மடித்துக்கொண்டு நடித்தவர் பாசமுள்ள பாண்டியரே என்னும் படத்தில் பேன்ட் ஷர்ட் போட்டு நடிக்க ஆரம்பித்தார் ....அன்று பிடித்த சனி இன்று வரை விடவே இல்லை....


எவ்வளவு சீக்கிரம் மேலே போனாரோ அதவிட சீக்கிரமாக கீழே இறங்கினார்....அவரது மணவாழ்க்கையும் சரியாக அமையாமல் முதல் மனைவியை பிரிந்து வேறு திருமணம் செய்துள்ளார்.....அவரது கஷ்டகாலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு அவரை திரும்பிகூட பார்க்கவில்லை ......


தயாரித்து நடித்த படங்கள் தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியதால் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்......

ஹீரோவாக உச்சத்தில் இருந்து சில வருடங்களிலேயே மார்கெட் இழந்து குணசித்திர வேடங்களில் நடித்தவர் எனக்கு தெரிந்து இவராகத்தான் இருக்க முடியும்......

8 கருத்துகள்:

  1. உங்களின் காணமல் போனவர்கள் பட்டியலில் விரைவில் இளைய டாக்குட்டறு விஜயும் சேர்வார் என்று நம்புகிறேன் .

    பதிலளிநீக்கு
  2. என்றைக்கும் எவர் க்ரீன் தான் ராஜ்கிரண்....

    பதிலளிநீக்கு
  3. ராஜ்கிரண் என்று சொன்னால் கருவில் இருக்கும் ஆடு கூட அலறும்.....
    super

    பதிலளிநீக்கு
  4. //ஹீரோவாக உச்சத்தில் இருந்து சில வருடங்களிலேயே மார்கெட் இழந்து குணசித்திர வேடங்களில் நடித்தவர் எனக்கு தெரிந்து இவராகத்தான் இருக்க முடியும்...//

    உண்மைதான் நண்பரே....

    பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  5. இப்பவும் நடிச்சிட்டு தானே இருக்காரு மனுஷன்...

    பதிலளிநீக்கு
  6. //ராஜ்கிரண் என்று சொன்னால் கருவில் இருக்கும் ஆடு கூட அலறும்.....


    தக்காளி பயங்கரமான ஆளு(தக்காளி என்று அவர் சொல்லமாட்டார் அது - வக்காளி- இது ஒரு கெட்டவார்த்தை

    பதிலளிநீக்கு
  7. நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்....ஹீரோவாக இல்லை என்றுதான் சொன்னேன்.....
    கருத்துக்கு நன்றி நண்பர்களே.....

    பதிலளிநீக்கு
  8. வக்காளி- இது ஒரு கெட்டவார்த்தை
    அதனால்தான் நான் அதை எழுதவில்லை....நண்பரே....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....