08 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்( ஐந்து)


நான் வச்சு இருக்கிறது தாடி

என்னய தவிர எல்லாரும் கேடி


நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது காந்தி

எனக்கு பிடிச்ச ஸ்வீட் பூந்தி....


என்னோட முடி பரட்டை

நான் தூங்கினா விடுவேன் குறட்டை......


இது மாதிரி லூசுத்தனமான அடுக்கு மொழி வசனங்களை பேசி பிரபலமானவர் நம்ம ஆளு.....


யானை வரும் பின்னே ,மணி ஓசை வரும் முன்னே என்பது போல

இவர் வருவதற்கு முன்னாடியே இவரது தொந்தி வந்துவிடும்......


ஒரு தலை ராகம் என்னும் மெகா ஹிட் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் இவர்.....

உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி போன்ற பல வெற்றி படங்களை குடுத்தவர்.....


இவர் முடிய ஆட்டிகிட்டு அடுக்கு மொழி வசனத்தை பேசும்போது சிரிப்பதா ,இல்லை அழுகுவதா என நமக்கு தலை சுற்றல்தான் வரும்....


சினிமா தந்த புகழ் இவரை அரசியலிலும் இழுத்தது.....எம்ஜியாரை எதிர்த்தே அந்த காலத்தில் அரசியல் பண்ணினார்......


இவரின் அடுக்குமொழி தொல்லை தாங்காமல் மக்கள் இவரது படங்களை ஓரம் கட்ட ஆரம்பித்தனர்......


இடையில் திமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.....பின்பு திமுகவில் இருந்து வெளியாகி லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்னும் பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார்.....


பாவம் அதில் அவர் மகன் சிம்பு கூட உறுப்பினர் ஆகவில்லை.....

இந்த வயசிலும் அப்பா தொந்தியை தூக்கி கொண்டு டூயட் பாடுகிறாரே என்ற கடுப்பு அவர் மகனுக்கு.........இப்போது அவர் கட்சி இருக்கா இல்லையானு ஸ்காட்லான்ட் யார்டு போலீஸ் தான் வந்து கண்டு பிடித்து சொல்ல வேண்டும்......

பேரு சரி இல்லைன்னு சொல்லி தனது பேரையும் மாற்றி பார்த்தார்.....ஒருவேளை அவர் தனது தாடியை எடுத்தால் அவர் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை கூட கூடும்...


இடையே வீராசாமி எனும் படத்தில் நடித்து மக்களை மிரட்டியும் வந்தார்.....


உங்களுக்கு யாராவது எதிரி இருந்தால் அவருக்கு வீராசாமி படத்தின் கேசட்டை அனுப்பிவிடுங்கள்.....அந்த தண்டனை போதும்.....


இப்போது என்ன செய்கிறார்னு அவருக்கே தெரியாது......ஒருவேளை அவரது வீட்டில் இருந்து கொண்டே மீட்டிங்கில் பேசுவது போல கருணாநிதியையும்,விஜயகாந்தையும் ரஜினியையும் திட்டி கொண்டிருப்பார்.......

10 கருத்துகள்:

 1. //பாவம் அதில் அவர் மகன் சிம்பு கூட உறுப்பினர் ஆகவில்லை//
  ha ha :-)

  பதிலளிநீக்கு
 2. ஆகா என்ன படம்பா அது! பயந்துட்டேன்! :-)

  பதிலளிநீக்கு
 3. தம்பி ஹாஜா !
  என்னை கிண்டல் பண்ணாதே ராஜா !
  நான் ஆயிரத்தில் ஒருவன் !
  பொறுத்து இருந்து பாரு வருவேன் !
  என் உடம்பை பாரு கெட்டி !
  கலைஞர் என்னை வைத்து விட்டார் கட்டி !
  என் மகன் பேரு சிம்பு !
  ஊரில் இழுக்குறான் அவன் வம்பு !
  பெண் என்றால் அவன் ஆகிடுவான் புலி !
  என் மீது விழுகிறது பலி !
  இவன்தான் என் புதல்வன் !
  அடுத்து நாந்தான் முதல்வன்.!

  டி ஆர் .இப்படித்தான் எங்க ஊரு டீ கடையில் தினமும் பேசிக்கிட்டு இருக்கார்

  பதிலளிநீக்கு
 4. புலி உடம்புலே பூனை முகத்தை ஒட்டி இருக்கியளே இது நியாயமா ? ஓ...இதான் டெர்ரர். ..ரா.. ரா

  பதிலளிநீக்கு
 5. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பர்களே.....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....