15 டிசம்பர் 2010

சூர்யாவா.....விக்ரமா?


நடிப்பு என்று வந்துவிட்டால் கோலிவுட்டில் இரண்டு மாஸ் ஹீரோக்களுக்கு இடையே வெளியே தெரியாத கடும்போட்டி எப்போதுமே உண்டு.

அந்த இரண்டுபேர் சியான் விக்ரம்- சூரியாவுதான். பிதாமகன் படத்தில் விக்ரம் வசனங்களே இல்லாமல் கலக்குவார் என்றால், சூரியா வசனங்களை உச்சரித்து நடித்த வகையில் சத்திவேல் பாத்திரமாகவே மாறியிருந்தார். அந்தப்படத்துக்குப் பிறகு யார் கண் பட்டதோ இப்போது அவர்கள் நட்பில் விரிசல்! ஆனால் தங்களுக்குள் இருக்கும் நடிப்பு போட்டியை மட்டும் அவர்கள் விடத்தயாராக இல்லை.


சூரியாவின் இப்போதைய இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேசிய விருது வாங்கியே தீருவது என்பதுதான். இதற்காக மிஷ்கின், சுப்ரமணியபுரம் சசி, அமீர் ஆகியோரிடம் அதுபோன்ற ஃபெர்பாமென்ஸ் ஓரியண்டெட் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறாராம் சூரியா.

சூரியாவின் இந்த கேரக்டர் ஹன்டிங் ஒருபக்கம் இருக்க, சூரியா. ஏற்கும் கேரக்டருக்கு கொஞ்சமும் சளைக்காத கேரக்டர்களை தேடி நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் விக்ரம்.


7-ஆம் அறிவில் சூரியா ஒரு ஹேண்டிஹேப்டு மனிதராக இருந்து தனது தொடர் முயற்சிகளால் சக்கஸில் சாதனைகள் செய்ய்யும் ஒரு இளைஞராக நடிக்கிறாராம். சூரியாவின் இந்தக் கேரக்டருக்கு ஃபேர்பாமென்ஸ் ஓரியண்டெட் ஆக கொஞ்சம் குறைவில்லாத ஒரு கேரக்டரை சூரியா தேடிய போதுதான் தெய்வமகன் படத்தின் கேரக்க்டர் கிடைக்க, அதை பட்டென்று பிடித்துக் கொண்டு விட்டார் விக்ரம்.

இப்போது 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க சூரியா சம்மதித்துவிட்டதால் சூரியாவின் இந்தக் கேரக்டருகு பதில் சொல்கிறமாதிரி விக்ரம் ஒரு கேரக்டரை தேடிப்பிடிப்பார் என்று என்பது மட்டும் நிச்சயம்.

5 கருத்துகள்:

  1. சூர்யாதான் அடுத்த கமல்! :-)

    பதிலளிநீக்கு
  2. ஆரோக்கியமான போட்டி வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. இங்கு யாரும் அடுத்த கமல் கிடையாது.............
    கமல் கமல் தான்.....
    முயற்சி செய்தால் யராவது ஒருவர் கமலின் அருகில் செல்ல முடியும் ஆனால் கமலின் உஇடத்திற்கு வருவது நடக்காது.
    இங்கு சூர்யா, விக்ரம், மட்டுமல்ல ஜீவா போன்றோரும் அடக்கம்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....