11 டிசம்பர் 2010

மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி


மரண பயமற்ற வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் 40, 50 வயதைக் கடந்தவர்கள் - அவர்கள் எவ்வளவு நல்ல உடல் நலம் பெற்றிருந்தாலும் - பின் மனதில் இந்த மரண பய ரேகை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாக்குக்கு ஏற்ற உணவு, நேரத்தில் உணவு உட்கொள்ளும் வாய்ப்பு, போதுமான தூக்கம், காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் ஆகியன இருந்தும், நாம் வளர்த்த உடலையே நம்ப முடியாத ஒரு வாழ்க்கை பலருக்கும் உள்ளது.

எனவே மரண அச்சத்தை தாண்டிய உறுதியான உள்ளம் பெற ஒரு வழி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மரண அபாயம் (Risk of Death) யாருக்கெல்லாம் அதிகம் உள்ளது என்பது குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அளவு கோல்களில் மிகவும் நம்பத்தக்கதாக கருதப்படுவது உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI).


இதைப்பற்றி தெரிந்துகொள்வது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.......


உ.எ.கு. என்பது ஒருவருடைய உடல் எடையை, அவருடைய உயர அளவை (மீட்டரில்) வர்க்கமாக்கினால் (Square) வரும் எண்ணைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவை, 100ஆல் பெருக்கினால் வருவதே அவருடைய உடல் எடைக் குறியீடாகும். உதாரணத்திற்கு ஒருவருடைய எடை 80 கி.கி., உயரம் 1.82 மீட்டர் என்றால், அவருடையை உடல் எடைக் குறியீடு கீழ்கண்டவாறு அளவிடப்பட வேண்டும்:

1.82 x 1.82 = 3.31

80 / 3.31 = 24.17

இந்த 24.17 என்பதே அந்த நபரின் உடல் எடைக் குறியீடாகும். இவர் நமது நாட்டின் கணக்குப்படி நல்ல சத்துணவு சாப்பிட்டு நலமாக இருப்பவர்.

ஆனால் அயல் நாடுகளில் இவரை நல்ல உடல் நலத்தோடு உள்ளவர் என்று கூறுவது மட்டுமின்றி, இவருக்கு மரண அபாயம் (Death Risk) இல்லாதவர் என்றும் கூறுகின்றனர்.


FILEஇங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உ.எ.கு. 20 முதல் 24.9 வரையிலுள்ளவர்கள் மரண அபாயமற்றவர்கள் என்றும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்களை மரண அபாயமற்றவர்கள் என்றாலும் கூட, அவர்கள் கூடுதல் உடல் எடை கொண்டவர்களாக உள்ளதால் அந்த அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்றும், 30க்கும் அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புடல் கொண்டவர்கள், மரண அபாயம் அதிகமுள்ளவர்கள் என்றும், 35க்கும் அதிகமான உ.எ.கு. கொண்டவர்கள் மரண ஆபத்து மிக அதிகமானவர்கள் என்றும் கூறியுள்ளது.

ஐ.நா.வின் உலக நல அமைப்பு (World Health Organization - WHO) 18.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களை நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் என்று கூறுகிறது. இது சத்துணவின்படியும், மரண அபாயமற்ற நிலையிலும் சரியான எடையாக கொள்ளப்படுகிறது. பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் 20 முதல் 24.9 வரை உடல் நலத்திற்கான அளவாக கொள்கின்றன.

அமெரிக்காவின் தேச புற்றுநோய் கழகமும், தேச நல்வாழ்வுக் கழகமும் உ.எ.கு. 30க்கும் அதிகமானவர்கள், அதாவது எடை மிக அதிமாக உள்ளவர்கள், உடல் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் (Obesity) உடல் நலக் கோளாறு அல்லது மரண ஆபத்து அதிகம் உள்ளவர்களெனக் கூறுகின்றனர்.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல், 22.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. உள்ளவர்கள் (சாராசரியான) நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட உ.எ.கு. உள்ளவர்கள் மரண அபாயமுடையவர்களாக இருப்பதையும் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோய், இதய நோய், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் அதிகம் பேர் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களே என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் அளவை உ.எ.கு. பெருமளவிற்கு சரியாக காட்டும் கண்ணாடியாகவே உள்ளது என்பது பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கருத்தாக உள்ளது.

படித்ததை பகிர்ந்துள்ளேன்........

4 கருத்துகள்:

  1. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளே மிகவும் சுவையானவை.அது தான் பிரச்சனையாக உள்ளது .நன்றி.

    பதிலளிநீக்கு
  2. BMI பற்றியெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்... மெத்த படித்தவரோ...

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர்களே.....
    நான் மெத்த படித்தவன் எல்லாம் அல்ல.....நான் படித்ததை பகிர்ந்து உள்ளேன்....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....