சென்னையில் குப்பைகளில் இருந்து பொறுக்கப்படும் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரைகளை, புதிதுபோல் மாற்றி விற்பனை செய்த போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காலாவதியான மருந்துகளை விற்பனை செய்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பழைய செய்திதான்.....சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது....
இதில் சம்பந்தப்பட்ட மீனாட்சி சுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....
அதன் பிறகு தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது......போலி மருந்துகளை விற்பனை செய்தவர்கள் அதை வீதிகளில் அள்ளி கொட்டினர்.....சில பேர் மாட்டிகொண்டனர்....நாமும் இனிமேல் இதுபோன்று காலாவதியான மருந்துகளை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள் என நினைத்து நிம்மதியாக இருக்கிறோம்....
ஆனால்
இப்போது அம்மாதிரியான காலாவதி மருந்துகள் புழக்கத்தில் இல்லை என அரசு அறுதியிட்டு உறுதியாக கூறமுடியுமா?
முடியாது....சில சம்பவங்கள் நடந்தால்தான் அதற்க்கு தீர்வு கிடைக்கின்றன.....
ஆனால் அதுவும் நிரந்தர தீர்வு இல்லை......
இப்போது அதிகாரிகள் ரெய்டு நடத்தினாலும் பெரும்பாலான மருந்துக்கடைகளில் காலாவதியான மருத்துகளை வண்டி வண்டியாக அள்ளலாம்......
காயம் ஏற்பட்டு மருந்து போடுவதற்கு பதிலாக காயமே ஏற்படமால் இருப்பதுதானே புத்திசாலித்தனம்....
மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற விசயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.....
வாரம்தோறும், அல்லது குறைந்தபட்சம் மாதம் தோறும் ஒருதடவையாவது அதிகாரிகள் மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினால்தான் இதற்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.....
ஒருவேளை காலாவதியான மருந்து சாப்பிட்டு நான்கு பேர் மரணம் என்று சம்பவங்கள் நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமோ?
அரசை விடுங்கள் ...நாமும் இதுபோல சம்பவங்கள் நடந்தால்தானே விழிப்புடன் அதை திரும்பி பாப்போம்....!!!!!! கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல.....
Tweet |
well said
பதிலளிநீக்குபடிக்க ஆரம்பித்தபோது காலாவதி பதிவோ என்று எண்ணினேன்... நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...
பதிலளிநீக்குதாங்கள் பதிவிட எடுத்துக்கொள்ளும் விஷயங்களுக்காகவே உங்களை பாராட்டலாம்..
பதிலளிநீக்குGood job!! :-)
பதிலளிநீக்குநல்ல விழிப்புணர்வு பதிவு
பதிலளிநீக்கு