14 ஜூலை 2009

காமெடி கலாட்டா


கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் படத்தின் விவாத கூட்டம் ஒரு கற்பனை ............


கலைஞர்:
தம்பிகளா நம் படத்தின் ஹீரோவை முடிவு பண்ணியாச்சா
இயக்குனர்: ஒருத்தரும் வர மாட்டேன்குறாங்க தலைவரே..........
கலைஞர்: தமிழுக்கு வந்த சோதனையா இது ..........
ஆற்காடு: கவலைபடாதிங்க தலைவரே நம்ம ரித்திஸ்க்கு போன் போடுறேன்...
எதிர் முனையில் ரித்திஸ்: ஹலோ யா ரித்திஸ் ஹியர் ....நான் இப்ப ஹாலிவுட் பட சூட்டிங்க்ள இருக்கேன்.....
ஆற்காடு: யோவ் தலைவர் பேச சொன்னாருய்யா ...
ரித்திஸ்: சாரி அண்ணே .....நான் இப்ப நாடாளுமன்றத்துல இருக்கேன் ...நாளைக்கே வரேன் ...தலைவர்ட்ட சொல்லிடுங்க.....
கலைஞர்: பார்த்தாயா என் கண்மணியை ..........
இயக்குனர்: இன்னொரு ஹீரோ வேணுமே தலைவரே..........
கலைஞர்: நம்ம விநீத்துக்கு போன் போடுய்யா ........
ஆற்காடு: நம்ம கூப்பிடுவோம்னு தெரிஞ்சுக்கிட்டு அவரு கொஞ்ச நாளைக்கு சாமியாரா போய்ட்டாராம்..........
கலைஞர்: அப்படினா ரித்திஸ்க்கு டபுள் ரோல் குடுத்திடுவோம்.......
இயக்குனர்: மனதுக்குள் ( கிளிஞ்சது போ)
கலைஞர்: ஹீரோஇன் யாருய்யா .....
ஆற்காடு: நம்ம நமிதாவே போடுவோம் தலைவரே.........
கலைஞர்: ஆமாம்யா அதுதான் மச்சான் மச்சான்னு சொல்லி தமிழை நல்லா வளர்க்கும்...........
அப்போது கனிமொழி , அழகிரி,ஸ்டாலின், அழகிரி மகன் தயாநிதி ஆகியோர் அங்கு வருகின்றனர்.........
கனிமொழி: அப்பா இந்த படத்துக்கு எல்லா பாட்டும் நானே எழுதிடுறேன்ப்பா...
கலைஞர்: அப்பிடியே ஆகட்டும் என் கண்மணி............
அழகிரி: அப்பா எனக்கும் நடிக்கணும்னு ஆசையாக இருக்குப்பா ....
ஸ்டாலின்: வில்லன் வேடம் சரியாக இருக்கும் அப்பா.........
அழகிரி முறைக்கிறார்............
தயாநிதி: தாத்தா இந்த படத்தை நான்தான் வெளியுடுவேன் ..........ஆனால் பணம் பத்து வருடம் கழித்துதான் தருவேன்...............
அருகில் இருந்த தயாரிப்பாளர் தலை தெறித்து ஓடுகிறார்.............
கூட்டம் கலைகிறது......