01 டிசம்பர் 2012

போங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்கட்டியும்....!


நடுரோட்டில் ஒரு போலீஸ்காரரை நான்கு ரவுடிகள் சேர்ந்து அடித்து வெட்டி கொலை செய்கிறார்கள்....சக போலீஸால்  அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை...

இது ஏதோ படக்காட்சி அல்ல...நிஜம்..சென்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி குருபூஜை தினத்தன்று வேம்பத்தூர் பகுதியில் காவலில்ஈடுபட்டு இருந்த எஸ் .ஐ ஆல்வின் சுதன் என்பவர்தான் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டவர்...அதுவும் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில்...

ஒரு போலீசுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற அச்சத்தை இந்த சம்பவம் தமிழகம் முழுக்க ஏற்படுத்தியது...

பிறகு அந்த குற்றவாளிகளை கைது செய்தது போலீஸ்...இனி வழக்கு நடத்தி இடையில் அந்த ரவுடிகள் ஜாமீனில் வெளிவந்து இன்னும் பல பேரை போட்டு தள்ளுவார்கள்.ஏன் இந்த வேண்டாத வேலை....

இந்த மாதிரி ரவுடிகளை நடு ரோட்டில் சுட்டு தள்ள  வேண்டாமா?

அதைத்தான் செய்து இருக்கிறார்கள்...நேற்று அந்த ரவுடிகள் இருவரும் என்கவுன்டர் என்ற பெயரில்  இந்த சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்...இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கும்போதே இன்னொரு சேனலில் மனித உரிமை என்ற பெயரில் இந்த ரவுடிகளை சுட்டு கொன்றது தவறு,அவர்களுக்கு சட்டம்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என விதாண்டாவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார் ஒருவர்...

அய்யா மனித உரிமை ஆர்வலர்களே!எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்காதீர்கள்...இடம்,பொருள்,ஏவல் என்று எதற்காக நாம் தரம் பிரித்து வைத்து இருக்கிறோம்....?மரணதண்டனை வேண்டாம் என நீங்கள் கூறுவது எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய  ஒன்றா?

மனித உரிமையை காக்கிறேன் என கூறிக்கொண்டு இது போன்ற ரவுடிகளுக்கு எல்லாம் வக்காலத்து வாங்காதீர்கள் ....இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்?அந்த கொடூர ரவுடிகளுக்கு  என்ன மனித உரிமை மண்ணாங்கட்டி?இன்னைக்கு ஒரு எஸ்.ஐ யை  கொன்ற அவர்கள் நாளைக்கு யாரை வேண்டும் என்றாலும் தைரியமாக நடுரோட்டில் வெட்டி கொல்வார்கள் ...பொதுமக்கள் அந்த ரவுடிகளுக்கு அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்...மிஞ்சி மிஞ்சி போனால் சட்டம் அந்த ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்குமா?ஒருவேளை மரண தண்டனை கொடுத்தாலும்  அதையும் செய்ய விடமாட்டீர்கள்...

இந்த மாதிரி ரவுடிகளுக்கு எல்லாம் இதுபோன்ற என்கவுண்டர்தான் சிறந்த முடிவு...இந்த ரவுடிகள் களை எடுக்கப்படவேண்டியவர்கள்....

இந்த என்கவுன்டரை செய்த காவல் துறைக்கு ஒரு சபாஷ்!

அதை கண்டித்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு என்  கண்டனம்!!

மனித உரிமை ஆர்வலர்களே ...நீங்கள் மனிதர்களுக்காக மட்டுமே குரல் கொடுங்கள்...அந்த ரவுடிகள் போன்ற மிருகங்களுக்காக அல்ல!

69 கருத்துகள்:

 1. ஐ.நா சபையின் மனித உரிமை அறிக்கையின் பத்தாவது ஷரத்து இவ்வாறு கூறுகிறது, "Everyone is entitled in full equality to a fair and public hearing by an independent and impartial ribunal, in the determination of his rights and obligations and of any criminal charge against him. அவர்களை மிருகங்கள் என்று சொல்லி தீர்ப்பளிப்பதற்கு முன், அவர்கள் இவ்வாறு மாறுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்னவாக இருக்கும்? அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் இவ்வலைப்பூவில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பீர்களா? என்பதை ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐநா சபையே அநியாய சபை ஆகிவிட்டது...நீங்க வேற......கொலைகாரர்களின்,ரவுடிகளின் சூழ்நிலைகளை ஆராய்ந்து எப்ப அவர்களை திருத்துவது?அதுவரை அவர்கள் செய்யும் கொலை,கொள்ளைகளுக்கு என தீர்வு?

   நீக்கு
  2. எல்லா குற்றவாளிகளும் தான் செய்த குற்றங்களுக்கு ஒரு நியாயமான காரணத்தை வெளி உலகத்திற்கு சொல்ல வைத்து இருப்பார்கள்...அதற்காக அவர்கள் செய்த குற்றம் இல்லை என ஆகிவிடுமா?சூழ்நிலைகளை காரணம் காட்டி அதனால்தான் நான் ரவுடி ஆனேன்,கொலை செய்தேன் என கூறினால் அப்ப போலீஸ் ஏதற்கு?சட்டம் எதற்கு?

   நீக்கு
  3. அதையே தான் நானும் கேட்கிறேன். என்கவுண்டர்ல எல்லோரையும் போட்டுத்தள்ளினா சட்டம் எதுக்கிருக்கு? கோர்ட்டு எதுக்கிருக்கு?

   நீக்கு
  4. நான் எங்கே எல்லாரையும் போட்டு தள்ளனும் என சொன்னேன்...பிரபு என்கிற அந்த ரவுடிதான் அந்த ஏரியாவை மிரட்டி அடிதடி,கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன்..அவன் மேலே ஏற்கனவே பல கொலை வழக்குகள் இருக்கின்றன...அந்த எஸ்.ஐ யையும் .மேலும் சில போலீஸ்காரர்களையும் அவன் தலைமையில் அன்று தாக்கி இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தியே...அவனை சுட்டு கொன்றதில் தவறில்லை என்பதுதான் என் கருத்து

   நீக்கு
  5. இந்த என்கவுண்டர் போலியானது என்பது மேலோட்டமாகக் கவனித்தாலே தெரியும். அவ்விரு குற்றவாளிகளும் சரணடைந்துள்ளார்கள். பின்பு தப்பித்து விட்டார்களாம். அவர்கள் சரணடைந்தால் பின்பு எதற்காக தப்பிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எனவே காவல்துறையினர் தற்காப்புக்காக இந்த என்கவுண்டரை நிகழ்த்தவில்லை என்பது தெளிவு. இப்போது எனது கேள்வி என்னவென்றால் "எங்கள்ள ஒருத்தன நீ கொன்னா உங்கள்ள ஒருத்தன நான் போட்டுத் தள்ளுவேன்" என்பது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவோரின் மனப்பான்மை. இதே மனப்பான்மையை காவல்துறையும் வெளிப்படுத்தியுள்ளதால், ரவுடிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

   நீக்கு
  6. போலியாகவே இருக்கட்டும்....என்கவுண்டர் போலியா இல்லையா என்பது அல்ல மேட்டர் ...என்கவுண்டர்கள் செய்யப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள்தானே...அந்த குற்றவாளிகளுக்கு இந்த என்கவுண்டர் சரியே...

   நீக்கு
  7. //இப்போது எனது கேள்வி என்னவென்றால் "எங்கள்ள ஒருத்தன நீ கொன்னா உங்கள்ள ஒருத்தன நான் போட்டுத் தள்ளுவேன்" என்பது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவோரின் மனப்பான்மை. இதே மனப்பான்மையை காவல்துறையும் வெளிப்படுத்தியுள்ளதால், ரவுடிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்வி எழுகிறது.//

   இது போலி என்கவுண்டரானால் கொலை வழக்காகவே எடுக்கப்படும். அப்படியானால் இதை நிகழ்த்தியவர்கள் சட்டப்படி கொலைகாரர்கள், குற்றவாளிகள் தான்!!

   நீக்கு
  8. ஒரு கொலைகாரனுக்கு,ரவுடிக்கு நீங்கள் இவ்வளவு வக்காலத்து ஏன் வாங்குகிறீர்கள் என எனக்கு புரியவில்லை....!

   நீக்கு
  9. ஒரு கொலைக்கு நீங்கள் எதற்கு இவ்வளவு நியாயம் கற்பிக்கிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.

   நீக்கு
  10. நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது!

   -Ilamaran Mathivanan

   நீக்கு
  11. கொலையாகவே இருக்கட்டும்...அந்த ரவுடிகள் கொன்றது ஒரு போலீஸை ....போலீஸ் கொன்றது இரு குற்றவாளிகளை ,கொலையாளிகளை...

   நீக்கு
  12. அதைத் தான் நான் முதலிலேயே கேட்டேன். அப்படியானால் போலீசாரின் மனப்பான்மைக்கும், குற்றவாளிகளின் மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?


   நீக்கு
  13. அவர்கள் செய்தது கொலை..போலீஸ் செய்தது என்னைப்பொருத்தவரைக்கும் தண்டனை...

   நீக்கு
  14. திரு. கருப்பு அவர்களே,
   தாங்கள் கனிவுடன் கற்பித்தலையும், தண்டனையையும் ஒன்றாக நிறுக்கிறீர்கள்.
   1> ஓட்டும் வண்டி, வாகனத்தில் வேகத்தடை செயலி (Brake) தான் வைக்க முடியும் அதை பயன்படுத்தவில்லை அதனால் விபத்து ஏற்படுத்துவேன் எனில் என்ன செய்யவேண்டும்? தண்டனையா அல்லது கல்வியா?
   2> தங்களுடைய கருத்துப்படி சாலை பிரிக்கும் கோடு மட்டும் இருப்பதால் தான் வண்டி ஓட்டிகள் தவறான பாதையில் வருகின்றனர் (வர இயலுகிறது). எனவே சுவர் எழுப்ப வேண்டும்!! அதன் பிறகு சுவரினை குடைந்து வந்தால் அங்கு சுவரினை பலப்படுத்த வேண்டும். மேலும் வேறு பகுதியில் குடைந்து வந்தால் அங்கும் சுவரினை பலப்படுத்த வேண்டும் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். பிறகும் அது தொடர்ந்தால் சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்!!

   தலைவலி, மூக்கடைப்பு, கை கால் குடைச்சல், இதய அடைப்பு, கிட்னி பிரச்சினை, புற்றுநோய் எல்லாவற்றிற்கும் ஒரே முறையில் மருத்துவம் செய்ய முடியாது.

   //ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது!// இந்தியா நார்வேயாக இருக்கவும் கூடத்தான் முடியாது.

   நீக்கு
 2. ஒரு போலீஸ் செத்தா இத்தனை கோபப்படும் காவல்துரை மத்த எல்லா அரசியல் ஆதரவில் இருக்கும் இன்னும் கொன்று குவித்துகொண்டே இருக்கும் ரவுடிகளை களையெடுக்குமா?..

  போலீசுக்கு பாதிப்புனா ஒரு வேகம் அதே பொதுமக்களுக்குனா தூக்கமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருக்கு பாதிப்பு என்றாலும் நடவடிக்கை வேண்டும்..அதில் மாற்று கருத்து இல்லை...போலீஸ் என்றால் நாம் வாழும் சமூகத்தில் நம்மை காவல் காப்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது...காவல்காரர்களுக்கே காவல் இல்லை என வரும்போது இதுமாதிரிதான் நிகழும்...

   நீக்கு
 3. இது தவறான முன்னுதாரணம். தங்களுக்கு வேண்டாதவர்களையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேண்டாதவர்களையும் என்கௌன்டர் என்ற பெயரில் காவல் துறையினர் சுட்டு தள்ள ஏதுவாகிவிடும்.தங்களின் ஒரே ஒருத்தர் உயிர் போனதற்கு இப்படி பதறி நிற்கும் காவலர்கள் இவர்கள் கையால் எத்தனை அப்பாவி உயிர்களை பறித்து இருக்கிறார்கள்.அதன் வலியை இவர்களும் உணர வேண்டும்.அது சரி கலவர பகுதிக்கு ஆயுதம் கொண்டு செல்ல வேண்டாம் என்று உத்தரவு இட்ட அரசை என்ன செய்யலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சம்பவத்தை மட்டும் பாருங்கள்..அதற்குதான் இடம்,பொருள்,ஏவல் என நான் குறிப்பிட்டுள்ளேன்...அந்த எஸ்.ஐ . கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்த என்கவுன்டர் சரியான ஒன்றே..!

   நீக்கு
  2. ஆனால் சட்டப்படி அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. வேறு யாரோ கொலை செய்த கொலையின் பின்னணியில் காசுக்காக சரணடைந்தவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் அல்லவா? இதற்கு முன் சில கொலைவழக்குகளில் கொலை செய்யாதவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு சரணடைந்திருக்கிறார்கள். (சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆரம்பத்தில் இதைப் போல் ஒரு நாடகம் நடந்ததாக நினைவு)

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. /// ஆனால் சட்டப்படி அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. வேறு யாரோ கொலை செய்த கொலையின் பின்னணியில் காசுக்காக சரணடைந்தவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் அல்லவா? இதற்கு முன் சில கொலைவழக்குகளில் கொலை செய்யாதவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு சரணடைந்திருக்கிறார்கள். (சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆரம்பத்தில் இதைப் போல் ஒரு நாடகம் நடந்ததாக நினைவு)///

   இதற்கு என்ன பதில் திரு ஹாஜா அவர்களே????????

   நீக்கு
  6. அந்த பிரபுதான் குற்றவாளி என எல்லா பத்திரிக்கைகளும் எழுதுகின்றன...சம்பவத்தை நேரில் பார்த்த,அவர்களிடம் அடி வாங்கிய காவலர்கள் கூறுகிறார்கள் ..நீங்கள் இல்லை என எதை ஆதாரமாக வைத்து கூறுகிறீர்கள் ?

   நீக்கு
  7. /// அந்த பிரபுதான் குற்றவாளி என எல்லா பத்திரிக்கைகளும் எழுதுகின்றன...சம்பவத்தை நேரில் பார்த்த,அவர்களிடம் அடி வாங்கிய காவலர்கள் கூறுகிறார்கள் ..நீங்கள் இல்லை என எதை ஆதாரமாக வைத்து கூறுகிறீர்கள் ? ///

   இவ்வளவு சாட்சிகள் இருக்கும் போது சட்டத்தின் மூலம் ஏன் தண்டிக்கவில்லை???

   எல்லா பத்திரிக்கைகளும் எழுதிவிட்டால் அது உண்மையா?

   உங்களுடைய கருத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கூறி ENCOUNTER செய்யேபடுபவர்களுக்கும் பொருந்த வேந்டுமே!!!

   ஏற்று கொள்கிறீர்களா???

   நீக்கு
  8. www.vikatan.com/news.php?nid=11455

   இந்தச் செய்தியில் முக்கிய குற்றவாளிகளாகக் "கருதப்படும்" என்று அவ்விருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் அவர்கள் குற்றவாளிகள் (convict) என்று தீர்ப்பளிக்கவில்லை. அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (accused) மட்டுமே. இந்நிலையில் அவர்கள் குற்றவாளிகள் என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?

   நீக்கு
  9. இதில் நீங்கள் மதத்தை நுழைப்பது எந்த விதத்தில் சரி?நான் கேட்கிறேன்...இந்த வருடத்தில் எனக்கு தெரிந்து இது இரண்டாவது என்கவுண்டர்..நீங்கள் சொல்லுவதுபோல போலீஸ் தங்களுக்கு பிடிக்காதவர்களை போட்டு தள்ள வேண்டும் என்றால் இந்த கணக்கின் எண்ணிக்கை பல நூறுகளை தொட்டு இருக்க வேண்டும்...அப்படி எல்லாம் பிடித்தோம்,சுட்டோம் என யாரும் இங்கே செய்யவும் முடியாது,செய்யவும் மாட்டார்கள்...

   நீக்கு
  10. என் கருத்தை ஏற்று கொள்ளுங்கள் என நான் உங்களிடம் கூறவில்லை...கூறவும் முடியாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து ,ஒவ்வொரு பார்வை...என் பார்வையில் இந்த என்கவுன்டர் முற்றிலும் சரி...நீங்களும் சரி என சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை...

   நீக்கு
  11. /// இதில் நீங்கள் மதத்தை நுழைப்பது எந்த விதத்தில் சரி?///

   நான் மதத்தை நுழைக்கவில்லை. அது என் நோக்கமும் அன்று(நானும் முஸ்லிம் தான்). நாட்டில் நடப்பதை தான் சொன்னேன். Double standard இருக்க கூடாது. சரியா!

   /// என் கருத்தை ஏற்று கொள்ளுங்கள் என நான் உங்களிடம் கூறவில்லை...கூறவும் முடியாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து ,ஒவ்வொரு பார்வை...என் பார்வையில் இந்த என்கவுன்டர் முற்றிலும் சரி...நீங்களும் சரி என சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை...///

   நான் உங்களுடைய பார்வை/கருத்து தவறு என்றும் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன். பிற்காலத்தில் விசாரணை கமிஷன் அமைத்து, கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று தெரியவந்தால் என்ன செய்வீர்கள்???

   நீக்கு
  12. டபுள் ஸ்டாண்டர்ட் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை....இதுபோன்று தவறை எந்த மதத்தவர் செய்தாலும் இந்த மாதிரி தண்டனைகள்தான் சரி எனக்கு...உங்களின் பார்வை,கருத்துத்தான் தவறு..முடிந்தால் நீங்கள் மாற்றி கொள்ளுங்கள்...

   நீக்கு
  13. அவர் கேட்டிருக்கும் மிக நியாயமான கேள்விக்கு பதிலளிக்காமலேயே அவரது கருத்து தான் தவறு என்று சொல்கிறீர்கள்.

   //பிற்காலத்தில் விசாரணை கமிஷன் அமைத்து, கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று தெரியவந்தால் என்ன செய்வீர்கள்???//

   அந்நிலையில் என்ன செய்வீர்கள்? அவர்களது உயிரை உங்களால் திரும்பக் கொடுக்க முடியுமா?

   நீக்கு
  14. அவன்தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று...நான் பிடித்த முயலுக்கு இரண்டே கால்தான் என பேசும் உங்களுக்கு என்னத்த சொல்றது?!

   நீக்கு
  15. யார் உறுதி செய்தார்கள்? நீங்கள் தானே. நீங்கள் கண்ணால் கண்ட சாட்சியும் அல்ல.
   "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு"
   என்று 2000 வருஷங்களுக்கு முன்னாடியே ஒருத்தர் எழுதிப் போயிருக்கிறார். நீங்கள் பிடித்த முயலுக்கு முந்நூறு கால் என்பது போல் நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் என்னத்தைச் சொல்வது?

   நீக்கு
  16. நீங்கள் வாதம் புரியவில்லை..விதண்டாவாதம் செய்கிறீர்கள்...நேரடியாக என்கவுண்டர் செய்த வெள்ளைசாமி உங்களிடம் வருவார்..அவரிடம் பேசி கொள்ளுங்கள்...பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

   நீக்கு
  17. அவர்கள் குற்றவாளிகள் என்று நீங்களே உங்கள் ஊகப்படி தீர்ப்பளித்துவிட்டு என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். யார் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். அந்த சம்பவத்தை நிகழ்த்திய காவல்துறை அதிகாரி வெள்ளைசாமி அல்ல, வெள்ளைத்துரை என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை!

   நீக்கு
  18. அது தெரிந்தால் என்ன அவார்டா கொடுக்க போகிறார்கள்...!?ஹா ஹா ஹா...

   நீக்கு
  19. அவார்டு கிடைக்கப் போவதில்லை. ஆனால் அந்த சம்பவத்தைப் பற்றிய குறைந்தபட்ச பத்திரிகையறிவு கூட இல்லாத நீங்கள் இந்த மாதிரியான ஒரு கட்டுரையை எழுத தகுதியில்லாதவர் என்பது எனது கருத்து.

   நீக்கு
  20. இதுவரை நாகரிகமாக உங்களுக்கு பதில் சொல்லி வந்தேன்...அநாகரிகமான வார்த்தைகளை முதலில் பயன்படுத்தி நீங்கள் அறிவற்றவர் ,முன் கோபக்காரர்,விவாத்தில் தோற்கும் நிலை வந்தவுடன் இந்த மாதிரி புத்திகெட்ட தனமாக தாக்கும் மனநிலை உள்ளவர் என காண்பித்துவிட்டீர்கள்....இதுவரை பதிவுலகில் யாருக்குமே தெரியாத உங்களை என் பதிவில் நான் உங்களுக்கு பதில் சொல்லி எல்லாருக்கும் தெரியப்படுத்திவிட்டேன்..அதுதான் எனது தவறு...என் பதிவை படிக்க உங்களுக்குதான் அருகதை இல்லை,தகுதி இல்லை......இவ்வளவு நேரம் ஒரு அரை புத்தி உள்ள உங்களிடம் விவாதம் பண்ணி என் நேரத்தை இழந்து விட்டேன்..இதுவே உங்களுக்கு என் கடைசி பதில்....
   `

   நீக்கு
  21. அடிப்படை அறிவில்லாத உங்களிடம் இனி எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது...இனி என் பிளாக் பக்கமே வராம ஓடி போங்க...வெட்கம்,மானம்,ரோசமிருந்தால்

   நீக்கு
 4. பிரமாதம்... தங்களை அதி மேதாவிகள் என்று காட்டிக் கொள்ளவும், பெரும்பான்மையிலிருந்து முரண்படும் ஆசையாலும் தூக்கு தண்டனை, என்கௌண்ட்டர் ஆகியவைகளை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் சேராமல் இருக்க ஒரு துணிவும் நேர்மையும் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 5. ரஹீம் உங்கள் கருத்து சிந்திக்க வேண்டிய விஷயமே, இது போன்ற ரவுடிகளுக்கு கருணை காட்டுவது நியாயமல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள்..நன்றி...ஆனால் நான் ரஹீம் அல்ல....பேரை மாற்றி சொல்கிறீர்களே நண்பா...

   நீக்கு
 6. நேர்மையான பதிவுக்கு நன்றி. ஒரு சில சமயங்களில் இது போன்ற என்கௌன்ட்டர் அவசியமாகிறது. வெளியில் இருக்கும் குற்றவாளிகளிக்கு ஒரு பயத்தை இது உண்டாக்கினால் அதுதான் இதன் வெற்றி. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு என்கௌன்ட்டர் செய்யப்பட்டால் அதை பெரிது படுத்தாமல் இருப்பதுதான் நல்லது.

  பதிலளிநீக்கு
 7. மனித உரிமை ஆர்வலர்களே ...நீங்கள் மனிதர்களுக்காக மட்டுமே குரல் கொடுங்கள்...அந்த ரவுடிகள் போன்ற மிருகங்களுக்காக அல்ல! // கண்டிப்பாக நண்பா. உங்களுடைய கூற்றை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இப்பொழுது சிறைத்தண்டனை எல்லாம் பொழுது போக்கு அம்சம் நிறைந்ததாகி விட்டது. மாதுவைத் தவிர அனைத்தும் உள்ளே கிடைக்கிறதாம். இதை காவல் துறை அதிகாரியே ஒப்புக்கொள்கிறார். இவர்களுக்கு ஒருவேளை ஆயுள்தண்டனை கிடைத்திருந்தால் அது பெயரளவில்தான் தண்டனையாக இருந்திருக்கும். சிலர்க்கு இப்படிப்பட்ட தண்டனைகள் கண்டிப்பாக அவசியம்தான். அது போலி என்கௌண்டராக இருப்பினும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியே இருப்பதைவிட உள்ளே இருப்பதுதான் பாதுகாப்பு என ரவுடிகளும்,தாதாக்களும் நினைக்கும் அளவுக்குத்தானே இன்று சிறைச்சாலைகள் இருக்கின்றன...நன்றி..வருகைக்கும் புரிதலான கருத்துரைக்கும்....

   நீக்கு
 8. ///போங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்கட்டியும்....!///

  இப்படித்தான் சமயங்களில் பாமர மொழி பொதுப் புத்தியில் சொல்ல தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ...இவர்கள் எல்லாவற்றிற்கும் மனித உரிமை என பேசுவது இது போன்று எரிச்சலைத்தான் நமக்கு கிளப்புகிறது...

   நீக்கு
 9. எதிர்கருத்துக்கள் இட்ட நண்பர்களுக்காக..கொலை ,ரவுடியிசம் நடக்கும்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை,போலீஸ் என்ன கிழிக்கிறது என பேசும் நீங்கள் அதே போலீஸ் ஒரு காவல்காரரை நடுவீதியில் வெட்டி கொன்ற குற்றவாளிகளை சுட்டு கொன்றால் மட்டும் அது தப்பு ,மனித உரிமை மீறல் என பேசுவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதை போலத்தான் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் சட்டத்தைக் கட்டிக்காக்க வேண்டிய அமைப்பான காவல்துறையே சட்டத்தை மீறுவது எத்தகைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை உணர்த்துகிறது?

   நீக்கு

  2. அந்த ரவுடிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ.ஆள்வினுக்கு போனது உயிர் இல்லையா?

   நீக்கு
 10. சட்டம் ஒழுங்கைப் பற்றி நான் முன்வைத்த கருத்துக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றி வருத்தப்படும் நீங்கள் பதிலளிக்கவில்லை. ஆல்வின் சுதனுக்கு உயிர் போய்விட்டது. உண்மை தான். ஆனால் இவர்கள் இருவரையும் கொலை செய்தது ஆல்வின் சுதனின் உயிரைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டதா? கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் வாழும் அந்த பகுதியில் இந்த என்கவுண்டர் அந்த அச்சத்தை போக்கும்....அந்த வகையில் இந்த என்கவுண்டர் சட்டம் ஒழுங்கை சீர் செய்தது என்றே கூறலாம்!

   நீக்கு
  2. தொடர்ச்சியாக நடைபெறும் இந்த என்கவுண்டர்கள் குற்றங்களின் அளவைக் குறைத்திருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமாவது உண்டா? அடிப்படையில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த என்கவுண்டர்கள் சட்டம் ஒழுங்கை சீர்செய்தது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்?

   நீக்கு
  3. உண்டு..இதனால நிச்சயம் ஒரு 6 மாதத்திற்கு ரவுடிகளிடம் பயம் இருக்கும்....இதுவும் நடக்கவில்லை என்றால் எந்த பயமும் இருக்காது..

   நீக்கு
  4. அந்த பயம் உங்களின் ஊகம் மட்டுமே. தமிழ் மசாலா போலீஸ் திரைப்படங்களில் வரும் ஆதாரங்களை நான் கேட்கவில்லை. நிஜ உலகத்தில் இருக்கக் கூடிய ஆதாரங்கள் ஏதாகிலும் உண்டா?

   நீக்கு
  5. சென்னையில் தொடர்ந்து வங்கி கொள்ளை நடந்தது நினைவில்லையா?,பிறகு குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் வங்கி கொள்ளைகள் நடக்கவில்லைதானே?

   நீக்கு
  6. விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்திருந்தால் இரண்டாவது வங்கிக் கொள்ளையையும் அந்த சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து.

   நீக்கு
  7. திரு. கருப்பு அவர்களே,
   தாங்கள் கனிவுடன் கற்பித்தலையும், தண்டனையையும் ஒன்றாக நிறுக்கிறீர்கள்.
   1> ஓட்டும் வண்டி, வாகனத்தில் வேகத்தடை செயலி (Brake) தான் வைக்க முடியும் அதை பயன்படுத்தவில்லை அதனால் விபத்து ஏற்படுத்துவேன் எனில் என்ன செய்யவேண்டும்? தண்டனையா அல்லது கல்வியா?
   2> தங்களுடைய கருத்துப்படி சாலை பிரிக்கும் கோடு மட்டும் இருப்பதால் தான் வண்டி ஓட்டிகள் தவறான பாதையில் வருகின்றனர் (வர இயலுகிறது). எனவே சுவர் எழுப்ப வேண்டும்!! அதன் பிறகு சுவரினை குடைந்து வந்தால் அங்கு சுவரினை பலப்படுத்த வேண்டும். மேலும் வேறு பகுதியில் குடைந்து வந்தால் அங்கும் சுவரினை பலப்படுத்த வேண்டும் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். பிறகும் அது தொடர்ந்தால் சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்!!

   தலைவலி, மூக்கடைப்பு, கை கால் குடைச்சல், இதய அடைப்பு, கிட்னி பிரச்சினை, புற்றுநோய் எல்லாவற்றிற்கும் ஒரே முறையில் மருத்துவம் செய்ய முடியாது.

   நீக்கு
 11. @ NKS.ஹாஜா மைதீன்.....
  உங்கள் கருத்தை வரவேற்கிறேன் .......என் கவுன்ட்டர் சரியானதே .

  பதிலளிநீக்கு
 12. இந்த என்கவுன்டரை செய்த காவல் துறைக்கு ஒரு சபாஷ்!.................இடுகைத்தலைப்பு:
  போங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்கட்டியும்....!

  உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

  பதிலளிநீக்கு
 13. // ஐ.நா சபையின் மனித உரிமை அறிக்கையின் பத்தாவது ஷரத்து இவ்வாறு கூறுகிறது, "Everyone is entitled in full equality to a fair and public hearing by an independent and impartial ribunal, in the determination of his rights and obligations and of any criminal charge against him. அவர்களை மிருகங்கள் என்று சொல்லி தீர்ப்பளிப்பதற்கு முன்.............ப்லா.......... ப்லா.........ப்லா .......... ப்லா ....

  1- ஐ. நா. சபையில் சொல்லப்படும் சட்ட திட்டகள் அனைத்தையும் பிற நாடுகள் கடை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட திட்டங்கள் , நடை முறைகள் வேறுபடும். எனவே அதனை நாமும் பின்பற்ற வேண்டும் என்று என்ன அவசியம்? என்னவோ ஐ.நா. சபையில் சொல்லப்பட்ட அனைத்தையும் என்னமோ நீங்கள் மட்டுமே தவறாமல் பின்பற்றுவது போல ஏன் ஒரு பொய் பிம்ம்பம் ?

  2- மத சார்பான நாடுகள் அனைத்தும் தங்களின் மதம் சார்ந்த சட்ட, தண்டனை நடை முறைகளையே பின்பற்றுகின்றன. அதில் தவறு ஒன்றும் இல்லை.

  3- குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மனித குலத்துக்கு அவசியம் வேண்டும்.இல்லையேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச சமூக ஒழுங்கும் ஒழிந்துபோய் மீண்டும் காட்டுமிராண்டிகளின் காலம் தொடங்கும்.

  என்கவுண்டர் அவசியம் வேண்டும். போலீஸ் செய்தது சரியே!

  இணையத்தில் இப்படி சமுதாய விரோத கருத்துக்களை "புர்ச்சி" கரமாக பேசி எழுதினால் அறிவுஜீவிகள் பட்டியலில் சேர்ந்துவிடலாம் என்பது இவர்களின் ஆசை. ஆனால் தன் முகம் காட்டி உண்மையாக பெயர் சொல்லி தன் கருத்துக்களை சொல்ல மட்டும் தொடை நடுங்கும்.

  என்னதான் புர்ச்சியோ??

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....