31 மார்ச் 2012

மக்களுக்கே தெரியாமல் மக்களுக்கு நன்மை செய்யும் தமிழக அரசின் பொன்னான திட்டங்கள்..!


மக்களுக்கு மறைமுகமாக பயன்தரும் தமிழக அரசின் திட்டங்கள்....அதாவது நேரடியாக மக்களுக்கு நன்மை செய்தது போரடித்து போய் இப்போது மறைமுகமாக மக்களுக்கு நன்மை செய்வதை பாலிசியாக வைத்துள்ளார் ஜெ..அது என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வமா?

மின்கட்டணத்தை உயர்த்தினாலும் கரண்டே கொடுக்காமல் மக்களை மின்கட்டணம் கட்டுவதில் இருந்தது அரசு காப்பாற்றி வருகிறது....மக்களுக்கு பணத்தை மிச்ச படுத்தி கொடுப்பதில்தான் நம் அரசுக்கு எவ்வளவு அக்கறை..!

பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் வழிவகுத்து அவர்களின் உடல்நலத்திற்கு நன்மை செய்துள்ளது....மக்களின் உடல்நலன் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள்...!

பால்விலையை உயர்த்தியதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு தாய்ப்பால் கிடைக்க வழி வகுத்துள்ளது....ஆமா....இப்ப எங்கே தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்...!அதனால்தான் பால் விலையை உயற்றி பச்ச குழந்தைகளுக்கும் நன்மை செய்துள்ளது நம் அரசு...


இலவசமாக அரிசி முதல் மிக்சி,கிரைண்டர் ,மின்விசிறி வரை கொடுத்து மக்களை வேலைக்கு செல்லாமலே ராஜா மாதிரி வைத்துள்ளது.....


இதைவிட ஒரு நாட்டின் குடிமக்களுக்கு வேற என்ன வேண்டும்?


இப்போது சொல்லுங்கள் தமிழகத்தில் நடப்பது நல்லாட்சிதானே ....

30 மார்ச் 2012

இருளர் இன பெண்கள் கற்பழிக்கபடவில்லை...அநியாத்துக்கு ஆதரவாக ஜெ..


சில மாதங்களுக்கு முன்பு இருளர் இன பெண்கள் நான்கு பேரை காவல் துறையினர் கற்பழிப்பு துறையினராக மாறி சீரழித்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது (பேசப்பட்டது மட்டும்தான் !) நினைவு இருக்கலாம்...

பிறகு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு சம்பந்தப்பட்ட காவல்துரைனர் மீது வழக்கு பதிவு செய்யப்படது...ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...அந்த அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்...ஆனால் கைது செய்யப்படவில்லை....இது எவ்வளவு பெரிய அநீதி?இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது...

நேற்று இது பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் அந்த பெண்கள் கற்பழிக்கபடவில்லை என போலிசுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார்...

அதற்கு காரணமாக பரிசோதனை செய்த மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்....

அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறையினர் இது மாதிரி அறிக்கை வாங்குவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா?அறிக்கையில் அறிகுறிகள் இல்லை என்றால் அந்த பெண்கள் கற்பழிக்கபடவில்லை என அர்த்தமா?

மானத்தை விட்டுவிட்டு,பயத்தை விட்டுவிட்டு அந்த பெண்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளிப்பார்களா என்ன?அதுவும் காவல் துறையினர் மீதே...!

அந்த சம்பவமே நடக்கவில்லை என்றால் தமிழக அரசு அப்பெண்களுக்கு தலா 5 இலட்சம் நிதி வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?

காவல்துறை முதல்வரின் கட்டுபாட்டில் வருவதால் தனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என எண்ணிக்கொண்டு போலிசுக்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார் ஜெ...ஆனால் அதுவே அவருக்கு கெட்ட பெயர்தான்....

முதல்வர் ஒரு பெண்ணாக இருந்தது கொண்டு கற்பழிக்கப்பட்ட அப்பாவி பெண்களுக்கு எதிராக பேசி இருப்பது எவ்வளவு முரண்பாடான விஷயம்...!?

இதில் எங்கே அப்பெண்களுக்கு நீதி கிடைக்க போகிறது?இனியும் இது மாதிரி காவல்துறையினர் அத்துமீறி நடந்தால் யாரும் புகார் கொடுக்க கூட வரமாட்டார்கள் ..அதைத்தான் முதல்வரும் விரும்புகிறார் போலும்...

புகார் கூறப்பட்ட காவல்துறையினர் அதை மறுத்து நீதி மன்றத்தில் வாதாடலாம்...ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய முதல்வரே புகாரை மறுத்து நடந்த அநியாத்துக்கு ஆதரவு அளிக்கலாமா?

29 மார்ச் 2012

ஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வதாக ஜெ அறிவிப்பு...

சசிகலா போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார் ..மீண்டும் போயஸ் கார்டனிலே குடியேறினார்...அதுபற்றி ஜெயலலிதா வெளியுட்டுள்ள அறிக்கை....

எனது உடன்பிறவா சகோதரி சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்....

அதில் எனக்கு அவர் எந்த காலத்திலும் துரோகம் நினைத்தது இல்லை என்றும், எனக்கு எதிரிகள் அவருக்கும் எதிரிகள்தான் என்றும் கூறியுள்ளார்...இதை படிக்கும்போது என் மனசு கலங்குகிறது....

மேலும் அவரின் உறவினர்களும்,நண்பர்களும் சசிகலாவின் பெயரை பயன்படுத்தி போட்ட ஆட்டங்களும் ,செய்த தவறுகளும் ,எனக்கே எதிராக சதி செய்ததும் சசிகலாவுக்கு தெரியாது எனவும், இப்போதுதான் அது பற்றிய விபரங்கள் தெரிந்ததாகவும் மிகவும் வருத்ததுடனும் வேதனையுடனும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்...அதை படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது...

எனக்கும் கட்சிக்கும் கனவிலும் துரோகம் நினைக்காத சசிகலாவை இனியும் என்னிடம் இருந்தது விலக்கி வைத்தால் அந்த புரட்சி தலைவரின் ஆன்மா என்னை மன்னிக்காது....எனக்காகவும் கட்சிக்காகவும் மட்டுமே வாழும் சசியை இனியும் தூரத்தில் வைத்தால் கோடான கோடி கட்சி தொண்டர்களின் மன குமுறல்களுக்கு ,உணர்வுகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்....

புரட்சி தலைவியாகிய எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையே என கவலைப்படும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து .சசியை மீண்டும் சேர்க்க வேண்டும் என தினமும் தலைமை கழகத்துக்கு தந்தி அடிக்கும் கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எனது உடன் பிறவா சகோதரியான சசிகலாவை இனி என் உடன் பிறந்த சகோதரியாக தத்து எடுத்து கொள்வதாக முடிவி செய்துள்ளேன்...இனி அவர் என்னுடனே இருப்பார் எனவும் மன மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறேன்...நன்றி.... வணக்கம்....

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ....


என்ன மக்களே....அறிக்கையை படித்துவிட்டீர்களா ?இது எனது கற்பனையா இல்லை நடக்கபோவதா என உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்....

28 மார்ச் 2012

பயோ டேட்டா :இந்திய கிரிக் (கிறுக்கு ) கெட் வீரர்கள் ...


பெயர் : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்


தொழில் : விளம்பரங்களில் நடிப்பது


உப தொழில்: கிரிக்கெட் விளையாடுவது


பொழுதுபோக்கு: நடிகைகளுடன் ஊர் சுற்றுவது


நீண்ட நாள் சாதனை : தேசிய விளையாட்டான ஹாக்கி முதற்கொண்டு அனைத்து விளையாட்டுகளையும் ஓரம் கட்டியது


உருப்படியான சாதனை : உலக கோப்பையை வென்றது


நீண்ட நாள் வேதனை :கத்துக்குட்டி அணிகளிடமும் அடி வாங்குவது


டோனி :நல்லவரா கெட்டவரா என சக வீரர்களை குழப்பி கொண்டு இருப்பவர்


சச்சின் : சதமடித்தால் கொண்டாடப்படுபவர் ..மற்ற நேரங்களில் விமர்சனங்களால் பந்தாடப்படுபவர்


உள்நாட்டு மைதானங்கள் : எனர்ஜி கொடுப்பதுவெளிநாட்டு மைதானங்கள் :அலர்ஜி கொடுப்பதுகுறிக்கோள் :எப்பவாவது நாட்டுக்காக விளையாடுவது ..எப்போதும் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவது


பிளஸ் : ரசிகர்கள்


மைனஸ் : அதே ரசிகர்கள்தான்

27 மார்ச் 2012

இலவசம்...உங்கள் வசம்...மற்றவை ஜெ வசம்...பட்ஜெட்...பற..பற...


தமிழக அரசின் பட்ஜெட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் செருப்பு வரை அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளார்கள்......அப்படியே பத்தாவது வரை அனைவரும் இலவச பாஸ் என சொன்னால் இதைவிட நல்லா இருக்கும்....

இப்போதே இலவசமாக கொடுத்து மாணவர்களை அரசியல்வாதிகள் பழக்கப்படுத்துகிறார்களோ என என்ன தோன்றினாலும் ஏழை மாணவர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான்....பாராட்டலாம்...

சென்ற வருடம் தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணங்களை அரசு முறைப்படுத்தியது....ஆனால் இன்று வரை தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையை நிறுத்திய பாடில்லை.... மக்களும்,பெற்றோர்களும் போராடி அலுத்து அந்த விசயத்தை மறந்தே போய்விட்டார்கள்...அரசும் நல்லது என நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டது.

பேசாமல் தனியார் பள்ளிகளை அரசு தடை பண்ணினால் என்ன?தமிழகம் முழுக்க அரசு பள்ளிகளில் கல்வியை இலவசமாக கொடுத்தால் என்ன? கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கு..!

மற்றபடி குடிமகன்கள் எப்பாடு பட்டாலும் குடித்தே தீர்வார்கள் என்று எண்ணி சரக்கு விலையை ஏற்றியுள்ளார்கள்....
மருந்து பொருட்கள், கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்சுலின்,ஹெல்மெட் போன்றவற்றின் விலை குறையும்....

இந்த பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன....இலவச திட்டங்கள் மற்றும் மானியத்துக்கு மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.வேலை வாய்ப்புகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை....நாங்கள்தான் எல்லாமே தருகிறோமே அப்புறம் எதற்கு வேலை என நினைத்து இருப்பார்கள்...இலவசம் என்னும் போதையை ஏற்றியே மக்களை தள்ளாட வைப்பதில் நானும் கெட்டிக்காரிதான் என உரக்க கருணாநிதிக்கு கேட்கும் வகையில் சொல்லி இருக்கிறார் ஜெ...

இலவசம் உங்கள் வசம்...வேற எதையும் என்னிடம் கேட்க கூடாது என சொல்லாமல் சொல்கிறார் ஜெ...புதிய வழிகாட்டி மதிப்பீடுகள், ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. அதே தேதியில் இருந்து, முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.இது அரசுக்கு லாபம் தருமா இல்லை வழக்கம்போல் நில ப்ரோக்கர்களுக்கு லாபம் கொடுக்குமா என தெரியவில்லை....

வழக்கம்போல எதிர்கட்சிகள் இந்த பட்ஜெட்டை எதற்கும் உதவாத பட்ஜெட் என்றும்,ஆளும் கட்சி இது சிறந்த பட்ஜெட் என்றும் புளித்து போன பல்லவியை பாடி வருகின்றன....

அட நீங்க என்ன வேணும்னாலும் பேசி தொலைங்கப்பா ..கரண்ட் பிரச்சினைக்கு ஒரு முக்கால் புள்ளியாவது வைங்கப்பா....மக்களுக்கு அது போதும்....

26 மார்ச் 2012

கபீர் சார்....


பள்ளி வயது பருவத்தை நினைத்து பார்த்தாலே எல்லாருக்குமே அது இனிக்கும்....

அதற்கு இன்னதுதான் காரணம் என தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை....

ஒருவேளை வாழ்க்கையை ரிவர்சில் பார்ப்பதினாலா?அல்லது நிகழ் கால கசப்புகளை மறக்கடிப்பதினாலா? தெரியாது....

ஒவ்வொருவரின் பள்ளி பருவத்திலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர்கள் ,ஆசிரியைகள் இருப்பார்கள்....பிடிக்காதவர்களும் இருப்பார்கள்...

அந்த வகையில் எனக்கு பிடித்த ஆசிரியர் கபீர் சார்....

நான் படித்தது எங்கள் ஊரான அரசர்குளத்தில் அமைந்துள்ள அல் ஹிதாயா அரபி நடுநிலை பள்ளியில் ....

அப்போது எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தவர்தான் கபீர் சார்...தலைமை ஆசிரியர் என்றால் வயதானவர்தான் என்று நினைத்த எங்களின் நினைப்பை பொய்யாக்கியவர் ..அப்போது அவருக்கு இருபத்தி ஐந்து வயதுதான் இருக்கும்...

பாடம் நடத்தும்போது ரொம்ப கண்டிப்பாக இருப்பார்....மற்ற நேரங்களில் ரொம்ப சகஜமாக ஒரு சகோதரனைப்போல பழகினார்...

எங்கள் வகுப்பில் நன்றாக படிப்பவன் என்பதால் கபீர் சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்....அவர்தான் எனக்கு செஸ் விளையாட கற்று கொடுத்தார்..பாட புத்தகங்கள் தவிர பொது அறிவு புத்தகங்கள், நீதி போதனை கதைகள், பீர்பால் தெனாலிராமன் கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தையும் அவர்தான் எனக்கு அறிமுக படுத்தினார்....அந்த பழக்கம்தான் நாளடைவில் விகடன்,குமுதம் போன்ற புத்தகங்களையும் நான் படிப்தற்கு காரணமாக இருந்தது...

பாடங்கள் நடத்தும்போது சுவாரஸ்யமாக கதைகள் சொல்வர்..அதில் அறிவியல் ரீதியான கருத்துக்கள் ரொம்ப இருக்கும்....படிப்பு ஏறாத மாணவர்களும் அவர் வந்ததில் இருந்தது நன்றாக படிக்க ஆரம்பித்தனர்...

அதனால் அவரை எல்லா மாணவர்களுக்கும் பிடித்தது....நான் எட்டாவது முடித்துவிட்டு வேறு பள்ளிக்கு சென்ற பிறகு கபீர் சாரும் சில மாதங்களில் அவரின் ஊருக்கு சென்று விட்டார்....

பிறகு சில வருடங்கள் கழித்து நான் கல்லூரி படிக்கும்போது அவரை சந்தித்தேன் ...அதன் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை....அவரை மீண்டும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என ரொம்ப ஆவலாக இருக்கு...அவரின் ஊர் கடையநல்லூர் ....ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை...

ஒருவேளை பதிவுலகில் அவர் இருந்தாலும் இருக்கலாம் ,அல்லது அவருக்கு தெரிந்தவர்கள் யாராவது இதை படிக்கலாம் ,அதன் மூலம் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம் என ஒரு ஆசையில் அவரை பற்றி எழுதி உள்ளேன்....

இப்போது பள்ளிக்கு செல்லும் எனது சொந்தக்கார சிறுவர்களிடம் கேட்டேன்....உங்கள் வகுப்பில் நீதி போதனை வகுப்பு உள்ளதா?எந்த ஆசிரியராவது பீர்பால்,தெனாலிராமன் கதைகள் சொல்கிறார்களா?செஸ் முதலிய விளையாட்டுகளை கற்று கொடுக்கிறார்களா? என்று...

ஆனால் அதற்கு ..அட போங்கண்ணே ..எங்களுக்கு ஹோம் வொர்க் செய்யவே நேரம் இல்லை...ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்தாலே பயமா இருக்கு...இதிலே எங்கே அதிலாம் சொல்ல போகிறார்கள் என்பதே பதிலாக வந்தது....

இப்போது புரிகிறது மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் ஏன் கெமிஸ்ட்ரி ! வொர்க் அவுட் ஆகவில்லை என்று..!!

25 மார்ச் 2012

ஆபத்தை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்....அதிச்சி தகவல்கள்...


மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்பைச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.


மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின்
உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலருக்கும் மறுபடியும் மண் சட்டி சமையலுக்கே திரும்ப வேண்டும் என்று ஆசை வருவது நியாயம்தான்.

நன்றி :இணையம் மற்றும் பத்திரிக்கை செய்திகள்

24 மார்ச் 2012

இஸ்லாத்தை பற்றி கண்டதையும் எழுதுவதற்கு பெயர்தான் புரட்சியா?


ஒரு விசயத்தை பற்றி எழுதுவதாக இருந்தால் ஓரளவு அதை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்....அதை விட்டுவிட்டு அவர் சொன்னார், அப்படி சொல்லப்படுகிறது என எழுதுவது கழுதையை பார்த்து குதிரைன்னு சொல்வதுபோல கிறுக்குத்தனமான ஒன்று....

உதராணத்துக்கு வெங்காயத்தை பற்றி எழுதுவதாக இருந்தால் வெங்காயத்தின் நிறம் சிகப்பு என சொல்வார்கள், அதை உரித்தால் ஒன்றுமே இருக்காது என சொல்வார்கள் என எழுதுவது ஒரு புத்திசாலித்தனமா ?அல்லது வெங்காயத்தின் சிறப்புகள்,அதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்துகொண்டு எழுதுவது புத்திசாலித்தனமா?


ஒரு வெங்காயத்தை பற்றி எழுதுவதற்கே இவ்வளவு விஷயம் தெரிந்து இருக்க வேண்டி இருந்தால் உலகத்தில் பல நூறு கோடி பேர் பின்பற்றும் மதமான இஸ்லாத்தை பற்றி எழுத ஓரளவாவது தெரிந்து இருக்க வேண்டாமா?

இஸ்லாமியர்கள் மக்காவில் உள்ள கருப்பு கல்லை வணங்குகிறார்கள் என்று எழுதுவது நான் மேலே சொன்ன வெங்காயத்தை பற்றி எழுதுவது மாதிரி ...வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என சொல்வது போல முட்டாள்தனமாக எழுதி வருகிறார்கள் பதிவுலகில்...

அந்த கருப்பு கல்லை யாரும் வணங்குவதில்லை...இதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அய்யா வாஞ்சூர் அவர்கள் எழுதிய பதிவை பாருங்கள் ....
{முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? )http://vanjoor-vanjoor.blogspot.com/2012/03/blog-post_23.html

இஸ்லாமியர்கள் ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு எதையும்,யாரையும் வணங்கமாட்டர்கள்....அப்படி வணங்கினால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல....இதுதான் நிதர்சனம்....

இஸ்லாத்தை பற்றி ஏதாவது ஏடா கூடமாக,அவதூறாக எழுதினால் அதற்கு மறுப்பு சொல்லி பின்னூட்டங்கள் கூடும் ,ஹிட்ஸ் கூடும் என எண்ணி எழுதி வருகின்றனர் சிலர்...பார்வை இல்லாதவனுக்கு பங்களா எப்படி தெரியாதோ அதுபோலதான் இதுமாதிரி அவதூறாக,திரித்து எழுதுபவர்களுக்கும் இஸ்லாத்தின் உயர்ந்த கோட்பாடுகள் தெரியாது...

அவ்வாறு எழுதுவதை புரட்சி என்று வேறு எண்ணிக்கொண்டு இருக்குறார்கள்...
உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயத்துக்கு பெயர் புரட்சியாம்....!புண்ணாக்காம்...!!


.நண்பர்களே உங்களுக்கு இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அதை நாகரிகமாக விமர்சனம் பண்ணி கேளுங்கள்...பதில் சொல்ல பதிவுலகில் பல நண்பர்கள் இருக்கிறார்கள்...ஆரோக்யமாக விவாதிக்கலாம்...விவாதங்களும் விமர்சனங்களும் ஆரோக்யமான முறையில் அமைந்தால் அனைவருக்கும் நல்லதே ..!

23 மார்ச் 2012

பயோ டேட்டா :நேரு குடும்ப சொத்து (காங்கிரஸ் )
பெயர் : நேரு குடும்பத்தின் பரம்பரை சொத்து (சுருக்கமாக காங்கிரஸ் )

சமிபத்திய பெயர் :காணாமல் போன கட்சி

கட்சியின் சின்னம் : கை (லஞ்சம் வாங்குவது,ஊழல் செய்வதை குறிப்பதற்காக !)


கட்சியின் கொள்கை :எங்கும் ஊழல், எதிலும் ஊழல்


ராகுல் காந்தி : ஜீரோவான ஹீரோ


பிரியங்கா காந்தி : கட்சியின் அடுத்த துருப்பு சீட்டு


மன்மோகன் சிங் : கட்சியோட தலையாட்டி பொம்மை


சுப்ரமணிய சுவாமி : ஏழரையை கூட்டும் சனியன் சகடை


மாநில காங்கிரஸ் கமிட்டிகள் : உதாவாக்கரைகள்


சாதனை :இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்

சாதனை : எப்படியோ இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தது


வேதனை : இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் இந்தியா அப்படியே இருப்பது


தங்கபாலு, நாராயணசாமி வகையறாக்கள் : கட்சியின் காமெடி பீஸ்கள்


பிளஸ் : பலமில்லாத எதிர்கட்சிகள்


மைனஸ் :குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்சமிபத்திய தலைவலி :அண்ணா ஹசாரே
நீண்ட நாள் தலைவலி :போபர்ஸ் ஊழல்

22 மார்ச் 2012

சட்டசபையை "பிட்டு"சபையாக மாற்றி கொண்டு இருக்கும் பா ஜ க எம் எல் "ஏ"க்களும் ,ஜெயலலிதாவை வெறுக்காத மக்களும்....


கர்நாடகத்தை தொடர்ந்து குஜராத் சட்டசபையும் நாறி கொண்டு இருக்கிறது....

இப்போது பிட்டு படம் எல்லாம் தியேட்டர்களில் ஓடுகிறதோ இல்லையோ சட்டசபைகளில் நன்றாகவே ஓடுகிறது....

கர்நாடாகாவில் சட்டசபையில் பிட்டு படத்தை பார்த்து மாட்டிகொண்ட பாஜக
எம் எல் ஏக்களை தொடர்ந்து இப்போது குஜராத்திலும் சபை நடவடிக்கைகளின் போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆபாச படம் பார்த்தது அம்பலமாகியுள்ளது.

குஜராத் சட்டசபை நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்த போது, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சங்கர் சவுத்ரி மற்றும் ஜெதாபர்வத் ஆகியோர் தங்களின் டேப்லெட் கம்ப்யூட்டரில், பெண்களின் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என, குஜராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. அத்துடன் அந்த பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஜானக் தவே, சட்டசபை சபாநாயகரிடமும் புகார் செய்தார்.

இதை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சி படமும் பிடித்துள்ளது.


என்ன கன்றாவியா இது..? பிட்டு படம் பார்க்கிறதா இருந்தா இவனுக ஏன் சட்ட சபைக்கு வாரானுக..?வேற எங்கயாவது போய் தொலையவேண்டியது தானே ...?

ஒருவேளை சட்டசபைகளில் பலான படங்கள் பார்ப்பதை பா ஜ க ML"A" க்கள் ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறார்களோ என்ன எழவோ!

காதலர் தினத்தன்று அராஜகங்கள் நடத்தும் சிலகாவி அமைப்புகள் முதலில் பாஜகவிடம் தங்கள் ரத்த கொதிப்பை காட்டட்டும்...பிறகு நாட்டு மக்களை திருத்த வரலாம்.....!

பாஜக ஆளும் மாநிலங்களில் பேசாமல் சட்டசபைகளின் பெயரை பிட்டு சபை என மாற்றி வைத்தல் பொருத்தமாக இருக்கும்...!

................................. ......................................... ........................................
முடிவாக அதிமுக ஜெயித்துவிட்டது .....எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் டெபாசிட்டை இழந்தது ஆரோக்யமான எதிர்க்கட்சிகளாக மக்கள் அவர்களை எண்ணவில்லை என்பதையே காட்டுகிறது....டெபாசிட்டை இழந்த கட்சிகள் இனியாவது இடைதேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என புளித்து போன பல்லவியை பாடுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிகளாக செயல்பட்டால் மட்டுமே அடுத்து தலை தூக்க முடியும்...

அசுர பலத்தில் இருக்கும் ஆளும்கட்சியை எதிர்த்து வாக்களித்தால் எதுவும் நல்லது நடக்க போவதில்லை என மக்கள் நினைத்து இருக்கலாம்....!மொத்தத்தில் மக்கள் எதிர்கட்சிகளை விரும்பவும் இல்லை....ஜெயலலிதாவை வெறுக்கவும் இல்லை....

ஆனால் இந்த வெற்றிக்காக ஜெயலலிதா பெருமைபடுவதில் ஒன்றும் இல்லை....அதற்கு மாறாக மக்கள் இன்னும் தம்மீது நம்பிக்கை வைத்து இருக்குறார்கள்,மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்குறார்கள் என்பதை உணர்ந்து தனது தவறுகளை திருத்திக்கொண்டால் அவருக்கு நல்லது ....!மக்களுக்கும் நல்லது..!!

20 மார்ச் 2012

கருணாநிதியின் உண்ணாவிரதமும்,ஜெயலலிதாவின் பயமும்...


என்ன ஒரு அதிசயம்..!கருணாநிதி உண்ணாவிரதம் என்று வாய் திறந்தாலே மௌன குருவான பிரதமரும் ஏதாவது வாயை திறந்து பேசி விடுகிறார்...

இப்படித்தான் இலங்கை போரின்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதுபோல மேடைக்கு உனாவிரதம் இருக்க வந்தார் ...உடனே போர் நிறுத்த அறிவிப்பு வந்தது....ஆனால் அது வெறும் அறிவிப்பாக மட்டுமே வந்து போனது...!

இப்போதும் உண்ணாவிரதம் என அறிக்கைவிட்டார்....

உடனே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை படித்து பார்த்து ! இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் சொல்லிவிட்டார்....

இல்லை என்றால் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பாராம்....மத்திய மந்திரிசபையில் இருந்தது விலகி இருப்பாராம்....!! எல்லாம் ஈழ தமிழர்களின் நலனுக்காக ....!அட சொன்னால் நம்புங்கப்பா.........!

ஏற்கனவே காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உள்ள "கேப்பை" உண்ணாவிரதம் என்று சொல்லி புது விளக்கம் கொடுத்த கருணாநிதியால் இன்று உண்ணாவிரதமே இருக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டமா இல்லை மக்களின் அதிர்ஷ்டமா?

இதுதான் ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுவதோ!


............................. ................................... .......................................

சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்து ஓட்டளித்த மக்களின் மை காயும் முன்னே கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும் என அறிவித்து விட்டார் ஜெ

அணுமின் நிலையம் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு இனி வேலை இல்லை...அதை திறப்பதா வேண்டாமா என்ற கேள்விக்குதான் பதில் சொல்லியுள்ளார் ஜெ...

இதுதான் நல்லது என்றால் அதை இடைதேர்தலுக்கு முன்னே செய்ய வேண்டியதுதானே...?


இப்படிதான் பஸ் கட்டணம் , பால் விலை உயர்வு போன்றவற்றை உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அறிவித்தார் ...இப்போது கூடங்குளம்...


அதாவது தேர்தல்கள் வந்தால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது பயம்....தேர்தல்கள் முடிந்தால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது பயம்....!

நாளை தேர்தல் ரிசல்ட் வேறு....அதில் ஜெயித்துவிட்டால் அடுத்து என்ன செய்ய போகிறாரோ ஜெ....!

19 மார்ச் 2012

படிப்புக்கு நோ ..டாஸ்மாக்குக்கு எஸ்....சீரழியும் சிறுவர்கள்..சிந்திக்குமா அரசு?


ஒரு பத்திரிக்கை செய்தியை படித்தேன்.....படிக்கவே மனசு கஷ்டமாக இருந்தது....

மதுவை ஒழிக்க வேண்டிய அரசே மது விற்பது கொடுமை என்றால் அந்த மதுக்கடைகளில் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததிகளான சிறுவர்கள் வேலை செய்வது அதை விட கொடுமை....


சென்னையில், 600க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன. இதில், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், வாடிக்கையாளர்களுக்கு மது வாங்கி கொடுத்தல், தொடு உணவு பரிமாறுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும், 8ம் வகுப்பை தாண்டாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.


சென்னை குடி மையங்கள் ஆய்வு நடத்தியவரின் பார்வையில்...

* 6,00க்கும் மேற்பட்ட குடி மையங்கள் உள்ளன.
* ஒரு மையத்தில் இரு சிறுவர்களாவது ஊத்திக் கொடுக்கின்றனர்.
* கல்வியறிவு பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
* வீட்டை விட்டு வெளியேறி வழி தெரியாமல் தஞ்சம் அடைவோரும் உண்டு.
* குடும்ப வறுமையால் பணியாற்றும் சிறுவர்களும் உண்டு.
* பெற்றோரே குழந்தைகளை அடகு வைத்துள்ளதும் உண்டு.
* பெற்றோர் பிரிந்ததால் ஆதரவற்ற சிறுவர்களும் உள்ளனர்.
* பொய் சொல்லி விட்டு வேலை செய்யும் சிறுவர்கள் அதிகம்.

இது சென்னையில் மட்டுமே ...அப்ப தமிழகம் முழுக்க இம்மாதிரி சீரழியும் சிறுவர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரங்களோ..?

நாளடைவில் இந்த சிறுவர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த "குடி"மகன்களாக வருவதற்கே வாய்ப்புகள் அதிகம்....


இதற்கு என்ன முடிவு?இது யாருடைய தவறு?

இதற்கு யார் காரணம்..? மதுவை விற்கும் அரசாங்கமே முழுமுதல் காரணம்....

படிக்க வைக்க வேண்டிய அரசே குடிக்கவும், குடிக்க ஊற்றி குடுக்கவும் வைக்கிறதே ?! இதுவும் தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளின் சாதனைதனோ?!

இனி சிறுவர்கள் யாரும் வேலை செய்தால் அந்த பாரின் உரிமை ரத்து செய்யப்படும் என அரசாங்கம் உத்தரவு போடும் வரை இந்த அவலங்கள் தொடரவே செய்யும்....!

18 மார்ச் 2012

லேப் டாப் ஆபத்துக்கள்....லப் டப் அதிர்ச்சி தகவல்கள் ....


தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.

இவ்வாறு லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். ப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.எனவே வை-பை இணைப்போடு லேப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் மற்றும் டேப்லெட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேப்டாப்களில் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி:தட்ஸ் தமிழ்

17 மார்ச் 2012

எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி...

கருணாநிதி ராஜினாமா ...

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து கருணாநிதி தனது எம் எல் ஏ பதவியை ராஜினமா செய்தார்...அவருடன் பேராசிரியர் அன்பழகனும் தனது பதவியை ராஜினமா செய்தார்....

மக்களே நீங்கள் யாரும் அதிர்ச்சி அடைந்து இருக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்...மேற்கொண்டு படியுங்கள்.....

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் குட்டிமணி உள்பட 37 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. சிங்களர்கள் மீது விடுதலைப்புலிகள் போர் தொடுத்தனர். அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.

இந்த பிரச்சினைகளில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து கருணாநிதி (அண்ணாநகர்), அன்பழகன் (புரசைவாக்கம்) ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ஆகஸ்டு 10_ந்தேதி ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுபற்றி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:_

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப்படுகொலை குறித்து இதுவரையில் இந்திய பேரரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மை உள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வு அளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல் எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்குப்பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு சபையை வலியுறுத்தி உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தவறிவிட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதோடு தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கு செல்ல முடியாமல் திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டும் அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரர் இந்தியாவுக்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை விளக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்களை வரவழைத்து நிலவரங்களை கேட்டு உண்மை நிலைமைகளை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததும், அதனை தமிழக அரசு இந்திய அரசுக்கு வலியுறுத்தாதது பெரும் குறையாகும்.

இலங்கை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத்தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வைகோ இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல் இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது வருத்தத்திற்குரியது.

நண்பர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்று இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சொல்லும் அளவிற்கு இங்குள்ள இந்திய அரசு காவல் துறையும், மாநில அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிக்காட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது."

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

நன்றி : தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள்

இது நடந்தது 1983 ஆம் ஆண்டு....அன்றாவது தனது பதவியை ராஜினமா செய்தார்..அதை இன்று வரை சொல்லியும் காட்டிவருகிறார்.....ஒருவேளை பின்னாடி சொல்லி காட்ட உதவும் என்பதற்காக கூட அவர் ராஜினமா செய்து இருப்பாரோ!

ஆனால் இன்று?

தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது மத்தியில் தனது மந்திரிகளை பதவியில் தொடர செய்தார்...இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் அப்போதும் தனது கட்சியின் மந்திரிகளை மத்திய மந்திரிசபையில் தொடரவே செய்வார்....!

எங்கே போனது பழைய கருணாநிதியின் ...............................? அந்த இடத்தில என்ன எழுதினால் சரியாக இருக்கும்?

16 மார்ச் 2012

அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? அப்படின்னா கண்டிப்பா இதை நீங்கள் படித்தே ஆகவேண்டும்..!

தலைவலியா ?ஒரு டோலோபார் எடுத்துக்க...காய்ச்சலா கால்பால் போட்டா சரியாகிடும் என நமக்கு நாமே டாக்டர் திட்டத்தை நம்மில் பெரும்பாலோர் செயல்படுத்தி வருகிறோம்....

காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால்.ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?

எதற்கு ஐந்து வருடம் படித்து நட்களி வீணாக்குவது எனவும்,ஏன் இதற்கெல்லாம் போய் டாக்டரிடம் காண்பிப்பது எனவும் சிந்தித்தே நம்மில் பல பேர் தலைவலி முதல் கால் வலி வரை சர்வ சாதாரணமாக இந்த பாராசிட்டமால் மாத்திரிகளை ஏதோ ஜெம்ஸ் மிட்டாய் சாப்பிடுவதுபோல சாப்பிடுகிறோம்...

முதலில் இந்த மாதிரி செல்ஃப் மெடிசின் எடுப்பதே தவறு....அதுவும் பாராசிட்டமால் எடுப்பது அதைவிட தவறு.....பாராசிட்டமால் அதிகமாக எடுத்தால் அது லிவரை பாதிக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே....

ஆனால் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே மக்களே எதற்கெடுத்தாலும் பாட்டி வைத்தியம் செய்வதாக ,அதிமேதாவியாக நினைத்துகொண்டு செல்ஃப் மெடிசின் எடுப்பதையும், பாரசிட்டமால் அளவுக்கு மீறி எடுப்பதையும் குறைத்து கொள்வீர்களாக....அப்பிடின்னு மருத்துவர்கள் சொல்றாங்க.. ஓகே யா...

15 மார்ச் 2012

கருணாநிதி,ஜெ, விஜயகாந்த் ,ஸ்டாலின்...ட்வீட் படிங்க ..கொண்டாடுங்க....


இடைத்தேர்தல் நியாயமாக நடந்தால் தி.மு.க., வெற்றி நிச்சயம்: கருணாநிதி #

நியாயமாக என்றால் எப்படி? உங்க ஆட்சியில் நடந்தது மாதிரிதானே?


................................................ ..................................................... .............................

சாதாரண மக்களை பாதிக்கும் ரயில்வே பட்ஜெட்: ஜெ., கண்டனம் #

அப்ப மின்வெட்டெல்லாம் யாரை பாதிக்குதாம் ?


............................................. ......................................................... ......................................


""சங்கரன்கோவில் வெற்றியால் தே.மு.தி.க.,வுக்கு பயன் இல்லை,'' :விஜயகாந்த்

ஏற்கனவே உங்களிடம் உள்ள 29 எம் எல் களால் மக்களுக்கே பயன் இல்லை!

. ................................... ........................................ ....................................


""ரயில் கட்டண உயர்வு,ரயில்வே நலன் கருதி எடுத்த முடிவு:ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி #

அப்ப மக்களின் நலனை பற்றி கவலையே இல்லை என்கிறீர்கள் !


.......................................... ........................................... ...................................


""சங்கரன்கோவிலில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடக்கும்;அழகிரி #


திட்டமிட்டபடி ஜெயிப்போம் என கூறுபவரின் நிலை இப்படி ஆகிபோச்சே !......................................... .............................................. ...............................

""வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் பெற முடியாததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது,:ஜெயலலிதா #

சந்தை கூடுவது வாரம் ஒருமுறையா இல்லை இருமுறையா ?சொன்னால் நாங்களாச்சும் வாங்குவோம்ல ..!


....................................... ............................................... ...............................


தெலுங்கர்கள் கணிசமாக வசிக்கும் திருவேங்கடம் பிரசாரத்தில் ஜெ., தெலுங்கில் பேசி, ஓட்டு சேகரித்தார்#

அப்ப கரண்ட் இல்லாத இடங்களுக்கு ஒட்டு கேட்க சென்றால் மெழுகுவர்த்தியுடன் செல்வாரோ?!


............................................ ......................................... .................................

1 கிலோ தங்கம்; 380 கேரட் வைரம்; மொத்தம் ரூ. 111 கோடி: மாயாவதியின் சொத்துக்கணக்கு இது #

யார் சொன்னார்கள் இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்று??!


................................................ ................................................. ..........................

விஜயகாந்த் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: ஸ்டாலின்#

ஒருவேளை நாக்கை துருத்தி கண்கள் சிவக்க பேசினால்தான் பதில் சொல்வாரோ!

14 மார்ச் 2012

சிம்பு ,தனுஷ்,கவுண்டமணி, பவர் ஸ்டார் ....ஜெ ,பிரதமர் .ஒரு கலக்கல் காக்டெயில்

ஹி ஹி..அதிகமா பேசினாலும் ஆபத்து...அறவே பேசாம இருந்தாலும் ஆபத்து...அதிகமா பாரின் டூர் போனாலும் ஆபத்து...மொத்தத்தில் பதவியில் இருந்தாலே ஆபத்துதான்....இந்த மாதிரி நக்கல்களையும் நையாண்டிகளையும் சகித்து கொண்டு இருக்கனும்ல....
பேசாம இந்த வருடமே இப்படி ஒரு காலண்டர் அச்சடித்து கொடுத்தால் தமிழக அரசுக்கு கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்....
இவர்களின் அக்கப்போர்களுக்கு எல்லாம் கவுண்டர்தான்யா சரியான ஆளு....
இதைவிட ஒரு நடிப்பு எங்கேய்யா இருக்கு?எங்கய்யா அந்த ஆஸ்கார் அவார்டு?
மக்களுக்கு கடுப்பேற்றினா பதிலுக்கு இப்படிதான் நம்மளால் கடுபேற்ற முடியும்....இந்த நிலைமை வந்தாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லை....பார்க்க நல்லாதானே இருக்கு...
பாருங்கள் பவர் ஸ்டாரின் பல்வேறு பரிணாமங்களை .....கமலே கையேந்தனும்...


படங்களுக்கு மட்டும் நன்றி:facebook ல் சராமாரியாக கலாய்க்கும் பக்கங்களான "பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்கம், மற்றும் tamil punch
dialogues ....

கருத்துக்கள் என்னோடதான்...

13 மார்ச் 2012

சிக்கன் 65 பிரியரா நீங்கள்?படியுங்கள் அதிர்ச்சி தகவல்களை...


சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.


சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.


இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

நன்றி :இணையம்,பத்திரிக்கை செய்திகள்

அது சாப்பிட்டால் கெடுதி,இது சாப்பிட்டால் கெடுதி என வரும் செய்திகளை பார்த்தாலே அந்த செய்திகளை படிக்காமலே இருப்போம் என என்ன தோன்றுகிறது...எல்லாமே பாய்சன் என்றால் அப்ப என்னத்த சாப்பிடுவது?பேசாம ஆதி காலத்தில மாதிரி எல்லா உணவையும் பச்சையாக உண்ண வேண்டியதுதானோ !

ஹி ஹி...எல்லாம் வயிற்றெரிச்சலில் புலம்புவதுதான்....இதை எல்லாம் முடிந்த அளவு குறைத்துக்கொண்டால் நமக்குத்தானே நல்லது...!

12 மார்ச் 2012

உலக கோப்பை அரை இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங் !?பாலிவுட் நடிகையை வைத்து வீரர்களை கவுத்த புக்கிகள்....

கிரிக்கெட்.....இந்தியர்களின் இரத்தத்தில் கலந்த ஒன்று.....கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்று சொல்பவர்களை ஏதோ குற்றவாளியை பார்ப்பதுபோல பார்ப்பவர்களே இங்கு அதிகம்....


நானும் கிரிக்கெட் வெறியன்தான்...சென்ற ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றபோது ஏதோ நாட்டுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததுபோல நம் நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை....


கடந்த 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் "ஸ்பாட்-பிக்சிங்' எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஜெயில் தண்டனை பெற்றனர். அதற்கு முன்னே சூதாட்ட புகார்கள் பல பேர் மீது சொல்லப்பட்டு வந்தாலும் அப்போதுதான் முதல்முறையாக கையும் களவுமாக பிடிபட்டனர்....அப்போதே கிரிக்கெட் மீது வெறுப்பு வந்தது....ஆனாலும் என்னைபோல பலகோடி பேருக்கும் கிரிக்கெட் பார்க்காமல் இருக்க முடியவில்லை...

ஆனால் இப்போது மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. இம்முறை "பாலிவுட்' நடிகை ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டியை வைத்து பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது.தற்போது, சூதாட்ட பிரச்னை குறித்து பிரிட்டன் பத்திரிகை "சண்டே டைம்ஸ்' ரகசிய புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன் வேண்டுமென்றே மந்தமாக ஆட, அவருக்கு ரூ. 35 லட்சம், பவுலர்கள் ரன்களை வாரி வழங்க, ரூ. 40 லட்சம், போட்டியின் முடிவை உறுதி செய்யும் வீரர் அல்லது நிர்வாகிக்கு ரூ. 6 கோடி வரை சூதாட்ட புக்கிகள் கொடுப்பது தெரிய வந்துள்ளது.


கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இப்போட்டியிலும் பெருமளவு சூதாட்டம் நடந்துள்ளதாம். சூதாட்டக்காரர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தங்களது வலைக்குள் வைத்துள்ளனர். இவர்களை கவர, பாலிவுட் நடிகை ஒருவரை பயன்படுத்திய விஷயத்தையும் "சண்டே டைம்ஸ்' அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நடிகையை பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


சூதாட்டம் தொடர்பாக தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ஐ.சி.சி.,), "சண்டே டைம்ஸ்' பத்திரிகை வழங்கியுள்ளது. இதன் மீது ஐ.சி.சி., விசாரணை நடத்த உள்ளது. இதில், பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளின் முடிவை சூதாட்ட ஏஜன்ட்கள் நிர்ணயிக்கின்றனர் என தெரிந்தேதான் நாம் அனைவரும் அதை ரசித்து பார்த்துகொண்டு இருக்கிறோமா என நினைக்கையில் வேதனை கலந்த ஏமாற்றமும் ,வெட்கமுமே மிஞ்சுகிறது....!

இன்னமும் நேரத்தை வீணாக்கி அந்த பண பொறுக்கிகளின் விளையாட்டை
நாம் ரசிக்கத்தான் வேண்டுமா? பார்க்க கூடாது என மனம் நினைக்கிறது....ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி நமக்கல்ல ..அந்த பண பொறுக்கிகளுக்குத்தான் என்பதில் ஐயமில்லை....

11 மார்ச் 2012

கணினி முன் வேலையா?சீக்கிரம் முதுமைதான்...!


கணினி இல்லையேல் இன்று உலகமே இயங்குவது சிரமம் என்ற ஒரு நிலையில் நம் வாழ்ந்துவருகிறோம்...அதுவும் பதிவர்களுக்கு சொல்லவே தேவை இல்லை...

இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழகுக்கு ஆபத்து

இங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிடு சிடு பார்ட்டிகள்

கணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது.

இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தட்ஸ்தமிழ்

ஆகவே கணினி முன் அமர்ந்து வேலை செய்வதை குறையுங்கள் மகா ஜனங்களே...!

10 மார்ச் 2012

ராஜபக்சே என்ன உங்களுக்கு மாமனா மச்சானா ?பதில் கூறுங்கள் மனசாட்சி இல்லாத ஆட்சியாளர்களே...


ஈழ போரின் இறுதியில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து இலங்கை போட்ட வெறி ஆட்டத்துக்கு இந்தியா துணை போனது வெட்ட வெளிச்சமான விஷயம்...அதில் சிலரின் சுயநலம்தான் இந்தியா துணை போனதற்கு காரணம் என்பதும் ஊர் அறிந்ததே....ஆனால் ஏதும் அறியா அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்...?செத்த பின்பும் அவர்களுக்கு நீதி மறுக்கபடுவதற்கு இந்தியா காரணமாக உள்ளது வேதனை அளிக்கும் மனிதாபிமானமற்ற அக்கிரம செயல்...

போரில் அப்பாவிமக்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட தருணங்களில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் போட்ட கலைஞர் இப்போது"இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது, என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சி களை ஒருமுறை பார்த்துவிட்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என அறிக்கை விடுகிறார்...என்ன ஒரு அக்கறை !

அப்போது மத்திய அரசில் இருந்து விலக வக்கில்லாத கலைஞர் இப்போது நீலிகண்ணீர் வடிக்கிறார்...

ஆனால் இந்திய அரசோ செய்த பாவத்துக்கு சிறிதும் அஞ்சாமல் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஊமையன் வேஷம் போட்டு வருகிறது...ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டது மாதிரி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்ததே ஒரு ஆச்சர்யமான விஷயம்..!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ஆனால் இந்தியாவின் தயவு இருப்பதால் ஒன்றும் ஆபத்தில்லை என நடமாடும் ஹிட்லர் ராஜபக்சே ஹாயாக இருக்கிறான்...

இந்தியாவை ஆள்வோருக்கு ராஜபக்சே என்ன மச்சானா மாமனா ?போரில் கொள்ளப்பட்டது சீக்கியர்களாக இருந்திருந்தால் மன்மோகன் கொஞ்சம் துடித்து இருப்பார்...இத்தாலி காரனாக இருந்தால் சோனியா துடித்து இருப்பார்....ஆனால் கொல்லப்பட்டது ஏன் என்று கேட்க நாதி இல்லாத அப்பாவி தமிழ் மக்கள் அல்லவா?தமிழகத்தை ஆண்ட தமிழின தலைவர் என கூறி கொண்டவருக்கே துடிக்காத போது இவர்களை சொல்லி குற்றமில்லை...

தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத 22 நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தமிழர்களின் தேசமான இந்தியா மவுனம் சாதிப்பது எவ்வளவு மானம் ரோசமற்ற வெட்ககேடான விஷயம்..!

09 மார்ச் 2012

நான்கு பேரை சிறைக்கு அனுப்பிய தனுஷ் ,அம்பானியும் வெறும் ஆண்டியும் (நொறுக்கு தீனி)


கொலைவெறி பட்டை கொலைவெறியோடு பாடி மக்களை தொந்தரவு செய்த நாலுபேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்....

சைதாப்பேட்டையில் குடிபோதையில் ரயிலில் ஏறிய நான்கு வாலிபர்கள் 'ஒய் திஸ் கொலவெறி டி..' பாடலை பாடி பெண்களை கேலி செய்துள்ளனர். அதில் ஒருவன் லுங்கி அணிந்துகொண்டு தனுஷைப் போல நடனமாடி வேறு பயணிகளை தொந்தரவு செய்துள்ளான்...

சினிமாவினால் இந்த சமூகம் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்....வெளியில் பாடிய நபர்களை கைது செய்தாச்சு...திரையில் பாடியவர்களை ?!.....

இன்னும் என்னென்ன கருமாதிகள் நடக்க போகிறதோ அந்த பாட்டினால்...

மொதல்ல அந்த பாட்ட ban பண்ணுங்கப்பா....

...................................... ......................................................... ...........................................

அரசியலில் ஈடுபடும் மகளிர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 105 வது இடம் தான் கிடைத்திருக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருக்கிறது...பெண் உரிமைகள் மறுக்க படுகின்றன என குற்றம் சாட்டப்படும் முஸ்லிம் நாடுகள் இவைகள் என்பது குறிப்பிடத்தக்கது....இன்னும் பல முஸ்லிம் நாடுகளும் இந்த எண்ணிக்கையில் வருகின்றன்....

பெண் உரிமை பற்றி மகளிர் தினத்தில் மட்டும் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே...நீங்கள் எல்லாம் எப்போது பெண்களுக்கான முப்பத்திமூன்று சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றி ......!!....பெண்கள் பதவிக்கு வருவது....!


.......................................... ............................................ ..........................................


இந்திய பணக்காரத் தொழிலதிபர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,230 கோடி டாலர் (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) ஆக உள்ளது

ஏறத்தாழ உலகின் ஏழை மக்களில் மூன்றில் ஒருவர் வசிக்கும் இதே இந்தியாவில்தான் ,தினமும் 23 கோடி பேர் பட்டினியால் வாடும் இதே இந்தியாவில்தான் இந்த அம்பானியும் வசிக்கிறார்....என்ன ஒரு முரண்பாடு...!

இதில் தவறு எங்கே இருக்கிறது? ஆட்சியாளர்களிடமா? இல்லை ஒட்டு போடும் மக்களிடமா?அல்லது பகிர்ந்து அளிக்கும் மனமில்லாத செல்வந்தர்களிடமா ?

.................................. .............................................. ..............................................

08 மார்ச் 2012

ஜெயலலிதாவுக்காக விஷம் குடித்து சாக தயார் ...நடராஜன்...(நொறுக்கு தீனி)

சிறை செல்வதற்கு முன்னாள் வீரவசனம் பேசி வந்த நடராஜன் இப்போது என்ன சொல்லியாவது ஜெயலலிதாவை சமாதான படுத்தி வெளிவர துடிக்கிறார்...

நேற்று நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசியவற்றை பாருங்கள்...

நான் சிறையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு நன்மையும் வந்துவிடாது. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது மற்றொரு வழக்கு தொடுத்துள்ளனர்.

பெங்களூரு வழக்கில், "எங்கள் குடும்பமே, நாங்கள் தான் பொறுப்பு' என, ஒப்புக்கொண்டு விட்டோம். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகம் வேண்டாம்; பயப்பட வேண்டாம். முதல்வருக்கு சந்தேகமிருந்தால், சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்.அந்த விஷத்தை குடித்துவிட்டு, நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம். பெங்களூரு நீதிமன்ற வழக்கில், என் மனைவி சசிகலா, ஹனுமான் போல, நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார்...என உருகி பேசி இருக்கிறார்....

இப்ப உருகி என்ன பண்ணுவது சாரே....காலம் கடந்து விட்டது....ஸ்டாலினுக்கு எதிராக எதுவும் வழக்கு பாயட்டும் என்ற நல்லெண்ணத்தில் ! மறைமுகமாக அண்ணாநகர் ரமேசை பற்றி வேறு குறிப்பு கொடுத்து பழைய குப்பையை கிளறி விட்டு போயிருக்கிறார் ....!ஜெ அதை கேட்ச் பிடித்தாலும் பிடிப்பார்..!

............................................. ............................................ .......................................

பிளஸ் டூ பொது தேர்வுகள் இன்று துவங்கிவிட்டன...ஏதோ பலூன் வாங்குவதைப்போல பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வாங்கப்படும் என ஜெயலலிதா சொல்லிவிட்டார்...ஆனால் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி இல்லை....பிறகு எப்படி மாணவர்கள் தேவு எழுதுவது?

ஒருவேளை தேர்வு எழுத்து பேனாவும்,பேப்பரும் மட்டும் போதும் என நினைத்துவிட்டார்கள் போலும்.......ஹ்ம்ம்....


படிக்கும் நேரங்களிலும் மின்சாரம் இல்லை.தேர்வு எழுதும்போதும் மின்சாரம் இல்லை....மாணவர்களுக்கு வெளிச்சத்தை தரும் கல்வியை இருட்டில் தள்ளிவிட்டனர் ஆட்சியாளர்கள்....இந்த மின்தடையினால் ஒரு மாணவன் பாதிக்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனாலும் அந்த குற்றம் தமிழக அரசையே சேரும்...


................................ ............................................... .............................................


அடுத்தடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் ராஜன், லஞ்ச வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்..


கப்பல்கள், விமானங்களில் நடைபெறும் கடத்தல்களைத் தடுத்து நிறுத்தி பல நூறு கோடி பெருமானமுள்ள பொருட்களை ராஜன் தலைமையிலான படையினர் பிடித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜனே சிக்கி இருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி....

இவர் உண்மையில் லஞ்சம் வாங்கினாரா இல்லை அவருக்கு வேண்டாத அதிகாரிகளினால் பழி வாங்கப்பட்டாரா என்பதில் ஐயங்கள் எழுகிறது...

பார்ப்போம்....

07 மார்ச் 2012

நேரு குடும்பத்திலிருந்து மிஸ் ஆக போகும் ஒரு பிரதமர்?


அடுத்த பிரதமர் ஆஹா ஓஹோ என காங்கிரஸ் கட்சியினரால் புகழப்பட்ட ராகுல் காந்தி மீண்டும் மண்ணை கவ்வி இருக்கிறார் உத்திர பிரதேசத்தில்....

மாங்கு மாங்குன்னு தாடியை கூட சேவ் பண்ண நேரம் இல்லாமல் உத்திரபிரதேசத்தில் ரவுண்ட் அடித்தார் ராகுல்...ஏழைகளின் வீட்டில் படுத்து உறங்கினார்...அவர்களுடன் உணவருந்தினார் ....பட் ...பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என கூறி அவரை வழி அனுப்பி வைத்து விட்டனர் உ பி மக்கள்....

ஏதோ ஒண்ணு ராகுலை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது....உடன் வரும் லேப் டாப் ஆசாமிகளா....இல்லை அவரின் அணுகுமுறைகளா,அவரின் பேச்சுக்களா ?தெரியவில்லை...ஆனால் ராகுல் அதை தெரிந்து கொண்டு மாற்றா விட்டால் நேரு குடும்பத்திலிருந்து ஒரு பிரதமர் மிஸ் ஆவது நிச்சயம்....

உபியில் மக்களின் உணர்வுகளை மதிக்காத ,தனக்கு தானே சிலைகளை திறந்து கொண்ட மாயாவதியை மக்கள் புறக்கணித்து விட்டனர்...இதை தமிழ்நாட்டுக்கும் உதாரணமாக ஆட்சியாளர்கள் நினைத்தால் நல்லது....


ஒருவேளை மக்களை வசிகரிக்கும் சக்தி ராகுலைவிட பிரியன்காவுக்குதான் அதிகமா என தெரியவில்லை....ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி கண்டிப்பாக களம் இறங்குவர் என எதிர்பார்க்கலாம்....காங்கிரஸ் கட்சிக்கு வேற வழி?


இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் மண்ணை கவ்வி இருக்கிறது......கோவாவை இழந்து இருக்கிறது...உபியில் நான்காம் இடம்...பஞ்சாபில் பாதி, உத்ரகாண்டில் இழுபறி..மணிப்பூரில் மட்டும் வெற்றி ....அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அலையிலே பிஜேபி ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டது காங்கிரஸ்...

மாநிலத்துக்கு ஒரு அரசியல் பண்ணும் கம்யுனிஸ்ட் கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களிலும் ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியவில்லை...இனி மூன்றாவது அணி, ஏழாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை....


இனியாவது மத்தியில் ஊழல் குறைந்த ! நிர்வாகத்தை தந்தால் மட்டுமே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும்....இல்லாவிட்டால் சிங்கமே இல்லாத காட்டில் நரிகள் கோலோச்சும் நிலைதான் ஏற்படும்....

06 மார்ச் 2012

கொஞ்சம் ராமதாசின் பேச்சை கேளுங்கள்....நோய்விட்டு போகும்...

தமிழக மக்களுக்கு அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதில் ராமதாசின் பங்கு அளவிட முடியாதது....அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:


வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது.(அப்ப சைடுல இருக்கலாமோ )இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும்(நீங்கதான் மரங்களையே வெட்டுவிங்களே.)

2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்(. ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும்(அப்ப இனிமே ஒட்டு போடாம இருக்கபோறிங்களா ?). நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம்.(முதல்ல உங்க கட்சி கொடியை தேடிபிடிங்க )அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை.(ஓஹோ ..நீங்கல்லாம் இப்ப ஓய்வில்லாமல் இருக்கிறதா நெனச்சுக்கிட்டு இருக்குறீர்களோ )

15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும்(15 வயசுக்கெல்லாம் ஓட்டுரிமை இல்லைன்னு யாராவது அவர்ட்ட சொல்லுங்கப்பா ). பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்(மொதல்ல கட்சியில உள்ளவங்கள உங்க சின்னத்திற்கு ஒட்டு போட சொல்லுங்க...).எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது(உங்களையும் சேர்த்துதானே ). எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.

நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்(அபார கற்பனை சக்தி சார் உங்களுக்கு ).1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல்(நீங்களே ஒத்துகிறிங்க,அவங்க எல்லாம் தெரியாம வந்துட்டாங்க என்று )

இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது(ஏற்கனவே உங்க பின்னாடி இருந்தவங்க எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்க ..முதல்ல அவங்கள பிடிங்க சார் ).எல்லோரும் ஓடி வாருங்கள்;(ஏன் உங்க தோட்டத்தில ஓட்டபந்தயம் நடத்த போறிங்களா?)

2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம்.அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம்(எல்லாரும் ஜோரா ஒருதடவ கைதட்டுங்க...அட என்ன சார் உங்க பேச்சுக்கு கை தட்ட கூட ஆள காணோம்....நீங்க என்னடான்னா சந்தானத்துக்கு போட்டியா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிங்க....) புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். (புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு இலவச விளம்பரம் செய்றாரு...வேற ஒன்னும் இல்ல)மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்?நீங்களே பதில் சொல்லுங்கள்.(உங்க மேல உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதா ?) இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.

இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை (பத்து நாளுக்கெல்லாம் முதல்வர் பதவி கிடைக்காதுங்க...இது என்ன முதல்வன் படத்துல வர முதலமைச்சர் வேடமா?)

இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை(அப்ப இது எல்லாம் பதவிகளே இல்லையா?). இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை.(சும்மா ஜோக்குக்கு தான் சொல்றேன்னு அவரே சொல்ல வராரு ) 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.(ஒட்டு போடுற எந்த மனிதனுக்கும் கொம்பு இல்லைங்கோ....!) இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும். ( ஓகே படம் பார்த்தாச்சா கிளம்புங்க....)....என தனது நீண்ட பேச்சை நிறைவு செய்து மக்களின் சிரிப்புகளுக்கு ஒரு இடைகால முற்றுபுள்ளி வைத்தார் ராமதாஸ் ...

05 மார்ச் 2012

நோயாளிகளிடம் இரக்கம் காட்டும் செவிலியர்களும்,செவிலியர்களிடம் இரக்கம் காட்டாத மருத்துவமனைகளும் ......


செவிலியர்கள் பணி என்பது ஏறக்குறைய மருத்துவர்களுக்கு இணையான ஆனால் அதற்கு கீழே அடுத்த நிலையில் உள்ள உன்னதமான பணி....

யார் ,எவர் என்று தெரியாத நோயாளிகளிடம் அன்பு காட்டி,மிகவும் நோயுற்று படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளை டிரெஸ்ஸிங் செய்வதிலிருந்து அவர்களின் பணி மகத்தானது....ஒரு சில நர்சுகள் அதில் விதிவிலக்காக இருக்கலாம்...ஆனால் பெரும்பாலோர் சேவை மனப்பான்மையிலே செயல்படுகின்றனர்....

முன்பின் தெரியாதவர்களை தங்கள் தாய்,தந்தையாக, சகோதர சகோதரிகளாக ,பாட்டியாக எண்ணி சேவை பண்ணும் மனப்பான்மையில் செவிலியர்கள் மருத்துவர்களை பின்னுக்கு தள்ளி விடுகின்றனர் .....


தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை என்பதன் மூலம் அடிக்கப்படும் கொள்ளைகளினால் நானும் பாதிக்கப்பட்டவன்.....ஆனால் அங்கு உள்ள செவிலியர்களின் பணியால் அவர்கள் மேல் எனக்கு மதிப்பு கூடியது....அவர்களின் பணிக்காக நாம் ஏதாவது அன்பளிப்பு கொடுத்தால்கூட மறுத்துவிடுவார்கள்..


ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம்?கண்டிப்பாக மிக சொற்பமே....

அரசு மருத்துவமனைகளில் எப்படி என்று எனக்கு சரியாக தெரியவில்லை.....ஆனால் நோயாளிகளிடம் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களுக்கு அதில் கிள்ளி கூட கொடுப்பதில்லை....

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களை ஒரு கொத்தடிமையை போலவே நடத்தி வருகின்றன....குறைவான சம்பளம், சரியான சாப்பாடு கொடுப்பது இல்லை....விடுமுறை இல்லை...எதாவது கேட்டால் அவர்களை பணி நீக்கம் செய்வதாக மிரட்டுவது என அடக்கி வைத்துள்ளனர் ...இடையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு மருத்துவமனைகளில் வேலை கிடைப்பது சிரமம்....மேலும் அவர்களுக்கு
experience certificate கொடுக்கமாட்டார்கள்...


தனியார் மருத்துவமனைகளிலே சென்னையில் உள்ள அப்பல்லோ மிகவும் புகழ் பெற்றது....சிகிச்சையில் மட்டுமல்ல....த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனைதா‌ன் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு ‌மிகவு‌ம் குறைவாக ச‌ம்பளமே வழ‌ங்கு‌கிறது. தே‌ர்வு வை‌த்‌து ஆ‌ள் சே‌ர்‌க்கு‌ம் ‌நி‌ர்வாக‌ம் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு அடி‌ப்படை ஊ‌தியமாக மாத‌ம் ரூ.3,500 ‌நி‌ர்ண‌‌‌யி‌க்‌கிறது. அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை எ‌ன்ற பெயரு‌க்காகவே இ‌ந்த குறை‌ந்த ஊ‌திய‌‌த்து‌க்கு செ‌வி‌லிய‌ர்க‌ள் வேலை செ‌ய்‌கி‌ன்றன‌ர்.


நேற்று அவர்கள் வெளி மாநிலங்களில் செ‌வி‌லிய‌ர்ககளுக்கு வழங்கப்படுவதுபோல், மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை வழங்கவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி உள்ளனர்....அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என தெரியவில்லை....

த‌மிழக அரசாவது த‌னியா‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌‌ல் ப‌ணியா‌ற்று‌ம் செ‌வி‌லிய‌ர்களு‌க்கு ஒரு ந‌ல்ல அடி‌ப்படை ஊ‌திய‌த்தை ‌நி‌ர்ண‌யி‌க்க வே‌ண்‌டு‌ம்.....
செய்வார்களா?

04 மார்ச் 2012

நல்லா தண்ணீர் அடிங்க.....முதுமையை விரட்டி இளமையாக இருக்கலாம்...!


நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: பத்திரிக்கை செய்திகள்

03 மார்ச் 2012

நள்ளிரவில் கருணாநிதி கைது....ஜெயலலிதா அதிரடி


சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்_ அமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்...இப்போ இல்ல..... இது நடந்தது 2001_ம் ஆண்டு ஜுன் 30_ந்தேதி அதிகாலை.........

சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறிய மாநகராட்சி எதிர்க்கட்சியினர் அது குறித்து விசாரணை நடத்தக்கோரி கவர்னர் பாத்திமா பீவி, முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னாள் முதல்_அமைச்சர் கருணாநிதி, மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி.மணி, முன்னாள் தலைமை செயலாளர் நம்பியார் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

29_6_2001_ந்தேதி நள்ளிரவு (அதாவது 30_ந்தேதி அதிகாலை) 12_30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை மைலாப்பூர் ஆலிவர் ரோட்டில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கருணாநிதியை எழுப்பி கைது செய்தனர். அப்போது மத்திய மந்திரிகள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. கருணாநிதியை போலீசார் துன்புறுத்தி அழைத்துச் சென்றதாக புகார் கூறப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு கருணாநிதி முதன்மை செசன்சு நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தப்பட்டார். கருணாநிதியை 10_ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பிறகு காலை 7 மணிக்கு கருணாநிதி சென்னை சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். "என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று உடல் நிலையை பரிசோதிப்பதாக நீதிபதியிடம் கூறிவிட்டு அதற்கு மாறாக ஜெயிலுக்கு கொண்டு வந்தது ஏன்?" என்று கருணாநிதி கேள்வி கேட்டு ஜெயில் வாசலில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து ஜெயிலுக்குள் அழைத்துச்சென்று அடைத்தனர். அரசு பொது மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவும், கருணாநிதியின் குடும்ப டாக்டரும் வரவழைக்கப்பட்டு கருணாநிதி உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. சிறையில் `ஏ' வகுப்பு ஒதுக்கப்பட்டது. தினமும் டாக்டர் பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கி வந்தார்கள். மேயர் மு.க.ஸ்டாலினை போலீசார் தேடி வந்தனர்.

அவர் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் ஸ்டாலின் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது போலீசாரின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக மத்திய மந்திரி முரசொலிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவால் முரசொலி மாறன் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதி மற்றும் 2 மத்திய மந்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தரும்படி கவர்னர் பாத்திமா பீவிக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி பாத்திமா பீவி, தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

பிறகு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடி விவாதித்தது. மத்திய மந்திரிகள் கைது செய்யப்பட்ட விதமும், அவர்களை போலீசார் நடத்திய விதமும் சரியல்ல என்று மத்திய மந்திரிசபை அதிருப்தி தெரிவித்தது.

கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு பிரதமர் சிபாரிசு செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. மத்திய மந்திரிசபையின் முடிவு பற்றி தகவல் அறிந்ததும், கவர்னர் பாத்திமா பீவி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பி வைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திண்ட்சா, பா.ஜனதா தலைவர் மல்கோத்ரா ஆகியோர் கொண்ட குழு சென்னை வந்து சிறையில் இருந்த கருணாநிதி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்களும் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து விளக்கினார்கள்.

எதிர்க் கட்சித்தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் விளக்கினார்கள். மத்திய அரசும், பிரதமரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று 2 மத்திய மந்திரிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக தற்காலிக கவர்னராக ரங்கராஜன் பதவி ஏற்றார். த.மா.கா. தலைவர் மூப்பனார், கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா (இ.கம்யூ), நல்லகண்ணு (வ.கம்யூ.) ஆகியோர் கூட்டாக ஒரு கடிதத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினார்கள்.

அதில், "கருணாநிதியின் உடல் நிலை கருதி அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறி இருந்தனர். இதுபோல் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் கூறியிருந்தார். இதனை ஏற்று கருணாநிதியை விடுதலை செய்ய முதல்_ அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். என்றபோதிலும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜுலை 4_ந்தேதி மாலை 5_20 மணிக்கு கருணாநிதி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

நன்றி: வரலாற்று சுவடுகள்


சும்மாச்சுக்கும் ஒரு பிளாஸ்பேக் ........ஆனால் இதில்ஒரு மாபெரும் முரண்பாடு ஒளிந்து இருக்கிறது....தவறு செய்தது ஒரு ஆள்..தண்டனை அனுபவித்தது ஒருஆள்....யாரென்று சரியாக சொல்லுங்கள் ...பார்ப்போம்....